முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ECONOMICS - தமிழ் நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் | Major Industrial Clusters and Their Specialisation in Tamil Nadu

தானியங்கி தொகுப்புகள்
 • சென்னை பெரிய அளவிலான வாகனத் தொழில்துறை தளமாக இருப்பதால் "ஆசியாவின் டெட்ராய்ட்" என்று அழைக்கப்படுகிறது. 
 • சென்னையானது மிக அதிகமான தானியங்கி தொழிலை ஒருங்கிணைக்கும் மற்றும் உதிரிபாகங்கள் செய்யும் தலைமை இடமாகத் திகழ்கிறது. 
 • சில உள்நாட்டு நிறுவனங்களான TVS, TI சைக்கிளஸ், அசோக் லேலண்ட் மற்றும் ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் ஆகியன இதற்கு முன்னர் இருந்தன. பொருளாதார சீர்த்திருத்தத்திற்கு பின்னர் ஹூன்டாய், ஃபோர்டு, டைம்லர்பென்ஸ் மற்றும் ரெனால்ட் – நிசான் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் (Multi National Companies - MNC) இப்பகுதியில் தொழிற்சாலைகளைத் திறந்துள்ளன. 
 • எனவே வெளிநாடுகளிலிருந்து பல உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளரின் கவனங்கள் இங்கே ஈர்க்கப்பட்டுள்ளது. 
 • பல உள்நாட்டு நிறுவனங்களும் சேர்ந்து அனைத்து நிறுவனங்களுக்கான உதிரி பாகங்களின் உற்பத்தித் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. 
 • ஓசூர் மற்றொரு தானியங்கி தொகுப்பாகும். இங்கு TVS மற்றும் அசோக் லேலண்ட் போன்ற நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை இயக்கி வருகின்றன.
 • கோயம்புத்தூர் பகுதி ஒரு தானியங்கிகளின் தொகுப்பாக வளர்ந்து வருகிறது. 

Automotive Clusters

 • Chennai is nicknamed as "The Detroit of Asia" because of its large auto industry base. 
 • Chennai is home to large number of auto assembly and component making firms. 
 • While there were a few domestic firms like TVS, TI Cycles, 
 • Ashok Leyland and Standard Motors earlier, in the post-reform period, several MNC firms like Hyundai, Ford, Daimler-Benz and Renault-Nissan have opened factories in the region. 
 • This in turn has attracted a number of component suppliers from foreign countries. Many local firms too cater to component production for all these firms.
 • Hosur is another auto cluster with firms like TVS and Ashok Leyland having their factories there. 
 • Coimbatore region is also developing into an auto component cluster.
 வாகன மற்றும் பேருந்து கட்டுமானத் தொழில் தொகுப்புகள் 
 • தமிழகத்தின் மேற்கு பகுதியில் உள்ள நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு பகுதிகள் சுமை தூக்கும் வாகன முழு பாக கட்டமைப்பிற்கான தொழிற்சாலைகளுக்குப் பெயர் பெற்ற இடங்களாகும். 
 • 50க்கும் மேற்பட்ட அலகுகளைக் கொண்டு கரூர் மற்றொரு முக்கிய மையமாகத் திகழ்கிறது. 
 • பல தொழில் முனைவோர்கள் பெரிய அளவிலான வாகனக் கட்டுமானத்துறையில் பணிபுரிந்து தற்போது தங்கள் சொந்த அலகுகளை அமைக்க முன்வந்துள்ளனர். 

