Pages

Saturday, July 31, 2021

TNPSC CURRENT AFFAIRS JULY 2021 | நடப்பு நிகழ்வுகள் 2021 | சமிபத்திய நிகழ்வுகள் 2021

CURRENT AFFAIRS JULY 2021 | நடப்பு நிகழ்வுகள் 2021 | சமிபத்திய நிகழ்வுகள் 2021


❇️ ஜூலை 2: தமிழ்நாட்டில் வன்னியர் சமுதாயத்துக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.


❇️ ஜூலை 2: தமிழ்நாட்டில் இ-பதிவு ரத்து, பேருந்து இயக்க அனுமதி ஆகிய தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.


❇️ ஜூலை 3: தமிழ்நாட்டைச் சேர்ந்த பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலு, டோக்கியோவில் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியில் இந்திய தேசியக் கொடியை ஏந்தி செல்வார் என அறிவிக்கப்பட்டது.


❇️ ஜூலை 5: உத்தராகண்ட்டில் முதல்வர் பதவியிலிருந்து தீரத் சிங் ராவத் ராஜினாமா செய்ததையடுத்து பாஜக சட்டப்பேரவைத் தலைவராக புஷ்கர் சிங்தாமி தேர்வானார்.


❇️ ஜூலை 6: சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்தின் சார்லோட்டி எட்வர்ஸின் (10,273 ரன்கள்) சாதனையை இந்தியாவின் மிதாலி ராஜ் முறியடித்தார்.


❇️ ஜூலை 6: தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து தடகள வீரர், வீராங்கனைகளான ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டியன் ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.


❇️ ஜூலை 7: கர்நாடகம், மத்திய பிரதேசம். ஹிமாச்சல பிரதேசம் உள்பட எட்டு மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்களை நியமித்துக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.


❇️ ஜூலை 7: ஹிமாச்சல பிரதேசத்தில் ஆறு முறை முதல்வர் பதவி வகித்த வீரபத்ர சிங் (87), பாலிவுட் பழம்பெரும் நடிகர் திலீப் குமார் (98) ஆகியோர் காலமானார்கள்.


❇️ ஜூலை 7: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 43 பேர் பொறுப்பேற்றனர்.ஒன்றிய இணை அமைச்சராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகன் பதவியேற்றார்.


❇️ ஜூலை 8: ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை தொடர்ந்து இயங்கத் தமிழ்நாடு அரசு ரூ. 1.25 கோடி நிதி உதவி அளித்தது.


❇️ ஜூலை 9: கரீபியன் பெருங் கடலில் உள்ள ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனேல் மாய்ஸும் அவருடைய மனைவியும் மர்ம நபர்களால் படுகொலை செய்யப் பட்டனர்.


❇️ ஜூலை 9: டெல்டா பிளஸ் கரோனா வகையைவிட அபாயகரமான ‘லம்படா’ வகை 30 நாடுகளில் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


❇️ ஜூலை 11: இந்தியாவின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம் கேரளத் தலைநகர் திருவனந்த புரத்தில் தொடங்கப்பட்டது.


❇️ ஜூலை 11: கோபா-அமெரிக்கக் கால்பந்துப் போட்டியின் இறுதி யாட்டத்தில் பிரேசில் அணியை வீழ்த்தி 28 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜெண்டினா அணி கோப்பையை வென்றது.


❇️ ஜூலை 11, 12: விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் மகளிர் ஒற்றையர் பட்டத்தை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்டியும் ஆடவர் பட்டத்தை செர்பியாவின் ஜோகோவிச்சும் வென்றனர்.


❇️ ஜூலை 12: லண்டனில் நடைபெற்ற யூரோ கால்பந்து கோப்பையின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இத்தாலி அணி கோப்பையை வென்றது.


❇️ ஜூலை 14: இதுவரை 431 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 14 ஆயிரம் ரன்களைக் கடந்து புதிய சாதனையைப் படைத்திருக்கிறார் கிறிஸ் கெய்ல்.


❇️ ஜூலை 14: 1983 இல் இந்தியா உலகக் கோப்பை வெல்ல காரணமாக இருந்த கிரிகெட் வீரர்களில் ஒருவரான யஷ்பால் ஷர்மா (66) காலமானார்.


❇️ ஜூலை 15: நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையைத் தாக்கல் செய்தது.


