முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசாங்கமும் வரிகளும் அறிமுகம்

இந்தியாவில் வரி விதிப்பின் வேர்கள் மனு ஸ்மிருதி மற்றும் அர்த்தசாஸ்திர காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டது.தற்கால இந்திய வரி முறையானது பண்டைய கால வரி முறையை அடிப்படையாகக் கொண்டது.இந்தியாவில் முதன்முதலாக வருமானவரி 1860ஆம் ஆண்டு சர் ஜேம்ஸ் வில்சன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.1857ஆம் ஆண்டு கலகத்தின் மூலம் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட அரசாங்கத்தின் மூலம் போடப்பட்ட ஆணையே வரி விதிப்பாகும்.நேர்முக வரி என்பது மத்திய அரசுக்கு அல்லது மாநில அரசுக்கு அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாகச் செலுத்தும் வரியாகும். இதில் வருமான வரி, சொத்துவரி ஆகியன அடங்கும்.வருமான வரி தனி நபர்கள் மற்றும் தொழில் செய்பவர்களால் ஈட்டப்பட்ட மற்றும் ஈட்டப்படாத வருமானங்களின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது.உள்ளூர் வரி என்பது உள்ளாட்சி அமைப்பு அல்லது அரசின் மூலம் ஒரு நகரம் அல்லது ஒரு நாட்டின் எல்லைக்குள் விதிக்கப்படுகின்ற வரியாகும்.ஒரு நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றம் அடையச் செய்வதற்கு அரசாங்கத்தால் வரி விதிக்கப்படுகிறது.அரசின் வருமானம் நேர்முக மற்றும் மறைமுக வரிகளைச் சார்ந்து உள்ளது. நேர்முக வரியானது தனி நபரின் வருமானத்தி…

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நடப்பு நிகழ்வுகள் - 1

1) 106 வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்ற இடம்?
a) பஞ்சாப் ✓
b) ராஜஸ்தான்
c) கேரளா
d) அசாம்
2) முதன் முதலில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்த மாநிலம் எது?
a) தமிழ்நாடு
b) ஹரியானா
c) சிக்கிம்   ✓
d) ஹிமாசலப்பிரதேசம்
3) ஸ்வட்ச் பாரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
a) 2014  ✓
b) 2000
c) 2013
d) 2016
4) மதுரை காமராஜர் பல்கலைகழக துணைவேந்தர் யார்?
a) எம்.கிருஷ்ணன்   ✓
b) செல்லத்துரை
c) சுதா சேஷய்யன்
d) சுதா ராமகிருஷ்ணன்
5) 67 வது தேசிய சீனியர் வாலிபர் சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெற்றது?
a) சென்னை   ✓
b) மும்பை
c) கல்கத்தா
d) புனே
6) LIC நிறுவனத்தின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டவர்
a) ஹேமந்த் பார்கவா   ✓
b) வி.கே. சர்மா
c) சதிஷ் ரெட்டி
d) ராஜிவ் குமார்
7) கலியா (KALIA) என்ற பெயரில் விவசாயிகளுக்கான திட்டத்தை அறிமுகம் செய்த மாநிலம்
a) ஒடிசா   ✓
b) பீகார்
c) தமிழ்நாடு
d) கேரளா
8) கேரளாவில் பெண்கள் சேர்ந்து உருவாக்கிய பெண்கள் சுவரின் நீளம்
a) 600 km
b) 610 lim
c) 620 km   ✓
d) 630 lim
9) பிரேசில் நாட்டின் புதிய அதிபர்
a) ஜெயிர் போல்சோனரே
b) விளாடிமிர் புதின்
c) பெர்னாடோ
d) ஜின்பிங்
10) இ…

கால்நடை உதவி மருத்துவர் தேர்வு முடிவு வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு: 35/2020 நாள்:20.10.2020  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்க்காணும் பதவிக்கான தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.  பதவியின் பெயர் : 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்பு பணிக்கான கால்நடை உதவி மருத்துவர். மொத்தக் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை : 1141 தேர்வு நடைபெற்ற நாள் 23.02.2020 மு.ப & பி.ப தேர்வில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை : 2015 சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்டவர்களின் சான்றிதழ்களைத் தேர்வாணைய இணைய தளத்தில் அரசு இ சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யப்படவேண்டிய நாட்கள் : 28.10.2020 முதல் 06.11.2020 வரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய…