Truck and Bus Body Building Industry Clusters

 • The Namakkal-Tiruchengode belt in western Tamil Nadu is known for its truck body building industry. 
 • Karur is another major hub with more than 50 units. 
 • Many entrepreuners were previous employees in a big firm involved in body building who came out to set up their own units.
நெசவுத் தொழில் தொகுப்புகள் 
 • இந்தியாவில் மிகப்பெரிய நெசவுத் தொழில் துறைகளுக்கு தமிழ்நாடு தாயகமாக விளங்குகிறது. 
 • காலனித்துவ காலத்திலிருந்து பருத்தி நெசவுத் தொழில் வளர்ச்சியின் காரணமாக கோயம்புத்தூர் "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" என அழைக்கப்படுகிறது. 
 • தற்போது நெசவு ஆலைகளில் பெரும்பாலானவை கோயம்புத்தூரைச் சுற்றியுள்ளன. 
 • நமது நாட்டின் மிகப் பெரிய பருத்தி நெசவு தொழில் உற்பத்தியில் தமிழகம் பெரும்பங்கு வகிக்கிறது. 
 • ஈரோடு மற்றும் சேலம் பகுதியிலும் அதிகளவிலான மின்தறி அலகுகள் இருப்பதால் மின்விசைத்தறித் தொழில்மிகவும் பரவலாக உள்ளது. 
 • திருப்பூரானது பின்னலாடை தயாரிக்கும் ஏராளமான நிறுவனங்களின் தொகுப்புகளுக்கு புகழ்பெற்ற இடமாகும். 
 • இது நாட்டின் பருத்தி பின்னலாடை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 80% பங்கினைக் கொண்டுள்ளது. 
 • 1980களின் பிற்பகுதியிலிருந்து மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளது. 
 • இது உள்நாட்டுச் சந்தையில் ஒரு மிகப்பெரிய உற்பத்தியாளராகத் திகழ்கிறது. 
 • இந்த மிகப்பெரிய வெற்றியின் காரணமாக உலகச் சந்தையில் உலகின் தெற்கு அரைக் கோளத்தில் ஒரு சக்தி வாய்ந்த தொகுப்பாக இந்த இடம் உள்ளது. 
 • ஆரம்பத்தில் உள்ளூர் தொழில்முனைவோரால் பெரும்பாலான நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. 
 • தற்போது இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் இங்கு தங்கள் தொழிற்சாலைகளை அமைத்துள்ளனர். 
 • தெற்கு அரைக்கோளத்தில் உள்ள நாடுகள் உலகளாவிய தெற்கு நாடுகள் (Global South) என்று அழைக்கப்படுகின்றன. 
 • வாகனக் கட்டுமானத் தொழிலமைப்பைத் தவிர மேசைத்துணி, திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் துண்டுகள் போன்ற வீட்டு அலங்கார பொருள்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையமாக கரூர் உள்ளது. 
 • மேலும் பவானி மற்றும் குமாரபாளையம் உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு தரை விரிப்புகளை உற்பத்திச் செய்யும் முக்கிய மையங்களாகத் திகழ்கின்றன. 
 • இத்தகைய நவீன தொகுப்புகளைத் தவிர பட்டு மற்றும் கைத்தறிப் புடவைகளுக்கு பிரபலமான மதுரை மற்றும் காஞ்சிபுரம் போன்ற பாரம்பரிய கைவினைத் தொகுப்புகளும் உள்ளன. 

Textile Clusters

 • Tamil Nadu is home to the largest textiles sector in the country. 
 • Because of the development of cotton textile industry since the colonial period, Coimbatore often referred as the "Manchester of South India". 
 • At present, most of the spinning mills have moved around the Coimbatore city. 
 • Tamil Nadu is the biggest producer of cotton yarn in the country.
 • Powerloom is however more widespread with Erode and Salem region too having a large number of power loom units.
 • Tiruppur is famous for clustering of a large number of firms producing cotton knitwear. 
 • It accounts for nearly 80% of the country's cotton knitwear exports and generates employment in the range of over three lakh people since the late 1980s. 
 • It is also a major producer for the domestic market. 
 • Because of its success in the global market, it is seen as one of the most dynamic clusters in the Global South. 
 • While initially most firms were run by local entrepreneurs, at present, some of the leading garment exporters in India have set up factories here.1.
 • Countries in the southern hemisphere are called Global South countries.
 • Apart from body building, Karur is a major centre of exports of home furnishings like table cloth, curtains, bed covers and towels. 
 • Bhavani and Kumarapalayam are again major centres of production of carpets, both for the domestic and the global markets.
 • Apart from such modern clusters, there are also traditional artisanal clusters such as Madurai and Kanchipuram that are famous for silk and cotton handloom sarees.
தோல் மற்றும் தோல் பொருள்களின் தொகுப்பு 
 • இந்தியாவின் 60% தோல் பதனிடும் உற்பத்தித்திறனையும் 38% தோல் காலணிகள் மற்றும் தோல் உதிரி பாகங்கள் அதனைச் சார்ந்த பொருள்களின் உற்பத்தியையும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது. 
 • வேலூர் அதனைச் சுற்றியுள்ள ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய நகரங்கள் நூற்றுக்கணக்கான தோல் உற்பத்தி மற்றும் பதனிடும் வசதியைக் கொண்டுள்ளது. 
 • தோல் பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதன்மை மாவட்டமாக வேலூர் திகழ்கிறது. 
 • சென்னையிலும் பல தோல் சார்ந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலை நிறுவனங்கள் உள்ளன. 
 • திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் தோல் பதனிடுதல் மற்றும் உற்பத்தித் தொழிற்சாலைகளின் தொகுப்பு காணப்படுகிறது. 
 • தோல் உற்பத்தித் தொழிற்சாலையும் வேலைவாய்ப்பை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

