முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ECONOMICS - தமிழ்நாட்டில் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு உதவும் கொள்கைக் காரணிகள் | The Policy Factors that Helped the Industrialisation Process in Tamil Nadu

தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம்
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் | SIPCOT (State Industries Promotion Corporation of Tamil Nadu)
 • கொள்கைக் காரணிகளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். 
 • Policy factors can be divided into three aspects:
கல்வி 
 • திறமை வாய்ந்த மனித வளங்கள் தொழிற்சாலைக்குத் தேவைப்படுகிறது. 
 • நமது மாநிலமானது தொடக்கக் கல்விக்காக அதிகமான கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், படித்தவர்களின், எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அடிப்படை எண் கணித திறன்களை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது. இது நாட்டில் மிக அதிகப்படியான தொழில்நுட்ப வல்லுநர்களைத் தருவதிலும் பெயர் பெற்ற இடமாகும். 
 • இந்தியாவில் அதிக அளவில் பொறியியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் தொழில் பயிற்சி மையங்கள் போன்றவைகளின் புகலிடமாக தமிழகம் உள்ளது. 

Education

 • Industries require skilled human resources. 
 • Apart from a lot of attention to primary education to promote literacy and basic arithmetic skills, the state is known for its vast supply of technical human resources. 
 • It is home to one of the largest number of engineering colleges, polytechnics and Industrial Training Centres in the country.
உள்கட்டமைப்பு 
 • மாநிலங்களில் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் தொழில்மயமாதல் பரவுதலுக்கு மின்சார விநியோகம் சிறப்பான பங்கினை வகிக்கிறது. 
 • மின்சார விநியோகம் மட்டுமல்லாது, தமிழ்நாடானது மிகச் சிறந்த போக்குவரத்து உள்கட்டமைப்புக்குப் பெயர் போனது ஆகும். 
 • குறிப்பாக கிராமப்புறங்கள் சிறு சாலை வசதிகளால் அருகிலுள்ள சிறு நகரங்களுடனும், பெரு நகரங்களுடனும் சிறப்பான முறையில் இணைக்கப்பட்டுள்ளது. 
 • பொது மற்றும் தனியார் போக்குவரத்துத் துறைகள் ஒருங்கிணைந்து கிராமப்புற மற்றும் நகர்புறங்களின் இணைப்பை எளிதாக்கியுள்ளது, சிறு உற்பத்தியாளர்களை சந்தைகளோடு இணைத்து அவர்களுக்கு நற்பலனைக் கொடுக்கிறது. 

Infrastructure

 • The widespread diffusion of electrification has contributed to the spread of industrialisation to smaller towns and villages in the state. 
 • Along with electrification, Tamil Nadu is known for its excellent transport infrastructure, 
 • especially minor roads that connect rural parts of the state to nearby towns and cities. 
 • A combination of public and private transport has also facilitated rural to urban connectivity and therefore connect small producers to markets better.
தொழில்துறை ஊக்குவிப்பு 
 • கல்வி, போக்குவரத்து மற்றும் ஆற்றல் வாய்ந்த உள்கட்டமைப்புகளுக்கு முதலீடு செய்வது மட்டுமல்லாமல், சிறந்த தொழிற்பிரிவுக்கான தொழிற்சாலை விரிவாக்கங்களை சிறந்தபகுதிகளில் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
 • பொருளாதார சீர்திருத்தத்திற்கு பின் குறிப்பிட்ட காரணிகளான தானியங்கி, தானியங்கிக் கருவிகள், உயிரி தொழில்நுட்பம், செய்தி மற்றும் செய்தித் தொடர்புக்கான பிரிவுகள் ஆகியவை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 
 • எனவே பெரிய, சிறிய மற்றும் நடுத்தர பிரிவில் மேம்படுத்த உதவும் உள்கட்டமைப்புகளை நாடு முழுவதும் பல இடங்களில் தொழில்துறை மேம்பாட்டு முகமைகளை அரசு நிறுவியுள்ளது. 

