12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 8 நோய்த்தடைக்காப்பியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 29
கேள்வி 29 : எச்.ஐ.வியால் தொற்றிய ஒரு நபருக்கு எய்ட்ஸ் உள்ளதா என்பதை எவ்வாறு கண்டறிவாய்?
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
எச்.ஐ.வி (HIV) பாதிப்பைக் கண்டறியும் சோதனைகள்:
- எலிசா சோதனை (ELISA Test): எச்.ஐ.வி-க்கான எதிர்ப்பொருட்களைக் கண்டறியும் ஆரம்பகட்ட சோதனை இது.
- வெஸ்ட்டர்ன் பிளாட் சோதனை (Western Blot Test): வைரஸின் மையப் புரதங்களைக் கண்டறிவதன் மூலம் பாதிப்பை உறுதிப்படுத்தும் சோதனை இது.
ஒருவரது இரத்தத்தில் மேற்கண்ட இரண்டு சோதனைகள் மூலமாகவும் எச்.ஐ.வி எதிர்ப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர் எச்.ஐ.வி பாதிப்புக்கு உள்ளானவராகக் கருதப்படுவார்.


0 Comments