Friday, November 18, 2022

இந்தியா விருதுகள்

 • பாரத ரத்னா - இந்தியாவின் சிறந்த குடிமகன்.

 • பத்மவிபூஷண் - இந்தியாவின் சிறந்த குடிமகனுக்கான இரண்டாவது மிக உயரிய விருது.

 • பத்மபூஷண் - தேசத்திற்கு ஆற்றிய மிக உயர்ந்த பணிக்கான விருது.

 • பத்மஸ்ரீ- ஏதாவது ஒரு துறையில் சிறந்த பணிக்கான விருது.

 • பரம்வீர் சக்ரா - ராணுவத்தில் தன்னலமற்ற சேவைக்கான மிக உயரிய விருது.

 • சாந்திஸ்வரூப் பட்நாகர் விருது - அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த பணிக்கான விருது.

 • ர்ஜூனா விருது - சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது.

 • சாகித்ய அகாடமி விருது - இலக்கியப் பணிக்கான உயரிய விருது.

 • டாக்டர் பி.சி.ராய் விருது - மருத்துவப் பணிக்கான உயரிய விருது.

 • துரோணாச்சாரியா விருது - சிறந்த விளையாட்டுப் பயிற்சியாளருக்கான விருது.

 • அசோக சக்ரா விருது - வீரதீர செயலுக்குரிய உயரிய விருது.

 • தாதா சாகேப் பால்கே விருது - திரைத்துறையில் ஆற்றிய சிறந்த சேவைக்கான விருது.What's App share  | Telegram Share


kalvisolai tnpsc
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Saturday, November 12, 2022

TNPSC CURRENT AFFAIRS NOVEMBER 2022

நவம்பர் 1 : சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் உள்பட 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.


நவம்பர் 1 : ராஜஸ்தானில், ஆங்கிலேயே ராணுவத்தால் கொல்லப்பட்ட பழங்குடியினருக்கான நினை விடத்தை தேசிய நினைவுச்சின்னமாக பிரதமர் ேமாடி அறிவித்தார்.


நவம்பர் 1 : ‘சென்னையில் கடந்த ஆண்டு மழை நீர் பாதித்த பகுதிகளில் தற்போது எந்த பிரச்சினையும் இல்லை’ என்றும், ‘மழை நீர் வடிகால் பணிகள் 75 சதவீதம் நிறைவுபெற்றுள்ளன’ என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.


நவம்பர் 2 : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.


நவம்பர் 2 : 11 ஆயிரம் அரசு பள்ளிகளில் 30-க்கும் குறைவான மாணவர்கள் இருப்பது தமிழக கல்வித்துறையின் புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.


நவம்பர் 2 : உரத்துக்கு ரூ.51 ஆயிரத்து 875 கோடி மானியம் வழங்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.


நவம்பர் 2 : ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


நவம்பர் 3 : குஜராத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 1 மற்றும் 5-ந் தேதிகளில் 2 கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.


நவம்பர் 3 : உணவுத்துறை சார்பில் ரேஷன் கடைகளை ஆய்வு செய்வதற்கான செல்போன் செயலியை அமைச்சர் சக்கரபாணி அறிமுகம் செய்து வைத்தார்.


நவம்பர் 3 : முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.


நவம்பர் 3 : 2020-2021 கல்வி ஆண்டில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. ஆசிரியர்கள் எண்ணிக்கை 1.95 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. மத்திய கல்வி அமைச்சகம் திரட்டிய புள்ளி விவரத்தில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.


நவம்பர் 4 : இந்த ஆண்டு முதல் என்ஜினீயரிங் கல்லூரிகளில் தமிழில் பாடப்புத்தகங்கள் அறிமுகம் செய்யப்படுவதாக அமைச்சர் பொன்முடி கூறினார்.


நவம்பர் 4 : தமிழகத்தில் 22 அரசியல் கட்சிகள் செயல்படாதவை என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.


நவம்பர் 4 : காற்றுமாசு அதிகரிப்பு காரணமாக, டெல்லியில், தொடக்கப்பள்ளிகள் மூடப்படும் என்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.


நவம்பர் 5 : தமிழகத்தில் வெளுத்து வாங்கிய வடகிழக்கு பருவமழையின் போது உயிரிழந்த 26 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


நவம்பர் 5 : நாட்டின் முதல் வாக்காளர் சியாம் சரண் நேகி 106 வயதில் மரணம் அடைந்தார்.


நவம்பர் 5 : திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 10,258 கிலோ தங்கம், ரொக்கம் 15,938 கோடி ரூபாய் ஆகியவை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக, தேவஸ்தான அதிகாரி தெரிவித்தார்.


நவம்பர் 3 : ஆசிய செஸ் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா ‘சாம்பியன்’ பட்டம் வென்றார்.


நவம்பர் 5 : தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக டாக்டர் அசோக் சிகாமணி தேர்வு செய்யப்பட்டார்.


நவம்பர் 2 : டுவிட்டரில் ‘புளூ டிக்’ கணக்குகளுக்கு மாதம் ரூ.660 கட்டணம் விதிக்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.


நவம்பர் 2 : இஸ்ரேலில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவர் மீண்டும் அந்த நாட்டின் பிரதமராகவுள்ளார்.


நவம்பர் 2 : வடகொரியாவும், தென் கொரியாவும் பரஸ்பர ஏவுகணை வீச்சில் ஈடுபட்ட சம்பவம் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


நவம்பர் 3 : வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தி இருப்பது தென்கொரியாவையும், ஜப்பானையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


நவம்பர் 5 : பாகிஸ்தானில் நடந்த பேரணியில் பங்கேற்ற போது இம்ரான் கான் சுடப்பட்டார். காலில் படுகாயம் அடைந்த அவருக்கு லாகூர் ஆஸ்பத்திரியில் அவசர அறுவை சிகிச்சை நடந்தது.


நவம்பர் 5 : உக்ரைன் போரில் ரஷியாவுக்கு டிரோன்கள் வழங்கியதை ஈரான் ஒப்புக்கொண்டது.


நவம்பர் 6 : மக்களிடம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் இல்லாத நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 5 கோடி கொரோனா தடுப்பூசிகள் வீணாகும் அவலம் நேரப்போவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


நவம்பர் 6 : டாக்டர்கள் படிப்பை முடித்தவுடன் குறிப்பிட்ட காலம் அரசுப்பணியாற்ற வேண்டும் என்று நிபந்தனை விதித்து பிணை பத்திரம் வழங்குவது முடிவுக்கு வருகிறது. இது தொடர்பான வழிகாட்டுதல்களை இறுதி செய்வதில் மத்திய சுகாதார அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.


நவம்பர் 6 : திருப்பதி கோவில் சொத்து மதிப்பு ரூ.2½ லட்சம் கோடி என்ற தகவல் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.


நவம்பர் 7 : பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்ட திருத்தம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.


நவம்பர் 7 : விதிமீறல் கட்டிடங்களை கட்டுவதற்கு அனுமதித்து விட்டு, பின்னர் அவற்றை வரன்முறை செய்வதற்கு பதிலாக, நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தை திரும்ப பெற்றுவிடலாமே? என்று சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


நவம்பர் 7 : தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 13-ந்தேதியும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ந்தேதியும் தொடங்குகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.


நவம்பர் 8 : தமிழகத்தின் 17-வது வன விலங்கு சரணாலயம் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் அமைகிறது. இதற்கு புதிய காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயம் என்று தமிழக அரசு பெயர் அறிவித்துள்ளது.


நவம்பர் 8 : 10 லட்சம் பேர் எழுதிய குரூப்-2, 2ஏ தேர்வு முடிவு வெளியானது. இதில் 57 ஆயிரத்து 641 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.


நவம்பர் 8 : புதிதாக அமைய இருக்கும் பரந்தூர் விமான நிலையத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என்று மத்திய மந்திரி கிஷன் ரெட்டி தெரிவித்தார்.