❇️ ஜூலை 16: மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலை மையில் அனைத்துக் கட்சிக்குழு டெல்லியில் நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தைச் சந்தித்தது.


❇️ ஜூலை 16: நாட்டில் முதன் முறையாக ஹரியாணா மாநிலம் குருகிராமில் உணவு தானிய ஏடிஎம் இயந்திரத்தை அந்த மாநில அரசு நிறுவியுள்ளது.


❇️ ஜூலை 17: கீழடியில் நடந்துவரும் ஏழாம் கட்ட அகழாய்வில் சுடுமண் பெண் பொம்மை, உறைகிணறு ஆகியவை கண்டறியப்பட்டன.


❇️ ஜூலை 18: திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட நவீன ரக ரிமோட் கன்ட்ரோல் துப்பாக்கி இந்தியக் கடற்படை வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்தத் துப்பாக்கி தானாகவே இலக்கைத் தேடும் நுட்பம்கொண்டது.


❇️ ஜூலை 18: ஐந்து நட்சத்திர ஹோட்டல் வசதியுடன் கூடிய ரயில் நிலையத்தை குஜராத் மாநிலம் காந்திநகரில் பிரதமர் மோடி திறந்துவைத்தார்.


❇️ ஜூலை 19: ஆந்திரம், தெலங்கானா இடையேயான தண்ணீர் பிரச்சினையால் கிருஷ்ணா, கோதாவரி நதிகளின் குறுக்கே அணைகள் கட்டும் உரிமையை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டது.


❇️ ஜூலை 19: தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. முதன் முறையாக தசம எண்களில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளன.


❇️ ஜூலை 20: தமிழ்நாட்டில் ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பில் 33 புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின.


❇️ ஜூலை 21: சீனாவில் மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் செல்லும் உலகின் அதிவேக ரயில் அறிமுகமானது. மின்காந்த சக்தியில் இயங்கும் வகையில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


❇️ ஜூலை 23: உலக விளையாட்டுத் திருவிழாவான 32-வது ஒலிம்பிக், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கியது. 206 நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 8 வரை நடைபெறுகின்றன.


❇️ ஜூலை 24: டோக்கியோ ஒலிம்பிக் 49 கிலோ பளு தூக்கும் பிரிவில் இந்தியாவின் சாய்கோம் மீராபாய் சானு இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 2000 சிட்னி ஒலிம்பிக்கில் பளு தூக்கும் பிரிவில் கர்ணம் மல்லேஸ்வரி வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு இந்தியா வென்றுள்ள பதக்கம் இது.


❇️ ஜூலை 24: திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருக்கும் முத்துக்கலிங்கன் கிருஷ்ணனை நியமித்து மத்தியக் கல்வி அமைச்சகம் உத்தரவிட்டது.


❇️ ஜூலை 25: ரஷ்யாவில் நடைபெற்ற ‘சர்வதேச கணித ஒலிம்பியாட் 2021’ போட்டியில் 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 5 பதக்கங்களை இந்திய மாணவர்கள் வென்றனர். இது உலகின் பழமையான அறிவியல் போட்டி.


❇️ ஜூலை 26: ஹங்கேரியில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பிரியா மாலிக் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.


❇️ ஜூலை 26, 29: தெலங்கானாவில் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள 13-ஆம்நூற்றாண்டைச் சேர்ந்த ராமப்பா கோயில், குஜராத்தில் கட்ச் பகுதியில் உள்ள தொன்மையான ஹரப்பா நகரான தோலாவீரா ஆகியவற்றை உலகப் பாரம்பரிய சின்னங்களாக யுனெஸ்கோ அறிவித்தது.


❇️ ஜூலை 27: தமிழ்நாட்டுக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களைக் கவுரவிக்க ‘தகைசால் தமிழர்’ என்கிற புதிய விருதைத் தமிழக அரசு உருவாக்கியது. இதன் முதல் விருதுக்குச் சுதந்திரப் போராட்ட வீரரும் நூற்றாண்டு கண்ட இடதுசாரி தலைவருமான என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டார்.


❇️ ஜூலை 27: கல்விச் சேர்க்கையில் வன்னியர் களுக்கு 10.5 சதவீதம், சீர்மரபினருக்கு 7 சதவீதம், இதர பிற்படுத்தபட்டோருக்கு 2.5 சதவீதம் சிறப்பு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டது.


