KALVISOLAI TNPSC

Friday, 23 March 2018

FIND TEACHER POST – ன் கல்விப்பணியில் ஒரு மௌன புரட்சி

FIND TEACHER POST – ன் கல்விப்பணியில் ஒரு மௌன புரட்சி | பள்ளிக்கல்வி பணியில் நினைத்து பார்க்க முடியாத சாதனையை உண்மையிலேயே ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் குருவரெட்டியூர் என்ற ஒரு கிராமத்தில் எம்.ஏ. எம் எக்சல் (M.A.M EXEL MATRIC HR.SEC.SCHOOL) என்ற கல்வி நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் ஒரு மாபெரும் வரலாறு எழுதப்படுகிறது என்று கேள்விப்பட்டு நமது ஆசிரியர் குழு அங்கு சென்றது. பால மலை அடிவாரத்தில் இயற்கை சூழலில் அமைந்துள்ள இப்பள்ளியின் கட்டிட முகப்பின் வாசகமே மெய் சிலிர்க்க வைக்கிறது. 


ஆம். நம் தேசத்தில் தொண்டர்களுக்கு பஞ்சமில்லை. நல்ல தலைவர்களுக்கு தான் பஞ்சம். வித்தியாசமான அணுகுமுறை. உள்ளே நுழைந்ததும் அறிவியல் கூடம், நூலகம், ஆலோசனை கூடம், அறிவியலாளர்களுடன் மாணவர்களுக்கான நேரடி தொடர்புக்குரிய கூடம் என்று அனைத்து வகையான கூடங்கள். அசந்து போனோம். ஆரம்பிக்கபட்ட நான்கு ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், இந்த பள்ளியின் வெற்றிக்குரிய காரணங்கள் என்னவென்று விசாரித்த போது தான் தெரிந்தது இந்த பள்ளி முற்றிலும் மற்ற பள்ளிகளிலிருந்து வித்தியாசப்படுகிறது என்று. 

இப்பள்ளியின் ஆசிரியர் தேர்வு முறை: தகுதி மிக்க ஆசிரியர்களால் மட்டுமே நல்லதொரு கல்வியை கொடுக்கமுடியும். இப்பள்ளிக்கு தேவையான ஆசிரியர்களை தேடுவதற்கென்றே அனைத்து ஆசிரியபட்டதாரிகளையும் ஒன்று சேர்க்க www.findteacherpost.com என்ற இணையதளம் தொடங்கியுள்ளார்கள். அதிலிருந்து பள்ளிக்கு தேவையானவர்களை சுலபமாக தேர்வு செய்கிறார்கள். தற்போது www.findteacherpost.com ல் 50000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் 250 க்கும் மேற்பட்ட பள்ளிகளும் ஒன்று சேர்க்கப்பட்டு பயனடைந்து வருகின்றனர். வேலை தேடும் ஆசிரியர்களுக்கு முற்றிலும் இலவசமாக இந்த சேவையை செய்து வருகிறார்கள். (வேலை தேடும் ஆசிரிய பட்டதாரிகள் இதில் பதிவு செய்து பயணடையுங்கள்) 


கல்வி முறை: தமிழகத்திலேயே முதன்முறையாக மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மத்திய அரசின் பாடத்திட்டத்துக்கு இணையான துணை நூல்கள் கடந்த இரு வருடங்களாக (NEET issue ஆரம்பிபதற்கு முன்பிருந்தே) பயிற்றுவிக்கப்படுகிறது. ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் இவை NCERT பாட திட்ட நூல்கள் கூடுதலாக பயிற்றுவிக்கபடுகிறது. மிகவும் பிரசித்திபெற்ற நகர்புற பள்ளிகளின் ஆசிரியர்களில் கிராம புற மாணவர்களுக்கு சேவை நோக்கம் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை பகுதி நேர ஆசிரியர்களாக வைத்து ONLINE மூலம் 6,7 மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு NEET / IIT-JEE Foundation Course கற்பிக்கபடுகிறது. இதற்கென்றே தனியாக ONLINE CLASS ROOM மிகசிறப்பாக வடிவமைத்துள்ளார்கள். கடந்த வருடத்தில் 8 பேர் NEET தேர்வில் தேர்ச்சி பெற்றார்கள் என்பதே இவர்களின் தகுதிக்கு சான்று. 

