KALVISOLAI TNPSC

Wednesday, 28 February 2018

சொந்த ஊரில் கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க அரசாணை வெளியீடு


சொந்த ஊரில் கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க அரசாணை வெளியீடு |  தமிழக வருவாய்த்துறை செயலாளர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த 17.8.17 அன்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில், நிர்வாக வசதிகளுக்காக கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களின் சொந்த வருவாய் வட்டத்தில் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார். இதற்கான விதிகளை வகுத்து ஆணை பிறப்பிக்க அரசுக்கு வருவாய் நிர்வாக கமிஷனர் கடிதம் அனுப்பினார். அதனடிப்படையில் 11 விதிகள் வகுக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்படு கிறது. அதன்படி, கிராம நிர்வாக அலுவலர்கள் தனது சொந்த வருவாய் வட்டத்தில், பணி மூப்பு அடிப்படையில், அங்கு காலியிடம் இருந்தால் நியமிக்கப்படுவார்கள். சொந்த ஊரில் நியமிக்கப்படுவதை அவர்கள் உரிமையாக எடுத்துக்கொள்ள முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a comment