Leather and Leather Goods Clusters

 • Tamil Nadu accounts for 60 per cent of leather tanning capacity in India and 38 per cent of all leather footwear, garments and components. 
 • Hundreds of leather and tannery facilities are located around Vellore and its nearby towns, such as Ranipet, Ambur and Vaniyambadi. 
 • The Vellore district is the top exporter of finished leather goods in the country. 
 • Chennai also has a large number of leather product making units involved in exports. 
 • There is another clustering of leather processing in Dindigul and Erode. 
 • The leather products sector too is a major employment generator.
 பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சிடுதல் தொகுப்பு 
 • தீப்பெட்டி உற்பத்தித் தொழிற்சாலையில் புகழ்பெற்று விளங்கும் சிவகாசி பகுதியானது தற்பொழுது பட்டாசு மற்றும் அச்சிடும் தொழிலில் நாட்டின் சிறந்த நகரமாகத் திகழ்கிறது. 
 • இந்தியா 90% பட்டாசு உற்பத்தி 80% பாதுகாப்பான தீப்பெட்டி உற்பத்தி மற்றும் 60% அச்சுப்பணி தேர்வுகளுக்கு முக்கிய பங்காக இதனையே சார்ந்துள்ளது. 
 • அச்சிடும் தொழிற்சாலை ஒவ்வொன்றும் அவற்றின் பணிகளில் தனித்துவம் பெற்று மேலோங்கி விளங்குகிறது. 
 • காலனித்துவ காலத்தில் தொடங்கப்பட்ட இத்தொழிலானது தற்பொழுது அதிகளவில் வேலை வாய்ப்பை அளிக்கிறது.

Fireworks, Matches and Printing Cluster

 • Sivakasi region, once famous for its match industry has now become a major centre for printing and fireworks in the country. 
 • It is believed to contribute to 90% of India’s fireworks production, 80% of safety matches and 60% of offset printing solutions. 
 • The offset printing industry has a high degree of specialisation among firms with several of them undertaking just one operation required for printing. 
 • All these industries have their origin in the colonial period and at present offer employment to a large number of workers. 
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப தொகுப்புகள் 
 • 1990களில் ஏற்பட்ட பொருளாதார சீர்திருத்தத்திற்குப் பின் வந்த நோக்கியா, ஃபாக்ஸ்கான், மோட்டோரோலா, சோனி எரிக்ஸன், சாம்சங் மற்றும் டெல் போன்ற வன்பொருள் மற்றும் மின்னணு பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் கைபேசி கருவிகள், சுழல் பலகைகள், நுகர்வோர் மின் சாதனப் பொருள் தயாரிப்பில் ஈடுபட ஆரம்பித்தன. 
 • இந்நிறுவனங்கள் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறுவனங்களை நிறுவின.
Electronics and Information Technology (IT) Clusters
 • After the economic reforms started in the early 1990s, the state has seen the entry of hardware and electronics manufacturers like Nokia, Foxconn, Motorola, Sony-Ericsson, Samsung and Dell making cellular handset devices, circuit boards and consumer electronics. 
 • They have all been set up in the Chennai region.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ECONOMICS - தமிழ்நாட்டில் செயல்படும் முக்கியமான திட்டங்கள் | Important ongoing Schemes in Tamil Nadu

1. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நலத் திட்டத்தின் (Dr. Muthulakshmi Reddy Maternity Benefit Scheme) கீழ், ஏழை கர்பிணிப் பெண்க ளுக்கு ₹12,000/- நிதியுதவி வழங்கப்படுகிறது.  2. முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீடு திட்டம் (Chief Minister's Comprehensive Health Insurance Scheme) 2011-12 ஆம் ஆண்டில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் அனைவருக்கும் உடல் நலம் வழங்கும் நோக்கில் அரசாங்கத்தால் இலவச மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை வழங்குவதாகும்  3. தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டங்கள் (Tamil Nadu Health Systems Projects) இலவசமாக ஆம்புலன்ஸ் - சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. (108 அவசர ஆம்புலன்ஸ் சேவை).  4. 'பள்ளி சுகாதார திட்டம்' (School Health Programme) விரிவான சுகாதார சேவையை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதை வலியுறுத்துகிறது.  5. தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் (National Leprosy Eradication Programme) மூலம் அனைத்து தொழுநோயாளிகளையும் கண்டறிந்து தொடர்ச்சியான சிகிச்சையை வழங்குவதை நோக்கமாக கொண்டு மாநிலத்தில் செயல்படுத்

கால்நடை உதவி மருத்துவர் தேர்வு முடிவு வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு: 35/2020 நாள்:20.10.2020  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்க்காணும் பதவிக்கான தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.  பதவியின் பெயர் : 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்பு பணிக்கான கால்நடை உதவி மருத்துவர்.  மொத்தக் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை : 1141  தேர்வு நடைபெற்ற நாள் 23.02.2020 மு.ப & பி.ப  தேர்வில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை : 2015  சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்டவர்களின் சான்றிதழ்களைத் தேர்வாணைய இணைய தளத்தில் அரசு இ சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யப்படவேண்டிய நாட்கள் : 28.10.2020 முதல் 06.11.2020 வரை  சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெர

ECONOMICS - அரசாங்கமும் வரிகளும் அறிமுகம் | Government and Taxes

இந்தியாவில் வரி விதிப்பின் வேர்கள் மனு ஸ்மிருதி மற்றும் அர்த்தசாஸ்திர காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டது. தற்கால இந்திய வரி முறையானது பண்டைய கால வரி முறையை அடிப்படையாகக் கொண்டது. Taxation in India has its roots from the period of Manu Smriti and Arthasastra.  The present Indian tax system is based on this ancient tax system.  இந்தியாவில் முதன்முதலாக வருமானவரி 1860ஆம் ஆண்டு சர் ஜேம்ஸ் வில்சன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1857ஆம் ஆண்டு கலகத்தின் மூலம் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட அரசாங்கத்தின் மூலம் போடப்பட்ட ஆணையே வரி விதிப்பாகும். In India, Income Tax was introduced for the first time in 1860 by Sir James Wilson  In order to meet the losses sustained by the Government on account of the Mutiny of 1857.  நேர்முக வரி என்பது மத்திய அரசுக்கு அல்லது மாநில அரசுக்கு அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாகச் செலுத்தும் வரியாகும். இதில் வருமான வரி, சொத்துவரி ஆகியன அடங்கும். வருமான வரி தனி நபர்கள் மற்றும் தொழில் செய்பவர்களால் ஈட்டப்பட்ட மற்றும் ஈட்டப்படாத வருமானங்களின் அடிப்படையில் விதிக்

ECONOMICS - ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் (ஜனவரி 16, 2016) | Startup India Scheme (Launched 16-Jan-2016):

ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் என்பது இந்திய அரசின் ஒரு முன் முயற்சித் திட்டமாகும்.  இதன் முதன்மையான நோக்கம் தொழில் தொடங்குவதற்கான தொடக்க முயற்சிகளை ஏற்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் வளங்களை உருவாக்குதல் ஆகும்.  ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் (ஏப்ரல் 5, 2016) ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் என்பது பச்சைப் புல்வெளி (Greenfield Enterprise) நிறுவனம் அமைப்பதற்காக குறைந்தபட்சம் 10 லட்சத்துக்கும், 1 கோடிக்கும் இடையில், ஒரு பட்டியல் சாதியினர் (SC) அல்லது பட்டியல் பழங்குடியினர் (ST) மற்றும் ஒரு வங்கிக் கிளைக்கு ஒரு பெண் கடன் பெறுபவர் என கடன் வழங்கி வங்கிக்கடன்களை எளிதாக்குவதே இத்திட்டமாகும். ============================================= Startup India Scheme is an initiative of the Indian government,  The primary objective of which is the promotion of startups, generation of employment and wealth creation.  Standup India Scheme (Launched 5-April-2016): Standup India Scheme is to facilitate bank loans between `10 lakh and `1 crore to at least one Scheduled Caste (SC) or Scheduled Tri

CURRENT AFFAIRS - நடப்பு நிகழ்வுகள் - 1

  1) 106 வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்ற இடம்? a) பஞ்சாப் ✓ b) ராஜஸ்தான் c) கேரளா d) அசாம்   2) முதன் முதலில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்த மாநிலம் எது? a) தமிழ்நாடு b) ஹரியானா c) சிக்கிம்   ✓ d) ஹிமாசலப்பிரதேசம்   3) ஸ்வட்ச் பாரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு? a) 2014  ✓ b) 2000 c) 2013 d) 2016   4) மதுரை காமராஜர் பல்கலைகழக துணைவேந்தர் யார்? a) எம்.கிருஷ்ணன்   ✓ b) செல்லத்துரை c) சுதா சேஷய்யன் d) சுதா ராமகிருஷ்ணன்   5) 67 வது தேசிய சீனியர் வாலிபர் சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெற்றது? a) சென்னை   ✓ b) மும்பை c) கல்கத்தா d) புனே   6) LIC நிறுவனத்தின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டவர் a) ஹேமந்த் பார்கவா   ✓ b) வி.கே. சர்மா c) சதிஷ் ரெட்டி d) ராஜிவ் குமார்   7) கலியா (KALIA) என்ற பெயரில் விவசாயிகளுக்கான திட்டத்தை அறிமுகம் செய்த மாநிலம் a) ஒடிசா   ✓ b) பீகார் c) தமிழ்நாடு d) கேரளா   8) கேரளாவில் பெண்கள் சேர்ந்து உருவாக்கிய பெண்கள் சுவரின் நீளம் a) 600 km b) 610 km c) 620 km   ✓ d) 630 km   9) பிரேசில் நாட்டின் புதிய அதிபர் a) ஜெயிர் போல்சோனரே b) விளாடிமிர் புதின் c) பெர

ECONOMICS - தமிழ்நாட்டின் தொழில்மயமாதலின் முன்னேற்றம் பற்றிய வரலாறு | Historical Development of Industrialisation in Tamil Nadu

தமிழ்நாட்டில் காலனித்துவ முன்காலத்தில் நெசவு, கப்பல் கட்டுமானம், இரும்பு மற்றும் எஃகு தயாரித்தல், மட்பாண்டங்கள் தயாரித்தல் போன்ற தொழில்துறை நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான ஏராளமான சான்றுகள் உள்ளன.  தமிழ்நாடு பரந்துவிரிந்த கடற்கரையைக் கொண்டுள்ளதால், பல நூற்றாண்டுகளாக தென் கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டது.  தொழிற்புரட்சிக்குப் பிறகு இங்கிலாந்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட இயந்திரங்களின் இறக்குமதியின் காரணமாகப் போட்டி நிலவி கைத்தறி நெசவுத்தொழில் வீழ்ச்சிக்கு காலனித்துவ கொள்கைகளும் பங்களித்தன.  இருந்தபோதிலும் சில தொழில்கள் காலனித்துவக் காலத்தில் வளர்ந்தன.  There is lot of evidence for presence of industrial activities such as textiles, ship-building, iron and steel making and pottery in precolonial Tamil Nadu.  Given the vast coastline, the region has been involved in trade with both South-East and West Asia for several centuries.  Colonial policies also contributed to the decline of the handloom weaving industry due to competition from machine-made imports from E

ECONOMICS - தமிழ்நாட்டில் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு உதவும் கொள்கைக் காரணிகள் | The Policy Factors that Helped the Industrialisation Process in Tamil Nadu

தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் | SIPCOT (State Industries Promotion Corporation of Tamil Nadu) கொள்கைக் காரணிகளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.  Policy factors can be divided into three aspects: கல்வி  திறமை வாய்ந்த மனித வளங்கள் தொழிற்சாலைக்குத் தேவைப்படுகிறது.  நமது மாநிலமானது தொடக்கக் கல்விக்காக அதிகமான கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், படித்தவர்களின், எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அடிப்படை எண் கணித திறன்களை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது. இது நாட்டில் மிக அதிகப்படியான தொழில்நுட்ப வல்லுநர்களைத் தருவதிலும் பெயர் பெற்ற இடமாகும்.  இந்தியாவில் அதிக அளவில் பொறியியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் தொழில் பயிற்சி மையங்கள் போன்றவைகளின் புகலிடமாக தமிழகம் உள்ளது.  Education Industries require skilled human resources.  Apart from a lot of attention to primary education to promote literacy and basic arithmetic skills, the state is known for its vast supply of technical human resources.  It is home to one of the largest number of engineering colleges, polytech

CURRENT AFFAIRS - நடப்பு நிகழ்வுகள் - 3

21) சர்வதேச நாணய நிதியத்தின் முதல் பெண் தலைமை பொருளாதார ஆலோசகர் யார் a) கீதா கோபிநாத்   ✓ 6) ஆனந்தி ராமகிருஷ்ணன் c) லட்சுமி சதாசிவம் d) கமலா படேல்   22) சிபிஐ அமைப்பின் இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார் a) அலோக் வர்மா b) நாகேஸ்வர ராவ்   ✓ c) ராகேஷ் அஸ்தானா d) சந்தானம்   23) கடலூரிலிருந்து விழுப்புரம் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்ட ஆண்டு a) 1993  ✓ b) 1992 c) 1991 d) 1990   24) அனுமதி பெறாமல் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு தடைவிதித்த நாடு எது a) பிரான்ஸ்   ✓ b) ஜெர்மனி c) சீனா d) இந்தியா   25) நபார்டு வங்கியின் தலைவர் a) ஆதர்ஷ் குமார் கோயல் c) நந்தன் நீலகேனி b) G.R. Chintala   ✓ d) சத்ய நாராயணன்

ECONOMICS - சிறப்புப் பொருளாதார மண்ட லங்கள் (Special Economic Zones-SEZs)

நாட்டில் ஏற்றுமதிக்கு இடையூறு இல்லாத சூழலை கருத்தில் கொண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கான ஒரு கொள்கை ஏப்ரல் 2000ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.  அதன்படி, பின்வரும் இடங்களில் ஏற்றுமதி செயலாக்க மண்டலங்களை அரசு அமைத்துள்ளது. நாங்குநேரி SEZ - பல் நோக்கு உற்பத்தி SEZ திருநெல்வேலி எண்ணூர் SEZ - அனல் மின் திட்டம், வயலூர் கோயம்புத்தூர் SEZ - தகவல் தொழிற்நுட்ப பூங்காக்கள், ஓசூர் SEZ - தானியங்கி பொறியியல், மின்னணுவியல், விண்வெளி மற்றும் பாதுகாப்பு. பெரம்பலூர் SEZ - பல்நோக்கு உற்பத்தி SEZ தானியங்கி நகரம் (Auto city) SEZ - தானியங்கிகள், /தானியங்கி உதிரி பாகங்கள், திருவள்ளூர் இந்தியா-சிங்கப்பூர் SEZ - IT/ITES, மின்னணு வன்பொருள், தளவாடங்கள் மற்றும் கிடங்குகள் - திருவள்ளூர் மாவட்டங்கள் உயிரி-மருந்துகள் SEZ - மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு, விஷக்கட்டுப்பாட்டு மையம், மைய மீள் உருவாக்க மருத்துவம், மருத்துவ ஆராய்ச்சி மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் (Madras Export Processing Zone - MEPZ) மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் சென்னையில் ஒரு சிறப்புப் பொருளாதார மையமாகும்.  மத்திய அரசு அமைத்த நாட்டி