Ad Code

Responsive Advertisement

GENERAL STUDIES MCQ FOR TNPSC | TRB | 701-750

GENERAL STUDIES MCQ FOR TNPSC | TRB | 701-750



1. இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?.

a. வாஸ்கோடகாமா.

b. பார்த்தலோமியோ டயஸ்.

c. அல்போன்சோ-டி-அல்புகர்க்.

d. அல்மெய்டா.

Answer: c. அல்போன்சோ-டி-அல்புகர்க்.


2. பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?.

a. நெதர்லாந்து (டச்சு).

b. போர்ச்சுகல்.

c. பிரான்ஸ்.

d. பிரிட்டன்.

Answer: b. போர்ச்சுகல்.


3. 1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டி-நோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது?.

a. பிரான்ஸ்.

b. துருக்கி.

c. நெதர்லாந்து (டச்சு).

d. பிரிட்டன்.

Answer: b. துருக்கி.


4. சர் வில்லியம் ஹாக்கின்ஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?.

a. போர்ச்சுக்கல்.

b. ஸ்பெயின்.

c. இங்கிலாந்து.

d. பிரான்ஸ்.

Answer: c. இங்கிலாந்து.


5. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை எது?.

a. வில்லியம் கோட்டை.

b. செயின்ட் ஜார்ஜ் கோட்டை.

c. ஆக்ரா கோட்டை.

d. டேவிட் கோட்டை.

Answer: b. செயின்ட் ஜார்ஜ் கோட்டை.


6. வியாபாரத்திற்காக இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர் யார்?.

a. ஆங்கிலேயர்கள்.

b. பிரெஞ்சுக்காரர்கள்.

c. டேனியர்கள்.

d. போர்ச்சுக்கீசியர்கள்.

Answer: b. பிரெஞ்சுக்காரர்கள்.


7. தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி யாருடைய வர்த்தக மையமாக இருந்தது?.

a. போர்ச்சுக்கீசியர்கள்.

b. ஆங்கிலேயர்கள்.

c. பிரெஞ்சுக்காரர்கள்.

d. டேனியர்கள்.

Answer: d. டேனியர்கள்.


8. இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம் (NAI) எங்கு அமைந்துள்ளது?.

a. சென்னை.

b. கொல்கத்தா.

c. புதுடெல்லி.

d. மும்பை.

Answer: c. புதுடெல்லி.


9. இந்தியாவில் அச்சு இயந்திரம் 1556ல் யாரால் கோவாவில் நிறுவப்பட்டது?.

a. ஆங்கிலேயர்கள்.

b. பிரெஞ்சுக்காரர்கள்.

c. போர்ச்சுகீசியர்.

d. டேனியர்கள்.

Answer: c. போர்ச்சுகீசியர்.


10. முகலாயப் பேரரசர் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வர்த்தகம் செய்ய அனுமதி அளித்தவர் யார்?.

a. பாபர்.

b. அக்பர்.

c. ஷாஜகான்.

d. ஜஹாங்கீர்.

Answer: d. ஜஹாங்கீர்.


11. பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் யாரால் நிறுவப்பட்டது?.

a. வாஸ்கோடகாமா.

b. கால்பர்ட்.

c. தாமஸ் ரோ.

d. அல்போன்சோ-டி-அல்புகர்க்.

Answer: b. கால்பர்ட்.


12. இந்தியாவில் போர்ச்சுக்கீசிய தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றிய கவர்னர் யார்?.

a. வாஸ்கோடகாமா.

b. அல்போன்சோ-டி-அல்புகர்க்.

c. நினோ-டி-குன்கா.

d. அல்மெய்டா.

Answer: c. நினோ-டி-குன்கா.


13. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் தங்கள் முதல் வர்த்தக மையத்தை அமைக்க அனுமதி அளித்த பேரரசர் யார்?.

a. அக்பர்.

b. ஜஹாங்கீர்.

c. ஷாஜகான்.

d. அவுரங்கசீப்.