❇️ ஜூலை 29: கேரளத்தில் ஆண் அரசு ஊழியர்கள் திருமணத்தின்போது உயரதிகாரிகளிடம் வரதட்சிணை மறுப்புச் சான்றிதழ் சமர்பிப்பது கட்டாயமாக்கப்பட்டது.


❇️ ஜூலை 30: புதுக்கோட்டையில் சங்ககால பழமை வாய்ந்த பொற்பனைக்கோட்டையில் அகழாய்வுப் பணிகள் தொடங்கின.


❇️ ஜூலை 30: உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப் பட்டது. ரத்தினபுரா பகுதியில் கிணறு தோண்டும்போது இது கிடைத்தது.


❇️ ஜூலை 31: பொறியியல் படிப்புகள் பிராந்திய மொழிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.


❇️ ஜூலை 31: நாட்டில் முதன் முறையாக இந்திய சைகை மொழிக்கு மொழிப் படிப்புக்கான தகுதி வழங்கப்பட்டுள்ளது.


❇️ ஜூலை 31: ஒலிம்பிக் ஹாக்கியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் வந்தனா கட்டாரியா ஹாட்ரிக் கோல் அடித்தார். இதன்மூலம், ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் இந்திய வீராங்கனையானார்.


❇️ ஜூலை 2: சட்டசபை தேர்தலுக்கு ரூ. 666.43 கோடி செலவு என தமிழக தேர்தல் ஆணையம் தகவல்.


❇️ ஜூலை 7: தமிழகத்தின் எல்.முருகன் மத்திய மீன் வள இணையமைச்சராக பதவியேற்பு.


❇️ ஜூலை 8: தமிழக பா.ஜ., தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை நியமனம்.


❇️ ஜூலை 12: அரசியலுக்கான மக்கள் மன்றத்தை கலைத்தார் நடிகர் ரஜினி.


❇️ ஜூலை 28: 'தகைசால் தமிழர்' விருது தொகை ரூ. 10 லட்சத்தை கொரோனா நிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா வழங்கினார்.


❇️ ஜூலை 31: போலீசாருக்கு வார விடுமுறை அளிக்க உத்தரவு.


❇️ ஜூலை 2: கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி.


❇️ ஜூலை 2: ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா (லோக் தளம்) விடுதலை.


❇️ ஜூலை 5: மஹாராஷ்டிரா சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட 12 பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் ஓராண்டு சஸ்பெண்ட்.


❇️ ஜூலை 7: மத்திய அமைச்சரவையில் மாற்றம். 12 பேர் ராஜினாமா. புதிதாக 36 பேர் பதவி ஏற்பு. அமைச்சர்கள் எண்ணிக்கை 77 ஆக உயர்வு.


❇️ ஜூலை 10: இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக எரிக் கார் சிட்டி நியமனம்.


❇️ ஜூலை 11: கர்நாடகா கவர்னராக தாவர்சந்த் கெலாட் பதவியேற்பு.


❇️ ஜூலை 12: உ.பி., ம.பி., ராஜஸ்தானில் கனமழைக்கு 71 பேர் பலி.


❇️ ஜூலை 14: நுாறு சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் யூனியன் பிரதேசமானது லடாக்.


❇️ ஜூலை 14: இந்தியாவின் முதல் தேசிய டால்பின் ஆராய்ச்சி மையம் பாட்னாவில் துவக்கம்.


❇️ ஜூலை 15: மணிப்பூரில் முதல் முறையாக பயணிகள் ரயில் சேவை(அசாமின் சில்சார் - மணிப்பூரின் வைன்கைசுன் பாவோ) துவக்கம்.


❇️ ஜூலை 16: 'புலிட்சர்' விருது பெற்ற இந்திய புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திக் 42, ஆப்கன் போர்க்களத்தில் பலி.


❇️ ஜூலை 18: பஞ்சாப் காங்., தலைவராக சித்து நியமனம்.


❇️ ஜூலை 18: இந்தியாவில் முதல் முறையாக ஐகோர்ட் விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்யும் வசதி குஜராத்தில் துவக்கம்.


❇️ ஜூலை 19: டில்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு.


❇️ ஜூலை 19: இஸ்ரேலின் 'பெகாசஸ்' உளவு மென்பொருள் மூலம் 300 இந்தியர்களின் அலைபேசி உரையாடல் கண்காணிக்கப்பட்டதாக புகார்.


