TNPSC TRB TET 6 ஆம் வகுப்பு அறிவியல் 100 வினா-விடை | Science Part-6
அறிவியல் பொது அறிவு வினா-விடைகள்
அளவீடுகள் மற்றும் இயக்கம்
- பூமியிலும் நிலவிலும் மாறாதது எது? விடை: நிறை (பூமியை விட நிலவில் ஈர்ப்பு விசை குறைவு என்றாலும்).
- எடைகள் மற்றும் அளவீடுகளுக்கான பிளாட்டினம்-இரிடியம் உலோகக் கலவையிலான படித்தர மீட்டர் கம்பி எங்கு வைக்கப்பட்டுள்ளது? விடை: பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில்.
- 1 கிலோகிராம் எடையைக் குறிக்கும் பிளாட்டினம் - இரிடியம் உலோகத் தண்டு வைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் நாட்டின் இடத்தின் பெயர் என்ன? விடை: செவ்வெரஸ்.
- முன்னோக்கிச் சென்றுகொண்டு தனது பாதையின் திசையைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கும் பொருளின் இயக்கம் எது? விடை: வளைவுப்பாதை இயக்கம்.
- ஒரு குறிப்பிட்ட காலஇடைவெளியில் முன்னும் பின்னுமாகவோ அல்லது இடம் வலமாகவோ மாறி மாறி நகரும் பொருளின் இயக்கம் எது? விடை: அலைவு இயக்கம்.
- தற்சுழற்சி இயக்கம் என்பது எதனை மையமாகக் கொண்டு சுழலும் இயக்கம் ஆகும்? விடை: ஒரு அச்சினை மையமாகக் கொண்டு.
- ரோபாட் என்ற வார்த்தை செக்கோஸ்லோவியா மொழியின் எந்த வார்த்தையிலிருந்து உருவானது? விடை: ரோபாட்டா.
- திண்மப் பொருள்களில் துகள்கள் எவ்வாறு அமைந்திருக்கும்? விடை: மிக நெருக்கமாக அமைந்திருக்கும் (இடைவெளி மிகவும் குறைவு).
- திரவம் அது உள்ள கொள்கலனின் வடிவத்தைப் பெற காரணம் என்ன? விடை: திரவத்திற்கு குறிப்பிட்ட வடிவமோ பருமனோ கிடையாது, துகள்கள் எளிதில் நகரும்.
- போஸ்- ஐன்ஸ்ட்டீன் சுருக்கம் எந்த வகையான தட்பவெப்ப நிலையில் காணப்படுகிறது? விடை: மிகக்குறைவான தட்பவெட்ப நிலையில்.
- 1925 ல் கணிக்கப்பட்டு, 1995 ல் உறுதி செய்யப்பட்ட பருப்பொருளின் ஐந்தாம் நிலை எது? விடை: போஸ்- ஐன்ஸ்ட்டீன் சுருக்கம்.
- விக்டோரியா அமேசோனிக்கா தாவரத்தின் இலைகள் எவ்வளவு நீளம் வரை வளரக்கூடியவை? விடை: மூன்று விட்டம் வரையில்.
- விதை அமைந்திருக்கும் அடிப்படையில் தாவரங்கள் எவ்வாறு பிரிக்கப்படுகின்றன? விடை: ஆஞ்சியோஸ்பெர்ம்கள் மற்றும் ஜிம்னோஸ்பெர்ம்கள்.
- மூடிய விதைத் தாவரங்களுக்கு வழங்கப்படும் அறிவியல் பெயர் என்ன? விடை: ஆஞ்சியோஸ்பெர்ம்கள்.
- 470 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நிலவாழ் தாவரங்கள் எவை? விடை: மாஸ்கள் மற்றும் லிவர்வோர்ட்ஸ்கள்.
- வன்கட்டைகள் (Hardwoods) எவ்வகைத் தாவரங்களில் இருந்து பெறப்படுகின்றன? விடை: பூக்கும் தாவரங்களான ஆஞ்சியோஸ்பெர்ம் வகை தாவரங்களிலிருந்து (எ.கா: தேக்கு, பலா).
