KALVISOLAI TNPSC

Monday, 3 October 2016

ஜனவரி 8 என்ஜினீயரிங் சர்வீசஸ் தேர்வு!!!

ஜனவரி 8 என்ஜினீயரிங் சர்வீசஸ் தேர்வு!!!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் தேவைப்படும் என்ஜினீயர்களுக்கான தேவையை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. நடத்தி நிறைவேற்றி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு துறைகளில் உள்ள 440 காலியிடங்களை நிரப்புவதற்கான, என்ஜினீயரிங் சர்வீசஸ் முதல் நிலை தகுதி தேர்வை யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

இந்திய ரயில்வே, இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறை, மத்திய நீர் பொறியியல் துறை, சர்வே ஆஃப் இந்தியா, இந்திய ராணுவம் போன்றவற்றில் பணியாற்ற இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு ஜனவரி மாதம் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கு, 'ஆன்லைன்' வழியாக https://upsconline.nic.in என்னும் இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

முதல்நிலை தேர்வுக்கு பின், பிரதான தேர்வு நடத்தப்படும். அதன்பிறகு நேர்முக தேர்வு நடத்தப்படும். என்ஜினீயரிங் சர்வீசஸ் தேர்வை எழுத விரும்புபவர்கள் பி.இ - பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வில் பங்கேற்க விண்ணப்பதாரர் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். என்ஜினீயரிங் சர்வீசஸ் தேர்வு விவரங்கள் குறித்து மேலும் தெரிந்துக் கொள்ள http://www.upsc.gov.in என்ற இணையதள முகவரியை பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a comment