நடப்பு நிகழ்வுகள் - 3

21) சர்வதேச நாணய நிதியத்தின் முதல் பெண் தலைமை பொருளாதார ஆலோசகர் யார்
a) கீதா கோபிநாத்   ✓
6) ஆனந்தி ராமகிருஷ்ணன்
c) லட்சுமி சதாசிவம்
d) கமலா படேல்
22) சிபிஐ அமைப்பின் இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்
a) அலோக் வர்மா
b) நாகேஸ்வர ராவ்   ✓
c) ராகேஷ் அஸ்தானா
d) சந்தானம்
23) கடலூரிலிருந்து விழுப்புரம் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்ட ஆண்டு
a) 1993  ✓
b) 1992
c) 1991
d) 1990
24) அனுமதி பெறாமல் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு தடைவிதித்த நாடு எது
a) பிரான்ஸ்   ✓
b) ஜெர்மனி
c) சீனா
d) இந்தியா
25) நபார்டு வங்கியின் தலைவர்
a) ஆதர்ஷ் குமார் கோயல்
c) நந்தன் நீலகேனி
b) G.R. Chintala   ✓
d) சத்ய நாராயணன்

தமிழ்நாட்டில் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு உதவும் கொள்கைக் காரணிகள்

கொள்கைக் காரணிகளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். கல்வி திறமை வாய்ந்த மனித வளங்கள் தொழிற்சாலைக்குத் தேவைப்படுகிறது. நமது மாநிலமானது தொடக்கக் கல்விக்காக அதிகமான கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், படித்தவர்களின், எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அடிப்படை எண் கணித திறன்களை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது. இது நாட்டில் மிக அதிகப்படியான தொழில்நுட்ப வல்லுநர்களைத் தருவதிலும் பெயர் பெற்ற இடமாகும். இந்தியாவில் அதிக அளவில் பொறியியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் தொழில் பயிற்சி மையங்கள் போன்றவைகளின் புகலிடமாக தமிழகம் உள்ளது. உள்கட்டமைப்பு மாநிலங்களில் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் தொழில்மயமாதல் பரவுதலுக்கு மின்சார விநியோகம் சிறப்பான பங்கினை வகிக்கிறது. மின்சார விநியோகம் மட்டுமல்லாது, தமிழ்நாடானது மிகச் சிறந்த போக்குவரத்து உள்கட்டமைப்புக்குப் பெயர் போனது ஆகும். குறிப்பாக கிராமப்புறங்கள் சிறு சாலை வசதிகளால் அருகிலுள்ள சிறு நகரங்களுடனும், பெரு நகரங்களுடனும் சிறப்பான முறையில் இணைக்கப்பட்டுள்ளது. பொது மற்றும் தனியார் போக்குவரத்துத் துறைகள் ஒருங்கிணைந்து கிராமப்புற மற்…

ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் (ஜனவரி 16, 2016)

ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் என்பது இந்திய அரசின் ஒரு முன் முயற்சித் திட்டமாகும். இதன் முதன்மையான நோக்கம் தொழில் தொடங்குவதற்கான தொடக்க முயற்சிகளை ஏற்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் வளங்களை உருவாக்குதல் ஆகும். ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் (ஏப்ரல் 5, 2016) ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் என்பது பச்சைப் புல்வெளி (Greenfield Enterprise) நிறுவனம் அமைப்பதற்காக குறைந்தபட்சம் 10 லட்சத்துக்கும், 1 கோடிக்கும் இடையில், ஒரு பட்டியல் சாதியினர் (SC) அல்லது பட்டியல் பழங்குடியினர் (ST) மற்றும் ஒரு வங்கிக் கிளைக்கு ஒரு பெண் கடன் பெறுபவர் என கடன் வழங்கி வங்கிக்கடன்களை எளிதாக்குவதே இத்திட்டமாகும்.

