Monday, October 03, 2022

TNPSC G.K - 163 | குப்தப் பேரரசு.

இரண்டாம் சந்திரகுப்தர் :


  • காலம் : கிபி 375-415.
  • தலைநகர் : பாடலிபுத்திரம்.
  • உஜ்ஜயினி : வாணிப நகரம்.
  • இராம குப்தர் உடன் (கி.பி 370-375) வாரிசு உரிமைப் போரில் வென்று ஆட்சியைக் கைப்பற்றினார்.
  • சாகச் சத்ரப்பு மரபின் கடைசி ஆட்சியாளரான மூன்றாம் இராசசிம்மன் இப்போரில் கொல்லப்பட்டார்.
  • நாகர்கள் உடன் திருமண உறவு செய்து கொண்டார்.
  • குபேர நாகா இளவரசியை திருமணம் செய்தார்.
  • இரண்டாம் சந்திரகுப்தர் மகள் பிரபாவதி - வாகாடக (தக்காணம்) இளவரசர் இரண்டாம் ருத்ர சேனருக்கு மணம் செய்து கொடுத்தார்.
  • மேற்கு இந்தியாவிலிருந்த சாகச் சத்ரப்புகளை போரிட்டு பெற்ற வெற்றியே இரண்டாம் சந்திரகுப்தரின் போர் சாதனைகளில் முக்கியமானது.
  • இவரின் ஆட்சிகாலத்தில் சீனப்பயணி பாஹியான் இந்தியா வருகை.
  • இந்தியாவில் அவர் தங்கியிருந்த 9 ஆண்டுகளில் குப்த பேரரசில் மட்டும் 6 ஆண்டுகள் கழித்தார்.

பட்டப் பெயர்கள் :


  • விக்ரமன், தேவ விக்கிரமன், விக்ரமாதித்தன் மற்றும் சிம்ம விக்ரமன் ஆகியவை.
  • சஹாரி(சாகர்கள் அழித்தவர்) -சாகர்களை வென்றதால் இப்பெயர் பெற்றார்.
  • தேவ குப்தன், தேவராஜன், தேவஹு -வழிபாட்டின் காரணமாக.

நவரத்தினங்கள்(Names List of Gupta Empire in navratnas) :


  • காளிதாசர் - சமஸ்கிருத புலவர்.
  • ஹரிசேனர் - சமஸ்கிருத புலவர்.
  • அமரசிம்மன் - அகராதியியல் ஆசிரியர் (அமரகோசம்).
  • தன்வந்திரி - மருத்துவ மேதை.
  • காகபானகர் - ஜோதிட மேதை.
  • சன்கு - கட்டிடக்கலை நிபுணர்.
  • வராகமிகிரர் - வானியல் அறிஞர்.
  • வராச்சி -சமஸ்கிருத புலவர், இலக்கண ஆசிரியர்.
  • விட்டல பட்டர் - மாய வித்தகர்.

முதலாம் குமார குப்தர் :


  • காலம் : கி.பி 415-455.
  • இரண்டாம் சந்திரகுப்தரின் மகன்.
  • சக்ராதித்யர் என அழைக்கப்பட்டார்.
  • நளந்தா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது இவரது ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டது.
  • கார்த்திகேய வழிபாட்டை முதலில் கொண்டு வந்தவர்.
  • நாணயங்களை வெளியிட்டார்.
  • இவர் குதிரை வேள்வியும் மேற்கொண்டார்.
  • இவர் ஆட்சி கால முடிவில் வலிமையும் செல்வமும் மிகுந்த புஷ்யமித்ரர்கள் என்றழைக்கப்பட்ட பழங்குடியினரால் குப்த படை முறியடிக்கப்பட்டது.

ஸ்கந்த குப்தர் :


  • பிடாரி தூண் கல்வெட்டு இவர்பற்றிக் கூறுகிறது.
  • ஹீணர்கள் படையெடுப்பு நடைபெற்றது.
  • மறைவு கிபி 467.
  • புரு குப்தர் புத்த குப்தர் இவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள்.

பாலாதித்தர் :


  • முதலாம் நரசிம்ம குப்தர் என்ற பெயரில் ஆட்சி பொறுப்பேற்றார்.
  • மிகிரி குலத்தை வென்றார் பின்னர் மிகிர குலம் இவரைத் தோற்கடித்தனர்.

விஷ்ணு குப்தர் :


  • காலம் : கிபி 540 -560 வரை.
  • அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர்.

