TNPSC TRB TET 9 ஆம் வகுப்பு அறிவியல் 100 வினா-விடை | Science Part-7
அறிவியல் பொது அறிவு வினாக்கள் மற்றும் விடைகள்
அலகுகள் மற்றும் அளவீடுகள்
- FPS அலகு முறையில் நீளத்தின் அலகு: அடி.
- MKS அலகு முறையில் நீளத்தின் அலகு: மீட்டர்.
- CGS அலகு முறையில் காலத்தின் அலகு: வினாடி.
- அடிப்படை அலகான பொருளின் அளவின் அலகு: மோல்.
- ஒளிச்செறிவின் அலகு கேண்டிலா என்பதன் குறியீடு: cd.
- ஒரு வானியல் அலகு (1 AU) என்பதன் மதிப்பு: 1.496 x 10¹¹ மீ.
- நிலவில் ஈர்ப்பு விசையானது பூமியின் ஈர்ப்பு விசையில் உள்ள பங்கு: 1/6 மடங்கு.
- நிலவில் 70 கிலோகிராம் நிறை கொண்ட மனிதனின் நிறை: 70 கிலோகிராம்.
- எடையின் SI அலகு: நியூட்டன்.
- முடுக்கம் என்பது: வெக்டர் அளவு (திசையளவுரு).
- ஈர்ப்பு விசை, உராய்வு விசை, காந்த விசை ஆகியவை வட்டப் பாதையில் செயல்படக்கூடிய விசை: மையநோக்கு விசை.
- ஒரு பாஸ்கல் (Pa) என்பது எதற்குச் சமம்: 1 Nm⁻².
- வளிமண்டல அழுத்தத்தை அளக்கப் பயன்படும் காற்றழுத்தமானியை முதன்முதலில் உருவாக்கியவர்: டாரிசெல்லி.
- வாகனங்களின் டயர் அழுத்தம் எந்த அலகில் அளவிடப்படுகிறது: psi.
- ஒப்படர்த்தியை அளக்கப் பயன்படும் பிக்நோமீட்டரின் மற்றொரு பெயர்: அடர்த்திக் குடுவை.
- பாலின் தூய்மையைக் கண்டறியப் பயன்படும் பால்மானி இயங்கும் தத்துவம்: பாலின் தன்னடர்த்தி தத்துவம்.
- ஆர்க்கிமிடிஸ் தத்துவம் எந்த விதியின் விளைவாக உருவானது: பாஸ்கல் விதி.
- ஓர் எலக்ட்ரானின் மின்னூட்ட மதிப்பு: 1.6 x 10⁻¹⁹ C.
- 1 ஆம்பியர் என்பது எதற்குச் சமம்: 1 கூலூம் / 1 வினாடி.
- மின்கருவியின் மின்னழுத்த வேறுபாட்டை அளவிட வோல்ட்மீட்டரை மின்சுற்றில் இணைக்கும் முறை: பக்க இணைப்பாக.
- மனித உடல் இயல்பிலேயே எவ்வகையான கடத்தி: மின்னோட்டத்தைக் கடத்தும் நற்கடத்தி.
- மின்னோட்டத்தின் காந்த விளைவினைக் கண்டறிந்தவர்: ஹான்ஸ் கிறிஸ்டியன் அயர்ஸ்டெட்.
- காந்தப்புலத்தில் வைக்கப்பட்ட கடத்தியில் உருவாகும் விசையைக் கண்டறிந்தவர்: H.A. லாரன்ஸ்.
- ஃபிளமிங்கின் வலது கை விதி எவ்வாறு அழைக்கப்படுகிறது: மின்னியற்றி விதி.
- குறைந்த மின்னழுத்தத்தை உயர் மின்னழுத்தமாக மாற்றுவதற்குப் பயன்படும் கருவி: மின்மாற்றி.
- காந்த ஒத்ததிர்வு தோற்றுருவாக்கல் (MRI) உபகரணங்களில் பயன்படுவது: மின்காந்தப் புலங்கள்.