நவம்பர் 8 : ‘ஜி-20’ அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குவது அனைத்து மக்களுக்கும் பெருமிதம் என்று பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.


நவம்பர் 9 : பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து கவர்னரை நீக்க சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்படும் என மந்திரி சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


நவம்பர் 9 : நாடு முழுவதும் 100 வயதை கடந்த வாக்காளர்கள் 2 லட்சத்து 49 ஆயிரம் பேர் இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.


நவம்பர் 9 : முதுநிலைபடிப்புகளுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டுடன் ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக ‘நெக்ஸ்ட்’ தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


நவம்பர் 9 : சுப்ரீம் கோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவி ஏற்றார்.


நவம்பர் 10 : 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் அட்டையை புதுப்பிப்பது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


நவம்பர் 10 : இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில், சூரிய மின்சக்தி உற்பத்தியால் எரிபொருள் செலவில் ரூ.34 ஆயிரம் கோடியை இந்தியா சேமித்துள்ளது.


நவம்பர் 10 : இந்திய ரெயில்வேயின் 65 ஆயிரத்து 141 கிலோ மீட்டர் அகலப்பாதை வழித்தடங்களில் 53 ஆயிரத்து 470 கிலோ மீட்டர் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டு உள்ளன.


நவம்பர் 11 : முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையில் இருக்கும் 6 பேரையும் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.


நவம்பர் 11 : இந்த நிதியாண்டில் இதுவரை நேரடி வரி வசூல் ரூ.10.54 லட்சம் கோடி என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


நவம்பர் 11 : சென்னை-மைசூரு இடையே வந்தே பாரத் அதிவிரைவு ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.


நவம்பர் 11 : ஜார்கண்ட் மாநிலத்தில் இடஒதுக்கீட்டை 77 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதா, சட்டசபையில் நிறைவேறியது.


நவம்பர் 12 : சுப்ரீம் கோர்ட்டு அளித்த விடுதலை தீர்ப்பையடுத்து முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த நளினி உள்பட 6 பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதில் 4 பேர் திருச்சி சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


நவம்பர் 12 : அணைகளில் இருந்து உபரிநீரை வெளியேற்றும்போது முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


நவம்பர் 12 : சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 44 செ.மீ. மழை பதிவானது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Friday, October 28, 2022

TNPSC G.K - 236 | பொது அறிவு

 • வட துருவத்தில் பெங்குவின் பறவை ஒன்று கூட கிடையாது.
 • ஆசியா கண்டத்திலேயே சீனாவிடம்தான் அதிக கப்பல்கள் உள்ளன.
 • முழுவதும் இரும்பினால் ஆன போர்க் கப்பல்களை 16-ம் நூற்றாண்டில் உருவாக்கிய முதல் நாடு - கொரியா.
 • விமானங்களில் உள்ள கறுப்புப் பெட்டியின் நிறம், ஆரஞ்சு.
 • குஜராத் மாநிலத்தில் ‘கிர்’ வனத்தில் உள்ள முக்கிய விலங்கு, சிங்கம்.
 • ‘முடியாது என்பது முட்டாள்களின் அகராதியில் உள்ள சொல்’ என சொன்னவர், மாவீரன் நெப்போலியன்.
 • ஆஸ்திரேலியாவில் வாழும் ஒருவகை மண்புழு, 10 அடி நீளம் வரை வளரும்.
 • மரங்கொத்திப் பறவை ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தைக் கொத்தும்.
 • நன்கு வளர்ச்சியடைந்த ஒட்டகச்சிவிங்கியின் நாக்கு, 17 அங்குல நீளம் இருக்கும்.
 • மின்னல் தாக்கி இறந்த விலங்குகளை மற்ற விலங்குகள் உண்ணாது.
 • முதன்முதலில் மூங்கிலில் இருந்துதான் காகிதம் தயாரிக்கப்பட்டது.
 • மீன்பிடி தூண்டிலுக்கு மூங்கில்தான் பயன்படுத்தப்படுகிறது.
 • கம்ப்யூட்டர் நகரம் என்று அழைக்கப்படுவது சான்பிரான்சிஸ்கோ.
 • ஏலக்காய் செடி 40 ஆண்டுகள் வரை காய்க்கும்.
 • உலகில் அதிகளவில் வாழைப் பழங்களை சாப்பிடுபவர்கள் ஜெர்மானியர்களே.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Tuesday, October 18, 2022

TNPSC G.K - 235 | பொதுத்தமிழ் - இலக்கிய வகைச் சொற்கள்.

இலக்கிய வகையால் சொற்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். 

 • இயற்சொல்
 • திரிச்சொல்
 • திசைச்சொல்
 • வடசொல்

இயற்சொல்:


கற்றவர், கல்லாதவர் என அனைவருக்கும் எளிதில் பொருள் விளங்கும்படி அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்.
இயற்சொல் – இயல்பான சொல்.
எ.கா: பறவை, பூனை, மனிதன், மாமரம், பூ
இயற்சொல் இரு வகைப்படும்.
1) பெயர் இயற்சொல்
2) வினை இயற்சொல்

1) பெயர் இயற்சொல்:
எளிதில் பொருள் உணர்த்தும் பெயர்ச்சொற்கள் பெயர் இயற்சொல் எனப்படும்.
(எ.கா) காற்று, நிலவு, ஞாயிறு, பலகை

2) வினை இயற்சொல்:
எளிதில் பொருள் உணருமாறு அமைந்துள்ள வினைச்சொற்கள் வினை இயற்சொல் எனப்படுமு;.
(எ.கா) படித்தான், தூங்கினான், வந்தான், சிரித்தான், பறந்தது மேய்ந்தன.

திரிசொல்:


இயல்பு நிலையிலிருந்து மாறி கற்றவர் மட்டுமே அறிந்து கொள்ளும் வகையில் அமைந்த சொற்களைத் திரிச்சொற்கள் என்று கூறுவர்.
(எ.கா) பீலி – மயில்தொகை
உகிர் – நகம்
ஆழி – கடல்
தத்தை – கிளி
புனல் – நீர்;
ஞாலம் – உலகம்

திரிசொல் இரு வகைப்படும்
1) பெயர்த்திரிசொல்
2) வினைத் திரிசொல்

1) பெயர்த்திரிசொல்:
எளிதில் உணர முடியாது, கற்றவர்க்கு மட்டுமே பொருள் விளங்குமாறு அமைந்த பெயர்ச்சொல் ‘பெயர்த்திரிசொல்’ ஆகும்.
(எ.கா) எயில் – மதில்
நல்குரவு – வறுமை
கழை – மூங்கில்
கிழமை – உரிமை
மடி – சோம்பல்
பெயர்த்திரிசொல் இரு வகைப்படும்.
i. ஒரு பொருள் குறித்த பல பெயர்த்திரிசொல்
ii. பல பொருள் குறித்த ஒரு பெயர்த்திரிசொல்

ஒரு பொருள் குறித்த பல பெயர்த்திரிசொல்:
கமலம், கஞ்சம் முண்டகம் முளரி இவை யாவும் “தாமரை” என்னும் ஒரே பொருளை உணர்த்துகின்றன. இவ்வாறு கற்றவர்க்கு மட்டுமே பொருள் விளங்குமாறு அமைத்து ஒரே பொருளை உணர்த்தும் பல சொற்களை ஒரு பொருள் குறித்த பல பெயர்த்திரிசொல் என்று அழைக்கிறோம்.
எ.கா:
வேழம் வாரணம் கழை ஆகிய சொற்கள் “யானை” யைக் குறிக்கும்.

