-->

Monday, May 30, 2016

பொறியியல் படிப்பு விண்ணப்பிக்க மே 31 கடைசி நாள்

பொறியியல் படிப்பு விண்ணப்பிக்க மே 31 கடைசி நாள்

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான ஆன் லைன் பதிவு மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு கடைசி தேதி மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. நேற்று மாலை 6 மணிநிலவரப்படி பொறியியல் படிப்புக்கு 2 லட்சத்து 44 ஆயிரத்து 120 பேர் பதிவுசெய்துள்ளனர்.விண்ணப்பிக்க கடைசி நாள் மே 31-ம் தேதி ஆகும். பிரின்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் ஜுன் 4-ம் தேதி மாலை 6 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப் பிக்க வேண்டும்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை: மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு இயக்குநர் உத்தரவு.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை: மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு இயக்குநர் உத்தரவு.

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்கூறியிருப்பதாவது:பள்ளி வளாகத்தில் நீர்த்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளிப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, நீர்த்தேக்க தொட்டிகள் இருந்தால் அவைநன்கு மூடப்பட்டு இருக்கிறதா என்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதிசெய்ய வேண்டும். அதன் அருகே மாணவர்கள் செல்லாதவாறுகண் காணிக்க வேண்டும். உணவு இடைவேளை மற்றும் பள்ளியை விட்டு மாலை வீடு திரும்பும் போது அருகே உள்ள நீர்த்தேக்கங்கள், திறந்த வெளி கிணறுகளுக்கு செல்வதால் ஏற்படும் ஆபத்து குறித்தும், இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்து குறித்தும் காலை இறைவணக்கத்தின்போது மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் இருந்தால் உடனே அகற்ற வேண்டும்.ஆபத்தான நிலையில் உள்ள உயர் மின்அழுத்த மின்கம்பங்கள், அறுந்து தொங்கும் மின்கம்பிகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும். மின்இணைப்புகள் சரியாக உள்ளதா, மின்கசிவு, மின்சுற்று கோளாறு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். வகுப்பறைகளில் மின்சுவிட்ச்கள் சரியாக உள்ளதா, கட்டிடங்களின் மேற்கூரை உறுதியாக இருக்கிறதா என்று ஆய்வுசெய்ய வேண்டும்.அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் உரிய நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.தேவை அடிப்படையில் அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி இணைப்புப் பிரிவுகள் தொடங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள் ளது. கடந்த ஆண்டைவிட மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுப்பள்ளியில் பணியாற்றும் நம்மிடம் இருந்து வர வேண்டிய மாற்றங்களும், ஏற்றங்களும்!!!M

அரசுப்பள்ளியில் பணியாற்றும் நம்மிடம் இருந்து வர வேண்டிய மாற்றங்களும், ஏற்றங்களும்!!!

1.ஆசிரியர்கள் தங்களை ஒரு சமூக மாற்றத்திற்கான விதைகள் என்பதை உணரவேண்டும்.

2.ஒரு சிறந்த ஆசிரியர் தொடர்ந்து தம்முடைய வாசிப்பின் மூலம் தன்னை வளப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும்.

3.வகுப்பறையில் தாம் மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல், மாணவர்களுக்கு தங்கள் கருத்துக்களை கூற வாய்ப்பு தரவேண்டும்.

4. வகுப்பறைகள் வெறும் சாக்பீஸால் எழுதப்பட்டதாக இல்லாமல் அறிவியல் கணித உபகரணங்களால் உயிர் பெற வேண்டும்.

5. மாணவர்களை வெறும் மதிப்பெண்கள் போடும் கோழிகளாக உருவாக்காமல்,கலை, இலக்கிய , சமூக செயற்பாட்டாளர்களாக பரிமளிக்க செய்யவேண்டும்.

6. மாணவர்களோடு ஆசிரியர்களின் நல்லுறவு என்பது வகுப்பறையைத் தாண்டி நல்ல தோழமையை அடையாளப் படுத்தவும், காலத்தோடு தேவையான நல்ல வழி காட்டுதல்களை செய்யத்தக்க வகையில் அமையவேண்டும்.

7.ஓவியம், கலை, பேச்சு, பாட்டு , நடனம், பிரச்சினைகளை எதிர்கொள்ள தேவைப்படும் மனதைரியம் போன்றவற்றை கற்பிக்க வேண்டும்.

8. தாம் பணியாற்றும் பள்ளியில் பணிபுரியும் சக பணியாளர்கள்,அலுவலர்கள் முதலானவர்களோடு நட்பு பேண வேண்டும். (கட்டாயம் இல்லை)

9. எதனூடாக கற்றலை மிக எளிமையாக அடைய முடியும் என்கிற தன்னம்பிக்கை நமக்கு இருக்கிறதோ! அந்த இலக்கை அடையும்வரை தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கவேண்டும்.

