KALVISOLAI TNPSC

Monday, 7 November 2016

காற்று மாசு பிரச்னை...:பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு.

காற்று மாசு பிரச்னை...:பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு.

தலைநகர் டில்லியில், காற்றில் மாசு கலப்பு மோசமான நிலையை எட்டியிருப்பதால், புதன் கிழமை வரை, மூன்று நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, கட்டுமானப் பணிகளுக்கு தடை உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.டில்லியில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். தீபாவளிப் பண்டிகையையொட்டி, டில்லியில் பட்டாசுகள் அதிகஅளவில் வெடித்ததால், காற்றில் மாசு கலந்து, மக்கள் சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டனர். தொழிற்சாலைகள், வாகனங்கள் வெளியேற் றும் புகை உள்ளிட்ட காரணங்களால், டில்லி யில் எங்கு நோக்கினும் புகை மற்றும் புழுதி மண்டலமாக காட்சி அளிக்கிறது. குளிர்காலம் துவங்கியுள்ளதால், கடுமையான பனி மூட்டமும் காணப்படுகிறது.இது தொடர்பாக, உயர் அதிகாரிகளின் அவசர கூட்டத்தைக் கூட்டி, முதல்வர் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை நடத்தினார்; இதன் பின், அவர் கூறியதாவது:டில்லியில், காற்றில் மாசு கலப்பு அதிகளவில் உள்ளது. இதனால், புதன்கிழமை வரை, மூன்று நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. கட்டு மானப் பணி, கட்டட இடிப்பு பணிகளுக்கு, ஐந்து நாட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது; பதர்பூர் மின் ஆலையை தற்காலிகமாக மூட திட்டமிடப்பட்டுள்ளது.அண்டை மாநிலங்களான, ஹரியானா - பஞ்சாபில், அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளதாலும், டில்லியில் பாதிப்பு ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக, செயற்கை மழை பெய்விப்பது குறித்து, மத்திய அரசை கலந்தாலோசிக்க திட்டமிட்டுள் ளோம்.வாகனங்களின் பதிவு எண் அடிப் படையில், ஒரு நாள் விட்டு ஒரு நாள், சாலைகளில் அனுமதிக் கும் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து யோசித்து வருகிறோம்.தற்போதைய நிலையை கருத்தில் வைத்து, கூடிய வரை வீட்டிலேயே இருக்கும்படி, டில்லி மக்களுக்கு வேண்டுகோள்விடுக்கிறோம். முடிந்தால், வீட்டில் இருந்தே பணியாற்றும்படி வேண்டுகிறோம்.புழுதிப் படல பிரச்னைக்கு தீர்வாக, சாலைகளில் தண்ணீர் தெளிக்கப்படும். குப்பையை எரிப்போருக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக, சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிடும். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.இதற்கிடையே, குஜராத் - மேற்கு வங்கம் கிரிக்கெட் அணிகள் இடையே, நேற்று நடக்கவிருந்த ரஞ்சி போட்டி, காற்று மாசு பிரச்னையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.டில்லியில், 17 ஆண்டுகளில் இல்லாத வகையில், காற்றில் மாசு கலப்பு அதிகமாக உள்ள தால், மக்கள் மூச்சுத் திணறல், ஒவ்வாமை போன்ற உடல் நலக் கோளாறுகளால் அவதிப் படுகின்றனர். ஆஸ்துமா, சுவாசக் கோளாறால் பாதிக்கப் பட்டுள்ளோர் அதிகளவில் பிரச்னை களை எதிர்கொண்டுள்ளதாக, டாக்டர்கள் தெரிவித் துள்ளனர்.இதன் காரணமாக, மருத்துவமனை களுக்கு நோயாளி களின் வருகை அதிகரித்துள்ளது.டில்லியில் பணியாற்றும், சி..எஸ்.எப்., எனப் படும், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் கள், 7,000 பேருக்கு, முகத்தை மூடிக் கொள்ள உதவும், 'மாஸ்க்'குகளை வழங்க, திட்டமிடப் பட்டுள்ளது. சி..எஸ்.எப்., தலைவர், .பி.சிங், இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.டில்லியில், காற்றில் மாசு கலப்பு அதிகமாக உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண எடுக் கப்படும் நடவடிக்கைகள், கடலில் பெருங் காயம் கரைப்பதை போலவே உள்ளன. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் முழுப் பொறுப்பும், மத்திய அரசையே சாரும்.அஸ்வனி குமார் சுற்றுச்சூழல் மீதான பார்லி., நிலைக்குழு முன்னாள் தலைவர்

No comments:

Post a comment