முக்கிய குறிப்புகள் :


  • வேளாண்மைப் பயிர்கள் - நெல், கோதுமை, பார்லி, பயறு, எண்ணெய் வித்துக்கள், தானியங்கள்.
  • நீர்ப்பாசனத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
  • காளிதாசர் நூல்களில் மிளகு, ஏலம் பற்றிக் கூறுகிறது.
  • வராகமிகிரர் பழ மர வளர்ப்பு பற்றிக் கூறுகிறார்.
  • பஹார்பூர் செப்பேடு அரசு நிலம் எனக் குறிப்பிடுகிறது (அரசர் மட்டுமே நிலத்துக்கு உரிமையாளர்).
  • உஸ்தபாலா நிலங்களைப் பரிமாற்றம் செய்வதற்கான அதிகாரி.
  • கிராம கணக்காளர் - கிராமங்களை நிர்வகிப்பவர்.

நிலங்களின் வகை :


  • ஷேத்திரா-- பயிரிடக்கூடிய நிலம்
  • கிலா -தரிசு நிலம்.
  • அப்ரஷதா -வனம்/காடுகள்.
  • வாஸ்தி- குடியிருப்பு நிலம்.
  • கபடசஹாரா மேய்ச்சல் நிலம்.

நில கொடைகள் :


  • அக்ரஹாரமானியம் பிராமணர்களுக்குத் தரப்பட்ட நிலம்.
  • தேவ கிரகாமானியம் கோவில்களுக்குத் தரப்பட்ட நிலம் (பிராமணர் வணிகரிடம் தரப்படும்).
  • சமயசார்பற்ற மானியம் --நிலப்பிரபுக்களுக்கு தரப்படும் நிலம்.

நிலக்குத்தகை முறை :


  • நிவி தர்மா அறக்கட்டளை நிலம் மானியம்.
  • நிவி தர்மா அக்சயனா நிரந்தர அறக்கட்டளை வருவாய் மட்டும் பெற்றுக் கொள்ளலாம்.
  • சுப்ரதா வர்மா அறக்கட்டளை வருவாய் முழுதும் பெற்று பயன்படுத்தலாம் நிர்வாக உரிமை இல்லை.
  • பூமிசித்ராயனா தரிசு நிலங்களில் சாகுபடி நிலமாக மாற்ற வேண்டும்.

வரிகள் :


  • பாகா - அதன் தன்மை விளைச்சலில் அரசன் பெறும் வழக்கமான ஆறில் ஒரு பங்காகும்.
  • போகா - அரசருக்கு கிராமங்கள் அவ்வப்போது வழங்க வேண்டிய பழங்கள், விறகு, பூக்கள் போன்றவை.
  • கரா - கிராமத்தினர் மீது குறிப்பிட்ட கால இடைவெளியில் விதிக்கப்படும் ஒரு வரி (இது வருடாந்திர நிலவரியின் ஒரு பகுதியல்ல).
  • பலி - ஆரம்பத்தில் விருப்பப்பட்டு வழங்கப்பட்ட வரியாக இருந்து பின்னர் கட்டாய வரியாக மாற்றப்பட்டது. இது ஒரு ஒடுக்குமுறை.
  • உதியங்கா - காவல் நிலையங்களின் பராமரிப்பிற்காக விதிக்கப்பட்ட காவல் வரியாக இருக்கலாம் அல்லது நீர் வரியாகவும் இருக்கலாம். எனினும், இது ஒரு கூடுதல் வரிதான்.
  • உபரிகரா - இதுவும் ஒரு கூடுதல் வரிதான். இது எதற்காக வருவிக்கப்பட்டது என்பது குறித்து அறிஞர்கள் மாறுபட்ட விளக்கங்களைத் தருகின்றனர்.
  • ஹிரண்யா - தங்க நாணயங்கள்மீது விதிக்கப்படும் வரி என்பது நேரடிப் பொருள், நடைமுறையில் இது சில குறிப்பிட்ட தானியங்களின் விளைச்சலில் ஒரு பங்கினை, அரசின் பங்காகப் பொருளாகவே அளிப்பதாகும்.
  • வாத - பூதா - காற்றுக்கும் ஆவிகளுக்கும் செய்ய வேண்டிய சடங்குகளுக்காக விதிக்கப்பட்ட பல்வேறு வரிகள்.
  • ஹலிவகரா - கலப்பை வைத்திருக்கும் ஒவ்வொரு: உழவரும் கட்ட வேண்டிய கலப்பை வரி.
  • சுல்கா - வர்த்தகர்கள் நகரத்திற்கோ துறைமுகத்திற்கோ கொண்டுவரும் வணிகச் சரக்குகளில் - அரசருக்கான பங்கு இதைச் சுங்கநுழைவு வரிகளுக்கு ஒப்பிடலாம்.
  • கிளிப்நா; உபகிளிப்தா --நிலப்பதிவின் போது விதிக்கப்படும் விற்பனை வரி.

No comments:

Popular Posts