பல பொருள் குறித்த ஒரு பெயர்த்திரிசொல்:
ஆவி இச்சொல் உயிர் பேய் மெல்லிய புகை ஆகிய பல சொற்களை உணர்த்துகின்றது. அரிதில் பொருள் விளங்கும் இப்பெயர்ச்சொல் பல பொருள்களைத் தருவதால் அதனைக் பல பொருள் குறித்த ஒரு பெயர்த்திரிசொல் என்று அழைக்கிறோம்.
எ.கா:
ஆவணம் – முறிச்சீட்டு, கடைத்தெரு, அடிமைத்தனம்

2) வினைத்திரிசொல்:
கற்றவருக்கு மட்டுமே பொருள் விளங்கும் வகையில் அமைந்த வினைச்சொல் வினைதிரிசொல் எனப்படும்.
எ.கா: வினவினான் விளித்தான் நோக்கினான்.
வினைத்திரிசொல் இரு வகைப்படும்.
i. ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொல்
ii. பல பொருள் குறித்த ஒரு வினைத் திரிசொல்

ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொல்:
செப்பினான் உரைத்தான், மொழிந்தான் இயம்பினான் இவை கற்றவர்க்கு மட்டுமே விளங்கும் வகையில் அமைந்த வினைச்சொற்களாகும். எனவே இவை வினைத் திரிசொல் என வழங்கப்படும். இச்சொற்கள் அனைத்தும் ஒரு பொருளையே தருவதால் இவற்றை ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொல் என்பர்.

பல பொருள் குறித்த ஒரு வினைத் திரிசொல்:
வீசு இந்த வினைச்சொல் எறி, சிதறடி, பரவச்செய், ஆட்டு என்னும் பல பொருட்களை உணர்த்துகின்றது. இது கற்றவர்கள் மட்டுமே அறியும் சொல்லாகும். இதனைப் பல பொருள் குறித்த ஒரு வினைத் திரிசொல் ஆகும்.

திசைச்சொல்:


வடமொழி அல்லாத பிறமொழிச் சொற்கள் அம்மொழிகளில் எவ்வெப்பொருளில் வழங்குகின்றனவோ அவ்வப் பொருளிலேயே தமிழிலும் வந்து வழங்குவதைத் திசைச் சொற்கள் என்கிறோம்.
தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள பிற பகுதிகளிலிருந்து தமிழில் வழங்கும் திசைச்சொற்கள்
i. கேணி – (கிணறு)
ii. பெற்றம் – (பசு)
iii. அச்சன் – (தந்தை)
iv. கடிதாசி – (கடிதம்)
v. தள்ளை – (தாய்)
vi. சாவி – (திறவு கோல்)
vii.அசல் – (மூலம்)
viii. கோர்ட் – (நீதிமன்றம்)
ix.இலாகா – (துறை)

வடசொல்:


வடமொழிச் (சமஸ்கிருதம்) சொற்கள் திரிந்தும், திரியாமலும் தமிழ் மொழியில் வந்து வழங்குமானால் அவை “வடச்சொற்கள்” எனப்படும்.
கமலம், விஷம், புஷ்பம் இவை தமிழில் வந்து வழங்கினாலும் தமிழ்சொற்கள் அல்ல வடமொழிச் (சமஸ்கிருதம்) சொற்கள்.
எ.கா: கமலம் – தாமரை
விஷம் (அ) விடம் – நஞ்சு
புஷ்பம் (புட்பம்) – மலர்
அர்ச்சனை – மலரிட்டு வழிபடுதல்
சுதந்திரம் – விடுதலை
விவாகம் – திருமணம்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TNPSC G.K - 234 | பொதுத்தமிழ் - பெயர்ச்சொல்லின் வகையறிதல்.

பெயர்ச்சொல் : 


பெயரையும் இடத்தையும் குறித்து வந்தால் பெயர்ச்சொல் எனப்படும்.

வினைச்சொல் : 


பொருட்களின் செயலை இயக்கத்தை தொழிலை வினையை உணர்த்தும் சொற்கள் வினைச்சொல் எனப்படும்.

இடைச்சொல் : 


 • பெயர்ச்சொல் வினைசொற்களை இடமாகக் கொண்டு வருவதையே இடைச்சொல் என்றழைக்கிறோம்.
  வேற்றுமை உருபுகள் உவம உருபுகள் சுட்டு எழுத்துக்கள் வினா எழுத்துக்கள் மற்றும் ஏகாரம் ஒளகாரம் உம்மை போன்றவை இடைச்சொற்களாக வரும்.
  எ.கா:
 • நூலைப் படித்தான் – (வேற்றுமை உருபு)
 • மக்கள் மகிழ்ந்தனர் – அர் (விகுதி)
 • தேன் போன்ற மொழி – போன்ற (உவமஉருபு)
 • அவ்வீடு இது – அ, இ (சுட்டெழுத்துகள்)
 • உணவும் உடையும் – உம் (உம்மை)
 • படித்தாயா? – ஆ (வினா எழுத்து)
 • கழி உவகை (மிகுந்த மகிழ்ச்சி) கழி

உரிச்சொல் : 


பெயர் வினைச்சொற்களைச் சார்ந்து அவற்றின் குணத்தை உணர்த்தி வரும் சொற்கள் உரிச்சொற்கள் எனப்படும்.
எ.கா: மாநகர் மாமன்னர்

சாலப் பெரிது (மிகப்பெரிது) – சால
உறு பொருள் (மிகுந்த பொருள்) – உறு
தவச்சிறிது (மிகவும் சிறிது) – தவ
நனி பேசினான் (மிகுதியாகப் பேசினான்) – நனி

இடும்பை கூர் வயிறு (துன்பம் மிக்க வயிறு) – கூர்கழி உவகை (மிகுந்த மகிழ்ச்சி) – கழி

மேற்கண்ட சொற்றொடர்களில் உள்ள சால உறு தவ நனி கூர் கழி என்னும் சொற்கள் “மிகுதி” என்னும் குணத்தை உணர்த்திய பெயர்ää வினைகளுக்கு உரிமை பூண்டு வந்துள்ளன. எனவே இவை உரிச்சொல்கள் எனப்படுகின்றன.
சால உறு தவ நனி கூர் கழி என்பன மிகுதி என்னும் ஒரு பொருளையே உணர்த்துகின்றன. எனவே இவை ஒரு குணம் தழுவிய பல உரிச்சொற்கள் ஆகும்.

எ.கா:
கடிநிகர் – காவல் உடைய நகரம்
கடிவேல் – கூர்மையான வேல்
கடிமுரசு – ஆர்கும் முரசு
கடி காற்று – மிகுதியான காற்று
கடி மலர் – மணம் உள்ள மலர்

உரிச்சொற்றொடர் :


1. மாநகர் – உரிச்சொற்றொடர்
2. தடந்தேள் – உரிச்சொற்றொடர்
3. மாபத்தினி – உரிச்சொற்றொடர்
4. கடுமா – உரிச்சொற்றொடர்

உரிச்சொல் :


 • மாநகர் – உரிச்சொற்றொடர்
 • தடந்தேள் – உரிச்சொற்றொடர்
 • மல்லல் நெடுமதில் – உரிச்சொற்றொடர்
 • இரு நிலம் – உரிச்சொற்றொடர்

உரிச்சொல்

1. தடக்கை – உரிச்சொற்றொடர்
2. நனி விதைத்து – உரிச்சொற்றொடர்
3. உறுவேனில் – உரிச்சொற்றொடர்
4. மல்லல் அம் குருத்து – உரிச்சொற்றொடர்
5. நனிகடிது – உரிச்சொல் தொடர்கள்
6. நளிர்கடல் – உரிச்சொல் தொடர்கள்
7. நனி மனம் – பெயர் உரிச்சொல்
8. மல்லல் – ‘வளப்பம்’ என்னும் பொருளைத் தரும் உரிச்சொல்

உரிச்சொல்

1. விழுப்பொருள் – உரிச்சொற்றொடர்
2. வயமா – உரிச்சொற்றொடர்
3. தடங்கண் – உரிச்சொற்றொடர்
4. கடிநிறை – உரிச்சொற்றொடர்
5. தடம் தோள் – உரிச்சொல்

பல குணம் தழுவிய ஓர் உரிச்சொல்:  ஒரு தொடரில் ‘கடி’ என்னும் உரிச்சொல் காவல் கூர்மை விளைவு மிகுதி மணம் என்னும் பல பொருள்களை உணர்த்தியுள்ளது. எனவே ‘கடி’ என்னும் பலகுணம் தழுவிய ஒரு உரிச்சொல்லாகும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TNPSC G.K - 233 | பொதுத்தமிழ் - பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்.