- மூட்டு முடக்குவாதத்திற்கான மருந்தினைக் கண்டறியப் பயன்பட்ட தாவரம் எது? விடை: பாலக்கீரை.
- நைல் நதியின் மொத்த நீளம் என்ன? விடை: 6,650 கி.மீ.
- இந்தியாவின் மிக நீளமான நதியான கங்கையின் நீளம் என்ன? விடை: 2,525 கி.மீ.
- வளிமண்டலம் பூமியிலிருந்து சுமார் எத்தனை கி.மீ. தொலைவிற்கு மேல் பரந்து விரிந்துள்ளது? விடை: 800 கி.மீ.
- அடிவளி மண்டலம் (Troposphere) புவி மேற்பரப்பிலிருந்து எவ்வளவு உயரம் வரை பரவியுள்ளது? விடை: 16 கி.மீ.
- வளிமண்டலத்தின் எந்த அடுக்கில் ஓசோன் படலம் காணப்படுகிறது? விடை: அடுக்குவளி மண்டலம் (Stratosphere).
- காற்றில் உள்ள ஆர்கான், நீராவி மற்றும் பிற வாயுக்களின் சதவீதம் எவ்வளவு? விடை: 1%.
- நன்னீரில் நிலத்தடி நீரின் சதவீதம் எவ்வளவு? விடை: 30.1%.
- பூமியின் மொத்த மேற்பரப்பு நன்னீரில் (0.3%) ஏரிகளின் பங்கு எவ்வளவு? விடை: 87%.
- உவர்ப்பு நீரில் அதிகபட்சமாக எவ்வளவு சதவீதம் வரை உப்புகள் கரைந்திருக்கும்? விடை: 3% வரையில்.
- கடல் நீரில் கலந்துள்ள முக்கிய உப்புகள் யாவை? விடை: சோடியம் குளோரைடு, மெக்னீசியம் குளோரைடு மற்றும் கால்சியம் குளோரைடு.
- ஒரு காலன் (Gallon) என்பது எத்தனை லிட்டருக்குச் சமம்? விடை: 3.785 லிட்டர்.
- நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவினை அளக்கப் பயன்படும் அலகு எது? விடை: TMC/Feet.
- அமீபாவில் கழிவு நீக்கம் எதன் மூலம் நடைபெறுகிறது? விடை: சுருங்கும் நுண் குமிழ்கள்.
- பாரமீசியம் இடப்பெயர்ச்சி செய்யப் பயன்படுத்தும் உறுப்பு எது? விடை: குறுஇழைகள்.
- யூக்ளினா இடப்பெயர்ச்சி செய்யப் பயன்படுத்தும் உறுப்பு எது? விடை: கசையிழையின் மூலம்.
- ஜீராங் பறவைகள் பூங்காவில் பென்குவின் பறவைகள் எந்த வெப்பநிலையில் பராமரிக்கப்படுகின்றன? விடை: 0°C அல்லது அதற்கும் குறைவான வெப்பநிலையில்.
- முருங்கை இலையில் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பானாக செயல்படும் வைட்டமின்கள் யாவை? விடை: வைட்டமின் - A மற்றும் C.
- முருங்கை இலையில் உள்ள தாது உப்புகள் யாவை? விடை: பொட்டாசியம், கால்சியம், இரும்புச் சத்து.
- குவாஷியோர்கர் நோயின் முக்கிய அறிகுறிகள் யாவை? விடை: வளர்ச்சி குறைபாடு, முகம் கால்களில் வீக்கம், மூளை வளர்ச்சி குறைபாடு மற்றும் வயிற்றுப்போக்கு.
- மராஸ்மஸ் நோயின் முக்கிய அறிகுறி என்ன? விடை: எலும்பின் மீது தோல் மூடியுள்ளது போன்ற நிலை மற்றும் மெதுவான உடல் வளர்ச்சி.
- குழந்தைகளுக்கு அயோடின் குறைபாட்டால் ஏற்படும் நோய் எது? விடை: கிரிட்டினிசம்.
- வெப்பநிலையின் SI அலகு மற்றும் பிற அலகுகள் யாவை? விடை: SI அலகு கெல்வின், பிற அலகுகள் செல்சியஸ், ஃபாரன்ஹீட்.
