51. வேலூர் புரட்சியின் போது சென்னையின் ஆளுநராக இருந்தவர் யார்?.
a. எலிஜா இம்பே.
b. சர் தாமஸ் ரோ.
c. இராபர்ட் கிளைவ்.
d. வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங்.
Answer: d. வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங்.
52. 1857 ஆம் ஆண்டு புரட்சிக்கான உடனடிக் காரணமாக இருந்தது எது?.
a. வாரிசு இழப்புக் கொள்கை.
b. துணைப்படைத் திட்டம்.
c. என்பீல்டு ரக துப்பாக்கி.
d. கிறித்துவ சமய பரப்பு குழுவினரின் மதமாற்ற நடவடிக்கைகள்.
Answer: c. என்பீல்டு ரக துப்பாக்கி.
53. வேதம் என்ற சொல் எந்த மொழியிலிருந்து வந்தது?.
a. சமஸ்கிருதம்.
b. இலத்தீன்.
c. பிராகிருதம்.
d. பாலி.
Answer: a. சமஸ்கிருதம்.
54. இந்தியாவின் மிகப் பழமையான நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் எது?.
a. உத்திரப்பிரதேசம்.
b. மகாராஷ்டிரம்.
c. பீகார்.
d. பஞ்சாப்.
Answer: c. பீகார்.
55. தட்சசீலத்தை யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய தளமாக எப்போது அறிவித்தது?.
a. 1970.
b. 1975.
c. 1980.
d. 1985.
Answer: c. 1980.
56. இந்தியாவில் நவீன கல்வி முறையைத் தொடங்கிய முதல் ஐரோப்பிய நாடு எது?.
a. இங்கிலாந்து.
b. டென்மார்க்.
c. பிரான்சு.
d. போர்ச்சுக்கல்.
Answer: d. போர்ச்சுக்கல்.
57. இந்தியாவில் கல்வி மேம்பாட்டிற்காக ஆண்டுதோறும் மானியமாக 1 இலட்சம் ரூபாய் தொகையை வழங்குவதற்கான ஏற்பாட்டினை செய்த சாசன சட்டம் எது?.
a. 1813 ஆம் ஆண்டு சாசன சட்டம்.
b. 1833 ஆம் ஆண்டு சாசன சட்டம்.
c. 1853 ஆம் ஆண்டு சாசன சட்டம்.
d. 1858 ஆம் ஆண்டுச் சட்டம்.
Answer: a. 1813 ஆம் ஆண்டு சாசன சட்டம்.
58. பல்கலைக்கழக மானியக் குழுவினை அமைக்கப் பரிந்துரைத்த குழு எது?.
a. சார்ஜண்ட் அறிக்கை 1944.
b. இராதாகிருஷ்ணன் கல்விக்குழு, 1948.
c. கோத்தாரி கல்விக்குழு, 1964.
d. தேசியக் கல்விக் கொள்கை, 1968.
Answer: b. இராதாகிருஷ்ணன் கல்விக்குழு, 1948.
59. இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?.
a. 1992.
b. 2009.
c. 1986.
d. 1968.
Answer: c. 1986.
60. வேதம் என்ற சொல்லின் பொருள் என்ன?.
a. மந்திரம்.
b. அறிவு.
c. பாடம்.
d. வேள்வி.
Answer: b. அறிவு.
61. தட்சசீல இடிபாடுகளை கண்டறிந்தவர் யார்?.
a. வில்லியம் ஜோன்ஸ்.
b. அலெக்சாண்டர் கன்னிங்காம்.
c. சர் தாமஸ் மன்றோ.
d. மெக்காலே.
Answer: b. அலெக்சாண்டர் கன்னிங்காம்.
62. டில்லியில் மதரஸாவை நிறுவிய முதல் ஆட்சியாளர் யார்?.
a. குத்புதீன் ஐபக்.
b. இல்த்துமிஷ்.
c. அலாவுதீன் கில்ஜி.
d. முகமது பின் துக்ளக்.
Answer: b. இல்த்துமிஷ்.