- எதிரொளிப்புக்குப் பின் கதிர்கள் உண்மையாகவே சந்தித்தால் உருவாகும் பிம்பம்: மெய் பிம்பம்.
- மாய பிம்பத்தைத் திரையில் வீழ்த்த: முடியாது.
- அங்காடிகளில் ஆளில்லாப் பகுதிகளைக் கண்காணிக்கப் பயன்படும் ஆடி: குவியாடி.
- ஒளியின் திசைவேகத்தை முதன்முதலாக பூமியில் கணக்கிட்டவர்: அர்மண்ட் ஃபிஷே.
- இயற்கையில் முழு அக எதிரொளிப்பிற்குச் சிறந்த எடுத்துக்காட்டு: கானல் நீர்.
- இழை ஒளியியலின் தந்தை என அழைக்கப்படுபவர்: நரிந்தர் கபானி.
- எந்த வெப்பப் பரவல் முறை பருப்பொருள் ஏதுமின்றி வெற்றிடத்திலும் நடைபெறும்: வெப்பக் கதிர்வீச்சு.
- ஃபாரன்ஹீட் அளவீட்டில் உறைநிலைப் புள்ளி: 32° F.
- ஃபாரன்ஹீட் அளவீட்டில் ஆவியாதல் புள்ளி: 212° F.
- கெல்வின் அளவீட்டில் தனிச்சுழி வெப்பநிலை: 0 K.
- நீரின் மும்மைப் புள்ளியின் வெப்பநிலை கெல்வின் அளவீட்டில்: 273.16 K.
- அதிர்வெண் 'n' என்பதன் SI அலகு: ஹெர்ட்ஸ் (Hz) அல்லது செ⁻¹.
- ஜெட்விமானம் புறப்படும் ஒலியின் செறிவின் அளவு: 140 dB.
- குடையாணி இயந்திரம் ஏற்படுத்தும் ஒலியின் செறிவு: 120 dB.
- அமைதியான நூலகத்தின் ஒலிச்செறிவின் அளவு: 40 dB.
- ஒலியானது காற்றைவிட நீரில் எத்தனை மடங்கு வேகமாகப் பயணிக்கும்: 5 மடங்கு.
- நாயால் கேட்டுணரக்கூடிய அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அலைகள்: மீயொலி அலைகள்.
- சோனார் (SONAR) என்பதன் விரிவாக்கம்: Sound Navigation And Ranging.
- அண்டத்தின் பெரும்பகுதி எதனால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது: இருண்ட பொருள் மற்றும் இருண்ட ஆற்றல்.
- செரஸ் (Ceres) என்பது எதற்கு எடுத்துக்காட்டு: மிகப்பெரிய சிறுகோள் (Asteroid).
- ஸ்புட்னிக் என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட ஆண்டு: 1956.
- ஜோகனஸ் கெப்ளரின் கோள் இயக்கத்திற்கான இரண்டாவது விதியின் பெயர்: சம பரப்புகளின் விதி.
- பன்னாட்டு விண்வெளி மையத்திற்கு (ISS) முதன் முதலாக மனிதர்கள் சென்ற ஆண்டு: 2000.
- சர்க்கரையின் வேதியியல் வாய்ப்பாடு: C₁₂H₂₂O₁₁.
- குழாய் நீர் என்பது எவ்வகையான கலவைக்கு எடுத்துக்காட்டு: தூய்மையற்ற பொருள் அல்லது கலவை.
- அம்மோனியம் குளோரைடு வெப்பப்படுத்தும் போது உட்படும் நிகழ்வு: பதங்கமாதல்.
- ஒளிக்கற்றையின் பாதையை கூழ்மக் கரைசலில் பார்க்க முடியும் என்பதைக் கண்டறிந்தவர்: டிண்டால்.
- திரவம் வாயுவில் பரவிய தூசிப்படலத்திற்கு எடுத்துக்காட்டுகள்: மூடுபனி, பனி, மேகம்.
- உரம் தயாரிக்கப் பயன்படும் முக்கிய தனிமங்கள்: பாஸ்பரஸ், நைட்ரஜன், பொட்டாசியம்.