இது மட்டுமல்ல ஆரம்பிக்கபட்டு நான்கு ஆண்டுகளில் மருத்துவம், கால்நடை மருத்துவம், வேளாண்மை, பொறியியல் (அண்ணா பல்கலைக்கழகம், VIT) எண்ணற்ற மாணவர்களை அனுப்பியுள்ளார்கள். இங்கு படிக்கும் மாணவ மாணவியர்கள் மிக சிறப்பாக கணினியை கையாளுகிறார்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் தனி தனியாக ஒரு USER ID, PASSWORD கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அவர்களுக்கு தேவையான CLASS WORK / HOME WORK அதன் மூலம் கையாலபடுகிறது. 


இதற்கென இவர்கள் தங்களது FIND TEACHER POST – WEB SITE மூலமாக WORKSHEET, QUESTION BANK & QUIZ இவைகளை தொடர்ந்து UPDATE செய்து வருகிறார்கள். இதில் என்ன சிறப்பு என்றால் இப்படிப்பட்ட செயல்களை செய்யும் பெரிய கல்வி நிறுவனங்கள் இதை மற்ற பள்ளியின் மாணவர்களுக்கு தர மாட்டார்கள். ஆனால் இவர்கள் இதை மற்ற பள்ளிகளுக்கும் வழங்கி வருகிறார்கள். உதாரணமாக இவர்கள் தங்களது அனைத்து வகுப்பு மாணவர்களுக்கென்றும் Question Paper Creator Tool என்ற மென்பொருள் வடிவமைத்துள்ளார்கள். 

அது தற்போது +2 வில் 70 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால் 70 Type Questions உடனே Generate செய்து தருகிறது. இந்த மென்பொருள் 70000 வினாத்தாள்களை உள்ளடக்கியது. இந்த மென்பொருள் Metric பள்ளி மாணவனை CBSE பாடத்திட்டத்தில் ஒரு மதிப்பெண் அதாவது நீட் தேர்வுக்கு மிக சுலபமாக தயார்படுத்த உதவுகிறது. இதை தங்கள் மாணவர்களுக்கு மட்டும் பயன்படுத்தாமல் தமிழகத்தில் சுமார் 140க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இதை கொடுத்துள்ளார்கள். 


இதுவே இவர்களின் சிறப்பு. மேலும் இதில் முதல்வராக பணிபுரியும் பெண்மணி அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள நவோதயா பள்ளியிலும், மதுரை TVS பள்ளியிலும் பின்னர் மாலி நாட்டிலும் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர். ஒரு குழந்தையின் வளர்ச்சி அம்மாவின் கையில் தான் உள்ளது என்பதை புரிந்ததால் இங்கு சுற்று வட்டாரத்தில் விவசாய வேலைக்கு செல்லும் படிக்காத பெற்றோர்கள் மாலை ஆறு மணிக்கு தங்கள் குழந்தைகளை திரும்ப பள்ளிக்கு கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள் இரவு 8 மணி வரை இங்குள்ள ஆசிரியைகள் அன்றைய HOME WORK செய்து வைத்து திரும்ப வீட்டுக்கு அனுப்புகிறார்கள். 


இதற்கென தனியாக எந்தவொரு கட்டணமும் இல்லை. வாரத்தில் ஒரு நாள் இங்கு நன்னெறி வகுப்பு நடத்தப்படுகிறது. மிகச்சிறந்த தலைவர்களின் வரலாறு, சமூகசிந்தனை போதிக்கப்படுவது கூடுதல் சிறப்பு. சாதாரண கிராம பின்னணி கொண்ட வறுமை கோட்டுக்கும் கீழ் உள்ள உழைப்பாளிகளின் குழந்தைகள் மிக சிறப்பாக ஆங்கிலம் பேசுகிறார்கள். 


இவர்களது நவீன அறிவியல் மற்றும் சமூக மேம்பாடுக்கான முயற்சிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இவர்களது மென்பொருளை பயன்படுத்த விரும்பும் பள்ளிகள் 8870574091, 7010347233, 9597534613 or contact@findteacherpost.com க்கு தொடர்பு கொள்ளலாம். 


No comments:

Post a comment