Answer: b. ஜஹாங்கீர்.


14. 1757ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர் யார்?.

a. சுஜா-உத்-தெளலா.

b. சிராஜ்-உத்-தெளலா.

c. மீர்காசிம்.

d. திப்பு சுல்தான்.

Answer: b. சிராஜ்-உத்-தெளலா.


15. பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு எது?.

a. 1757.

b. 1764.

c. 1765.

d. 1775.

Answer: a. 1757.


16. பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை எது?.

a. அலகாபாத் உடன்படிக்கை.

b. கர்நாடக உடன்படிக்கை.

c. அலிநகர் உடன்படிக்கை.

d. பாரிசு உடன்படிக்கை.

Answer: a. அலகாபாத் உடன்படிக்கை.


17. பாண்டிச்சேரி உடன்படிக்கையின்படி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது எது?.

a. முதல் கர்நாடகப் போர்.

b. இரண்டாம் கர்நாடகப் போர்.

c. மூன்றாம் கர்நாடகப் போர்.

d. ஏதுமில்லை.

Answer: b. இரண்டாம் கர்நாடகப் போர்.


18. ஹைதர் அலி மைசூர் அரியணை ஏறிய ஆண்டு எது?.

a. 1756.

b. 1761.

c. 1763.

d. 1764.

Answer: b. 1761.


19. மங்களூர் உடன்படிக்கை யாருக்கிடையே கையெழுத்தானது?.

a. பிரெஞ்சுக்கார்கள் மற்றும் திப்பு சுல்தான்.

b. ஹைதர் அலி மற்றும் கள்ளிக்கோட்டை மன்னர் சாமரின்.

c. ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்.

d. திப்பு சுல்தான் மற்றும் மராத்தியர்கள்.

Answer: c. ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்.


20. மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர் யார்?.

a. இராபர்ட் கிளைவ்.

b. வாரன் ஹேஸ்டிங்ஸ்.

c. காரன்வாலிஸ்.

d. வெல்லெஸ்லி.

Answer: c. காரன்வாலிஸ்.


21. ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய்து கொண்டவர் யார்?.

a. இரண்டாம் பாஜிராவ்.

b. தௌலத்ராவ் சிந்தியா.

c. ஷாம்பாஜி போன்ஸ்லே.

d. ஷாயாஜி ராவ் கெய்க்வாட்.

Answer: a. இரண்டாம் பாஜிராவ்.


22. மராத்திய பேரரசின் கடைசி பீஷ்வா யார்?.

a. பாலாஜி விஸ்வநாத்.

b. இரண்டாம் பாஜிராவ்.

c. பாலாஜி பாஜிராவ்.

d. பாஜிராவ்.

Answer: b. இரண்டாம் பாஜிராவ்.


23. துணைப்படைத் திட்டத்தில் இணைத்துக் கொண்ட முதல் இந்திய அரசு எது?.

a. அயோத்தி.

b. ஹைதராபாத்.

c. உதய்பூர்.

d. குவாலியர்.

Answer: b. ஹைதராபாத்.


24. பிளாசிப் போருக்குபின் சிராஜ் உத் தௌலாவின் தலைமை படைத்தளபதி யார்?.

a. அலிவர்திகான்.

b. மீர்ஜாபர்.

c. மீர்காசிம்.

d. ஹெக்டர் மன்றோ.

Answer: b. மீர்ஜாபர்.


25. வாரிசு இழப்புக் கொள்கையை கொண்டு வந்தவர் யார்?.

a. இராபர்ட் கிளைவ்.

b. வாரன் ஹேஸ்டிங்ஸ்.

c. காரன்வாலிஸ் பிரபு.

d. டல்ஹௌசி பிரபு.

Answer: d. டல்ஹௌசி பிரபு.