சிறப்புப் பொருளாதார மண்ட லங்கள் (Special Economic Zones-SEZs)

நாட்டில் ஏற்றுமதிக்கு இடையூறு இல்லாத சூழலை கருத்தில் கொண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கான ஒரு கொள்கை ஏப்ரல் 2000ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, பின்வரும் இடங்களில் ஏற்றுமதி செயலாக்க மண்டலங்களை அரசு அமைத்துள்ளது.
நாங்குநேரி SEZ - பல் நோக்கு உற்பத்தி SEZ திருநெல்வேலி எண்ணூர் SEZ - அனல் மின் திட்டம், வயலூர் கோயம்புத்தூர் SEZ - தகவல் தொழிற்நுட்ப பூங்காக்கள், ஓசூர் SEZ - தானியங்கி பொறியியல், மின்னணுவியல், விண்வெளி மற்றும் பாதுகாப்பு. பெரம்பலூர் SEZ - பல்நோக்கு உற்பத்தி SEZதானியங்கி நகரம் (Auto city) SEZ - தானியங்கிகள், /தானியங்கி உதிரி பாகங்கள், திருவள்ளூர் இந்தியா-சிங்கப்பூர் SEZ - IT/ITES, மின்னணு வன்பொருள், தளவாடங்கள் மற்றும் கிடங்குகள் - திருவள்ளூர் மாவட்டங்கள் உயிரி-மருந்துகள் SEZ - மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு, விஷக்கட்டுப்பாட்டு மையம், மைய மீள் உருவாக்க மருத்துவம், மருத்துவ ஆராய்ச்சி மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் (Madras Export Processing Zone - MEPZ)
மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் சென்னையில் ஒரு சிறப்புப் பொருளாதார மையமாகும். மத்திய அரசு அமைத்த நாட்டின் …

தமிழ்நாட்டின் தொழில்மயமாதலின் முன்னேற்றம் பற்றிய வரலாறு

தமிழ்நாட்டில் காலனித்துவ முன்காலத்தில் நெசவு, கப்பல் கட்டுமானம், இரும்பு மற்றும் எஃகு தயாரித்தல், மட்பாண்டங்கள் தயாரித்தல் போன்ற தொழில்துறை நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான ஏராளமான சான்றுகள் உள்ளன. தமிழ்நாடு பரந்துவிரிந்த கடற்கரையைக் கொண்டுள்ளதால், பல நூற்றாண்டுகளாக தென் கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டது. தொழிற்புரட்சிக்குப் பிறகு இங்கிலாந்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட இயந்திரங்களின் இறக்குமதியின் காரணமாகப் போட்டி நிலவி கைத்தறி நெசவுத்தொழில் வீழ்ச்சிக்கு காலனித்துவ கொள்கைகளும் பங்களித்தன. இருந்தபோதிலும் சில தொழில்கள் காலனித்துவக் காலத்தில் வளர்ந்தன. காலனித்துவ காலத்தில் தொழில்மயமாதல் காலனித்துவ காலத்தில் தொழில்மயமாதலில் இரண்டு காரணிகள் பெரும்பங்கு வகித்தது. முதலாவதாக, மேற்கு மற்றும் தெற்கு தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பருத்தி சாகுபடி அதிகளவு நெசவுத்தொழில் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது. இரண்டாவதாக, இந்த காலகட்டத்தில் வாணிபத்தின் வளர்ச்சியானது சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுக வட்டாரங்களின் அருகாமையில் தொழிற்சாலைகள் உருவாக காரணமாகவும் இருந்தது. மேலும், …

தமிழ் நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்.

