Ad Code

Responsive Advertisement

GENERAL STUDIES MCQ FOR TNPSC | TRB | 851-900

GENERAL STUDIES MCQ FOR TNPSC | TRB | 851-900

101. புவியில் உள்ள நன்னீரின் சதவிகிதம் எவ்வளவு?.

a. 71%.

b. 97%.

c. 2.8%.

d. 0.6%.

Answer: c. 2.8%.


102. நீர், நீராவியிலிருந்து நீராக மாறும் முறைக்கு என்ன பெயர்?.

a. ஆவி சுருங்குதல்.

b. ஆவியாதல்.

c. பதங்கமாதல்.

d. மழை.

Answer: a. ஆவி சுருங்குதல்.


103. குடிப்பதற்கு உகந்த நீரை எவ்வாறு அழைப்பர்?.

a. நிலத்தடி நீர்.

b. மேற்பரப்பு நீர்.

c. நன்னீர்.

d. ஆர்ட்டீசியன் நீர்.

Answer: c. நன்னீர்.


104. நீர், திரவநிலையிலிருந்து வாயுநிலைக்கு மாறுவதற்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?.

a. ஆவி சுருங்குதல்.

b. நீர் உட்கசிந்து வெளியிடுதல்.

c. ஆவியாதல்.

d. மழைப்பொழிவு.

Answer: c. ஆவியாதல்.


105. நீர், தாவரங்களின் இலைகளிலிருந்து நீராவியாக மாறுவதற்கு எவ்வாறு அழைக்கின்றனர்?.

a. நீர் உட்கசிந்து வெளியிடுதல்.

b. நீர் சுருங்குதல்.

c. நீராவி சுருங்குதல்.

d. பொழிவு.

Answer: a. நீர் உட்கசிந்து வெளியிடுதல்.


106. மக்கள் எதிலிருந்து எதற்கு நல்ல வேலை வாய்ப்பினைத் தேடி குடிபெயர்கின்றனர்?.

a. கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு.

b. நகர் புறத்திலிருந்து கிராமப்புறத்திற்கு.

c. மலையிலிருந்து சமவெளிக்கு.

d. சமவெளியிலிருந்து மலைப்பகுதிக்கு.

Answer: a. கிராமப்புறத்திலிருந்து நகர்புறத்திற்கு.


107. ஒரு நபர் சொந்த நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இடம் பெயர்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?.

a. குடிபுகுபவர்.

b. அகதி.

c. குடியேறுபவர்.

d. புகலிடம் தேடுபவர்.

Answer: c. குடியேறுபவர்.


108. வளம் மிகுந்த வேளாண்மை நிலம் தேடி இடம் பெயர்தல் நடைபெறுவது எது?.

a. கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு.

b. கிராமத்தில் இருந்து நகரத்திற்கு.

c. நகரத்தில் இருந்து கிராமத்திற்கு.

d. நகரத்தில் இருந்து நகரத்திற்கு.

Answer: a. கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு.


109. போரின் காரணமாக நடைபெறும் குடிபெயர்வு எதனைச் சார்ந்தது?.

a. மக்களியல்.

b. சமூக மற்றும் கலாச்சாரம்.

c. அரசியல்.

d. பொருளாதாரம்.

Answer: c. அரசியல்.


110. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணம் என்ன?.

a. உணவு தானிய உற்பத்தி.

b. கால்நடை வளர்ப்பு.

c. மீன் பிடித்தல்.

d. வேட்டையாடுதல்.

Answer: a. உணவு தானிய உற்பத்தி.


111. வேலைவாய்ப்பின்மை என்பது கிராமப்புற பகுதிகளில் செயல்படும் முக்கிய காரணி எது?.

a. இழுக்காரணி.

b. உந்து காரணி.

c. தன்னார்வ இடம்பெயர்வு.

d. பருவக்கால இடம் பெயர்வு.

Answer: b. உந்து காரணி.


