KALVISOLAI TNPSC

Friday, 30 September 2016

மூன்று சக்கர ஆச்சரியம்!

மூன்று சக்கர ஆச்சரியம்!

ஒரே இருக்கை. ஆட்டோவுக்கும், பைக்குக்கும் இடைப்பட்டது போன்ற வடிவமைப்பு. மூன்றே சக்கரங்கள். இரண்டு கதவுகள். கைப்பிடிக்கு பதிலாக, 'ஸ்டியரிங்!' பெட்ரோலுக்கு பதிலாக மின்சாரம். இது தான், 'ஐ ரோட் இ.வி.,' என்ற வாகனம். சாலையில் போக்குவரத்து நெரிசல், வண்டியை நிறுத்த இடமில்லாத பிரச்னை போன்ற இரண்டை மட்டும் கருத்தில் வைத்து வாகனங்களை உருவாக்க வேண்டும் என்று, 'டொயோட்டா' செய்த முடிவின் விளைவு தான் ஐ ரோட். முன்பக்கம் உள்ள இரு சக்கரங்களை இரும்புத் தண்டால் இணைக்கப்படாமல் தனித் தனியே செயல்படுகின்றன. இதனால், வளைவுகளில் வண்டி குடை சாயாமல் இருக்கும்படி முன் இரு சக்கரங் களும் சமாளிக்க உதவுகின்றன. இதை தயாரித்திருப்பது டொயோட்டா என்பதால், வாகன உலகில் ஐ ரோட் மிகவும் கவனத்தை கவர்ந்திருக்கிறது. ஒரே மின்னுாட்டத்தில், 50 கி.மீ., வரை செல்லும் இந்த வாகனம், புகையை கக்காது என்பதும் ஆறுதலான விஷயம்.கடந்த, 2012ல் பரிசோதனைக்காக தயாரித்த இந்த வாகனத்திற்கு, செப்டம்பர் முதல், இரண்டாம் கட்ட சாலைப் பரிசோதனையை நடத்த ஆரம்பித்திருக்கிறது டொயோட்டா. அதுவும் எப்படி?:நிஜ வாடிக்கையாளர்களை விண்ணப்பிக்கச் சொல்லி அவர்களிடமே ஐ ரோட் வாகனங்களை தந்து, வீடு, கடை, அலுவலகம் என்று ஓட்டிப் பார்த்து கருத்து சொல்லும்படி டொயோட்டா கேட்டிருக்கிறது.மேலும், ஐ ரோட் வண்டிக்கு கூடுதல் வசதிகளை செய்து தரும் சாதனங்களை உருவாக்கும்படி போட்டி வைத்து, அதில் வெற்றி பெற்றவர்களின் கண்டுபிடிப்புகளை ஐ ரோடுடன் சேர்க்க திட்டமிட்டுள்ளது டொயோட்டா.முதல் கட்டமாக, உபேர் போன்ற வாடகை கார் நிறுவனங்களுக்கு ஐ ரோட் வாகனத்தை தர திட்டமிட்டு இருக்கிறது. இந்தியாவில் வெள்ளோட்டம் எப்போது என்று தெரியவில்லை.

No comments:

Post a comment