63. உட்ஸ் கல்வி அறிக்கை (1854) எவ்வாறு அழைக்கப்படுகிறது?.
a. இந்திய அரசியலமைப்பின் சாசனம்.
b. இந்தியக் கல்வியின் மகா சாசனம்.
c. ஆங்கிலக் கல்வியின் சாசனம்.
d. மதராஸில் மேற்கத்தியகல்வி.
Answer: b. இந்தியக் கல்வியின் மகா சாசனம்.
64. பாணினி, ஆர்யபட்டா, காத்யாயனா மற்றும் பதாஞ்சலி ஆகியோரின் எழுத்துக்கள் எதைப் பற்றி அறிய உதவுகின்றன?.
a. நவீன இந்தியாவின் வரலாறு.
b. பண்டையகால இந்தியாவின் கல்வி.
c. தொழில்துறை வளர்ச்சி.
d. இந்தியப் பெண்களின் நிலை.
Answer: b. பண்டையகால இந்தியாவின் கல்வி.
65. இந்தியாவில் ஆங்கிலக் கல்வியானது உயர் வகுப்பினருக்காக ஊக்கப்படுத்தப்பட்ட ஆண்டு எது?.
a. 1813.
b. 1835.
c. 1854.
d. 1944.
Answer: b. 1835.
66. 'பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இங்கிலாந்து' என்று கூறியவர் யார்?.
a. தாதாபாய் நௌரோஜி.
b. டவேர்னியர்.
c. எட்வர்ட் பெய்ன்ஸ்.
d. ஸ்மித்.
Answer: c. எட்வர்ட் பெய்ன்ஸ்.
67. ஆங்கிலேயர்கள் இந்தியாவின் வளங்களை சுரண்டுவதும் இந்தியாவின் செல்வங்களை பிரிட்டனுக்கு கொண்டு செல்வதுமே இந்திய மக்களின் வறுமைக்கு காரணம் என்று கூறியவர் யார்?.
a. எட்வர்ட் பெய்ன்ஸ்.
b. ஸ்மித்.
c. ஜவஹர்லால் நேரு.
d. தாதாபாய் நௌரோஜி.
Answer: d. தாதாபாய் நௌரோஜி.
68. அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?.
a. 1839.
b. 1856.
c. 1948.
d. 1991.
Answer: a. 1839.
69. சூயஸ் கால்வாய் திறப்பு எதற்கு இடையே தூரத்தை குறைத்தது?.
a. இந்தியா மற்றும் அமெரிக்கா.
b. இந்தியா மற்றும் ஜப்பான்.
c. ஐரோப்பா மற்றும் இந்தியா.
d. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா.
Answer: c. ஐரோப்பா மற்றும் இந்தியா.
70. கலப்பு பொருளாதாரத்தை கொண்டு வந்த தொழிலக கொள்கை ஆண்டு எது?.
a. 1948.
b. 1956.
c. 1991.
d. 1839.
Answer: b. 1956.
71. இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) நிறுவப்பட்ட ஆண்டு எது?.
a. 1948.
b. 1956.
c. 1985.
d. 1991.
Answer: c. 1985.
72. பாரம்பரிய இந்திய கைவினை தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்பாடு எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?.
a. தொழில்மயமாதல்.
b. தொழில்மயமழிதல்.
c. செல்வச் சுரண்டல்.
d. தொழிற்புரட்சி.
Answer: b. தொழில்மயமழிதல்.
73. புனித ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இடம் எது?.
a. பம்பாய்.
b. கடலூர்.
c. மதராஸ்.
d. கல்கத்தா.
Answer: c. மதராஸ்.
74. 1744ஆம் ஆண்டு வரை கிழக்கிந்திய கம்பெனியின் முதன்மை குடியிருப்பாக இருந்தது எது?.
a. புனித வில்லியம் கோட்டை.
b. புனித டேவிட் கோட்டை.
c. புனித ஜார்ஜ் கோட்டை.
d. இவற்றில் எதுவுமில்லை.
