Wednesday, October 05, 2022

TNPSC G.K - 186 | பொதுத்தமிழ் - ஏழாம் வகுப்பு - அறிவியல் ஆக்கம்.

கலங்கரை விளக்கம் :


வானம் ஊன்றிய மதலை போல

ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி

விண்பொர நிவந்த வேயா மாடத்து

இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி

உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும் துறை

- கடியலூர் உருத்திரங் கண்ணனார்

சொல்லும் பொருளும் :


  • மதலை - தூண்
  • சென்னி - உச்சி
  • ஞெகிழி - தீச்சுடர்
  • உரவுநீர் - பெருநீர்ப் பரப்பு
  • அழுவம் - கடல்
  • கரையும் - அழைக்கும்
  • வேயா மாடம் - வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது, (திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்.)

நூல் வெளி :


  • கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககாலப் புலவர்.
  • இவர் கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர்.
  • இவர் பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
  • பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன்.

ஆற்றுப்படை :


  • வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும்

பத்துப்பாட்டு நூல்கள் :


  • திருமுருகாற்றுப்படை
  • மதுரைக்காஞ்சி
  • பொருநராற்றுப்படை
  • நெடுநல்வாடை
  • பெரும்பாணாற்றுப்படை
  • குறிஞ்சிப்பாட்டு
  • சிறுபாணாற்றுப்படை
  • பட்டினப்பாலை
  • முல்லைப்பாட்டு
  • மலைபடுகடாம்

கவின்மிகு கப்பல் :


உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்

புலவுத்திரைப் பெருங்கடல் நீர்இடைப் போழ

இரவும் எல்லையும் அசைவுஇன்று ஆகி

விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்ட

கோடுஉயர் திணிமணல் அகன்துறை நீகான்

மாட ஒள்எரி மருங்குஅறிந்து ஒய்ய

- மருதன் இளநாகனார்

சொல்லும் பொருளும் :


  • உரு – அழகு
  • வங்கம் – கப்பல்
  • போழ – பிளக்க
  • எல் – பகல்
  • வங்கூழ் – காற்று
  • கோடு உயர் – கரை உயர்ந்த
  • நீகான் – நாவாய் ஓட்டுபவன்
  • மாட ஒள்ளெரி - கலங்கரை விளக்கம்

நூல் வெளி :


  • மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.
  • கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள 35 பாடல்களையும் பாடியுள்ளார்.
  • மருதத்திணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார்- என அழைக்கப்படுகிறார்.

அகநானூறு :


  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • புலவர் பலரால் பாடப்பட்ட 400 பாடல்களைக் கொண்டது.
  • இந்நூலினை நெடுந்தொகை என்றும்

எட்டுத்தொகை நூல்கள் :


  • நற்றிணை
  • குறுந்தொகை
  • ஐங்குறுநூறு
  • பதிற்றுப்பத்து
  • பரிபாடல்
  • கலித்தொகை
  • அகநானூறு
  • புறநானூறு.

தமிழரின் கப்பற்கலை :


  • தொல்காப்பியம்- முந்நீர் வழக்கம் என்று கடற்பயணத்தைக் குறிப்பிடுகிறது.
  • கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து (குறள் 496) திருக்குறள், திருவள்ளுவர்.
  • பூம்புகார் துறைமுகத்தில் -கப்பல்கள் மூலம் ஏற்றுமதி இறக்குமதி நடந்தன என - பட்டினப்பாலை கூறுகிறது.
  • உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்- (பாடல் 255) என்று பெரிய கப்பலை அகநானூறு கூறுகிறது.
  • அருங்கலம் தரீஇயர் நீர்மிசை பெருங்கலி வங்கம் (பாடல் 52) -பதிற்றுப்பத்து
  • சேந்தன் திவாகரம் என்னும் நிகண்டு நூலில் பலவகையான கப்பல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன
  • தமிழர்கள் தோணி, ஓடம், படகு, புணை, மிதவை, தெப்பம் போன்றவற்றைச் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தினர்.
  • கலம், வங்கம், நாவாய் முதலியவை அளவில் பெரியவை. இவற்றைக் கொண்டு தமிழர்கள் கடல் பயணம் மேற்கொண்டனர்.
  • நியூசிலாந்து நாட்டு வெலிங்டன் அருங்காட்சியகத்தில் பழங்காலத் தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி ஒன்று இடம்பெற்றுள்ளது.
  • கப்பல் கட்டும் கலைஞர்கள்- கம்மியர்
  • “கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஉய்” (காதை 25, அடி 124) - மணிமேகலை.