- ஒரு கிராம் நீரின் வெப்பநிலையை ஒரு டிகிரி சென்டிகிரேட் உயர்த்தப்பயன்படும் வெப்பத்தின் அளவு என்ன? விடை: ஒரு கலோரி.
- பொருளை வெப்பப்படுத்தும் போது பருமனில் ஏற்படும் அதிகரிப்பின் பெயர் என்ன? விடை: பருமவிரிவு.
- ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் போரோசிலிகேட் கண்ணாடி வெப்பப்படுத்தும்போது ஏன் உடைவதில்லை? விடை: அவை வெப்பத்தினால் மிகமிகக் குறைவாகவே விரிவடைகின்றன.
- 1922-ல் காற்றின் வெப்பநிலை 59°C எனக் கணிக்கப்பட்ட நாடு எது? விடை: ஆப்பிரிக்காவிலுள்ள லிபியா.
- திருவள்ளுர் மாவட்டத்தில் அனல்மின் நிலையம் அமைந்துள்ள இடம் எது? விடை: எண்ணுர்.
- திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்மின் நிலையம் எங்கு அமைந்துள்ளது? விடை: பாபநாசம்.
- திருநெல்வேலி மாவட்டத்தில் காற்றாலைகள் எங்கு அமைந்துள்ளன? விடை: கயத்தாறு.
- மின் உற்பத்தி நிலையங்களில் மிகப்பெரிய சுழலிகள் மூலம் எந்த ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது? விடை: இயக்க ஆற்றல்.
- துணை மின்கலன்களுக்கு எடுத்துக்காட்டுகள் யாவை? விடை: கைப்பேசிகள், மடிக்கணினிகளில் பயன்படுத்தப்படும் மின்கலன்கள்.
- அம்மீட்டர் கருவி ஒரு மின்சுற்றில் எவ்வாறு இணைக்கப்பட வேண்டும்? விடை: தொடரிணைப்பில்.
- மின்காந்த தொடர்வண்டிகள் தற்போது எந்தெந்த நாடுகளில் நடைமுறையில் உள்ளன? விடை: சீனா, ஜப்பான், தென்கொரியா.
- தாவரக் கழிவுகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதற்கு ஒரு எடுத்துக்காட்டு தருக. விடை: சர்க்கரை ஆலை கழிவுகள்.
- ஒரு தற்காலிக மாற்றத்திற்கு (இயற்பியல் மாற்றத்திற்கு) உதாரணம் தருக. விடை: பனிக்கட்டி உருகுதல், உப்பு அல்லது சர்க்கரை கரைசலாக்குதல்.
- வெள்ளி ஆபரணங்கள் கருமையாதல் என்பது எவ்வகை மாற்றத்திற்கு உதாரணம்? விடை: வேதியியல் மாற்றம்.
- ஜோசப் பிரிஸ்ட்லி கண்டறிந்த நிறமற்ற மற்றும் அதிக வினைதிறன் கொண்ட வாயு எது? விடை: ஆக்சிஜன்.
- நைட்ரஜனைக் கண்டறிந்து பெயரிட்ட டேனியல் ரூதர்ஃபோர்டு எந்த நாட்டைச் சேர்ந்தவர்? விடை: ஸ்காட்லாந்து.
- தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் போது கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் நீருடன் எதனைப் பயன்படுத்துகின்றன? விடை: சூரிய ஒளி மற்றும் பச்சையம்.
- உலர்பனிக்கட்டி என்பது என்ன? விடை: -57°C க்கு குளிர்விக்கப்பட்டு நேரடியாக திட நிலைக்கு மாறிய கார்பன்டை ஆக்சைடு.
- செயற்கை மழை பொழிய வைத்தலில் பயன்படும் வேதிப்பொருள் எது? விடை: உலர்பனிக்கட்டிகள்.
- வெங்காயத்தினை நறுக்கும் போது கண்களில் கண்ணீர் வரக் காரணமான வேதிப்பொருள் எது? விடை: புரோப்பேன் தயால் S-ஆக்சைடு.
- நீரின் மூலக்கூறு வாய்ப்பாடு (H2O) எவற்றைக் கொண்டுள்ளது? விடை: இரு ஹைட்ரஜன் அணுக்கள் மற்றும் ஓர் ஆக்ஸிஜன் அணு.
