12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 2 மனித இனப்பெருக்கம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 24
கேள்வி 24 : தாய்சேய் இணைப்புத்திசு ஒரு நாளமில்லாச் சுரப்பித்திசு – நியாயப்படுத்துக.
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
- கர்ப்ப காலத்தில் பல ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.
- hCG, hCS, hPL - கருவளர்ச்சிக்குப் பயன்படுகிறது.
- ரிலாக்ஸின் கர்ப்ப காலத்தின் இடுப்புப்பகுதியிலுள்ள நார்களைத் தளர்வடையச் செய்து குழந்தை பிறத்தலை எளிதாக்குகிறது.
- ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ரோன், கார்ட்டிசோல், புரோலக்டின், தைராக்சின் கரு வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
- ஆக்ஸிடோசின் குழந்தை பிறப்பதற்கும், பால் சுரப்பியிலிருந்த பாலை வெளித்தள்ளவும் பயன்படுகிறது.
மெல்ல கற்கும் மாணவர்களுக்கான விடை :
- கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடி பல ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது, அவற்றில் சில:
- hCG
- hCS
- hPL
- ரிலாக்ஸின்
- ஈஸ்ட்ரோஜன்
- புரோஜெஸ்ரோன்
- கார்ட்டிசோல்
- புரோலக்டின்
- தைராக்சின்
- ஆக்ஸிடோசின்
- இந்த ஹார்மோன்கள் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு உதவுகின்றன:
- கரு வளர்ச்சி
- பிரசவம் (ரிலாக்ஸின் இடுப்பு நார்களைத் தளர்வடையச் செய்து)
- பால் வெளியேற்றம்


0 Comments