Answer: c. புனித ஜார்ஜ் கோட்டை.
75. இந்தியாவில் இருப்புப் பாதை போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?.
a. 1853.
b. 1857.
c. 1919.
d. 1947.
Answer: a. 1853.
76. இந்தியாவின் 'உள்ளாட்சி அமைப்பின் தந்தை' என்று அழைக்கப்படுபவர் யார்?.
a. கார்ன்வாலிஸ் பிரபு.
b. ரிப்பன் பிரபு.
c. வாரன் ஹேஸ்டிங்ஸ்.
d. டல்ஹௌசி பிரபு.
Answer: b. ரிப்பன் பிரபு.
77. 1639 இல் பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் எங்கு ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனத்தை நிறுவதற்கு அனுமதி பெற்றனர்?.
a. பம்பாய்.
b. கல்கத்தா.
c. மதராசபட்டினம்.
d. சூரத்.
Answer: c. மதராசபட்டினம்.
78. மதராஸ் அதிகாரப்பூர்வமாக சென்னை என மறுபெயரிடப்பட்ட ஆண்டு எது?.
a. 1947.
b. 1969.
c. 1996.
d. 1998.
Answer: c. 1996.
79. இந்து திருமணச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?.
a. 1856.
b. 1955.
c. 1961.
d. 1997.
Answer: b. 1955.
80. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் யார்?.
a. தர்மாம்பாள்.
b. முத்துலட்சுமி அம்மையார்.
c. மூவலூர் ராமாமிர்தம்.
d. பண்டித ரமாபாய்.
Answer: b. முத்துலட்சுமி அம்மையார்.
81. சதி எனும் நடைமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு எது?.
a. 1827.
b. 1828.
c. 1829.
d. 1830.
Answer: c. 1829.
82. பெதுன் பள்ளி J.E.D பெதுன் என்பவரால் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?.
a. 1848.
b. 1849.
c. 1850.
d. 1851.
Answer: b. 1849.
83. 1882ஆம் ஆண்டில் சிறுமிகளுக்கான ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்க எந்த ஆணையம் பரிந்துரைத்தது?.
a. வுட்ஸ்.
b. வெல்பி.
c. ஹண்டர்.
d. முட்டிமன்.
Answer: c. ஹண்டர்.
84. சாரதா குழந்தை திருமண மசோதாவானது சிறுமிகளுக்கான குறைந்தபட்ச திருமண வயதை எத்தனை என நிர்ணயித்தது?.
a. 11.
b. 12.
c. 13.
d. 14.
Answer: d. 14.
85. இந்தியாவின் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவர் யார்?.
a. ராஜாராம் மோகன்ராய்.
b. ஈ.வெ.ரா. பெரியார்.
c. தயானந்த சரஸ்வதி.
d. ஈஸ்வர சந்திர வித்யாசாகர்.
Answer: b. ஈ.வெ.ரா. பெரியார்.
86. கந்துகூரி வீரசலிங்கம் வெளியிட்ட பத்திரிக்கையின் பெயர் என்ன?.
a. சுதேசமித்திரன்.
b. விவேகவர்தினி.
c. கேசரி.
d. இவற்றில் எதுவுமில்லை.
Answer: b. விவேகவர்தினி.
87. இந்தியாவின் மிக உயர்ந்த மற்றும் இறுதியான நீதித்துறை எது?.
a. குடியரசுத் தலைவர்.
b. நாடாளுமன்றம்.
c. உச்ச நீதிமன்றம்.
d. பிரதம அமைச்சர்.
Answer: c. உச்ச நீதிமன்றம்.
88. உச்ச நீதிமன்றம் அமைந்துள்ள இடம் எது?.
a. சண்டிகர்.
b. பம்பாய்.
c. கல்கத்தா.
d. புது தில்லி.
Answer: d. புது தில்லி.
89. FIR என்பது எதைக் குறிக்கிறது?.
a. முதல் தகவல் அறிக்கை.
b. முதல் தகவல் முடிவு.
c. முதல் நிகழ்வு அறிக்கை.
d. மேற்கூறிய எவையுமில்லை.