- லார்ட் ரூதர்போர்டு அணுக் கொள்கையினை உருவாக்கிய ஆண்டு: 1911.
- அணு எண் Z என்ற குறியீடு பெறப்பட்ட ஜெர்மானிய வார்த்தை: ஸ்ஸாஃல் (Zahl).
- ஒரு வட்டப்பாதையில் இடங்கொள்ளும் அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும் வாய்ப்பாடு: 2n².
- நியானின் வெளிக்கூடு முழுமையாக நிரப்பப்பட்டிருப்பதால் அதன் இணைதிறன்: பூஜ்ஜியம்.
- கதிரியக்க சிகிச்சையில் பயன்படுத்தப்படும் கோபால்ட் 60 என்பது: கதிரியக்க ஐசோடோப்பு.
- டாபர்னீர் தனது மும்மை விதியை வெளியிட்ட ஆண்டு: 1817.
- நவீன தனிம வரிசை அட்டவணையில் உள்ள வரிசைகள் மற்றும் தொகுதிகள்: 7 வரிசைகள் மற்றும் 18 தொகுதிகள்.
- நவீன தனிம வரிசை அட்டவணையில் தொகுதி 1-ல் உள்ள தனிமங்கள் அழைக்கப்படுவது: கார உலோகங்கள்.
- லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகள் சேர்ந்த தொகுதி: f- தொகுதி தனிமங்கள்.
- அயனிச்சேர்மங்கள் கரையாத முனைவற்ற கரைப்பான்கள்: பென்சீன் மற்றும் கார்பன் டெட்ரா குளோரைடு.
- வைரம் மற்றும் சிலிகன் கார்பைடு ஆகியவை எவ்வகை பிணைப்புச் சேர்மங்களுக்கு எடுத்துக்காட்டு: சகப்பிணைப்புச் சேர்மங்கள்.
- இராஜதிராவகத்தில் உள்ள ஹைட்ரோகுளோரிக் மற்றும் நைட்ரிக் அமிலத்தின் மோலார் விகிதம்: 3:1.
- துணிகளில் உள்ள எண்ணெய்க் கறைகளை நீக்கப் பயன்படும் காரம்: அம்மோனியம் ஹைட்ராக்சைடு.
- pH அளவீட்டில் உள்ள 'p' (பொட்டன்ஷ்) என்ற ஜெர்மன் வார்த்தையின் பொருள்: அதிக ஆற்றல்.
- சலவை சோடாவின் வேதியியல் பெயர்: சோடியம் கார்பனேட்.
- கார்பனின் புறவேற்றுமை வடிவங்களில் 60 கார்பன் அணுக்களைக் கொண்ட கால்பந்து வடிவம்: பக்மின்ஸ்டர் ஃபுல்லரீன்.
- உலகிலேயே மிகவும் லேசான மற்றும் வலிமையான கார்பன் சேர்மம்: கிராஃபீன்.
- வெல்டிங் தொழிலில் பயன்படும் அசிட்டிலீன் வாயு எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது: கால்சியம் கார்பைடு.
- ஒரு நானோ மீட்டர் என்பது எத்தனை மீட்டரைக் குறிக்கும்: 10⁻⁹ அல்லது 0.000000001 மீட்டர்.
- மயக்க மருந்துகளுள் மிகவும் பாதுகாப்பான கனிம வாயு: நைட்ரஸ் ஆக்சைடு (N₂O).
- மலேரியா நிவாரணியான பைரிமீத்தமின் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு: 1961.
- மூளைக் கட்டி மற்றும் தைராய்டு சுரப்பியின் சீர்குலைவைக் கண்டறியப் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு: அயோடின்-131.
- உணவிற்கு இனிய நிறத்தைக் கொடுக்கும் கரோட்டினாய்டுகள் மற்றும் ஆந்தோசயனின் எவ்வகை சேர்க்கை: நிறமிகள்.