26. திப்பு சுல்தானை இறுதியாக தோற்கடித்தவர் யார்?.

a. காரன்வாலிஸ் பிரபு.

b. வாரன் ஹேஸ்டிங்ஸ்.

c. வெல்லெஸ்லி பிரபு.

d. இராபர்ட் கிளைவ்.

Answer: c. வெல்லெஸ்லி பிரபு.


27. திப்பு சுல்தான் இறப்புக்கு பின் மைசூர் யாரிடம் ஒப்படைக்கப்பட்டது?.

a. இரண்டாம் பாஜிராவ்.

b. மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார்.

c. நிசாம்.

d. மராத்தியர்கள்.

Answer: b. மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார்.


28. கர்நாடகம் மற்றும் ஹைதராபாத் வாரிசுரிமை பிரச்சனை எந்தப் போருக்கு முக்கிய காரணமாக அமைந்தது?.

a. முதல் கர்நாடகப் போர்.

b. இரண்டாம் கர்நாடகப் போர்.

c. மூன்றாம் கர்நாடகப் போர்.

d. முதல் ஆங்கிலேய மைசூர் போர்.

Answer: b. இரண்டாம் கர்நாடகப் போர்.


29. இரண்டாம் கர்நாடகப் போரில் பிரெஞ்சு கவர்னர் டியூப்ளேவின் கூட்டுப் படைகளால் தோற்கடிக்கப்பட்ட கர்நாடக நவாப் யார்?.

a. நாசிர் ஜங்.

b. முசாபர் ஜங்.

c. சந்தா சாகிப்.

d. அன்வாருதீன்.

Answer: d. அன்வாருதீன்.


30. ஜாகீர்தாரி, மல்குஜாரி, பிஸ்வேதாரி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நிலவரி முறை எது?.

a. மகல்வாரி முறை.

b. இரயத்துவாரி முறை.

c. ஜமீன்தாரி முறை.

d. இவற்றில் எதுவுமில்லை.

Answer: c. ஜமீன்தாரி முறை.


31. வங்காளத்தில் நிரந்தர நிலவரித் திட்டம் செய்து கொள்ளப்பட்ட போது கவர்னர் ஜெனரலாக இருந்தவர் யார்?.

a. ஹேஸ்டிங்ஸ் பிரபு.

b. காரன்வாலிஸ் பிரபு.

c. வெல்லெஸ்லி பிரபு.

d. மிண்டோ பிரபு.

Answer: b. காரன்வாலிஸ் பிரபு.


32. மகல்வாரி முறையில் 'மகல்' என்றால் என்ன?.

a. வீடு.

b. நிலம்.

c. கிராமம்.

d. அரண்மனை.

Answer: c. கிராமம்.


33. மகல்வாரி முறை எந்தப் பகுதியில் செய்து கொள்ளப்பட்டது?.

a. மகாராஷ்டிரா.

b. மதராஸ்.

c. வங்காளம்.

d. பஞ்சாப்.

Answer: d. பஞ்சாப்.


34. மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?.

a. ஹேஸ்டிங்ஸ் பிரபு.

b. காரன்வாலிஸ் பிரபு.

c. வெல்லெஸ்லி பிரபு.

d. வில்லியம் பெண்டிங் பிரபு.

Answer: d. வில்லியம் பெண்டிங் பிரபு.


35. ஆங்கிலேயரால் இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்படாத பகுதி எது?.

a. பம்பாய்.

b. மதராஸ்.

c. வங்காளம்.

d. இவற்றில் எதுவுமில்லை.

Answer: c. வங்காளம்.


36. இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி யாரால் தலைமையேற்று நடத்தப்பட்டது?.

a. மகாத்மா காந்தி.

b. கேசப் சந்திரராய்.

c. திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு பிஸ்வாஸ்.

d. சர்தார் வல்லபாய் பட்டேல்.

Answer: c. திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு பிஸ்வாஸ்.


37. பர்தோலி சத்தியாகிரகம் யார் தலைமையில் நடத்தப்பட்டது?.

a. சர்தார் வல்லபாய் பட்டேல்.

b. மகாத்மா காந்தி.

c. திகம்பர் பிஸ்வாஸ்.

d. கேசப் சந்திர ராய்.

