12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 2 மனித இனப்பெருக்கம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 23
கேள்வி 23 : சீம்பால் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் யாது ?
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
- குழந்தை பிறந்தவுடன் உடனடியாகச் சுரக்கும் பால், சீம்பால் எனப்படும்.
முக்கியத்துவம்
- லாக்டோஸ், புரதம், வைட்டமின் A, தாது உப்புகள் அதிக அளவில் உள்ளன.
- கொழுப்பு கிடையாது. குழந்தைகளும் எளிதில் செரிக்கக்கூடியது.
- அதிக அளவு IgA வகை எதிர்ப்பொருள்கள் உள்ளன. இது குழந்தையின் உணவுப்பாதையில் ஏற்படும் பாக்டீரியத் தொற்றை தடுப்பதற்குப் பயன்படுகிறது.
மெல்ல கற்கும் மாணவர்களுக்கான விடை :
குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் சீம்பாலில் லாக்டோஸ், புரதம், வைட்டமின் A, தாது உப்புகள் அதிகம்; கொழுப்பு இல்லை. எளிதில் செரிக்கும். அதிகமுள்ள IgA எதிர்ப்பொருள்கள் உணவுப்பாதை பாக்டீரியத் தொற்றைத் தடுக்கும்.


0 Comments