எம்.ஜி.ஆர் 105: ஒரு பார்வை
☆ மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்பும் என் பேச்சிருக்கும்...
☆ புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழ எழை நமக்காக...
☆ சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்திடதே...
☆ உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே...
☆ விவசாயி விவசாயி கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி...
☆ போன்ற கருத்துமிக்க பாடல்களுக்கு காட்சியாகவும் பின்னர் சாட்சியாகவும் திகழ்ந்தவரே நமது முன்னால் முதல்வர் மறைந்த எம்.ஜி.ஆர் அவர்கள். இன்று 17.01.2022 பொன்மனச் செம்மல் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 105 ஆவது பிறந்தநாள் விழா.
☆ பிறந்த தேதி : 17.01.1917
☆ பிறந்த இடம் : கண்டி, இலங்கை
☆ பெற்றோர்கள் : கோபால மேனன் – சத்தியபாமா
☆ மனைவி(கள்) : தங்கமணி(1942-ல் இறப்பு), சதானந்தவதி(1962-ல் இறப்பு), வி.என் ஜானகி(1996-ல் இறப்பு)
☆ மகன் : சுரேந்திரன்(வளர்ப்பு மகன்)
☆ சினிமா பயணம் : 1935 - 1978
☆ முதல் படம் : ‘சதிலீலாவதி’
☆ தமிழக முதல்வர் : 3 முறை (1977, 1980 மற்றும் 1984)
☆ விருது : பாரத ரத்னா விருது(இறப்புக்கு பின் 1988), தேசிய விருது (ரிக்ஷாக்காரன் படம் (1971))
☆ இறப்பு : 24.12.1987
கடந்து வந்த பாதை
☆ 1917 : ஜன. 17 எம்.ஜி.ஆர்., பிறந்தார்.
☆ 1936 : தமிழ் சினிமாவில் அறிமுகம்.
☆ 1947 : அவரின் முதல் வெற்றிப்படமான ‘ராஜகுமாரி’ வெளியானது.
☆ 1953 : தி.மு.க., வில் சேர்ந்தார்.
☆ 1956 : முதல் முறையாக திரைப்பட இயக்குனரானார்.
☆ 1960 : பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுப்பு.
☆ 1962 : சட்டசபை மேலவை உறுப்பினரானார்.
☆ 1967 : முதல் முறை எம்.எல்.ஏ., ஆனார்.
☆ 1967 : எம்.ஆர்.ராதாவால் கழுத்தில் சுடப்பட்டார்.
☆ 1969 : தி.மு.க., பொருளாளராக பொறுப்பேற்பு.
☆ 1971 : இரண்டாவது முறை எம்.எல்.ஏ., ஆனார்.
☆ 1972 : தி.மு.க.,வில் இருந்து விலகி அ.தி.மு.க., என்ற தனிக்கட்சி துவக்கினார்.
☆ 1972 : ‘ரிக்சாக்காரன்’ படத்திற்காக தேசிய விருது வென்றார்.
☆ 1974 : சென்னை பல்கலை மற்றும் அமெரிக்காவின் உலக பல்கலை ஆகியவை கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின.
☆ 1977 : ஜன., 30ல் முதல் முறையாக தமிழக முதல்வரானார்.
☆ 1984 : சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார்..
☆ 1987 : டிசம்பர் 24 அதிகாலை மறைந்தார்.
☆ 1988 : மறைவுக்குப் பின், பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
☆ 2017 : ஜன. 17 எம்.ஜி.ஆரின் நுாற்றாண்டு விழா.
No comments:
Post a Comment