Answer: a. சர்தார் வல்லபாய் பட்டேல்.


38. மாப்ளா கலகம் எங்கு நடைபெற்றது?.

a. வங்காளம்.

b. பஞ்சாப்.

c. கேரளா.

d. மதராஸ்.

Answer: c. கேரளா.


39. சம்பரான் விவசாயச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?.

a. 1917.

b. 1918.

c. 1919.

d. 1920.

Answer: b. 1918.


40. இரயத்துவாரி முறை, யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?.

a. வாரன் ஹேஸ்டிங்ஸ்.

b. காரன்வாலிஸ் பிரபு.

c. தாமஸ் மன்றோ.

d. வில்லியம் பெண்டிங் பிரபு.

Answer: c. தாமஸ் மன்றோ.


41. பாளையக்காரர் முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு எது?.

a. 1519.

b. 1520.

c. 1529.

d. 1530.

Answer: c. 1529.


42. ஆங்கில ஆட்சியை எதிர்த்ததில் முன்னோடியானவர் யார்?.

a. பூலித்தேவன்.

b. யூசுப்கான்.

c. கட்டபொம்மன்.

d. மருது சகோதரர்கள்.

Answer: a. பூலித்தேவன்.


43. காலின் ஜாக்சன் எந்தப் பகுதியின் ஆட்சியாளர்?.

a. மதுரை.

b. திருநெல்வேலி.

c. இராமநாதபுரம்.

d. தூத்துக்குடி.

Answer: c. இராமநாதபுரம்.


44. வீரபாண்டிய கட்டபொம்மன் கீழ்க்கண்ட எந்த கோட்டையின் முன்பு தூக்கிலிடப்பட்டார்?.

a. பாஞ்சாலங்குறிச்சி.

b. சிவகங்கை.

c. திருப்பத்தூர்.

d. கயத்தாறு.

Answer: d. கயத்தாறு.


45. வேலு நாச்சியார் எப்பகுதியின் ராணி ஆவார்?.

a. நாகலாபுரம்.

b. சிவகிரி.

c. சிவகங்கை.

d. விருப்பாச்சி.

Answer: c. சிவகங்கை.


46. 'திருச்சிராப்பள்ளி பிரகடனம்' யாரால் வெளியிடப்பட்டது?.

a. மருது பாண்டியர்கள்.

b. கிருஷ்ணப்ப நாயக்கர்.

c. வேலு நாச்சியார்.

d. தீரன் சின்னமலை.

Answer: a. மருது பாண்டியர்கள்.


47. தீரன் சின்னமலையோடு தொடர்புடைய பகுதி எது?.

a. திண்டுக்கல்.

b. நாகலாபுரம்.

c. புதுக்கோட்டை.

d. ஓடாநிலை.

Answer: d. ஓடாநிலை.


48. ராணி லட்சுமிபாய் எப்பகுதியில் ஏற்பட்ட புரட்சியை வழிநடத்தினார்?.

a. மத்திய இந்தியா.

b. டெல்லி.

c. கான்பூர்.

d. பரெய்லி.

Answer: a. மத்திய இந்தியா.


49. வேலுநாச்சியார் தமிழர்களால் எவ்வாறு அறியப்பட்டார்?.

a. மங்கையர்க்கரசி.

b. வீர மங்கை.

c. சிவகங்கையின் சிங்கம்.

d. இவற்றில் எதுவுமில்லை.

Answer: b. வீர மங்கை.


50. 1857 புரட்சியை 'முதல் இந்திய சுதந்திரப்போர் 'என விவரித்தவர் யார்?.

a. மகாத்மா காந்தி.

b. வ.உ.சி.

c. வி.டி.சவார்க்கர்.

d. ஜவஹர்லால் நேரு.

Answer: c. வி.டி.சவார்க்கர்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement