KALVISOLAI TNPSC

Friday, 7 October 2016

உள்ளாட்சித் தேர்தல் ரத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

உள்ளாட்சித் தேர்தல் ரத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

தமிழக உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை என்று கூறி திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து நீதிபதி கிருபாகரன்  உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து, இன்று பிற்பகலில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி ஜி. ரமேஷ், பார்த்திபன் ஆகியோர் கொண்ட அமர்வு, உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று கூறி உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் அறிவித்தனர்.

No comments:

Post a comment