அ - வரிசை :


 • அணியர் - நெருங்கி இருப்பவர்
 • அணையார் - போன்றார்
 • அளைஇ - கலந்து
 • அகன் - அகம், உள்ளம்
 • அமர் - விருப்பம்
 • அமர்ந்து - விரும்பி
 • அகத்தான் ஆம் - உள்ளம் கலந்து
 • அணி - அழகுக்காக அணியும் நகைகள்
 • அல்லவை - பாவம்
 • அற்று - அது போன்று
 • அல்லைத்தான் - அதுவும் அல்லாமல்
 • அன்ன - அவை போல்வன
 • அகம் - உள்ளம்
 • அமையும் - உண்டாகும்
 • அறிகை - அறிதல் வேண்டும்
 • அல்லல் - துன்பம்
 • அளகு - கோழி
 • அரவு - பாம்பு
 • அரவம் - பாம்பு
 • அரம் - வாளைக் கூர்மையாக்கும் கருவி
 • அமுத கிரணம் - குளிர்ச்சியான ஒளி
 • அலகு இல் - அளவில்லாத
 • அலகிலா - அளவற்ற
 • அன்னவர் - அத்தகைய இறைவர்
 • அகழ்வாரை - தோண்டுபவரை
 • அடவி - காடு
 • அரம்பையர் - தேவ மகளிர்
 • அளவின்று - அளவினையுடையது
 • அவி உணவு - தேவர்களுக்கு வேள்வியின் பொழுது கொடுக்கப்படும்  உணவு
 • அற்றே - போன்றதே
 • அனைத்தாலும் - கேட்ட அத்துணை அளவிலும்
 • அவியினும் - இறந்தாலும்
 • அரு - உருவமற்றது
 • அலகில - அளவற்ற
 • அகன்று - விலகி
 • அயலார் - உறவல்லாதோர்
 • அழுக்காறு - பொறாமை
 • அருவிணை - செய்தற்கரிய செயல்
 • அடர்த்து எழு குருதி - வெட்டுப்பட்ட  இடத்தினின்றும் பீறிட்டு ஒழுகும் செந்நீர்
 • அம்பி - படகு
 • அல் - இருள்
 • அடிமை செய்குவென் - பணி செய்வேன்
 • அமலன் - குற்றமற்றவன்
 • அரி - நெற்கதிர்
 • அம் - அழகிய
 • அரா - பாம்பு
 • அல்லல் - துன்பம்
 • அங்கை - உள்ளங்கை
 • அங்கணர் - அழகிய நெற்றிக்கண்ணையுடைய சிவன்
 • அரியாசணம் - சிங்காசணம்
 • அறைகுவன் - சொல்லுவான்
 • அணித்தாய் - அண்மையில்
 • அடவி - காடு
 • அலறும் - முழங்கும்
 • அணிந்து - அருகில்
 • அறைந்த - சொன்ன
 • அதிசயம் - வியப்பு

ஆ - வரிசை :


 • ஆர்வம் - விருப்பம்
 • ஆற்றவும் - நிறைவாக
 • ஆற்றுணா - ஆறு - உணா
 • ஆறு - வழி
 • ஆடவர் - ஆண்கள்
 • ஆர்கலி - நிறைந்த ஓசையுடைய கடல்
 • ஆடுபரி - ஆடுகின்ற குதிரை
 • ஆழி - மோதிரம்
 • ஆனந்தம் - மகிழ்ச்சி
 • ஆறு - நல்வழி
 • ஆழி - கடல்
 • ஆழி - உப்பங்கழி
 • ஆன்ற - உயர்ந்த
 • ஆன்றோர் - கல்வி, கேள்வி, பண்பு ஆகியவற்றில் சிறந்தோர்
 • ஆர் அவை - புலவர்கள் நிறைந்த அவை
 • ஆக்கம் - செல்வம்
 • ஆயகாலை - அந்த நேரத்தில்

இ - வரிசை :


 • இன்சொல் - இனிய சொல்
 • இன்சொலன் - இனிய சொற்களைப் பேசுபவன்
 • இன்சொலினதே - இனிய சொற்களைப் பேசுதலே
 • இன்புறாஉம் - இன்பம் தரும்
 • இன்மை - இப்பிறவி
 • இரட்சித்தாணா - காப்பாற்றினானா
 • இணக்கவரும்படி - அவர்கள் மனம் கனியும் படி
 • இல்லார் - செல்வம் இல்லாதவர்
 • இடித்தல் - கடிந்துரைத்தல்
 • இடுக்கண் - துன்பம்
 • இசைந்த - பொருத்தமான
 • இருநிலம் - பெரிய உலகம்
 • இகழ்வார் - இழிவுபடுத்துவோர்
 • இறப்பினை - பிறர் செய்த துன்பத்தை
 • இறைந்தார் - நெறியைக் கடந்தவர்
 • இன்னா - தீய
 • இன்னாசொல் - இனிமையற்ற சொல்
 • இழைத்துணர்ந்து - நுட்பமாக ஆராய்ந்து
 • இடர் - இன்னல்
 • இன்னா - தீங்கு
 • இனிய - நன்மை
 • இன்மை - வறுமை
 • இளிவன்று - இழிவானதன்று
 • இருநிலம் - பெரிய நிலம்
 • இசைபட - புகழுடன்
 • இரந்து செப்பினான் - பணிந்து வேண்டினான்
 • இன்னல் - துன்பம்
 • இறைஞ்சி - பணிந்து
 • இழக்கம் - ஒழுக்கம் இல்லாதவர்
 • இடும்பை - துன்பம்
 • இகல் - பகை
 • இறுவரை - முடிவுக்காலம்
 • இயைந்தக்கால் - கிடைந்தபொழுது
 • இமையவர் - தேவர்
 • இறையோன் - தலைவன்
 • இனிதின் - இனிமையானது
 • இன்னல் - துன்பம்
 • இருத்தி - இருப்பாயாக
 • இந்து - நிலவு
 • இடர் - துன்பம்
 • இழக்கும் - கடிந்துரைக்கும்
 • இடிப்பார் - கடிந்து அறிவுரை கூறும் பெரியார்
 • இருள் - பகை
 • இரண்டும் - அறனும் இன்பமும்
 • இடர் - துன்பம்
 • இரும்பணை - பெரிய பனை
 • இவண் நெறியில் - இவ்வழியில்
 • இனை - சுற்றம்
 • இளைப்பாறுதல் - ஓய்வெடுத்தல்

ஈ - வரிசை :


 • ஈனும் - தரும்
 • ஈன்றல் - தருதல் உண்டாக்குதல்
 • ஈயும் - அளிக்கும்
 • ஈரிருவர் - நால்வர்
 • ஈதல் - கொடுத்தல்
 • ஈயப்படும் - அளிக்கப்படும்
 • ஈர்த்து - அறுத்து
 • ஈண்டிய - ஆய்ந்தளித்த

உ - வரிசை :