❇️ ஜூலை 20: மின்காந்த விசையை பயன்படுத்தி மணிக்கு 600 கி.மீ., வேகத்தில் செல்லும் ரயில் சீனாவில் அறிமுகம்.


❇️ ஜூலை 23: மஹாராஷ்டிரா வில் வெள்ளம், நிலச்சரிவில் 138 பேர் பலி.


❇️ ஜூலை 25: ஐ.நா., உலக பாரம்பரிய சின்ன பட்டியலில் தெலுங்கானாவில் 13ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட ருத்ரேஸ்வரர் கோயில் சேர்ப்பு.


❇️ ஜூலை 26: கர்நாடகா முதல்வர் எடியூரப்பா ராஜினாமா.


❇️ ஜூலை 27: ஐ.நா., உலக பாரம்பரிய சின்ன பட்டியலில் சிந்து சமவெளி நாகரிக மக்கள் வாழ்ந்த குஜராத்தின் தோலவிரா நகரம் சேர்ப்பு.


❇️ ஜூலை 28: கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை (பா.ஜ.,) பதவியேற்பு. இவர் முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மையின் மகன்.


❇️ ஜூலை 28: உ.பி.,யின் லக்னோவில் பஸ்--லாரி மோதியதில் 18 தொழிலாளர் பலி.


❇️ ஜூலை 29: மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு.


❇️ ஜூலை 29: இந்தியாவில் முதன்முறையாக கர்நாடகாவில் அரசு வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவருக்கு 1 சதவீத இட ஒதுக்கீடு அமல்.


❇️ ஜூலை 1: கனடாவில் அனல் காற்றுக்கு ஒரு வாரத்தில் 165 பேர் பலி.


❇️ ஜூலை 2: இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷலினா, மிச்சிகன் மாகாண நீதிபதியாக நியமனம்.


❇️ ஜூலை 4: பிலிப்பைன்ஸ் ராணுவ விமான விபத்தில் 50 வீரர்கள் பலி.


❇️ ஜூலை 6: அமேசான் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜெப் பெஜாஸ் பதவி விலகல்.


❇️ ஜூலை 6: ரஷ்யாவில் பயணிகள் விமான விபத்தில் 28 பேர் பலி.


❇️ ஜூலை 7: ஹைதி அதிபர் ஜேவனல் மோயிஸ் சுட்டுக்கொலை.


❇️ ஜூலை 9: டென்மார்க்கில் அமைத்த உலகின் உயரமான (69.4 அடி) மணல் சிற்பம் 'கின்னஸ் சாதனை' புத்தகத்தில் இடம் பெற்றது.


❇️ ஜூலை 10: வங்கதேச தலைநகர் தாகாவில் ஜூஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் பலி.


❇️ ஜூலை 10: இந்தியாவுக்கான அமெ ரிக்க துாதராக எரிக் மைக்கேல் கார்சிட்டி நியமனம்.


❇️ ஜூலை 13: ஈராக்கில் கொரோனா மருத்துவமனை தீ விபத்தில் 92 பேர் பலி.


❇️ ஜூலை 13: நேபாள பிரதமராக ஷேர் பகதுார் துபா பதவியேற்பு.


❇️ ஜூலை 17: ஜெர்மனியில் கனமழைக்கு 120 பேர் பலி.


❇️ ஜூலை 22: ஹைதி பிரதமராக ஏரியல் ஹென்றி பதவியேற்பு.


❇️ ஜூலை 23: சீன அதிபர் ஜி ஜின்பிங் முதன் முறையாக திபெத் சென்றார்.


❇️ ஜூலை 26: துனிசிய பார்லிமென்ட் கலைப்பு. பிரதமர் மெசிசி பதவி நீக்கம்.


❇️ ஜூலை 28: லெபனான் பிரதமராக நஜிப் மிகாதி தேர்வு.


❇️ ஜூலை 28: பெரு அதிபராக பெட்ரோ காஸ்டில்லோ பதவியேற்பு.


❇️ ஜூலை 1: விமானப்படை துணை தளபதியாக விவேக் ராம் சவுத்ரி நியமனம்.


❇️ ஜூலை 3: இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக அதுல் கேஷப் பதவியேற்பு.


❇️ ஜூலை 4: உத்தரகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி (பா.ஜ.,) பதவியேற்பு.


❇️ ஜூலை 13 : நேபாள பிரதமராக ஷேர் பகதுார் துபா 75, பதவியேற்பு.


No comments:

Post a Comment