112. உலகின் அதிக மக்கள் தொகைக் கொண்ட இரண்டாவது மாநகரம் எது?.

a. டோக்கியோ (ஜப்பான்).

b. புது தில்லி (இந்தியா).

c. சாங்காய் (சீனா).

d. மெக்சிகோ நகரம் (மெக்சிகோ).

Answer: b. புது தில்லி (இந்தியா).


113. மக்கள், பொருளாதார வளங்கள் அல்லது கட்டமைப்புகளை அச்சுறுத்தக்கூடிய நிகழ்வுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?.

a. இடர்.

b. பேரிடர்.

c. நில அதிர்வு.

d. சுனாமி.

Answer: a. இடர்.


114. இந்தியப் பெருங்கடலில் சுனாமி எந்த ஆண்டில் ஏற்பட்டது?.

a. 1990.

b. 2004.

c. 2005.

d. 2008.

Answer: b. 2004.


115. சுனாமி என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?.

a. ஹிந்தி.

b. பிரெஞ்சு.

c. ஜாப்பனிய.

d. ஜெர்மன்.

Answer: c. ஜாப்பனிய.


116. பருவமழை பொய்ப்பின் காரணமாக எது ஏற்படுகிறது?.

a. ஆவி சுருங்குதல்.

b. வறட்சி.

c. ஆவியாதல்.

d. மழைப்பொழிவு.

Answer: b. வறட்சி.


117. தீவிரவாதம் எதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்?.

a. இயற்கை இடர்.

b. மனித தூண்டுதலால் ஏற்படும் இடர்.

c. சமூக - இயற்கை இடர்.

d. இவற்றில் எதுவுமில்லை.

Answer: b. மனித தூண்டுதலால் ஏற்படும் இடர்.


118. செர்னோபில் அணு விபத்து எந்த ஆண்டில் நடைபெற்றது?.

a. 1980.

b. 1986.

c. 1990.

d. 2004.

Answer: b. 1986.


119. அபாயகரக் கழிவுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு எது?.

a. மருத்துவ கழிவுகள்.

b. கதிரியக்க பொருள்கள்.

c. இரசாயனங்கள்.

d. மேற்கண்ட அனைத்தும்.

Answer: d. மேற்கண்ட அனைத்தும்.


120. வறட்சியின் வகைகள் யாவை?.

a. வானிலையியல் வறட்சி.

b. நீரியியல் வறட்சி.

c. வேளாண் வறட்சி.

d. மேற்கண்ட அனைத்தும்.

Answer: d. மேற்கண்ட அனைத்தும்.


121. பட்டு நெசவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சார்ந்த தொழிலகங்கள் எந்தப் பிரிவுகளின் கீழ் வருகின்றன?.

a. சிறிய அளவிலான தொழிலகம்.

b. பெரிய அளவிலான தொழிலகம்.

c. கடல்வளம் சார்ந்த தொழிலகம்.

d. மூலதனம் சார்ந்த தொழிலகம்.

Answer: a. சிறிய அளவிலான தொழிலகம்.


122. ஆனந்த் பால் பண்ணைத் தொழிலகம் (அமுல்) எந்தத் துறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்?.

a. தனியார் துறை.

b. பொதுத்துறை.

c. கூட்டுறவுத்துறை.

d. கூட்டுத்துறை.

Answer: c. கூட்டுறவுத்துறை.


123. அரசாங்க முடிவு எடுக்கும் செயல்முறைகள் எந்தத் துறையின் கீழ்வரும் மூன்றாம் நிலை செயல்பாடாகும்?.

a. முதன்மைத் துறை.

b. இரண்டாம் நிலை.

c. நான்காம் நிலை.

d. ஐந்தாம் துறை.

Answer: d. ஐந்தாம் துறை.


124. பெரிய அளவிலான தொழிற்சாலையை நிறுவுவதற்கு தேவையான மூலதனம் எவ்வளவு?.

a. 1 கோடிக்கும் மேல்.

b. 1 கோடிக்கும் குறைவான.

c. 50 இலட்சத்திற்கும் மேல்.

d. 25 இலட்சத்திற்கும் குறைவான.