Answer: a. முதல் தகவல் அறிக்கை.
90. குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?.
a. மாவட்ட நீதிமன்றங்கள்.
b. அமர்வு நீதிமன்றம்.
c. குடும்ப நீதிமன்றங்கள்.
d. வருவாய் நீதிமன்றங்கள்.
Answer: b. அமர்வு நீதிமன்றம்.
91. லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்கள் எதற்காக அமைக்கப்பட்டது?.
a. நீதியை நிர்வகித்தல்.
b. விரைவான நீதியை வழங்க.
c. சட்டங்களுக்கு விளக்கம் அளித்தல்.
d. இவற்றில் எதுவுமில்லை.
Answer: b. விரைவான நீதியை வழங்க.
92. புவியின் ஆழமானப் பகுதியிலிருந்து எரிமலை மூலம் வெளியேறும் உருகிய பாறைக் குழம்பு (Magma) உறைந்து உருவான பாறைகள் யாவை?.
a. படிவுப் பாறைகள்.
b. தீப்பாறைகள்.
c. உருமாறியப் பாறைகள்.
d. சுண்ணாம்புப் பாறை.
Answer: b. தீப்பாறைகள்.
93. உலக மண் நாளாக கடைபிடிக்கப்படும் நாள் எது?.
a. ஆகஸ்ட் 15.
b. ஜனவரி 12.
c. அக்டோபர் 15.
d. டிசம்பர் 5.
Answer: d. டிசம்பர் 5.
94. உயிரினப் படிமங்கள் எந்தப் பாறைகளில் காணப்படுகின்றன?.
a. படிவுப் பாறைகள்.
b. தீப்பாறைகள்.
c. உருமாறியப் பாறைகள்.
d. அடியாழப் பாறைகள்.
Answer: a. படிவுப் பாறைகள்.
95. மண்ணின் முதல்நிலை அடுக்கு எது?.
a. கரிசல் மண் (கரிம மண் அடுக்கு).
b. பாறைப்படிவு.
c. சிதைவடையாத பாறைகள்.
d. பாதியளவு சிதைவடைந்த பாறைகள்.
Answer: a. கரிசல் மண் (கரிம மண் அடுக்கு).
96. பருத்தி வளர ஏற்ற மண் எது?.
a. செம்மண்.
b. கரிசல் மண்.
c. வண்டல் மண்.
d. மலை மண்.
Answer: b. கரிசல் மண்.
97. புவியில் அதிகபட்ச வெப்பம் பதிவான இடம் எது?.
a. இந்தியா.
b. சவுதி அரேபியா.
c. கலிபோர்னியா.
d. ஆஸ்திரேலியா.
Answer: c. கலிபோர்னியா.
98. ஆண்டு முழுவதும் ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?.
a. பருவக்காலக் காற்றுகள்.
b. தலக் காற்றுகள்.
c. கோள் காற்றுகள்.
d. கடல் காற்று.
Answer: c. கோள் காற்றுகள்.
99. காலநிலை என்பது வளிமண்டலத்தின் வானிலைக் கூறுகளின் சராசரி தன்மையினை எத்தனை வருடங்களுக்கு கணக்கிட்டுக் கூறுவதாகும்?.
a. 10 வருடங்களுக்கு.
b. 25 வருடங்களுக்கு.
c. 35 வருடங்களுக்கு.
d. 50 வருடங்களுக்கு.
Answer: c. 35 வருடங்களுக்கு.
100. நீர் கடலிலிருந்து, வளிமண்டலத்திற்கும், வளிமண்டலத்திலிருந்து நிலத்திற்கும், மீண்டும் நிலத்திருந்து கடலுக்குச் செல்லும் முறைக்கு என்ன பெயர்?.
a. ஆற்றின் சுழற்சி.
b. நீரின் சுழற்சி.
c. பாறைச் சுழற்சி.
d. வாழ்க்கைச் சுழற்சி.
Answer: b. நீரின் சுழற்சி.
No comments:
Post a Comment