Industrial Promotion

 • Apart from investments in education and transport and energy infrastructure, active policy efforts were made to promote specific sectors and also industrialisation in specific regions. 
 • Policies to promote specific sectors like automobile, auto components, bio technology and Information and communication Technology sectors have been formulated in the post reform period. 
 • In addition, the state has put in place several industrial promotion agencies for both large enterprises and the small and medium segments, as well as to provide supporting infrastructure.
தமிழகத்தில் தொழில் விரிவாக்கத்திற்கு திறவுகோலாக செயல்படும் முகமைகள் 
 • தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT - State Industries Promotion Corporation of Tamil Nadu) 1971இல் தொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்டு தொழிற் தோட்டங்களை அமைத்துள்ளது. 
 • தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO - Tamil Nadu Small Industries Development Corporation) 1970இல் தமிழக அரசால் நம் மாநிலத்தில் சிறுதொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்ட ஒரு அரசு நிறுவனமாகும். 
 • சிறு தொழிற்பிரிவின் புதிய நிறுவனங்களுக்கு மானியம் மற்றும் தொழிற் நுட்ப உதவிகளையும் இந்த நிறுவனம் வழங்குகிறது. 
 • தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (TIDCO - Tamil Nadu Industrial Development Corporation) 
 • நம் மாநிலத்தில் தொழில் தோட்டங்களைநிறுவுவதற்கும் தொழிற்சாலைகளை மேம்படுத்துவதற்கும் உதவும் மற்றுமொரு அரசு நிறுவனமாகும். 
 • தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் - வரையறுக்கப்பட்டது (TIC - Tamil Nadu Industrial Investment Corporation Ltd) புதிய தொழில் பிரிவுகளை நிறுவுவதற்கும் தற்போதுள்ள தொழில் பிரிவுகளை பெருக்குவதற்கும் குறைந்த அளவிலான நிதி உதவியைச் செய்கிறது. 
 • தமிழ்நாடு சிறுதொழில் கழகம் - வரையறுக்கப்பட்டது (TANSI – Tamil Nadu Small IndustriesCorporationLtd) சிறுநிறுவனங்க ளுக்காக நிறுவப்பட்ட முதல் தொழில்துறை நிறுவனமாகும். 

The following are some agencies that have played a key role in industrialization in the state

 • SIPCOT (State Industries Promotion Corporation of Tamil Nadu) - was formed in the year 1971 to promote industrial growth in the state by setting up industrial estates. 
 • TANSIDCO (Tamil Nadu Small Industries Development Corporation) - is a state-agency
 • of the state of Tamil Nadu established in the year 1970 to promote small-scale industries in the state. It gives subsidies and provide technical
 • assistance for new firms in the small scale sector.
 • TIDCO (Tamil Nadu Industrial Development Corporation), 1965 - is another government agency to promote industries in the state and to establish industrial estates.
 • TIIC (Tamil Nadu Industrial Investment Corporation Ltd.), 1949- is intended to provide low-cost financial support for both setting up new units and also for expansion of existing units.
 • TANSI (Tamil Nadu Small Industries Corporation Ltd.), 1965 - It is supposed to be the first industrial corporation operating in the domain for small enterprises.
தொழில்மயமாதலின் பிரச்சனைகள் 
 • தமிழகம், நமது நாட்டின் சிறந்த தொழில்மயமான மாநிலமாக இருந்த போதிலும் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. 
 • வேதிப்பொருள்கள், நெசவுத் துறை மற்றும் தோல் தொகுப்புகள் மூலம் வரும் திரவக் கழிவுகள் நமது சுகாதாரத்தை கெடுக்கிறது. 
 • இந்த திரவக் கழிவுகள் சேரும் நீர் நிலைகளை மட்டுமல்லாமல் அதையொட்டியுள்ள விவசாய நிறுவனங்களையும் மாசுபடுத்துகிறது. 
 • உலகளாவிய அளவில் போட்டிப் போடுவதற்காக முதன்மையான தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதால் நிலையான வேலை வாய்ப்புக்கான குறை ஏற்படுகிறது. 
 • பணியாளர்களின் தரமானது, இன்றைய காலகட்டத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப் படுவதால் குறைகிறது.

Issues with Industrialisation

 • Though Tamil Nadu has emerged as a relatively highly industrialised state in the country, the state faces a few issues in sustaining the process. 
 • To begin with, some clusters, especially chemicals, textiles and leather clusters, tend to generate a lot of polluting effluents that affect health. 
 • The effluents also pollute water bodies into which effluents are let into and also adjoining agricultural lands. 
 • Second, employment generation potential has declined because of use of frontier technologies because of the need to compete globally. 
 • Quality of employment also has suffered in recent years as most workers are employed only temporarily.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ECONOMICS - தமிழ்நாட்டில் செயல்படும் முக்கியமான திட்டங்கள் | Important ongoing Schemes in Tamil Nadu

1. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நலத் திட்டத்தின் (Dr. Muthulakshmi Reddy Maternity Benefit Scheme) கீழ், ஏழை கர்பிணிப் பெண்க ளுக்கு ₹12,000/- நிதியுதவி வழங்கப்படுகிறது.  2. முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீடு திட்டம் (Chief Minister's Comprehensive Health Insurance Scheme) 2011-12 ஆம் ஆண்டில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் அனைவருக்கும் உடல் நலம் வழங்கும் நோக்கில் அரசாங்கத்தால் இலவச மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை வழங்குவதாகும்  3. தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டங்கள் (Tamil Nadu Health Systems Projects) இலவசமாக ஆம்புலன்ஸ் - சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. (108 அவசர ஆம்புலன்ஸ் சேவை).  4. 'பள்ளி சுகாதார திட்டம்' (School Health Programme) விரிவான சுகாதார சேவையை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதை வலியுறுத்துகிறது.  5. தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் (National Leprosy Eradication Programme) மூலம் அனைத்து தொழுநோயாளிகளையும் கண்டறிந்து தொடர்ச்சியான சிகிச்சையை வழங்குவதை நோக்கமாக கொண்டு மாநிலத்தில் செயல்படுத்

கால்நடை உதவி மருத்துவர் தேர்வு முடிவு வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு: 35/2020 நாள்:20.10.2020  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்க்காணும் பதவிக்கான தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.  பதவியின் பெயர் : 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்பு பணிக்கான கால்நடை உதவி மருத்துவர்.  மொத்தக் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை : 1141  தேர்வு நடைபெற்ற நாள் 23.02.2020 மு.ப & பி.ப  தேர்வில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை : 2015  சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்டவர்களின் சான்றிதழ்களைத் தேர்வாணைய இணைய தளத்தில் அரசு இ சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யப்படவேண்டிய நாட்கள் : 28.10.2020 முதல் 06.11.2020 வரை  சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெர

ECONOMICS - அரசாங்கமும் வரிகளும் அறிமுகம் | Government and Taxes

இந்தியாவில் வரி விதிப்பின் வேர்கள் மனு ஸ்மிருதி மற்றும் அர்த்தசாஸ்திர காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டது. தற்கால இந்திய வரி முறையானது பண்டைய கால வரி முறையை அடிப்படையாகக் கொண்டது. Taxation in India has its roots from the period of Manu Smriti and Arthasastra.  The present Indian tax system is based on this ancient tax system.  இந்தியாவில் முதன்முதலாக வருமானவரி 1860ஆம் ஆண்டு சர் ஜேம்ஸ் வில்சன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1857ஆம் ஆண்டு கலகத்தின் மூலம் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட அரசாங்கத்தின் மூலம் போடப்பட்ட ஆணையே வரி விதிப்பாகும். In India, Income Tax was introduced for the first time in 1860 by Sir James Wilson  In order to meet the losses sustained by the Government on account of the Mutiny of 1857.  நேர்முக வரி என்பது மத்திய அரசுக்கு அல்லது மாநில அரசுக்கு அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாகச் செலுத்தும் வரியாகும். இதில் வருமான வரி, சொத்துவரி ஆகியன அடங்கும். வருமான வரி தனி நபர்கள் மற்றும் தொழில் செய்பவர்களால் ஈட்டப்பட்ட மற்றும் ஈட்டப்படாத வருமானங்களின் அடிப்படையில் விதிக்

ECONOMICS - ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் (ஜனவரி 16, 2016) | Startup India Scheme (Launched 16-Jan-2016):

ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் என்பது இந்திய அரசின் ஒரு முன் முயற்சித் திட்டமாகும்.  இதன் முதன்மையான நோக்கம் தொழில் தொடங்குவதற்கான தொடக்க முயற்சிகளை ஏற்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் வளங்களை உருவாக்குதல் ஆகும்.  ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் (ஏப்ரல் 5, 2016) ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் என்பது பச்சைப் புல்வெளி (Greenfield Enterprise) நிறுவனம் அமைப்பதற்காக குறைந்தபட்சம் 10 லட்சத்துக்கும், 1 கோடிக்கும் இடையில், ஒரு பட்டியல் சாதியினர் (SC) அல்லது பட்டியல் பழங்குடியினர் (ST) மற்றும் ஒரு வங்கிக் கிளைக்கு ஒரு பெண் கடன் பெறுபவர் என கடன் வழங்கி வங்கிக்கடன்களை எளிதாக்குவதே இத்திட்டமாகும். ============================================= Startup India Scheme is an initiative of the Indian government,  The primary objective of which is the promotion of startups, generation of employment and wealth creation.  Standup India Scheme (Launched 5-April-2016): Standup India Scheme is to facilitate bank loans between `10 lakh and `1 crore to at least one Scheduled Caste (SC) or Scheduled Tri