Answer: a. 1 கோடிக்கும் மேல்.


125. மூலப்பொருட்களை இயந்திரங்களின் மூலம் பயன்படுத்த கூடிய பொருட்களாக மாற்றப்படும் இடம் எது?.

a. சந்தை.

b. வங்கி.

c. தொழிற்சாலை.

d. சேமிப்புக் கிடங்கு.

Answer: c. தொழிற்சாலை.


126. ஆப்பிரிக்காவின் தென்கோடி முனை எது?.

a. கேப்பிளாங்கா.

b. அகுல்காஸ் முனை.

c. நன்னம்பிக்கை முனை.

d. கேப்டவுன்.

Answer: b. அகுல்காஸ் முனை.


127. எகிப்திற்கும் சினாய் தீபகற்பத்திற்கும் இடையில் ஒரு நிலச்சந்தி வழியாக உருவாக்கப்பட்ட செயற்கை கால்வாய் எது?.

a. பனாமா கால்வாய்.

b. அஸ்வான் கால்வாய்.

c. சூயஸ் கால்வாய்.

d. ஆல்பர்ட் கால்வாய்.

Answer: c. சூயஸ் கால்வாய்.


128. மத்திய தரைக்கடல் காலநிலையோடு தொடர்புடைய கூற்று எது?.

a. கோடைகாலம் வெப்பமாகவும் வறண்டதாகவும் குளிர்காலம் மழையுடனும் இருக்கும்.

b. குளிர்காலம் குளிர்ச்சியாகவும், வறண்டும், கோடை வெப்பமாகவும், ஈரப்பத்துடனும் இருக்கும்.

c. சராசரி மழையளவு 15 சென்டிமீட்டர்.

d. இவற்றில் எதுவுமில்லை.

Answer: a. கோடைகாலம் வெப்பமாகவும் வறண்டதாகவும் குளிர்காலம் மழையுடனும் இருக்கும்.


129. ஆஸ்திரேலியாவின் மேற்கு மற்றும் கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளை பிரிக்கும் மலைத்தொடர் எது?.

a. பெரிய பிரிப்பு மலைத்தொடர்.

b. இமய மலைத்தொடர்.

c. பிளிண்டர்கள் மலைத்தொடர்.

d. மெக்டோனெல் மலைத்தொடர்.

Answer: a. பெரிய பிரிப்பு மலைத்தொடர்.


130. கல்கூர்லி சுரங்கம் எந்தக் கனிமத்திற்கு புகழ்பெற்றது?.

a. வைரம்.

b. பிளாட்டினம்.

c. வெள்ளி.

d. தங்கம்.

Answer: d. தங்கம்.


131. புவிப்பட தயாரிப்பு முறை குறித்து கையாளும் பாடப்பிரிவு எது?.

a. மக்களியல்.

b. புவிப்படவியல்.

c. இயற்கையமைப்பு.

d. இடவியல்.

Answer: b. புவிப்படவியல்.


132. ஆழம் குறைந்த நீர்ப்பகுதிகள் எந்த வண்ணம் மூலம் குறிப்பிடப்படுகிறது?.

a. மஞ்சள்.

b. பழுப்பு.

c. வெளிர் நீலம்.

d. அடர் நீலம்.

Answer: c. வெளிர் நீலம்.


133. மக்கட்தொகை பரவலை எதன் மூலம் காண்பிக்கலாம்?.

a. கோடுகள்.

b. வண்ணங்கள்.

c. புள்ளிகள்.

d. சம அளவுக்கோடுகள்.

Answer: c. புள்ளிகள்.


134. ஒரு மாநிலத்தின் ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்?.

a. குடியரசுத் தலைவர்.

b. துணைக் குடியரசுத் தலைவர்.

c. பிரதம மந்திரி.

d. முதலமைச்சர்.

Answer: a. குடியரசுத் தலைவர்.


135. மாநில அமைச்சரவைக் குழுவின் தலைவர் யார்?.

a. ஆளுநர்.

b. முதலமைச்சர்.

c. சபாநாயகர்.

d. உள்துறை அமைச்சர்.