 • உன்னி - நினைத்து
 • உரும் - இடி
 • உறுவை - புலி
 • உல்குபொருள் - வரியாக வரும் பொருள்
 • உறுபொருள் - அரசு உரிமையாளர் வரும்பொருள்
 • உறா அமை - துன்பம் வராமல்
 • உதிரம் - குருதி
 • உன்னேல் - நினைக்காதே
 • உண்டனென் - உண்டோம் என்பதற்கு சமமானது
 • உபகாரத்தான் - பயன் கருதாது உதவுபவன்
 • உள்வேர்ப்பர் - மனத்தினுள் மறைத்து வைத்திருப்பார்
 • உலகம் - உயர்ந்தோர்
 • உரவோர் - மன வலிமையுடையோர்
 • உம்பரார் பதி - இந்திரன்
 • உய்ய - பிழைக்க
 • உறுதி - உள வலிமை
 • உடு - சொரிந்த
 • உணர்வு - அறிவியல் சிந்தனை
 • உரு - வடிவம்
 • உலையா உடம்பு - தளராத உடல்
 • உயம்மின் - போற்றுங்கள்
 • உறைதல் - தங்குகள்
 • உய்ம்மின் - பிழைத்துக் கொள்ளுங்கள்
 • உயர்ந்தன்று - உயர்ந்தது
 • உபாயம் - வழிவகை
 • உடையார் - செல்வம் உடையார்
 • உவப்ப - மகிழ
 • உருகுவார் - வருந்துவார்
 • உண்பொழுது - உண்ணும் பொழுது
 • உணா - உணவு
 • உணர்வு - நல்லெண்ணம்
 • உடுக்கை - ஆடை
 • உழுபடை - விவசாயம் செய்யும் கருவிகள்

ஊ - வரிசை :


 • ஊன்றும் - தாங்கும்
 • ஊற்று - ஊன்று கோல்

எ - வரிசை :


 • என்பு - எலும்பு
 • எவன் கொலோ - என்ன காரணமோ
 • எய்யாமை - வருந்தாமை
 • எண் - எண்கள் கணிதம்
 • எழத்து - இலக்கண இலக்கியங்கள் வடிவங்கள்
 • எம்பி - என் தம்பி
 • எய்தற்கு - கிடைத்தற்கு
 • எளிமை - வறுமை
 • எள்ளுவர் - இகழ்வர்
 • எண்டு - கரடி
 • எழில் - அழகு
 • என்பால் - என்னிடம்
 • எஃகு - உறுதியான
 • எயினர் - வேடர்
 • எள்ளறு - இகழ்ச்சி இல்லாத
 • எய்தற்கு - கிடைத்தற்கு
 • என்பணிந்த - எலும்பை மாலையாக அணிந்த

ஏ - வரிசை :


 • ஏமாப்பு - பாதுகாப்பு
 • ஏமரா - பாதுகாவல் இல்லாத
 • ஏர் - அழகு
 • ஏசா - பழியில்லா
 • ஏதம் - குற்றம்
 • ஏய்துவர் - அடைவர்
 • ஏத்தும் - வணங்கும்
 • ஏமாப்பு - பாதுகாப்பு
 • ஏக்கற்று - கவலைப்பட்டு

ஒ - வரிசை :


 • ஒண்பொருள் - சிறந்த பொருள்
 • ஒழுகுதல் - ஏற்று நடத்தல்
 • ஒல்கார் - விலகமாட்டார்
 • ஒல்லாவே - இயலாவே
 • ஒட்ட - பொருந்த
 • ஒழுகுதல் - நடத்தல், வாழ்தல்
 • ஒடுக்கம் - அடங்கியிருப்பது
 • ஒள்ளியவர் - அறிவுடையவர்
 • ஒம்பப்படும் - காத்தல் வேண்டும்
 • ஒப்புரவு - உதவுதல்
 • ஒற்சம் - தளர்ச்சி
 • ஒப்பர் - நிகராவர்
 • ஒண்தாரை - ஒளிமிக்க மலர்மாலை
 • ஒன்றோ - தொடரும் சொல்

ஓ - வரிசை :


 • ஓதின் - எதுவென்று சொல்லும் போது
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Monday, October 17, 2022

TNPSC G.K - 232 | நிலக்கடலை.

(Groundnut) வேர்க்கடலை என்ற Fabaceae குடும்பத்தைச்சேர்ந்த மணிலாக்காயின் தாவரவியல் பெயர் Arachis hypogea ஆகும்.நிலக்கடலை பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்களால் உண்ணப்பட்டு வரும் உணவுப்பொருள். நமக்கு வேர்க் கடலை அறிமுகமானது கடந்த நூற்றாண்டுகளில்தான். வேர்க்கடலை, மணிலாக்கடலை, மல்லாட்டை, மணிலாக் கொட்டை, கடலை முத்து எனப் பல பெயர்களில் வழங்கப்படும். இதன் பூர்விகம் தென் அமெரிக்க கண்டம்தான். ஏழாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பே நிலக்கடலையை தென் அமெரிக்கர்கள் சாகுபடி செய்திருக்கிறார்கள். வடமேற்கு அர்ஜென்டினாவில் தொடக்கத்தில் சாகுபடி செய்யப்பட்ட இப்பயிர் பின்னர் அங்கிருந்து பெரு, ஈக்வடார், பொலிவியா, பிரேசில், பராகுவே, உருகுவே ஆகிய நாடுகளுக்கும் பரவியது. இன்று நிலக்கடலையை சீனா, இந்தியா, நைஜீரியா போன்ற நாடுகளும் அதிகமாக சாகுபடி செய்து வருகிறது. இந்தியாவில் முதலில் வளர்ப்பு பன்றிகளுக்கான தீவன பயிராகத்தான் அறிமுகமானது. குறிப்பாக தமிழகத்தில் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில்தான் முதலில் பயிரிட்டு எண்ணை எடுக்கப்பட்டு நல்லெண்ணைக்கு (Sesame oil) மாற்றாக பர்மாவிற்கு எடுத்து செல்லப்பட்டது. பின்னர் இங்கும் பயன்பாட்டிற்கு வந்தது.

பயன்கள்:


 • நிலக்கடலையை பச்சையாகவோ, அவித்தோ அல்லது வறுத்தோ உண்ணப்படுகிறது.
 • நிலக்கடலையுடன் வெள்ளம் சேர்த்து கடலை மிட்டாய் தயாரிக்கப்படுகிறது.
 • நிலக்கடலை எண்ணெய் பொதுவாக சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
 • கடலை புண்ணாக்கில் (Groundnut cake) லைசின் மற்றும் குளூட்டமைன் போன்ற அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளதோடு நார்ச் சத்து, கச்சா புரதம், மற்றும் கொழுப்பும் நிறைந்துள்ளது. எனவே கடலை புண்ணாக்கு மாடுகளுக்கு சிறந்த தீவனமாக பயன்படுகிறது.
 • கடலை புண்ணாக்கு உரமாக பயன்படுத்தப்படுகிறது.
 • நிலக்கடலையில் உள்ள புரதத்திலிருந்து அர்டில் (Ardil) என்ற செயற்கை இழை (Synthetic fibre) தயாரிக்கப்படுகிறது.
 • வேர்க்கடலையை அரைத்து வேர்க்கடலை வெண்ணெய் (Peanut butter) தயாரித்து பயன்படுத்தப்படுகிறது.
 • வேர்கடலையின் எண்ணெயிலிருந்து பெயிண்ட், வார்னிஷ், உயவு எண்ணெய் (Lubricant) பூச்சிக்கொல்லிகள், நைட்ரோகிளிசரின் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
 • நிலக்கடலையில் மாங்கனீசு சத்து அதிகமாக உள்ளதால் நாம் உண்ணும் உணவில் உள்ள கால்சியம் சத்துகள் நமது உடலுக்கு கிடைக்க இது பயன்படுகிறது.
 • நிலக்கடலையின் தோலில் ரெஸ்வரெட்ரால் உள்ளதென சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இது இதய நோய்கள் வராமல் தடுக்கவல்லது என குறிப்பிடத்தக்கது.
 • ஹைட்ரஜனேற்றிய எண்ணெய் (Hydrogenated oil) ஆனது வனஸ்பதி/ தாவர நெய் (Vegetable ghee) தயாரிக்கப் பயன்படுகிறது.
 • நிலக்கடலையில் உள்ள தாமிரம் (Copper) மற்றும் துத்தநாக (Zinc) சத்தானது தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கிறது. மேலும், நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானாது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
 • நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராகச் செயல்படுவதுடன் கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படாது. அது மட்டுமல்லாது குழந்தைப்பேறும் சிரமமின்றி உண்டாகும்.
 • நிலக்கடலையில் அதிகமாக உள்ள "போலிக் அமிலம்” (Folic acid) இனப்பெருக்கத்திற்கு உதவுகிறது.
 • உதாரணமாக, நமது ஊரில் நிலக்கடலை பயிரிடப்பட்டிருக்கும் வயலில், காய் பிடிக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால், நிலக்கடலை காய் பிடிக்கும் பருவத்திற்குப் பிறகு எலிகள் அதிகமாக குட்டி போடுவதைக் காணலாம்.
 • நிலக்கடலை எண்ணெயில் 46% நிறைவுறா கொழுப்புகள் (முதன்மையாக ஒலீயிக் அமிலம்), 32% பல்நிறைவுறா கொழுப்புகள் (Poly Unsaturated Fatty Acids) (முதன்மையாக லினோலெயிக் அமிலம்), மற்றும் 17% நிறைவுற்ற கொழுப்புகள் (Saturated Fatty Acids) (முதன்மையாக பால்மிட்டிக் அமிலம்) உள்ளன.
 • நீர் மற்றும் மைய விலக்கல் முறையை (Centrifugation method) பயன்படுத்தி நிலக்கடலையிலிருந்து பெறப்பட்ட எண்ணெயினை எதிர்காலத்தில் நீண்ட கால மனித விண்வெளி பயணங்களுக்கு பயன்படுத்த அமெரிக்க விண்வெளி ஆய்வுமையமான நாசா (NASA) பரிசீலனை செய்துவருகிறது.
 • மேலும் பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TNPSC G.K - 231 | பொது அறிவு.

