Friday, October 07, 2022

TNPSC G.K - 190 | பொதுத்தமிழ் - எட்டுத்தொகை.

எட்டுத்தொகை நூல்கள் :


  • எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர்.
  • எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம்.
  • பெரும் பாடல் ஒன்று கூறுகிறது.

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம்புறமென்று

இத்திறத்த எட்டுத்தொகை

  • எட்டுத்தொகை நூல்கள் - நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு.
  • எட்டுத்தொகையில் அகம் பற்றிய நூல்கள் - 5 (நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு).
  • எட்டுத்தொகையில் புறம் பற்றிய நூல்கள் - 2 (பதிற்றுப்பத்து, புறநானூறு).
  • எட்டுத்தொகையில் அகமும் புறமும் கலந்த நூல் - 1 (பரிபாடல்).
  • எட்டுத்தொகையில் நானூறு என்னும் எண்ணிக்கையில் குறிக்கப்படும்.
  • நூல்கள் = 4 (நற்றிணை நானூறு, அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை நானூறு).
  • எட்டுத்தொகையில் எண்ணிக்கையால் பெயர் பெறாத நூல்கள் - 2 (கலித்தொகை, பரிபாடல்).
  • கலிப்பா வகையால் ஆன நூல் - கலித்தொகை.
  • பரிபாட்டு வகையால் ஆன நூல் - பரிபாடல்.
  • மற்ற ஆறு நூல்களும் ஆசிரியப்பாவால் ஆனது.
  • முதலும் முடிவும் கிடைக்காமல் இருக்கும் எட்டுத்தொகை நூல்கள் - 2 (பதிற்றுப்பத்து, பரிபாடல்)
  • எட்டுத்தொகை நூல்களுள் காலத்தால் முந்தியது - புறநானூறு
  • எட்டுத்தொகை நூல்களுள் காலத்தால் பிந்தியது - பரிபாடல், கலித்தொகை
  • எட்டுத்தொகை நூல்களுள் முதன் முதலாக தொகுக்கப்பட்ட நூல் - குறுந்தொகை.

நற்றிணை :


பாடல்கள் : 400.

புலவர்கள் : 175.

அடிகள் : 9-12.

பொருள் :அகம்.

தொகுத்தவர் : தெரியவில்லை.

தொகுப்பித்தவர் : பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி.

கடவுள் வாழ்த்து பாடியவர் :பாரதம் பாடிய பெருந்தேவனார்.

தெய்வம் :திருமால்.

குறுந்தொகை :


பாடல்கள் : 400.

புலவர்கள் : 205.

அடிகள் : 4-8.

பொருள் :அகம்.

தொகுத்தவர் : பூரிக்கோ.

தொகுப்பித்தவர் : தெரியவில்லை.

கடவுள் வாழ்த்து பாடியவர் :பாரதம் பாடிய பெருந்தேவனார்.

தெய்வம் : முருகன்.

ஐங்குறுநூறு :


பாடல்கள் : 500.

புலவர்கள் : 5.

அடிகள் : 3-6.

பொருள் :அகம்.

தொகுத்தவர் : புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.

தொகுப்பித்தவர் : யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.

கடவுள் வாழ்த்து பாடியவர் :பாரதம் பாடிய பெருந்தேவனார்.

தெய்வம் : சிவன்.

கலித்தொகை :


பாடல்கள் : 150.

புலவர்கள் : 5.

அடிகள் : 11-80.

பொருள் :அகம்.

தொகுத்தவர் : நல்லாத்துவனார்.

தொகுப்பித்தவர் : தெரியவில்லை.

அகநானூறு :


பாடல்கள் : 400.

புலவர்கள் : 145.

அடிகள் : 13-31.

பொருள் :அகம்.

தொகுத்தவர் : உருத்திரசன்மனார்.

தொகுப்பித்தவர் : பாண்டியன் உக்கிர பெருவழுதி.

கடவுள் வாழ்த்து பாடியவர் :பாரதம் பாடிய பெருந்தேவனார்.

தெய்வம் : சிவன்.

புறநானூறு :


பாடல்கள் : 400.

புலவர்கள் : 158.

அடிகள் : 4-40.

பொருள் : புறம்.

தொகுத்தவர் : தெரியவில்லை.

தொகுப்பித்தவர் : தெரியவில்லை.

கடவுள் வாழ்த்து பாடியவர் :பாரதம் பாடிய பெருந்தேவனார்.

தெய்வம் : சிவன்.

பதிற்றபத்து :


பாடல்கள் : 100.

புலவர்கள் : 8.

அடிகள் : 8-57.

பொருள் : புறம்.

தொகுத்தவர் : தெரியவில்லை.

தொகுப்பித்தவர் : தெரியவில்லை.

பரிபாடல் :


பாடல்கள் : 70.

புலவர்கள் : 13.

அடிகள் : 25-400.

பொருள் : அகம் மற்றும் புறம்.

தொகுத்தவர் : தெரியவில்லை.

தொகுப்பித்தவர் : தெரியவில்லை.

எட்டுத்தொகை நூல்களின் சிறப்பு பெயர்கள் நூல்கள் :


  • எட்டுத்தொகை - எண்பெருந்தொகை.
  • நற்றிணை - நற்றிணை நானூறு,தூதின் வழிகாட்டி.
  • குறுந்தொகை - நல்ல குறுந்தொகை, குறுந்தொகை நானூறு.
  • பதிற்றுப்பத்து - இரும்புக் கடலை.
  • பரிபாடல் - பரி பாட்டு, ஓங்கு பரிபாடல், இசைப்பாட்டு, பொருட்கலவை நூல், தமிழின் முதல் இசைப்பாடல்.
  • கலித்தொகை - கலி, குறுங்கலி, கற்றறிந்தோர் ஏத்தும் கலி, கல்விவலார் கண்ட கலி, அகப்பாடல் இலக்கியம்.
  • அகநானூறு - அகம், அகப்பாட்டு, நெடுந்தொகை, நெடுந்தொகை நானூறு, நெடும்பாட்டு, பெருந்தொகை நானூறு.
  • புறநானூறு - புறம், புறம் பாட்டு, புறம்பு நானூறு, தமிழ் வரலாற்று பெட்டகம், தமிழர் களஞ்சியம், திருக்குறளின் முன்னோடி .

No comments:

Popular Posts