கப்பல் கட்டும் மரங்கள் :


  • நீர்மட்ட வைப்பிற்கு வேம்பு, இலுப்பை, புன்னை, நாவல் போன்ற மரங்களையும் பக்கங்களுக்குத் தேக்கு, வெண்தேக்கு மரங்களையும் பயன்படுத்தினர்.
  • மரத்தின் வெட்டப்பட்ட பகுதியை வெட்டுவாய் என்பர். அதன் நிறத்தைக் கொண்டு மரத்தின் தன்மையை அறிவர்.
  • கண்ணடை என்பது இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் ஆகும்.
  • சுழி உள்ள மரங்களைத் தவிர்த்தனர்.
  • இவற்றைத் தச்சுமுழம் என்னும் நீட்டலளவையால் கணக்கிட்டனர்.
  • பெரிய படகுகளில் முன்பக்கத்தை யானை, குதிரை, அன்னம் முதலியவற்றின் தலையைப் போன்று வடிவமைத்தனர்.
  • அதனைக் கரிமுக அம்பி, பரிமுக அம்பி என்று அழைக்கப்பட்டன

மற்ற பொருட்கள் :


  • மரங்களையும் பலகைகளையும் இணைக்க இடையே தேங்காய் நார், பஞ்சு ஆகியவை பயன்படுத்தினர்.
  • சுண்ணாம்பையும் சணலையும் அரைத்துச் சேர்த்து எண்ணெய் கலந்து கப்பலின் அடிப்பகுதியில் பூசியதால் கப்பல் பழுதடையாமல் நெடுங்காலம் உழைத்தன.
  • இம்முறையை இத்தாலி நாட்டைச் சேர்ந்த மார்க்கோபோலோ என்னும் கடற்பயணி பாராட்டியுள்ளார்.
  • மரத்தினாலான ஆணிகள் -தொகுதி என்பர்.

பலவகை பாய்மரங்கள் :


  • பெரியபாய்மரம், திருக்கைத்திப் பாய்மரம், காணப் பாய்மரம், கோசுப் பாய்மரம் போன்ற பாய்மரங்களைத் தமிழர் பயன்படுத்தினர்.

பாய்மரங்களைக் கட்டும் கயிறு வகை :


  • ஆஞ்சான் கயிறு, தாம்பாங்கயிறு, வேடாங்கயிறு, பளிங்கைக் கயிறு, மூட்டங்கயிறு, இளங்கயிறு, கோடிப்பாய்க்கயிறு.
  • பாய்மரக் கப்பலின் பாய், கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்பட்டால் மரப்பிசின் கொண்டு இணைத்தனர் என்று பரிபாடல் கூறுகிறது.

கப்பலின் உறுப்புகள் :


  • எரா, பருமல், வங்கு, கூம்பு, பாய்மரம், சுக்கான், நங்கூரம்
  • கப்பலின் முதன்மையான உறுப்பு அடிமரம் எரா எனப்படும்.
  • குறுக்கு மரம் பருமல் என்பர்.
  • கப்பலைச் செலுத்தவும் உரிய திசையில் திருப்பவும் பயன்படும் முதன்மையான கருவி சுக்கான் எனப்படும்.
  • கப்பலை நிலையாக ஓரிடத்தில் நிறுத்த வைக்க உதவும் உறுப்பு நங்கூரம் ஆகும்.
  • சமுக்கு என்னும் ஒரு கருவியைக் கப்பல்களில் பயன்படுத்தினர் என்று கப்பல் சாத்திரம் என்னும் நூல் குறிப்பிடுகிறது. இது காந்த ஊசி பொருத்தப்பட்ட திசைகாட்டும் கருவியாக இருக்கலாமென ஆய்வாளர்கள் கருத்து.
  • கப்பல் செலுத்துபவர்- மாலுமி, மீகாமன், நீகான், கப்பலோட்டி

கப்பலைச் செலுத்தும் முறை :


  • “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளி தொழில் ஆண்ட உரவோன் மருக” (பாடல் 66)- புறப்பாடல் அடிகளில் வெண்ணிக்குயத்தியார் குறிப்பிடுகிறார்.
  • கடலில் காற்று வீசும் திசை, கடல் நீரோட்டங்களின் திசை ஆகியவற்றைத் தமிழர்கள் அறிந்து உரிய திசையில் கப்பலைச் செலுத்தினர்.
  • கலம் = கப்பல், கரைதல் = அழைத்தல். கப்பலை அழைக்கும் விளக்கு என்னும் பொருளில் கலங்கரை விளக்கம் எனப்பட்டது.
  • கலம் தந்த பொற்பரிசம் கழித்தோணியால் கரை சேர்க்குந்து (பாடல் 343) என்று புறநானூறு கூறுகிறது.
  • ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களைப் 12ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும். ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களை 50ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை” என்று வாக்கர் என்னும் ஆங்கிலேயர் கூறியுள்ளார்.

ஆழ்கடலின் அடியில் :


  • அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் ஜூல்ஸ் வெர்ன்.
  • பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர்.
  • அறிவியல் கண்டுபிடிப்புகள் பல கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே அவற்றைப் பற்றித் தமது புதினங்களில் எழுதியவர்.
  • • படைப்புகள்-எண்பது நாளில் உலகத்தைச் சுற்றி, பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம் ஆழ்கடலின் அடியில் புதினங்கள்.