 • ஒலியானது, நீரில் காற்றைவிட 5 மடங்கு வேகமாக பயணிக்கும்.

 • ஒரே ஒரு அதிர்வெண்ணெக் கொண்ட ஒலியானது, ‘தொனி’ (Tone) என்று அழைக்கப்படுகிறது.

 • பைன் மரத்தில் இருந்து ‘டர்பன்டைன்’ (Turpentine) என்னும் எண்ணெய் எடுக்கப்படுகிறது.

 • மீனின் இதயத்தில் உள்ள அறைகளின் எண்ணிக்கை - மூன்று.

 • ஆங்கில உயிர் எழுத்துக்களான ‘a, e, i, o, u’ ஆகிய ஐந்தும் இடம்பெற்ற மிகச்சிறிய வார்த்தை - Education.

 • நீருக்கு அடியில் எந்த இடத்தில் எவ்வளவு ஆழத்தில் மீன்கள் உள்ளன என்பதை அறிய உதவும் கருவி - அகோ மீட்டர்.

 • முதல் உலக வரைபடத்தை வரைந்தவர் - தாலமி.

 • விலங்குகளில் ரத்த ஓட்ட வேகம் அதிகமாக இருக்கும் உயிரினம் - ஒட்டகச்சிவிங்கி.

 • ஒரு மின்சார பல்பு, 750 முதல் 1000 மணி நேரங்கள் வரை எரியும் திறன்கொண்டது.

 • நிலவில் உள்ள மிகப்பெரிய மலை ‘லீப்னிட்ஸ்.’ இது 35 ஆயிரம் அடி உயரம் கொண்டது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Sunday, October 16, 2022

TNPSC G.K - 230 | பொதுத்தமிழ் - நான்மணிக்கடிகை.

நான்மணிக்கடிகையின் உருவம்:


 • ஆசிரியர் = விளம்பி நாகனார்
 • ஊர் =விளம்பி
 • பாடல்கள் = 2 + 104
 • பாவகை = வெண்பா

பெயர்க்காரணம்:


 • நான்கு + மணி + கடிகை = நான்மணிக்கடிகை
 • கடிகை = துண்டு, ஆபரணம், தோள்வளை. நான்கு மணிகள் பதிக்கப் பெற்ற  தோள்வளை போல் நான்கு நீதி மணிகளால் நிலைநாடாப்பட்ட பாடல்களைக் கொண்ட நூல்.
 • நான்மணிகள் முத்து பவளம் மரகதம்,மாணிக்கம்  

கடவுள் வாழ்த்து:


 • முதல் இரண்டு கடவுள் வாழ்த்து பாடலிலும் நான்கு கருத்துக்கள் உள்ளன.
 • கடவுள் வாழ்த்து திருமாலைப் பற்றியது.

பொதுவான குறிப்புகள்:


 • ஒவ்வொரு பாடலிலும் நாலு கருத்துக்கள் உள்ளன.
 • நூலில் வடமொழி கலப்பு அதிகம்.
 • இந்நூல் தொல்காப்பியர் கூறும் அம்மை என்ற வனப்பிற்கு உரியது.
 • ஜி.யு.போப் இந்நூலின் 7,100 ஆகிய இரு பாடல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார்.
 • இந்நூலின் மிகப் பிரபலமான அடி = “யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி”
 • கீழ்கணக்கு நூல்களில் 2 கடவுள் வாழ்த்து கொண்ட ஓரே நூல்
 • காலம்  நூற்றாண்டு  என டி.வி. சதாசிவ பண்டாரத்தார்  கருத்து. 
 • பழைய உரையாசிரியர்  பேராசிரியர்,  நச்சினார்கினியார் 
 • உரையாசிரியர்  பாலசுந்தரம் பிள்ளை 

முக்கிய அடிகள்:


 • யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி
 • இந்நிலத்தே மன்னுதல் வேண்டின் இசைநடுக
 • தன்னொடு செல்வது வேண்டின் அறம் செய்க
  வெல்வது வேண்டின் வெகுளிவிடல்
 • இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்
 • வளமில்லாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்
 • ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல்
 • கொண்டானிற் சிறந்த கேளிர் பிறர்இல்
 • மனைக்கு விளக்கம் மடவாள்
  மடவாளுக்கு விளக்கம் புதல்வர்
  புதல்வர்க்கு விளக்கம் கல்வி
  கல்விக்கு இலக்கம் புகழ்சால் உணர்வு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TNPSC G.K - 229 | பொதுத்தமிழ் - கைந்நிலை.

கைந்நிலையின் உருவம்: 


 • ஆசிரியர் = மாறோக்கத்து முள்ளி நாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லாங்காடனார்
 • பாடல்கள் = 60(5*12=60)
 • திணை = ஐந்து அகத்திணைகளும்
 • திணை வரிசை = குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்.
 • பாவகை = வெண்பா

பெயர்க்காரணம்: 


 • கை = ஒழுக்கம்
 • ஐந்திணை ஒழுக்க நிலை கூறும் நூல் என்னும் பொருளில் “கைந்நிலை” எனப் பெயர் பெற்றது.

வேறு பெயர் :


 • ஐந்திணை அறுபது 

பொதுவான குறிப்புகள்: 


 • இந்நூலின் சில பாடல்கள் சிதைந்து விட்டன
 • தற்போது உள்ளவை 43 வெண்பாக்களே
 • வடசொல் கலப்பு மிகுந்த நூல்
 • ஆசிரியர் பாண்டியனை “தென்னவன் கொற்கை” என்னும் தொடரால் குறிப்பிடுகிறார்
 • 18 பாடல்கள் சிதைவுடன் உள்ளது
 • உரையாசிரியர் = சங்குபுலவர்
 • வடச்சொற்கள் = பாசம், ஆசை, இரசம், கைவசம், இடபம், உத்தரம். 
 • பதிப்பித்தவர் = அனந்தராமையர்
 • .கிடைக்க பெற்றவை = குறிஞ்சி 12, பாலை 07, முல்லை 03, மருதம் 11, நெய்தல் 12.
 • மாறோகம் என்பது கொற்கையை சூழ்ந்த பகுதி 
 • பாண்டியரால் ஆதரிக்கபட்டவர் = தி. வை. சதாசிவ பட்டினத்தார்
 • காலம் = 5 ம் நூற்றாண்டு 

மேற்கோள்:


 • ஒத்த உரிமையளா ஊடற்கு இனியளாக். குற்றம் ஒரூஉம குணத்தளாக் – கற்றறிஞர்ப்
 • பேணும் தகையாளாக் கொண்கன் குறிப்பறிந்து. நாணும் தகையளாம் பெண்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TNPSC G.K - 228 | பொதுத்தமிழ் - நாலடியார்.