10. எந்த மொழிப்பாடமாக இருந்தாலும் அதை முதலில் உங்களுக்கு திருப்தி தரும்வகையில் தயார் செய்து அதனை வகுப்பறைகளில் நடைமுறைபடுத்த வேண்டும், ஒருபோதும் நீங்கள் எதிர்பார்க்கும் கருத்தை திணிக்கக்கூடாது

11. கணிணி, குறுந்தகடு(CD), அடர்தகடு(DVD), வலைத்தளம், கட்செவி, சுட்டுரை, மின்னஞ்சல், செய்தித்தாள்கள் , காட்சி ஊடகங்கள் போன்ற தகவல் தொழில்நுட்பங்களைக் கொண்டு கற்றல் கற்பித்தலை மேம்படுத்த வேண்டும்.

12. நாம் பணியாற்றும் பள்ளியும், நம்மிடம் பயிலும் மாணவர்களும் ஏழை எளிய மாணவர்கள் என்பதை உணரவேண்டும்.

13. நம்மிடத்தில் பயின்ற மாணவர்கள் உச்சநிலைக்கு சென்றபிறகு அதற்கு அடிப்படை காரணகர்த்தாவாக நாம்தான் இருந்தோம். எனபதை அம்மாணவனால் அடையாளப்படுத்தும் போது அதைவிட வேறு உயரிய விருது தேவையில்லையே??

14. விதைத்தவன் உறங்கினாலும், விதைகள் உறங்குவதில்லை. என்பதற்கேற்ப எப்பவும் நாம் விதைப்பவர்களாகவே இருப்போம்....

கிரடிட், டெபிட் கார்டு மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு சேவை கட்டணம் ரத்து.

கிரடிட், டெபிட் கார்டு மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு சேவை கட்டணம் ரத்து.

கிரடிட் மற்றும் டெபிட்கார்டு மூலம் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்வதற்கான சேவைக் கட்டணம்ஜூன் 1-ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கிட மத்திய ரயில்வே அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய ஏராளமான பயணிகள் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வருகின் றனர். இதற்கு சேவை கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் பயணிகளின் நலனை கருத்தில்கொண்டு இந்த சேவை கட்டணத்தை ரத்து செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளது.அதன்படி ஜூன் 1 முதல், சேவை கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இந்த புதிய சலுகையால் மக்கள் பயன்பெறுவதுடன், நிர்வாகத்தில் சில்லறை பிரச்சினையையும் தீர்க்க முடியும்.

தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.2உயர்கிறது.

தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.2உயர்கிறது.

தனியார் பால் விலை லிட்டருக்கு நாளை முதல் 2 ரூபாய் உயர்கிறது. இந்த திடீர் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.ஆவின் பாலை விட தனியார் நிறுவன பால் விலை அதிகமாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தனியார் பால் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டது.இந்த நிலையில் தனியார் பால் நிறுவனமான திருமலா, பால் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்பட்டு உள்ளது. இது நாளைமுதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக மாநில தலைவர் பொன்னுசாமி வெளியிட்டள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் பாலுக்கான கொள்முதல் விலை மற்றும் வாகன எரிபொருள் விலை உயராத போது திருமலா நிறுவனம் நாளை திங்கட்கிழமை (மே.30) முதல் தங்களுடைய பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் வரை உயர்த்துவதாக எங்களது பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக அறிவித்துள்ளது.ஏற்கனவே தமிழகத்தில் இருந்து வரும் முன்னணி பால் நிறுவனமான ஹட்சன் ஆரோக்கியா நிறுவனம் இந்த ஆண்டில் கடந்த பிப்ரவரி மற்றும் மே மாதம் முதல் வாரத்தில் தங்களுடைய பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் வீதம் லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்த்தியது.திருமலா நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் எந்தவொரு முன் அறிவிப்பும் வெளியிடாமல் 200 கிராம் தயிர் பாக்கெட்டில் 0.25 கிராம் அளவை குறைத்து ஒரு கிலோவிற்கு ரூ.8.57 பைசா வரை மறைமுக விலையேற்றத்தை மக்கள் மீது திணித்தது. அத்துடன் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு லிட்டருக்கு ரூ. 2 பால் விற்பனை விலையையும் உயர்த்தியது.  மக்கள் விரோத நடவடிக்கையாக பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை தன்னிச்சையாக உயர்த்தும் திருமலா நிறுவனத்திற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள்நலச்சங்கம் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்.மக்களை பாதிக்கின்ற வகையில் பால் விலை உயர்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ள அந்த நிறுவனம் உடனடியாக விலை உயர்வினை திரும்ப பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.