KALVISOLAI TNPSC

Friday, 22 May 2020

2019-2020 பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுக்காக ஆசிரியர் - மாணவர்கள் குழு அமைத்து மாணாக்கர்கள் கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க அறிவுரை

  1. மாணாக்கர்களின் பாடம் சார்ந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்துக் கொள்ளும்  பொருட்டு   வகுப்பு ஆசிரியர்கள் மாணாக்கர்களின் பெற்றோர் கைபேசி எண்ணை பெற்று  Whats app  குழு அமைத்தல் வேண்டும்.
  2. ஒவ்வொரு நாளும் மாணாக்கர்கள் பயில வேண்டிய பாடங்கள் ( தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல்) சார்ந்த விவரங்களை மாணாக்கர்களுக்கு WhatsApp  குழுவில் அனுப்பி வைத்து, கற்றல் சார்ந்து மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை களைய வேண்டும்.
  3. மேலும், மாணாக்கர்களுக்கு சிறு தேர்வுக்கு  வினாக்களை தயார் செய்து மாணாக்கர்களை  WhatsApp  குழுவில் அனுப்பி வைக்க வேண்டும்.  ஒரு மதிப்பெண்  , மூன்று மதிப்பெண் , 5 மதிப்பெண் வினாக்களை தெரிவு செய்து அனுப்பி வைத்து அதற்கான விடையை  தயார் செய்து அந்த தகவலை  WhatsApp  குழுவில் அனுப்ப தெரிவித்தல் மூலம் மாணாக்கர்களின் கற்றலை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
  4. அந்தந்த பாடங்களிலிருந்தும் சில வினாக்களை வீட்டுபாடமாக கொடுத்து எழுதி அதன் போட்டோ நகலினை  Whats app  குழுவில் அனுப்பி வைக்க தெரிவிக்க வேண்டும்.
  5. தலைமையாசிரியர்கள் கட்டாயமாக மாலை 4.30 மணிவரை பள்ளி பணியில் இருத்தல் வேண்டும்.
  6. அனைத்து ப் பள்ளி தலைமையாசிரியர்கள் இவற்றினை கண்காணித்து அறிந்து அதன்  அறிக்கையினை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்களுக்க அனுப்புதல் வேண்டும்.
  7. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்காக சிறுவினா வங்கி அனுப்பி வைக்கப்படும்.

No comments:

Post a comment