Answer: b. முதலமைச்சர்.


136. உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது என்ன?.

a. 62.

b. 64.

c. 65.

d. 58.

Answer: a. 62.


137. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்தப் பகுதி மற்றும் பிரிவுகள் குடியுரிமையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன?.

a. பகுதி II பிரிவு 5 - 11.

b. பகுதி II பிரிவு 12 - 35.

c. பகுதி III பிரிவு 5 - 11.

d. பகுதி III பிரிவு 12 - 35.

Answer: a. பகுதி II பிரிவு 5 - 11.


138. இந்தியாவின் முதல் குடிமகன் யார்?.

a. பிரதமர்.

b. குடியரசுத் தலைவர்.

c. முதலமைச்சர்.

d. இந்திய தலைமை நீதிபதி.

Answer: b. குடியரசுத் தலைவர்.


139. சமயச்சார்பின்மை என்பது எதைக் குறிக்கிறது?.

a. அரசு அனைத்து சமயத்திற்கும் எதிரானது.

b. அரசு ஒரே ஒரு சமயத்தை மட்டும் ஏற்றுக் கொள்கிறது.

c. எந்த சமயத்தைச் சார்ந்த குடிமகனும் சகிப்புத்தன்மையுடன் அமைதியாக இணக்கமாக வாழ்தல்.

d. இவற்றுள் எதுவுமில்லை.

Answer: c. எந்த சமயத்தைச் சார்ந்த குடிமகனும் சகிப்புத்தன்மையுடன் அமைதியாக இணக்கமாக வாழ்தல்.


140. இந்திய அரசியலமைப்பின் முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு எது?.

a. 1951.

b. 1976.

c. 1974.

d. 1967.

Answer: b. 1976.


141. அரசியலமைப்பின் பிரிவு 28 எந்த வகையான கல்வியை அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் தடை செய்துள்ளது?.

a. சமய போதனைகள்.

b. நீதி நெறிக்கல்வி.

c. உடற்கல்வி.

d. இவற்றுள் எதுவுமில்லை.

Answer: a. சமய போதனைகள்.


142. தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு எது?.

a. 1990.

b. 1993.

c. 1978.

d. 1979.

Answer: b. 1993.


143. உலக மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது?.

a. டிசம்பர் 9.

b. டிசம்பர் 10.

c. டிசம்பர் 11.

d. டிசம்பர் 12.

Answer: b. டிசம்பர் 10.


144. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுபவர் யார்?.

a. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி.

b. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.

c. குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஏதேனும் ஒருவர்.

d. ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி.

Answer: b. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.


145. சாலை பாதுகாப்பு வாரம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் மாதம் எது?.

a. டிசம்பர்.

b. ஜனவரி.

c. மார்ச்.

d. மே.

Answer: b. ஜனவரி.


146. அவசர காலத்தில், அவசர சிகிச்சை ஊர்தி சேவைக்காக அழைக்க வேண்டிய எண் என்ன?.

a. 108.

b. 100.

c. 106.

d. 101.

Answer: a. 108.


147. சேது பாரதம் திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு எது?.

a. 2014.

b. 2015.

c. 2016.

d. 2017.

Answer: c. 2016.


148. இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி யார்?.

a. குடியரசுத் தலைவர்.

b. பிரதம அமைச்சர்.

c. ஆளுநர்.

d. முதலமைச்சர்.

Answer: a. குடியரசுத் தலைவர்.


149. இந்திய கடலோரக் காவல்படை நிறுவப்பட்ட ஆண்டு எது?.

a. 1976.

b. 1977.

c. 1978.

d. 1979.

Answer: c. 1978.


150. அணிசேராமை என்ற சொல்லை உருவாக்கியவர் யார்?.

a. ஜவஹர்லால் நேரு.

b. டிட்டோ.

c. வி. கே.கிருஷ்ணமேனன்.

d. நாசர்.

Answer: c. வி. கே.கிருஷ்ணமேனன்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement