சிந்து சமவெளி நாகரிகத்தின் காலம் : கி.மு. 2900 முதல் 1800 வரை.
பரவியிருந்த இடங்கள் : ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ. இது ஒரு நகர நாகரிகம்.
மொஹஞ்சதாரோ என்ற வார்த்தைக்கு இறந்தவர் மேடு என்று பொருள்.
ஹரப்பா நகரம் பாகிஸ்தானில், பஞ்சாப் மாநிலத்தில், மாண்ட்கோமரி மாவட்டத்திலுள்ளது.
எழுத்துமுறை : 'சித்திர எழுத்துமுறை'.
மக்கள் பசுபதி' என்ற ஆண் தெய்வத்தையும் 'அன்னை ' என்ற பெண் தெய்வத்தையும் வழிபட்டனர்.
உலோகங்களில் இரும்பையும், விலங்குகளில் குதிரையையும் அறிந்திருக்கவில்லை .
இந்தியாவில் லோத்தல் (குஜராத்) களிபங்கள் (ராஜஸ்தான்) போன்ற இடங்களில் இந்நாகரிக நகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
லோத்தல்' - சிந்து சமவெளி மக்களின் முக்கிய துறைமுக நகரமாகத் திகழ்ந்துள்ளது.
மக்கள் நெல் பயிரிட்டதற்கான ஆதாரம் லோத்தல்' நகரில் கிடைத்துள்ளது.
ஜர் ஜான் மார்ஷல் தாயாராம் சஹானி, R.D. பானர்ஜி - சிந்து சமவெளி நாகரிகத்தின் முக்கிய அகழ்வாய்வாளர்கள்.
அகழ்வாய்வு முடிவுகள் 1922 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன.
மொஹஞ்சதாரோவில் பெரிய குளமும் (Great bath) ஹரப்பாவில் தானியக்களஞ்சியங்களும் (Granaries) கண்டுபிடிக்கப்பட்டது.
ஹீராஸ் பாதிரியார் சிந்து சமவெளி மக்களின் எழுத்துமுறையை மூலதிராவிட எழுத்துமுறை (Proto Dravidian Script) என்கிறார்.
சிந்து சமவெளி எழுத்துக்கும் திராவிட மற்றும் தமிழ் எழுத்துகளுக்கும் உள்ள தொடர்புகளை பின்லாந்து நாட்டு அறிஞர் அஸ்கோபார்போலா மற்றும் கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் ஆகியோர் முறையே விளக்கியுள்ளனர்.
சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் சங்க இலக்கியத்துக்கும் உள்ள தொடர்புகளை இந்தியவியலாளர் ஆர்.பாலகிருஷ்ணன் தன் இடப்பெயர் ஆய்வுகள் மூலம் விளக்கியுள்ளார் ('சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் - ஆர்.பாலகிருஷ்ணன், 2016).
சிந்துவெளி எழுத்துமுறை: Boustrophedon Script வகையைச் சார்ந்த சித்திர எழுத்து முறை.
Boustrophedon Script என்பது முதல் வரி வலமிருந்து இடமாகவும், இரண்டாவது வரி இடமிருந்து வலமாகவும் அமையும் எழுத்து முறை.
இன்னும் புரிந்து கொள்ளப்படாத 600 சித்திர எழுத்துகள் உள்ளன என்பர்.
ஹீராஸ் பாதிரியார் சிந்து சமவெளி மக்களின் எழுத்து முறையை மூல திராவிட எழுத்து முறை (Proto Dravidian Script) என்கிறார்.
சிந்து சமவெளி மக்களின் எழுத்துகள் பழந்தமிழ் எழுத்துகளே என்ற கருத்தை ஐராவதம் மகாதேவன் வலியுறுத்துகிறார்.
ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த அஸ்கோ பார்போலா சிந்து சமவெளி எழுத்து முறை திராவிட எழுத்து முறை (Dravidian Script) என்ற கருத்தை விரிவாக ஆய்ந்துள்ளார்.
இந்தியவியல் ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலுள்ள 400 க்கும் மேற்பட்ட இடப்பெயர்களுக்கும் (ஊர்கள்) சங்கக் கால ஊர்ப் பெயர்களுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பைக் கண்டறிந்தார்.
கீழடி அகழாய்வு அதன் சிந்துவெளி தொடர்பு மற்றும் சிந்துவெளி நாகரிக இடப்பெயர்களின் சங்க இலக்கிய தொடர்பு ஆகியவை விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
0 Comments