Wednesday, June 30, 2021

TNPSC CURRENT AFFAIRS JUNE 2021 | நடப்பு நிகழ்வுகள் 2021 | சமிபத்திய நிகழ்வுகள் 2021

CURRENT AFFAIRS JUNE 2021 | நடப்பு நிகழ்வுகள் 2021 | சமிபத்திய நிகழ்வுகள் 2021


❇️ ஜூன் 1: சமூக வலைத்தளங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது உள்ளிட்ட சேவைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் நடைமுறைக்கு வந்தன.


❇️ ஜூன் 1: டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தப் பிரிவில் பணியாற்ற இந்திய நடுவர் அசோக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


❇️ ஜூன் 2: கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வைப்புத் தொகை, இலவச கல்வி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.


❇️ ஜூன் 2: இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் வேற்றுருவத்துக்கு ‘கப்பா’ என்றும் இரண்டாவதாகக் கண்டறியப்பட்ட வைரஸ் வேற்றுருவத்துக்கு ‘டெல்டா’ என்றும் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.


❇️ ஜூன் 5: கரோனா காரணமாக பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.


❇️ ஜூன் 5: உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் வீராங்கனை யான ஜப்பானின் நவோமி ஒசாகா பிரெஞ்சு ஓபன் போட்டித் தொடரி லிருந்து மனநலப் பிரச்சினைகள் காரணமாக இடையிலேயே விலகினார்.


❇️ ஜூன் 5: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா பொறுப்பேற்றார்.


❇️ ஜூன் 6: ஆசிரியர் தகுதித் தேர்வின் (டெட்) சான்றிதழ் இனி வாழ்நாள் முழுவதும் செல்லும் என மத்தியக் கல்வி அமைச்சகம் அறிவித்தது.


❇️ ஜூன் 6: எட்டு அணிகள் பங்கேற்கும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 2025 முதல் மீண்டும் தொடங்கும் என்றும் 50 ஓவர் உலகக் கோப்பையில் 14 அணிகளும், டி20 உலகக் கோப்பையில் 20 அணிகளும் பங்கேற்கும் என்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தது.


❇️ ஜூன் 7: நாவல் கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியைத் தயாரிக்க சீரம் நிறுவனத்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.


❇️ ஜூன் 8: தமிழக இந்து சமய அறநிலையத் துறை அலுவலகக் கோப்புகள், கோயில் சொத்துகள் ஆகியவற்றை டிஜிட்டல் மயப்


❇️ படுத்தும் பணிகள் தொடங்கின.


❇️ ஜூன் 8: மத்திய அரசு வெளியிட்ட எத்தனால் கொள்கையில், 2025-ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனாலைக் கலந்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.


❇️ ஜூன் 9: 80 கோடி மக்களுக்கு நவம்பர் மாதம் வரை ரேஷன் கடைகளில் உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


❇️ ஜூன் 11: பிட்காயினைச் சட்டபூர்வ நாணயமாக அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்ட முதல் நாடாகியுள்ளது மத்திய அமெரிக்காவில் உள்ள எல் சால்வடார்.


❇️ ஜூன் 12: நெதர்லாந்தில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான மகளிர் 10 ஆயிரம் மீ. ஓட்டத்தை எத்தியோப் பியாவைச் சேர்ந்த லெட்சென்பெட் கிடி 29:01:03 நிமிடங்களில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார்.


❇️ ஜூன் 13: கரோனா தடுப்பூசிகளை அதிகம் வீணடித்த மாநிலங்களில் ஜார்கண்ட் முதலிடம் பெற்றது. சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் அடுத்தடுத்த இடங்களில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.


❇️ ஜூன் 14: இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி தர அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு மறுத்து விட்டது.


❇️ ஜூன் 15: சீனாவின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய இந்திய வம்சாவளி செய்தியாளர் மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்டது. ஆப்ரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலையைப் படம் பிடித்த 18 வயது இளம்பெண் டார்னெல்லா ஃபிரேசியர் புலிட்சர் விருதின் சிறப்புப் பரிசுக்குத் தேர்வானார்.


❇️ ஜூன் 15: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்க நகைகள் அனைத்துக்கும் ‘ஹால்மார்க்’ முத்திரை கட்டாயம் என்கிற புதிய விதிமுறை அமலுக்கு வந்தது.


❇️ ஜூன் 15: தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு இரண்டாம் கட்டமாக ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் தொடங்கியது.


❇️ ஜூன் 17: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.


❇️ ஜூன் 17: பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இது அவருடைய


❇️ 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம்.


❇️ ஜூன் 19: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கரோனா ஊரடங்கு ஜூன் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.


❇️ ஜூன் 18: நாட்டிலேயே முதன்முறையாக மத்திய பிரதேசத்தில் கரோனாவிலிருந்து மீண்டவருக்குப் பச்சை பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இது ‘அஸ்பெர்ஜில்லோசிஸ்’ தொற்று வகை.


❇️ ஜூன் 18: இந்தியத் தடகள ஜாம்பவான், ‘பறக்கும் சீக்கியர்’ எனப்பட்ட மில்கா சிங் (92) கரோனா தொற்றால் காலமானார்.


❇️ ஜூன் 19: நாடு முழுவதும் அனைத்து வாகனங்களுக்கும் சீரான மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் நடை முறையை அறிமுகம் செய்வதற்கான அறிவிக்கையை ஒன்றிய அரசு வெளியிட்டது.


❇️ ஜூன் 20: ஐ.நா. பொதுச்செயலாளராக அன்டோனியா குட்டெரஸ் மீண்டும் நியமிக்கப்பட்டார். அவருடைய இரண்டாம் பதவிக் காலம் 2022 ஜனவரி 1இல் தொடங்குகிறது.


❇️ ஜூன் 21: தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்த பிறகு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது.


❇️ ஜூன் 22: தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த சிறந்த பொருளாதார அறிஞர்களான எஸ்தர் டப்லோ, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன், ழீன் தெரசே, எஸ். நாராயணன் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.


❇️ ஜூன் 23: ஐசிசி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியாவை எட்டு விக்கெட் வித்தி யாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வென்றது.


❇️ ஜூன் 24: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு அனைத்து அரசியல் கட்சிகளுடன் முதன்முறையாகப் பிரதமர் மோடி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.


❇️ ஜூன் 24: ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்கிற பெருமையை நியூசிலாந்தைச் சேர்ந்த லாரல் ஹப்பார்ட் (பளுதூக்கும் பிரிவு) பெற உள்ளார்.


❇️ ஜூன் 25: கரோனா வேற்றுருவ டெல்டா பிளஸ் வகை 87 நாடுகளில் கண்டறியப் பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.


❇️ ஜூன் 25: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியி லிருந்து கான்பூரில் உள்ள சொந்த ஊருக்கு ரயிலில் சென்றார். இதன்மூலம் 2006இல் அப்துல் கலாமுக்குப் பிறகு ரயிலில் சென்ற குடியரசுத் தலைவரானார் ராம்நாத் கோவிந்த்.


❇️ ஜூன் 25: தமிழ்நாட்டிலேயே 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய கிராமமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காட்டூர் தேர்வானது.


❇️ ஜூன் 26: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைச் செயல்படுத்துவதில் நாட்டிலேயே தமிழ்நாடு மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தில் உத்தர பிரதேசம் உள்ளது.


❇️ ஜூன் 27: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா அமைச்சரானார். கடைசியாக 1980இல் திமுக அமைச்சரவையில் ரேணுகா அப்பாதுரை அமைச்சராக இருந்தார்.


❇️ ஜூன் 28: டோக்கியோ ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிக்குத் தேர்வான முதல் இந்தியர் என்னும் சிறப்பை இந்திய வீரர் சஜன் பிரகாஷ் பெற்றார்.


❇️ ஜூன் 29: சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 22 ஆண்டுகள் விளையாடிய முதல் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்னும் பெருமைக்கு உரியவரானார் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலிராஜ்.


❇️ ஜூன் 4: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனாவுக்கு சிங்கம் பலி.


❇️ ஜூன் 5: கொரோனா அச்சுறுத்தலால் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து.


❇️ ஜூன் 7: சென்னை வடபழநி ஆண்டவர் கோயிலுக்கு சொந்தமான ரூ. 300 கோடி மதிப்பு நிலம் மீட்பு.


❇️ ஜூன் 9: இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நில உரிமை ஆவணம் இணையதளத்தில் வெளியீடு.


❇️ ஜூன் 14: எதிர்க்கட்சி துணைத்தலைவராக அ.தி.மு.க.,வின் பன்னீர் செல்வம் தேர்வு.


❇️ ஜூன் 15: புதுச்சேரி சட்டசபை சபாநாயகராக செல்வம்(பா.ஜ.,) தேர்வு.


❇️ ஜூன் 16: வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனாவுக்கு ஆண் சிங்கம் பலி.


❇️ ஜூன் 18: தமிழகத்தில் கொரோனாவுக்கான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்.


❇️ ஜூன் 20: நடிகை சாந்தினியை மிரட்டிய புகாரில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூருவில் கைது.


❇️ ஜூன் 21: தமிழக சட்டசபை முதல் கூட்டம்.


❇️ ஜூன் 27 : புதுச்சேரியில் 5 அமைச்சர்கள் பதவியேற்பு.


❇️ ஜூன் 1: கொரோனா அச்சுறுத்தலால் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது.


❇️ ஜூன் 3: பீஹாரில் இன்ஜினியரிங், மருத்துவ படிப்பில் மாணவிகளுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு.


❇️ ஜூன் 3: அரசு அதிகாரிகள் ஓய்வு பெற்றவுடன் தனியார் நிறுவனத்தில் சேரக்கூடாது என ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் உத்தரவு.


❇️ ஜூன் 7: மஹாராஷ்டிராவின் புனேயில் உள்ள ரசாயன ஆலை தீ விபத்தில் 17 பேர் பலி.


❇️ ஜூன் 9: இந்திய தேர்தல் ஆணையராக அனுப் சந்திர பாண்டே நியமனம்.


❇️ ஜூன் 9: உ.பி.,யின் கான்பூரில் இரட்டை மாடி பஸ் - வேன் மோதியதில் 19 பேர் பலி.


❇️ ஜூன் 12: ராஜஸ்தானின் பிகானேரில் வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் துவக்கம்.


❇️ ஜூன் 14: இந்தியாவில் உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா கண்டுபிடிப்பு.


❇️ ஜூன் 16: அரசின் விதிகளை ஏற்காத 'டுவிட்டர்' நிறுவனத்தின் சட்டப்பாதுகாப்பு நீக்கம்.


❇️ ஜூன் 17: டில்லியில் பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு.


❇️ ஜூன் 21: ஒரே நாளில் 81 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை.


❇️ ஜூன் 23: கடன் மோசடி செய்த விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்சியின் ரூ. 9371 கோடி சொத்து அரசு வங்கிகளுக்கு மாற்றம்.


❇️ ஜூன் 28: ஒடிசாவில் 'அக்னி பிரைம்' ஏவுகணை சோதனை நடந்தது. அணுகுண்டுடன் 1000 - 2000 கி.மீ., துாரம் சென்று தாக்கும்.


❇️ ஜூன் 28: மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் பதவி ஓராண்டு நீடிப்பு.


❇️ ஜூன் 29: ம.பி.,யின் பிதாம்பூரில் ஆசியாவின் நீளமான (11.3 கி.மீ. ) அதிவேக சாலை திறப்பு.


