நிவி தர்மா அக்சயனா நிரந்தர அறக்கட்டளை வருவாய் மட்டும் பெற்றுக் கொள்ளலாம்.
சுப்ரதா வர்மா அறக்கட்டளை வருவாய் முழுதும் பெற்று பயன்படுத்தலாம் நிர்வாக உரிமை இல்லை.
பூமிசித்ராயனா தரிசு நிலங்களில் சாகுபடி நிலமாக மாற்ற வேண்டும்.
வரிகள் :
பாகா - அதன் தன்மை விளைச்சலில் அரசன் பெறும் வழக்கமான ஆறில் ஒரு பங்காகும்.
போகா - அரசருக்கு கிராமங்கள் அவ்வப்போது வழங்க வேண்டிய பழங்கள், விறகு, பூக்கள் போன்றவை.
கரா - கிராமத்தினர் மீது குறிப்பிட்ட கால இடைவெளியில் விதிக்கப்படும் ஒரு வரி (இது வருடாந்திர நிலவரியின் ஒரு பகுதியல்ல).
பலி - ஆரம்பத்தில் விருப்பப்பட்டு வழங்கப்பட்ட வரியாக இருந்து பின்னர் கட்டாய வரியாக மாற்றப்பட்டது. இது ஒரு ஒடுக்குமுறை.
உதியங்கா - காவல் நிலையங்களின் பராமரிப்பிற்காக விதிக்கப்பட்ட காவல் வரியாக இருக்கலாம் அல்லது நீர் வரியாகவும் இருக்கலாம். எனினும், இது ஒரு கூடுதல் வரிதான்.
உபரிகரா - இதுவும் ஒரு கூடுதல் வரிதான். இது எதற்காக வருவிக்கப்பட்டது என்பது குறித்து அறிஞர்கள் மாறுபட்ட விளக்கங்களைத் தருகின்றனர்.
ஹிரண்யா - தங்க நாணயங்கள்மீது விதிக்கப்படும் வரி என்பது நேரடிப் பொருள், நடைமுறையில் இது சில குறிப்பிட்ட தானியங்களின் விளைச்சலில் ஒரு பங்கினை, அரசின் பங்காகப் பொருளாகவே அளிப்பதாகும்.
வாத - பூதா - காற்றுக்கும் ஆவிகளுக்கும் செய்ய வேண்டிய சடங்குகளுக்காக விதிக்கப்பட்ட பல்வேறு வரிகள்.
ஹலிவகரா - கலப்பை வைத்திருக்கும் ஒவ்வொரு: உழவரும் கட்ட வேண்டிய கலப்பை வரி.
சுல்கா - வர்த்தகர்கள் நகரத்திற்கோ துறைமுகத்திற்கோ கொண்டுவரும் வணிகச் சரக்குகளில் - அரசருக்கான பங்கு இதைச் சுங்கநுழைவு வரிகளுக்கு ஒப்பிடலாம்.
கிளிப்நா; உபகிளிப்தா --நிலப்பதிவின் போது விதிக்கப்படும் விற்பனை வரி.
No comments:
Post a Comment