இலக்கியவகைச் சொற்கள் :


  • ஓர் எழுத்து தனித்தும் ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தும் வந்து பொருள் தருவது சொல் எனப்படும்.
  • மொழி, பதம், கிளவி என்பன சொல் என்னும் பொருள் தரும் வேறு சொற்களாகும்
  • இலக்கண முறைப்படி பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் எனச் சொற்கள் நான்கு வகைப்படும்.
  • இலக்கிய வகையில் சொற்களை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

இயற்சொல் :


  • கடல், கப்பல், எழுதினான், படித்தான். இவ்வாறு எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்.
  • இயற்சொல் பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகையிலும் வரும்.
  • மண், பொன் - பெயர் இயற்சொல்
  • நடந்தான், வந்தான் -வினை இயற்சொல்
  • அவனை, அவனால் -இடை இயற்சொல்
  • மாநகர் -உரி இயற்சொல்

திரிசொல் :


  • வங்கூழ், அழுவம், சாற்றினான், உறுபயன் - எனும் சொற்களுக்குக் காற்று, கடல், சொன்னான், மிகுந்த பயன் எனப் பொருள் தரும்.
  • கற்றோர்க்கு மட்டுமே விளங்குபவையாகவும் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருபவையாகவும் அமைவது திரிசொற்கள் எனப்படும்.
  • திரிசொல் பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகையிலும் வரும்.
  • அழுவம், வங்கம் -பெயர்த் திரிசொல்
  • இயம்பினான், பயின்றாள்-வினைத் திரிசொல்
  • அன்ன, மான - இடைத் திரிசொல்
  • கூர், கழி - உரித் திரிசொல்
  • ஒரு பொருள்குறித்த பல திரிசொற்கள் - வங்கம், அம்பி, நாவா = கப்பல்
  • பல பொருள்குறித்த ஒரு திரிசொல் இதழ் என்னும் சொல் பூவின் இதழ், உதடு, கண்ணிமை, பனையேடு, நாளிதழ்

திசைச்சொல் :


  • சாவி, சன்னல், பண்டிகை, இரயில் முதலிய சொற்கள் தமிழில் வழக்கில் இருந்தாலும் இவை தமிழ்ச் சொற்கள் அல்ல.
  • இவ்வாறு வடமொழி தவிர, பிற மொழிகளிலிருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் திசைச்சொற்கள் எனப்படும்.
  • முற்காலத்தில் பாண்டிநாட்டைத் தவிர, பிற பகுதிகளில் வழங்கிய கேணி(கிணறு), பெற்றம் (பசு) போன்ற சொற்களையும் திசைச்சொற்கள் என்றே வழங்கினர்.

வடசொல் :


  • வருடம், மாதம், கமலம், விடம், சக்கரம் முதலிய சொற்கள் தமிழில் வழக்கில் இருந்தாலும் இவை தமிழ்ச்சொற்கள் அல்ல. வடமொழி எனப்படும் சமஸ்கிருதமொழிச் சொற்கள் ஆகும்.
  • இவ்வாறு வடமொழியிலிருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் வடசொற்கள் எனப்படும்.
  • தற்சமம், தற்பவம் - இருவகை
  • கமலம், அலங்காரம் என வடமொழியில் இருப்பது போன்றே தமிழில் எழுதுவதைத் தற்சமம் என்பர்.
  • லக்ஷ்மி என்பதை இலக்குமி என்றும், விஷம் என்பதை விடம் என்றும் தமிழ் எழுத்துகளால் மாற்றி எழுதுவதைச் தற்சமம் என்பர்
  • காலம் மூன்று வகைப்படும்
    1. இறந்த காலம்
    2. நிகழ் காலம்
    3. எதிர் காலம்
  • நடந்த செயலைக் குறிப்பது இறந்த காலம் (நடந்தான்)
  • நடக்கின்ற செயலைக் குறிப்பது நிகழ்காலம் (பார்க்கிறான், ஆடுகிறது)
  • நடக்கவிருக்கும் செயலைக் குறிப்பது எதிர் காலம் (பறக்கும், ஆடும்)

கலைச்சொல் அறிவோம் :


  • கலங்கரை விளக்கம் - Lighthouse
  • துறைமுகம் - Harbour
  • பெருங்கடல் - Ocean
  • புயல் - Storm
  • மாலுமி - Sailor
  • நங்கூரம் - Anchor
  • நீர்மூழ்கிக்கப்பல் - Submarine
  • கப்பல்தளம் - Shipyard
  • கப்பல் தொழில்நுட்பம் - Marine technology
  • கடல்வாழ் உயிரினம்- Marine creature

No comments:

Popular Posts