- மது அருந்தியவர்களைக் கண்டறிய மூச்சுக்காற்றுப் பரிசோதனையில் பயன்படும் வேதிப்பொருட்கள்: சல்பியூரிக் அமிலம், பொட்டாசியம் டை குரோமேட், நீர் மற்றும் வெள்ளி நைட்ரேட்.
- உயிரினங்களை முதன் முதலில் இருபெயரிடும் முறையில் வகைப்படுத்தியவர்: கரோலஸ் லின்னேயஸ்.
- நாடாப் புழுவின் இரு சொற்பெயர்: டீனியா சோலியம்.
- தொகுதி-துளையுடலிகளின் (போரிஃபெரா) உடலில் உள்ள எண்ணற்ற துளைகளின் பெயர்: ஆஸ்டியா (Ostia).
- கணுக்காலிகளின் உடற்குழியில் நிரப்பப்பட்டுள்ள இரத்தம் எவ்வாறு அழைக்கப்படும்: ஹீமோலிம்ப்.
- தோட்டத்து நத்தை மற்றும் ஆக்டோபஸ் சார்ந்த விலங்குத் தொகுதி: மெல்லுடலிகள் (மொலஸ்கா).
- உலகின் மிகப்பெரிய இருவாழ்வியான சீனாவின் ராட்சத சாலமான்டரின் அறிவியல் பெயர்: ஆன்டிரியஸ் டாவிடியன்ஸ்.
- உணர்ச்சி, தன்விழிப்புணர்வு மற்றும் ஆளுமை கொண்ட ஒரே முதுகுநாணற்ற உயிரி: ஆக்டோபஸ்.
- பாரன்கைமா செல்கள் ஒளிபடும்போது பசுங்கணிகங்களை உற்பத்தி செய்தால் அவை அழைக்கப்படுவது: குளோரன்கைமா.
- லேக்குனா எனப்படும் இடைவெளிகளில் காணப்படும் எலும்பு செல்கள் அழைக்கப்படுவது: ஆஸ்டியோசைட்ஸ்கள்.
- இரத்த சிவப்பணுக்கள் (RBC) எத்தனை நாட்களில் இறந்து மீண்டும் புதுப்பிக்கப்படுகின்றன: 120 நாட்களில்.
- மியாசிஸ் (குன்றல் பகுப்பு) என்ற வார்த்தையை 1905-ல் அறிமுகப்படுத்தியவர்: ஃபார்மர்.
- பகலில் மூடிய நிலையிலும் இரவில் திறந்த நிலையிலும் காணப்படும் நிலவு மலர் (ஐபோமியா ஆல்பா) எடுத்துக்காட்டான அசைவு: ஒளியுறு வளைதல்.
- மனிதனின் வாழ்நாளில் முதலில் தோன்றும் பால் பற்களின் எண்ணிக்கை: 20.
- இரைப்பையில் பெப்சின் மற்றும் ரென்னினைச் சுரக்கும் சுரப்பிகள்: ஆக்சின்டிக் செல்கள்.
- கல்லீரலில் சுரக்கப்படும் பித்தநீரில் காணப்படும் பித்த நிறமிகள்: பைலிரூபின் மற்றும் பைலிவிரிடின்.
- சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகுகள்: நெஃப்ரான்கள்.
- வைட்டமின் B3 (நியாசின்) குறைபாட்டால் ஏற்படும் நோய்: பெல்லக்ரா.
- உலக நீர் தினம் கடைபிடிக்கப்படுவது: மார்ச் 22.
- தேசிய பால் பண்ணை வளர்ச்சிக் கழகத்தை உருவாக்கிய "வெண்மைப் புரட்சியின் தந்தை": முனைவர் வர்கீஸ் குரியன்.
- காளான் வளர்ப்புக்கு உகந்த வெப்பநிலை: 15 முதல் 23 டிகிரி செல்சியஸ்.
- உலக அளவில் கண்டறியப்பட்ட உயிரியல் பல்வகைத்தன்மை கொண்ட 34 முக்கிய இடங்களில் இந்தியாவில் உள்ள இடங்களின் எண்ணிக்கை: 4 இடங்கள்.


0 Comments