KALVISOLAI TNPSC

Sunday, 2 October 2016

மண்ணீரல் வீக்கத்தை போக்கம் மருது

மண்ணீரல் வீக்கத்தை போக்கம் மருது

ஒடவல் லார்தம ரோடு நடாவுவன்

பாடவல் லாரொலி பார்மிவை வாழ்குவன்

தேடவல் லாரொலி பார்மிசை வாழ்குவன்

கூடவல் லாரடி கூடுவன் யானே

 

மருது என்றவுடன் மருது சகோதரர்கள் தான் நமக்கு நினைவுக்கு வருவார்கள். மருதமரத்தை பிள்ளையாக கடவுளாக கருதி வழிபடும் வழக்கம் நம்மிடம் உள்ளது.  நீள்சதுர இலைகள் குறுகலாக அமைந்த பெருமரம் இதன் பட்டைகள் வழுவழுப்பாகவும் சாம்பல் நிறத்துடனும் அமைந்திருக்கும். தமிழகத்தின் ஆற்றங்கரையில் தானாகவே வளர்ந்திருக்கும். இலைகள் சதை நரம்புகளை சுருங்கசெய்யும். பட்டை நோய் நீக்கும். தாது பலத்தை கொடுக்கும்.

 

மருதம்பட்டை வேண்டிய அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அதற்கு எட்டு பங்கு தண்ணீர்விட்டு ஒன்றாக கலந்து எட்டில் ஒன்றாக காய்ச்சி அந்த தண்ணீரை எரித்து மெழுகுபதத்தில் எடுத்து 1650 மிலி குடித்தால் கொடிய சுரம் நீங்கும். பட்டை 100கிராம் 4 செம்பரத்தைப்பூ ஆகியவற்றை சிதைத்து 1லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக காய்ச்சி காலை மாலை 200மிலி குடித்துவந்தால் இதயநோய் அனைத்தும் தீரும். காரம் புளி குறைத்து 1 மண்டலம் ஓய்வில் இருக்கவேண்டும்.

 

மருதம்பட்டை , அரசம்பட்டை, வில்வப்பட்டை, வகைக்கு 34கிராம் சாதிக்காய், சாபத்தரி லவங்கப்பட்டை வகைக்கு 19கிராம் எடுத்து 1400மிலி தண்ணீரிட்டு 170மிலியாக காய்ச்சி 60 மிலி வீதம் காலை மாலை குடித்துவர கழிச்சல் நீங்கும். இதயத்தை வலிமையாக்கும். தாங்கமுடியாத பல்வலி உள்ளவர்கள் இதன் பொடியால் பல்துலக்கினால் வலி அனைத்தும் தீரும். பட்டை 100கிராம் சித்தரத்தை 5 கிராம் 1 லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டராக காய்ச்சி 100மிலி அளவாக 4வேளை குடித்துவர எலும்புருக்கி இரைப்பிருமல் தீரும்.

 

பட்டையை பொடி செய்து மூக்கிலிட தலைவலி நீங்கும். பட்டை 50 சிராம் நாவல் பட்டை 50கிராம் அரை லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி கால் லிட்டராக்கி வடிகட்டி காலை மாலை 50முதல் 100மிலி சாப்பிட மதுமேகம் தீரும்.  இலையை அவித்து பிழிந்து ஆறாத புண்களின் மீது பூசிவர அவை விரைந்து குணமாகும்.பட்டைத்தூளுடன் மஞ்சள் கரிசலாங்கண்ணித்தூள் சமமாக கலந்து அரைத்தேக்கரண்டி காலை மாலை தேனில் சாப்பிட காமாலை குணமாகும். மண்ணீரல் வீக்கம் குறையும்.

 

பட்டைத்தூளுடன் ஆடாதொடைச்சாறு 1தேக்கரண்டி சேர்த்து வெள்ளாட்டுப்பாலில் சாப்பிட நுரையீரல் புண் குணமாகும். இலை 11கிராம் 180மிலி பசும்பாலில் அரைத்து கலக்கி நாள்தோறும் மூன்றுவேளை பத்தியத்துடன் சாப்பிட பித்தவெடிப்பு நீங்கும்.  பட்டை குடிநீரால் புண் சொறி முதலியவற்றை கழுவி வந்தால் குணமாகும். இலையை அரைத்து எலுமிச்சை  அளவு காலை மாலை சாப்பிட்டுவர பித்தகுன்மம், வயிற்றுவலி நீங்கும்.

 

ஓதமெனு நீரிழிவை போட்டும் பிரேமேகங்

காதமென வோடக் கடத்துங்காண்

மயக்க மொடுதாக மாறாச் சுரத்தின்

தயக்கமறுக்கும் மருதஞ்சாற்று

குட்டரோக கங்கிருமி கோர வயிற்றுவலி

துட்டவறட் சூலை தொகையுங்கான்- சிட்டிப்

பொருத்தம்பா மென்னு விழிப் பூவையரே நாளு

மருதம்பா ரென்றளவில் மாய்ந்து

 

என்கின்றார் அகத்தியர். ஆற்றில் ஓரம் வளர்ந்து கிடக்கும் மரம்தானே என்று அலட்சியம் செய்யாமல் அதன் மருத்துவகுணங்களை ஆராய்ந்து பயன்படுத்தும் முறைகளை நமக்கு அளித்த முன்னோர்கள் வழியில் பயன்படுத்தி வளமோடு வாழ்வோம்.

No comments:

Post a comment