தானியங்கி தொகுப்புகள்
சென்னை பெரிய அளவிலான வாகனத் தொழில்துறை தளமாக இருப்பதால் "ஆசியாவின் டெட்ராய்ட்" என்று அழைக்கப்படுகிறது. சென்னையானது மிக அதிகமான தானியங்கி தொழிலை ஒருங்கிணைக்கும் மற்றும் உதிரிபாகங்கள் செய்யும் தலைமை இடமாகத் திகழ்கிறது. சில உள்நாட்டு நிறுவனங்களான TVS, TI சைக்கிளஸ், அசோக் லேலண்ட் மற்றும் ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் ஆகியன இதற்கு முன்னர் இருந்தன. பொருளாதார சீர்த்திருத்தத்திற்கு பின்னர் ஹூன்டாய், ஃபோர்டு, டைம்லர்பென்ஸ் மற்றும் ரெனால்ட் – நிசான் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் (Multi National Companies - MNC) இப்பகுதியில் தொழிற்சாலைகளைத் திறந்துள்ளன. எனவே வெளிநாடுகளிலிருந்து பல உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளரின் கவனங்கள் இங்கே ஈர்க்கப்பட்டுள்ளது. பல உள்நாட்டு நிறுவனங்களும் சேர்ந்து அனைத்து நிறுவனங்களுக்கான உதிரி பாகங்களின் உற்பத்தித் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. ஓசூர் மற்றொரு தானியங்கி தொகுப்பாகும். இங்கு TVS மற்றும் அசோக் லேலண்ட் போன்ற நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை இயக்கி வருகின்றன.கோயம்புத்தூர் பகுதி ஒரு தானியங்கிகளின் தொகுப்பாக வளர்ந்து வருகிறது.…

தகவல்தொழில்நுட்ப பொருளாதார மண்டலங்கள்

வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, ஓசூர் மற்றும் சேலம் ஆகியவை தகவல் தொழிற்நுட்ப முதலீட்டிற்கான இடங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதனை எளிதாக்குவதற்காக ELCOT நிறுவனம் பின்வரும், எட்டு இடங்களில் ELCOSEZs (IT குறிப்பிட்ட பொருளாதார சிறப்பு மண்டலங்கள்) நிறுவியுள்ளது. • சென்னை - சோழிங்கநல்லூர் கோயம்புத்தூர் - விளாங்குறிச்சி மதுரை - இலந்தை குளம் மதுரை - வடபாலஞ்சி, கிண்ணிமங்கலம் திருச்சிராப்பள்ளி - நாவல்பட்டு மாநிலத்தின் அலகுகளை அமைக்க விரும்பும் நிறுவனங்கலுக்கு ELCOSEZs மூலம் வசதிகள் வழங்கப்படுகிறது. புதிய இடங்களில் ELCOSEZs அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள், தேவை மற்றும் நம்பகத் தன்மையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. (வரைபட தகவல் தொழில்நுட்பக் கொள்கை - 2018-19) திருநெல்வேலி - கங்கைகொண்டான் சேலம் - ஜாகீர் அம்மாபாளையம் ஓசூர் - விஸ்வ நாதபுரம்

நடப்பு நிகழ்வுகள் - 2

11) தேசிய புவியியல் ரீதியான விருது 2017 வென்றவர் யார்
a) ஜெயந்த் குமார் கோஷ்   ✓
b) அனிதா குமாா
c) சந்திர சேகர பூஷன்
d) இராமகிருஷ்ண ன்
12) பாகிஸ்தானின் புதிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யார் ?
a) சாஹிப் நிசார்
b) Gulzar Ahmed   ✓
c) முகமது சயீத்
d) ஆஷிப்கான்
13) Mother' of all bombs என்ற பெயரில் அணு அல்லாத ஆயுதத்தை சோதனை செய்த நாடு எது
a) சீனா
b) ஜப்பான
c) வடகொரியா
d) அமெரிக்கா   ✓
14) சமீபத்தில் எந்த மாநிலத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் 100 கோடி அபராதம் விதித்துள்ளது
a) மேகாலயா   ✓
6) அஸ்ஸாம்
c) பீகார்
d) ஒடிசா
15) அண்டார்டிகாவின் மிக உயரமாக சிகரத்தை ஏறி சாதனை படைத்த முதல் மாற்றுதிறனாளி பெண் யார்
a) அருணிமா சின்ஹா   ✓
b) பூஜா
c) அருணா தேவி
d) ஜீவகுமாரி
16) அடல் சோலார்தருஷி பம்ப் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது
a) மகாராஷ்டிரா  ✓
b) ஒடிசா
c) பஞ்சாப்
d) பீகார்
17) பாபுக் புயலுக்கு பெயர் வைத்த நாடு எது
a) லாவோஸ்   ✓
b) தாய்லாந்து
c) ஸ்ரீலங்கா
d) இந்தியா
18) மிஷன் சக்தி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது
a) பீகார்
b) மணிப்பூர்
c) ஒடிசா   ✓
d) கேரளா
19) தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் உருவாக்கப…