நாலடியாரின் உருவம்:


 • ஆசிரியர்= சமண முனிவர்கள்
 • தொகுத்தவர் = பதுமனார்
 • பாடல்கள் = 400
 • பொருள் = அறம்
 • பா வகை = வெண்பா

பெயர்க்காரணம்:


 • நான்கு அடிகளால் ஆன நானூறு பாடல்களை கொண்டதால் நாலடி நானூறு என்றும் நாலடியார் என்றும் அழைக்கப்படுகிறது

வேறு பெயர்கள்:


 • நாலடி
 • நாலடி நானூறு
 • வேளாண் வேதம்
 • திருக்குறளின் விளக்கம்
 • குட்டி திருக்குறள்

நூல் பகுப்பு:


 • இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது
 • அறத்துப்பால் = 13 அதிகாரங்கள்
 • பொருட்பால் = 24 அதிகாரங்கள்
 • இன்பத்துப்பால் = 3 அதிகாரங்கள்
 • (3 பால், 12 இயல்கள், 40 அதிகாரங்கள் )
 • அறத்துப்பால்== துறவறவியல் இல்லறவியல்
 • பொருட்பால்== நட்பியல், இன்பவியல்,துன்பவியல், பொதுவியல், பகையியல், பன்னெறிஇயல்
 • இன்பத்துப்பால்== இன்ப துன்பவியல், இன்பவியல்

நூலின் சிறப்பு:


 • முப்பெரும் அற நூல்கள் = 1) திருக்குறள் 2)நாலடியார் 3)பழமொழி நானூறு
 • இந்நூலை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார்.
 • நூலின் பெருமையை கூறும் அடிகள்
 • ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி. நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி
 • பழகு தமிழ் சொல்லருமை நாலிரண்டில்

பொதுவான குறிப்புகள்:


 • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள ஒரேதொகைநூல் இது.
 • நாலடியாரில் முதல் இயல் =துறவறவியல்
 • நூலை தொகுத்தவர் =பதுமனார்
 • நூலை முப்பாலாக பகுத்தவர் =தருமர்
 • நூலிற்கு உரை கண்டவர் =தருமர், பதுமனார்
 • முத்தரையர்பற்றி கூறுகிறது இந்நூல்
 • நாலடியாரின் உரைகளை உள்ளடக்கியது “நாலடியார் உரைவளம்”என்னும் நூல்.
 • முத்தரையர் என்பது பாண்டியர்களை பற்றியது என்பர்

முக்கிய அடிகள்:


 • கல்வி கரையில; கற்பவர் நாள்சில
 • ஆராய்ந்து அமைவுடைய கற்பவே, நீர் ஒழியப்
 • பால்உண் குருகின் தெரிந்து
 • கல்வி அழகே அழகு
 • வாய்க்கால் சிறுவிரல்போல நன்கணிய ராயினும்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TNPSC G.K - 227 | பொதுத்தமிழ் - களவழி நாற்பது.

களவழி நாற்பதின் உருவம்:


 • ஆசிரியர் = பொய்கையார்
 • பாடல் = 40
 • திணை = புறத்திணை – வாகைத்திணை
 • பாவகை = வெண்பா
 • உரையாசிரியர் = ந.மு. வேங்கடசாமி நாட்டார் 

பெயர்க்காரணம்:


 • களம் = போர்க்களம்.
 • போர்க்களம் பற்றிய நாற்பது பாடல்களைக் கொண்டதால் களவழி நாற்பது எனப் பெயர் பெற்றது.
 • களம் இருவகை ஏர்களம் பாடுதல் ஒன்று ,போர்களம் பாடுதல் இரண்டு. 
 • இதனை தொல்காப்பியம்,
ஏரோர் களவழி அன்றிக் களவழித்
தேரோர் தோன்றிய வென்றியும்
– தொல்காப்பியம்

வேறு பெயர்:


 • பரணி நூலின் தோற்றுவாய்
 • பரணி இலக்கியத்தின் வழி காட்டு
 • பரணி இலக்கியத்தின் தோன்றல்

பொதுவான குறிப்புகள்:


 • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் சார்ந்த ஒரே நூல்.
 • புறவாழ்வு போர் பற்றி  கூறுகிறது 
 • சோழன் செங்கணாணும் சேரமான் கணைக்கால் இரும்பொறையும் போரிட்ட இடம் = போர்ப்புறம்(கழுமலம்)
 • சேரமான் சிறை வைக்கப்பட்ட இடம் = குடவாயில் கோட்டம்
 • சேரமானை விடுவிப்பதற்காக பொய்கையார் களவழி நாற்பது, சோழன் மீது பாடினார்.
 • நூலிற்கு பரிசாக சேரமானை விடுதலை செய்ய வேண்டினார். சோழனும் சம்மதம் தெரிவித்தான்.
 • ஆனால் சிறையில் தன்னை தரக்குறைவாக நடுதியதால் மானம் பெரிதென எண்ணி உயிர் விட்டான்.
 • சேரமான் புறநானூற்றில் பாடிய பாடல்,
குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆளன்று என்று வாளில் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத் தீத்தணியத்
தாம்இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ்வுலகத் தானே
 • இந்நூலில் கார்த்திகைத் திருவிழா சிறப்பாக உவமிக்கப்பட்டுள்ளது.
 • களவழி நாற்பதின் நாற்பது பாடல்களும் “அட்ட களத்து” என முடிவது தொல்காப்பியர் கூறும் அம்மை என்னும் வனப்பு வகையை சேர்ந்தது.
 • அனைத்து பாடல்களும் களம் என்ற சொல் இடம்பெற்றுள்ளது
 •  அனைத்துப் பாடல்களும் போர்க்களம்  குறித்து பாடுகிறது
 • ஒரே இடத்தில் மட்டும் பெண்ணை பற்றி கூறுகிறது 
 • யானைகளின் போரிடும் முறை, வீரர்களின்  போர்ச்செயல்கள் , போரில் ஏற்படும் அழிவால் போர்களமே இரத்த ஆறாக காணபடுதல் போன்ற  போர்கள் வருணனைகள் இதில் இடம் பெற்றுள்ளன 

முக்கிய அடிகள்:


 • கடிகாவில் காற்று உற்று அறிய, வெடிபட்டு
 • வீற்றுவீற்று ஓடும் மயிலினம் போல் நாற்றிசையும்
 • கேளிர் இழந்தார் அலறுபவே, செங்கண்
 • சினமால் பொறுத்த களத்து
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TNPSC G.K - 226 | பொதுத்தமிழ் - சிறுபஞ்சமூலம்.

சிறுபஞ்சமூலத்தின் உருவம்:


 • சிறுபஞ்சமூலம் = சிறுமை +பஞ்சம் +மூலம் 
 • ஆசிரியர் = காரியாசான்
 • பாடல்கள் = கடவுள் வாழ்த்து 1, பாயிரங்கள் 2, செய்யுட்கள் 102
 • பாவகை = வெண்பா
 • உரையாசிரியர் =புன்னை வனநாத முதலியார் 

பெயர்க்காரணம்:


 • கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய வேர்கள் இணைந்து மனிதனின் நோயை குணப்பதுவது போல இந்நூல் மனிதனின் உள்ளப்பிணியை நீக்குகிறது.

பொதுவான குறிப்புகள் :


 • மருந்தின் பெயரால் பெயர் பெற்ற நூல்.
 • பஞ்சம் = ஐந்து, மூலம் = வேர்
 • ஐந்து வேர்கள் = கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி
 • சிறுபஞ்சமூலம் போன்றே பெருபஞ்சமூலம் என்ற ஒன்றும் உண்டு. அவை 1.வில்வம்,2.பெருங்குமிழ்,3.பாதிரி,4.தழுதாழை,5.வாகை என பதார்த்த குண சிந்தாமணி மற்றும்  பொருட்தொகை நிகண்டு  கூறுகிறது 
 • காரியாசனும் ஏலாதியின் ஆசிரியருமான கணிமேதாவியாரும் மதுரைத் தமிழ் ஆசிரியர் மாகாயானரின் ஒரு சாலை மாணவர்கள்.
 • இந்நூல் தொல்காப்பியர் குறிப்பிடும் “அம்மை” என்ற வனப்பிற்கு உரியது.
 • பாடல் தோறும் 5 கருத்துக்கள் கொண்டது. 
 • மாக்காரியாசான் என பாயிரம் கூறுகிறது.

மேற்கோள்:


 • நூற்கு இயைத்த சொல்லின் வனப்பே வனப்பு
 • பேதைக்கு உரைத்தாலும் செல்லாது உணர்வு
 • மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும். உகிர் வனப்பும் காதின் வனப்பும்– செயிர் தீர்ந்த பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த சொல்லின் வனப்பே வனப்பு
 • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் 
 • பகுத்துண்டு பல்லுயிர் பாதுகாக்க வேண்டும். 
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TNPSC G.K - 225 | பொதுத்தமிழ் - திரிகடுகம்.

திரிகடுகத்தின் உருவம்:


 • ஆசிரியர் = நல்லாதானர்
 • பாடல்கள் = 100 + 1
 • பாவகை = வெண்பா
 • உரையாசிரியர் = புன்னை வனநாத முதலியார் 

பெயர்க்காரணம்: 


 • சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் உடல் நோயைத்தீர்ப்பான. அதனை போன்று இந்நூலில் அமைந்துள்ள ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்களும் உள்ளந்தின் நோயைத் தீர்க்கும்.
 • திரி = மூன்று
 • கடுகம் = காரமுள்ள பொருள்

ஆசிரியர் குறிப்பு:


 • இவர் திருநெல்வேலி மாவட்டம் “திருத்து” என்னும் ஊரை சேர்ந்தவர்.
 • “செருஅடுதோள் நல்லாதன்” எனப் பாயிரம் குறிப்பிடுவதால் இவர் போர் வீரராய் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது

பொதுவான குறிப்புகள்:


 • “திரிகடுகம்=சுக்கு, மிளகு, திப்பிலி” என திவாகர நிகண்டு கூறுகிறது
 • இந்நூலின் கடவுள் வாழ்த்து திருமாலைப் பற்றி கூறுகிறது.
 • இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் “இம்மூன்றும்” அல்லது “இம்மூவர்” என்னும் சொல் வருகிறது.
 • மருந்தின் பெயரால் பெயர் பெற்ற நூல்.
 • இந்நூலில் 66 பாடகளில் நன்மை தருபவை எவை என்பது பற்றிக் கூறப்பட்டுள்ளது.
 • இந்நூலில் 34 பாடல்களில் தீமை தருபவை எவை எனக் கூறப்பட்டுள்ளது.
 • கணவன் மனைவி வாழ்க்கை பற்றியே 35 பாடல்கள் உள்ளன.
 • 300 அறக்கருத்துக்கள் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
 • பெண்கள் பற்றி கூறுவன  ஆசிரியர், அணங்குகள், விலைமாதர்,அற்பர்.

முக்கிய அடிகள்:


 • நெஞ்சம் அடங்குதல் வீடாகும்
 • வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
 • தாளாளன் என்பான் கடன்பட வாழாதான்
 • நிறை நெஞ்சம் உடையானை நல்குரவு அஞ்சும்
 • நட்பின் கொழுநனை பொய் வழங்கின் இல்லாகும்
 • கொண்டான் குறிப்பரிவாள் பொண்டாட்டி
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TNPSC G.K - 224 | பொதுத்தமிழ் - பழமொழி நானூறு.

பழமொழி நானூறின் உருவம் :


 • ஆசிரியர் = முன்றுறை அரையனார்.
 • பாடல்கள் = 400.
 • பாவகை = வெண்பா.

பெயர்க்காரணம் :


 • ஒரு கதையோ, வரலாற்று நிகழ்வோ கட்டி உரைக்கப்பட்டு பாடலின் இறுதியில் பழமொழி நீதி சுட்டப்படுவதாலும், நானூறு பாடல்களை உடையதாலும் பழமொழி நானூறு எனப் பெயர்பெற்றது.

வேறு பெயர்கள் :


 • பழமொழி.
 • சொல்வழக்கு.
 • முதுமொழி. 
 • உலக வசனம்.

ஆசிரியர் குறிப்பு :


 • முன்றுறை என்பது ஊர் பெயர் என்றும், அரையன் என்ற பட்டம் பெற்றவர் என்றும் கூறுவர் சிலர்.
 • சமயம் = சமண சமயம். 

நூல் பகுப்பு முறை :


 • இந்நூலின் பெரும் பிரிவுகள் = 5, இயல்கள் = 34.
 • பிரிவு 1 = கல்வி, ஒழுக்கம், புகழ் பற்றியது (9 இயல்கள்).
 • பிரிவு 2 = சான்றோர், நட்பின் இயல்பு பற்றியது (7  இயல்கள்).
 • பிரிவு 3 = முயற்சி, பொருள் பற்றியது (8  இயல்கள்).
 • பிரிவு 4 = அரசர், அமைச்சர், பாடல் பற்றியது (6 இயல்கள்).
 • பிரிவு 5 = இல்வாழ்க்கை, உறவினர், வீடுநெறி பற்றியது (4 இயல்கள்).

பொதுவான குறிப்புகள் :


 • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள முப்பெரும் அறநூல்கள் = திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு.
 • தொல்காப்பியர் பழமொழியை “முதுமொழி” என்கிறார்.
 • பழமொழி என்ற சொல் முதன் முதலில் அகநானூறில் வருகிறது.
 • இந்நூலை பதிப்பித்தவர் = செல்வகேசவராயசேகர முதலியார்
 • உரையாசிரியர் = திருநாராயண ஐயங்கார். 
 • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் மிகுதியாக வரலாற்று குறிப்புகளை கூறும் நூல் இதுவே.
 • பழமொழிக்கென அமைந்த முதல் தமிழ் நூல் .

இயல்கள் :


 • கல்வி,  கல்லாதார், அவையறிதல்,  அறிவுடைமை, ஒழுக்கம். 
 • இன்னா செய்யாமை,  வெகுளாமை, பெரியாரை பிழையாமை, புகழ்தலின் கூறுபாடு,  சான்றோர் இயல்பு.
 • சான்றோர் செய்கை, கீழ்மக்கள் இயல்பு, கீழ்மக்கள் செய்கை, நட்பின் இயல்பு, நட்பின் விலக்கு.
 • பிறர் இயல்பை குறிப்பால் உணர்தல், மன்னரை சேர்தொழுகல், பகைதிறம் தெரிதல்,படைவீரர், அமைச்சர்.
 • அரசியல், ஊழ், நன்றியில்  செல்வம், பொருளை பெறுதல், பொருள். 
 • பொருள், தெரிந்து தெளிதல், மறைபிறர் அறியாமை, கருமம் முடித்தல், முயற்சி.
 • இல்வாழ்க்கை, உறவினர், அறம் செய்தல், ஈகை, வீட்டுநெறி.

மேற்கோள் :


 • அணியெல்லாம் ஆடையின் பின்.
 • கடன் கொண்டும் செய்வார் கடன்.
 • கற்றலின் கேட்டலே நன்று.
 • குன்றின்மேல் இட்ட விளக்கு.
 • தனிமரம் காடாதல் இல்.
 • திங்களை நாய்க் குரைத் தற்று.
 • நுணலும் தன் வாயால் கெடும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Popular Posts