❇️ ஜூன் 1: இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வுக்கு 'காப்பா (பி.1.617.1)' , 'டெல்டா(பி.1.617.2)', என உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டது.


❇️ ஜூன் 1: உலகின் முதன்முறையாக சீனாவில் மனிதருக்கு பறவைக்காய்ச்சல் (எச்10என்3) பாதிப்பு கண்டுபிடிப்பு.


❇️ ஜூன் 4: பிரிட்டனில் 12 - 15 வயது சிறுவர்களுக்கு பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி.


❇️ ஜூன் 6: சீனாவில் 3 - 17 வயதினருக்கு 'கொரோனாவாக்' தடுப்பூசி செலுத்த அனுமதி.


❇️ ஜூன் 7: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ரயில் மோதியதில் 63 பேர் பலி.


❇️ ஜூன் 8: ஐ.நா., சபை தலைவராக மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாகித் தேர்வு.


❇️ ஜூன் 10: ரஷ்யாவில் 24 ஆயிரம் ஆண்டு பனியில் உறைந்த 'ரோட்டிபர்' நுண்ணிய விலங்கு மீண்டும் உயிர் பெற்றது.


❇️ ஜூன் 12: லண்டனில் நடந்த 'ஜி-7 'உச்சி மாநாட்டில், ஏழை நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசி வழங்க ஒப்புதல்.


❇️ ஜூன் 13: இஸ்ரேல் நீண்ட கால (15 ஆண்டு) பிரதமரான பெஞ்சமின் நேதன்யாகு, தேர்தல் தோல்வியால் பதவி விலகினார்.


❇️ ஜூன் 17: அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவன சி.இ.ஓ., சத்யா நாதெல்லா (இந்தியா), அதன் இயக்குநர் குழு தலைவராகவும் நியமனம்.


❇️ ஜூன் 17: டியன்ஹி விண்வெளி ஆய்வு கூடத்திற்கு மூன்று வீரர்களை அனுப்பியது சீனா.


❇️ ஜூன் 18: கனடா உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த மஹ்மூத் ஜமால் நியமனம்.


❇️ ஜூன் 18: போட்ஸ்வானாவில் உலகின் மூன்றாவது பெரிய வைரம் கண்டுபிடிப்பு. எடை 1098 காரட்.


❇️ மின்னல் கட்டடம்: ஜூன் 19: சீனாவில் 28 மணி நேரம், 45 நிமிடத்தில் 10 மாடி கட்டடம் கட்டி சாதனை.


❇️ ஜூன் 19: ஈரான் அதிபராக இப்ராஹிம் ரைசி தேர்வு.


❇️ ஜூன் 19: ஐ.நா., சபையின் பொதுச்செயலராக அன்டோனியா குட்டெரஸ் மீண்டும் தேர்வு.


❇️ ஜூன் 24: சீனாவின் அடக்குமுறையால் ஹாங்காங்கின் 'ஆப்பிள் டெய்லி' பிரசுரம் நிறுத்தம்.


❇️ ஜூன் 25: திபெத் தலைநகர் லாசாவில் மின்சார புல்லட் ரயில் சேவையை சீனா துவக்கம்.


❇️ ஜூன் 27: ஜம்மு விமானப்படை தளத்தின் மீது பாக்., பயங்கரவாதிகள் முதன்முறையாக 'டிரோன்' வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் பாதிப்பு ஏற்படவில்லை.


❇️ ஜூன் 3: 'டெட்' தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என மத்திய அரசு அறிவிப்பு.


❇️ ஜூன் 13: இஸ்ரேல் பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்பு.


❇️ ஜூன் 16: தங்க நகைக்கு கட்டாயம் 'ஹால்மார்க்' முத்திரை அமல்.


❇️ ஜூன் 29: தமிழக டி.ஜி.பி., யாக சைலேந்திரபாபு நியமனம்.


No comments:

Popular Posts