- ராபர்ட் ஹூக் எந்த ஆண்டு 'மைக்ரோகிராபியா' என்ற நூலினை வெளியிட்டார்? விடை: 1665 ஆம் ஆண்டு.
- லத்தீன் மொழியில் 'செல்லுலா' என்பதன் பொருள் என்ன? விடை: சிறிய அறை.
- புரோகேரியாட்டிக் செல்களின் உட்கரு எவ்வாறு அழைக்கப்படுகிறது? விடை: நியூக்ளியாய்டு.
- புரோகேரியாட்டிக் செல்களின் விட்டம் தோராயமாக எவ்வளவு இருக்கும்? விடை: 0.003 மைக்ரோமீட்டர் முதல் 20 மைக்ரோமீட்டர் வரை.
- விலங்கு செல்லில் சென்டிரியோல்கள் காணப்படுமா? விடை: ஆம், விலங்கு செல்லில் சென்டிரியோல்கள் உள்ளன.
- செல்லில் உள்ள நீர் அல்லது ஜெல்லி போன்ற நகரும் பொருளின் பெயர் என்ன? விடை: சைட்டோபிளாசம்.
- செல்லில் உணவு, நீர் மற்றும் வேதிப்பொருள்களைச் சேமிக்கும் பகுதி எது? விடை: நுண்குமிழ்கள்.
- நியூக்ளியஸின் உள்ளேயும் வெளியேயும் பொருள்களை அனுப்பும் 'உட்கரு கதவு' எது? விடை: உட்கரு உறை (நியூக்ளியஸ் உறை).
- எலும்பு மண்டலம் எத்தனை பிரிவுகளைக் கொண்டது மற்றும் அவை யாவை? விடை: இரண்டு பிரிவுகள் (அச்சுச் சட்டகம் மற்றும் இணையுறுப்புச் சட்டகம்).
- மனித உடலின் விலா எலும்புக்கூடு எத்தனை இணைகளைக் கொண்டது? விடை: 12 இணைகள்.
- நமது முன்னங்கையை தூக்கி உயர்த்தும்போது சுருங்கி சிறியதாகும் தசை எது? விடை: இரு தலைத்தசை.
- நமது முன்னங்கையை தூக்கி உயர்த்தும்போது விரிந்து கையை மேலே உயர்த்த உதவும் தசை எது? விடை: முத்தலை தசை.
- கட்டுப்படாத இயங்கு தசைகள் (மென்தசைகள்) உடலின் எந்தெந்த பகுதிகளில் காணப்படுகின்றன? விடை: உணவுக்குழல், சிறுநீர்ப்பை, தமனிகள் மற்றும் பிற உள்ளுறுப்புக்களின் சுவர்களில்.
- செரிமான மண்டலத்தில் உள்ள சிறுகுடலின் தோராயமான நீளம் என்ன? விடை: சுமார் 6 மீட்டர்.
- உமிழ்நீரில் உள்ள எந்த நொதி ஸ்டார்ச்சினை சிதைக்கிறது? விடை: அமைலேஸ் நொதி.
- இரைப்பை நொதியானது எவற்றைக் கொண்டுள்ளது? விடை: கோழை நொதிகள் மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம்.
- சுவாசப்பாதைக்குள் உணவு செல்வதைத் தடுக்கும் அமைப்பு எது? விடை: குரல்வளை மூடி (எப்பிகிளாட்டிஸ்).
- நுரையீரல்களைச் சுற்றியுள்ள இரு அடுக்குகளைக் கொண்ட பாதுகாப்பு படலத்தின் பெயர் என்ன? விடை: ப்ளூரா (Pleura).
- மனிதனின் இதயம் எவ்வகை உறையினால் மூடப்பட்டுள்ளது? விடை: இரு சுவர்களைக் கொண்ட பெரிகார்டியம் உறையினால்.
- சுத்த இரத்தத்தினைக் கடத்தும் தமனிகளில் விதிவிலக்காக அசுத்த இரத்தத்தைக் கடத்துவது எது? விடை: நுரையீரல் தமனிகள்.
- இரத்த சிகப்பு அணுக்கள் (RBC) எங்கு உற்பத்தியாகின்றன? விடை: எலும்பு மஞ்சையில்.
- மனித மூளையைப் பாதுகாக்கும் மூன்று மூளை உறைகளின் (Meaninges) முக்கிய பணி என்ன? விடை: மூளையை திசுக்களாலான சவ்வுகளால் சூழப்பட்டு பாதுகாப்பது.
- பிட்யூட்டரி, தைராய்டு, அட்ரினல், கணையம் ஆகியவை எவ்வகை சுரப்பிகளுக்கு எடுத்துக்காட்டுகள்? விடை: நாளமில்லா சுரப்பிகள்.
- சிறுநீரகத்தின் செயல் அடிப்படை அலகுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? விடை: நெஃப்ரான்கள்.
- மனித உள்காதில் உள்ள மிகச்சிறிய எலும்பான அங்கவடி (Stapes) எலும்பின் நீளம் என்ன? விடை: 2.8 மில்லி மீட்டர்.
- குழந்தைகள் பிறக்கும் பொழுது தோராயமாக எத்தனை எலும்புகளுடன் பிறக்கின்றன? விடை: 300க்கும் அதிகமான எலும்புகள்.
- சூரிய ஒளியைப் பயன்படுத்தி வைட்டமின்-D ஐ உற்பத்தி செய்யும் உறுப்பு எது? விடை: தோல்.
- மனிதக் கண்ணின் மூன்று முக்கியப் பகுதிகள் யாவை? விடை: கார்னியா, ஐரிஸ் மற்றும் கண்மணி (பியூப்பில்).
- கரிம உரங்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக. விடை: மண்புழு உரம், தொழு உரம்.
- யூரியா, சூப்பர் பாஸ்பேட், அம்மோனியம் சல்பேட் மற்றும் பொட்டாசியம் நைட்ரேட் ஆகியவை எவ்வகை உரங்கள்? விடை: கனிம உரங்கள்.
- சிமெண்ட் தயாரிக்கப் பயன்படும் தாது உப்புக்கள் யாவை? விடை: சுண்ணாம்புக்கல், களிமண் மற்றும் ஜிப்சம்.
- கற்காரை (Concrete) தயாரிப்பில் பயன்படும் மூலப்பொருள்கள் யாவை? விடை: சிமெண்ட் + மணல் + ஜல்லிக்கற்கள் + நீர்.
- வலுவூட்டப்பட்ட காரையில் (RCC) கூடுதலாகச் சேர்க்கப்படும் பொருள் எது? விடை: இரும்பு கம்பிகள்.
- கால்சியம் சல்பேட் டை ஹைட்ரேட் என்பது எதன் வேதிப்பெயர்? விடை: ஜிப்சம் (CaSO4.2H2O).
- மனித தசை மற்றும் நரம்பு மண்டலத்தை சீராக்கவும், தோல் நோய்களைத் தீர்க்கும் களிம்புகளிலும் பயன்படும் உப்பு எது? விடை: எப்சம்.
- பாரிஸ் சாந்துவின் மூலக்கூறு வாய்ப்பாடு என்ன? விடை: CaSO4. 1/2H2O.
- குறைந்த அடர்வுடைய பீனால் கரைசல் எதற்குப் பயன்படுகிறது? விடை: வாய்கொப்பளிப்பானாகவும், கிருமிநாசினியாகவும் வீடுகளில் பயன்படுகிறது.
- திடக்கழிவு மேலாண்மையில் (SWM) 3R என்பதன் விரிவாக்கம் என்ன? விடை: பயன்பாட்டைக் குறைத்தல் (Reduce), மீண்டும் பயன்படுத்துதல் (Reuse), மறுசுழற்சி (Recycle).
- நீலப் பச்சைப்பாசி, பாக்டீரியா சூடோமோனாஸ் ஆகியவை வளிமண்டலத்தில் உள்ள எதனை மண்ணில் நிலை நிறுத்துகின்றன? விடை: வளிமண்டல நைட்ரஜனை.
- உலக உணவு தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது? விடை: அக்டோபர்- 16.


0 Comments