CURRENT AFFAIRS - நடப்பு நிகழ்வுகள் - 1

  1) 106 வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்ற இடம்? a) பஞ்சாப் ✓ b) ராஜஸ்தான் c) கேரளா d) அசாம்   2) முதன் முதலில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்த மாநிலம் எது? a) தமிழ்நாடு b) ஹரியானா c) சிக்கிம்   ✓ d) ஹிமாசலப்பிரதேசம்   3) ஸ்வட்ச் பாரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு? a) 2014  ✓ b) 2000 c) 2013 d) 2016   4) மதுரை காமராஜர் பல்கலைகழக துணைவேந்தர் யார்? a) எம்.கிருஷ்ணன்   ✓ b) செல்லத்துரை c) சுதா சேஷய்யன் d) சுதா ராமகிருஷ்ணன்   5) 67 வது தேசிய சீனியர் வாலிபர் சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெற்றது? a) சென்னை   ✓ b) மும்பை c) கல்கத்தா d) புனே   6) LIC நிறுவனத்தின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டவர் a) ஹேமந்த் பார்கவா   ✓ b) வி.கே. சர்மா c) சதிஷ் ரெட்டி d) ராஜிவ் குமார்   7) கலியா (KALIA) என்ற பெயரில் விவசாயிகளுக்கான திட்டத்தை அறிமுகம் செய்த மாநிலம் a) ஒடிசா   ✓ b) பீகார் c) தமிழ்நாடு d) கேரளா   8) கேரளாவில் பெண்கள் சேர்ந்து உருவாக்கிய பெண்கள் சுவரின் நீளம் a) 600 km b) 610 km c) 620 km   ✓ d) 630 km   9) பிரேசில் நாட்டின் புதிய அதிபர் a) ஜெயிர் போல்சோனரே b) விளாடிமிர் புதின் c) பெர

ECONOMICS - தமிழ்நாட்டின் தொழில்மயமாதலின் முன்னேற்றம் பற்றிய வரலாறு | Historical Development of Industrialisation in Tamil Nadu

தமிழ்நாட்டில் காலனித்துவ முன்காலத்தில் நெசவு, கப்பல் கட்டுமானம், இரும்பு மற்றும் எஃகு தயாரித்தல், மட்பாண்டங்கள் தயாரித்தல் போன்ற தொழில்துறை நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான ஏராளமான சான்றுகள் உள்ளன.  தமிழ்நாடு பரந்துவிரிந்த கடற்கரையைக் கொண்டுள்ளதால், பல நூற்றாண்டுகளாக தென் கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டது.  தொழிற்புரட்சிக்குப் பிறகு இங்கிலாந்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட இயந்திரங்களின் இறக்குமதியின் காரணமாகப் போட்டி நிலவி கைத்தறி நெசவுத்தொழில் வீழ்ச்சிக்கு காலனித்துவ கொள்கைகளும் பங்களித்தன.  இருந்தபோதிலும் சில தொழில்கள் காலனித்துவக் காலத்தில் வளர்ந்தன.  There is lot of evidence for presence of industrial activities such as textiles, ship-building, iron and steel making and pottery in precolonial Tamil Nadu.  Given the vast coastline, the region has been involved in trade with both South-East and West Asia for several centuries.  Colonial policies also contributed to the decline of the handloom weaving industry due to competition from machine-made imports from E

ECONOMICS - தமிழ் நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் | Major Industrial Clusters and Their Specialisation in Tamil Nadu

தானியங்கி தொகுப்புகள் சென்னை பெரிய அளவிலான வாகனத் தொழில்துறை தளமாக இருப்பதால் " ஆசியாவின் டெட்ராய்ட் " என்று அழைக்கப்படுகிறது.  சென்னையானது மிக அதிகமான தானியங்கி தொழிலை ஒருங்கிணைக்கும் மற்றும் உதிரிபாகங்கள் செய்யும் தலைமை இடமாகத் திகழ்கிறது.  சில உள்நாட்டு நிறுவனங்களான TVS, TI சைக்கிளஸ், அசோக் லேலண்ட் மற்றும் ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் ஆகியன இதற்கு முன்னர் இருந்தன. பொருளாதார சீர்த்திருத்தத்திற்கு பின்னர் ஹூன்டாய், ஃபோர்டு, டைம்லர்பென்ஸ் மற்றும் ரெனால்ட் – நிசான் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் (Multi National Companies - MNC) இப்பகுதியில் தொழிற்சாலைகளைத் திறந்துள்ளன.  எனவே வெளிநாடுகளிலிருந்து பல உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளரின் கவனங்கள் இங்கே ஈர்க்கப்பட்டுள்ளது.  பல உள்நாட்டு நிறுவனங்களும் சேர்ந்து அனைத்து நிறுவனங்களுக்கான உதிரி பாகங்களின் உற்பத்தித் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.  ஓசூர் மற்றொரு தானியங்கி தொகுப்பாகும். இங்கு TVS மற்றும் அசோக் லேலண்ட் போன்ற நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை இயக்கி வருகின்றன. கோயம்புத்தூர் பகுதி ஒரு தானியங்கிகளின் தொகுப்பாக வளர்ந்து வர

CURRENT AFFAIRS - நடப்பு நிகழ்வுகள் - 3

21) சர்வதேச நாணய நிதியத்தின் முதல் பெண் தலைமை பொருளாதார ஆலோசகர் யார் a) கீதா கோபிநாத்   ✓ 6) ஆனந்தி ராமகிருஷ்ணன் c) லட்சுமி சதாசிவம் d) கமலா படேல்   22) சிபிஐ அமைப்பின் இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார் a) அலோக் வர்மா b) நாகேஸ்வர ராவ்   ✓ c) ராகேஷ் அஸ்தானா d) சந்தானம்   23) கடலூரிலிருந்து விழுப்புரம் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்ட ஆண்டு a) 1993  ✓ b) 1992 c) 1991 d) 1990   24) அனுமதி பெறாமல் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு தடைவிதித்த நாடு எது a) பிரான்ஸ்   ✓ b) ஜெர்மனி c) சீனா d) இந்தியா   25) நபார்டு வங்கியின் தலைவர் a) ஆதர்ஷ் குமார் கோயல் c) நந்தன் நீலகேனி b) G.R. Chintala   ✓ d) சத்ய நாராயணன்

ECONOMICS - சிறப்புப் பொருளாதார மண்ட லங்கள் (Special Economic Zones-SEZs)

நாட்டில் ஏற்றுமதிக்கு இடையூறு இல்லாத சூழலை கருத்தில் கொண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கான ஒரு கொள்கை ஏப்ரல் 2000ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.  அதன்படி, பின்வரும் இடங்களில் ஏற்றுமதி செயலாக்க மண்டலங்களை அரசு அமைத்துள்ளது. நாங்குநேரி SEZ - பல் நோக்கு உற்பத்தி SEZ திருநெல்வேலி எண்ணூர் SEZ - அனல் மின் திட்டம், வயலூர் கோயம்புத்தூர் SEZ - தகவல் தொழிற்நுட்ப பூங்காக்கள், ஓசூர் SEZ - தானியங்கி பொறியியல், மின்னணுவியல், விண்வெளி மற்றும் பாதுகாப்பு. பெரம்பலூர் SEZ - பல்நோக்கு உற்பத்தி SEZ தானியங்கி நகரம் (Auto city) SEZ - தானியங்கிகள், /தானியங்கி உதிரி பாகங்கள், திருவள்ளூர் இந்தியா-சிங்கப்பூர் SEZ - IT/ITES, மின்னணு வன்பொருள், தளவாடங்கள் மற்றும் கிடங்குகள் - திருவள்ளூர் மாவட்டங்கள் உயிரி-மருந்துகள் SEZ - மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு, விஷக்கட்டுப்பாட்டு மையம், மைய மீள் உருவாக்க மருத்துவம், மருத்துவ ஆராய்ச்சி மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் (Madras Export Processing Zone - MEPZ) மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் சென்னையில் ஒரு சிறப்புப் பொருளாதார மையமாகும்.  மத்திய அரசு அமைத்த நாட்டி