9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 9th Social Science Part-7


TNPSC TRB TET 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 9th Social Science Part-7
புவியியல்: நிலத்தோற்றங்களும் வளிமண்டலமும்

ஆற்று நிலத்தோற்றங்கள்
  1. ஆற்று வளைவுகள் துண்டிக்கப்படுவதால் இந்தியாவில் உருவாகும் ஏரி: பிஹாரிலுள்ள கன்வர் ஏரி.
  2. ஆற்று வளைவுகள் துண்டிக்கப்பட்டு உருவாகும் உலகிலேயே பெரிய குருட்டு ஆறு: அமெரிக்காவில் அர்க்கன்சால் பகுதியில் உள்ள சிக்காட் ஏரி.
  3. ஆறு கடத்தி வரும் பொருட்கள் மலையடிவாரத்தில் விசிறி வடிவத்தில் படியவைக்கப்படுவது: வண்டல் விசிறி (Alluvial fan).
  4. ஆறு கடலில் சேரும் இடங்களில் படியவைத்தல் செயல் இன்றி உருவாகும் நிலத்தோற்றம்: ஓதப்பொங்கு முகம் (Estuary).
நிலத்தடி நீர்/சுண்ணாம்பு பிரதேச நிலத்தோற்றங்கள்
5. மேற்கு ஸ்லோவேனியாவில் சுண்ணாம்பு பிரதேச நிலத்தோற்றம் பரவியுள்ள தூரம்: 480 கி.மீ நீளத்திற்கும், 80 கி.மீ அகலத்திற்கும்.
6. உலகின் மிகப்பெரிய சுண்ணாம்பு பிரதேச நிலத்தோற்றமான 'நல்லர்பார்' அமைந்துள்ள இடம்: கிரேட் ஆஸ்திரேலியாவின் கடற்கரை.
7. பீஹாரில் உள்ள புகழ்பெற்ற சுண்ணாம்பு பிரதேச குகைகள்: குப்ததாம் குகைகள்.
8. உத்தரகாண்டில் உள்ள சுண்ணாம்பு குகைகள் மற்றும் கோயில்: ராபர்ட் குகை மற்றும் தப்கேஷ்வர் கோயில்.
9. பச்மாரி மலைகள் மற்றும் பாண்டவர் குகைகள் அமைந்துள்ள மாநிலம்: மத்தியப்பிரதேசம்.
10. நிலத்தடி நீர் அரித்தலால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள்: டெர்ரா ரோஸா, லேப்பீஸ், உறிஞ்சித்துளை, டோலின், யுவாலா, போல்ஜே.
11. அமெரிக்காவில் இலியாய்ஸில் உள்ள உறிஞ்சு துளைகளின் எண்ணிக்கை: 15,000-ற்கும் மேல்.
12. குகைகளிலும் அடிநிலக் குகைகளிலும் படிய வைத்தலால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்களின் ஒட்டுமொத்தப் பெயர்: ஸ்பீலியோதெம்ஸ்.
13. குகையின் தரையில் கால்சியம் கார்பனேட் கலந்த நீர் படிந்து மேல்நோக்கி வளர்வது: கல்முனை.

பனியாறு நிலத்தோற்றங்கள்
14. கிரீன்லாந்தில் உறைபனிக்கோட்டின் உயரம்: 600 மீட்டர்.
15. இரு சர்க்குகள் எதிர் பக்கங்களில் அமைந்து பின் மற்றும் பக்கச்சுவர்கள் அரிக்கப்படும்போது தோன்றும் கத்திமுனை போன்ற கூரிய வடிவம்: அரெட்டு.
16. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சர்க்குகள் இணையும் போது கூரிய பக்கங்களை உடைய பிரமிடு வடிவில் தோன்றும் நிலத்தோற்றம்: மேட்டர்ஹார்ன்.
17. முதன்மை பனியாற்றினால் உருவாக்கப்பட்ட பள்ளத்தாக்கின் மீது அமைந்திருக்கும் துணைப் பனியாற்றின் பள்ளத்தாக்கு: தொங்கும் பள்ளத்தாக்கு.
18. பனியாறு படியவைத்தலால் தோன்றும் கவிழ்த்து வைக்கப்பட்ட கரண்டியைப் போன்ற நிலத்தோற்றம்: டிரம்ளின்.
19. பனியாறுகள் உருகுவதால் கொண்டு வரப்படும் கூழாங்கற்கள் மற்றும் மணல் நீண்ட குறுகிய தொடராகப் படியவைக்கப்படுவது: எஸ்கர்கள்.

காற்று நிலத்தோற்றங்கள்
20. மென்பாறைகள் காற்றினால் அரிக்கப்பட்டு காளான் அல்லது பீட வடிவத்தைப் பெறும் பாறைகள் ராஜஸ்தானில் காணப்படும் இடம்: ஜோத்பூர்.
21. ஆஸ்திரேலியாவில் உள்ள உலுரு அல்லது எய்ர்ஸ் பாறை எவ்வகை நிலத்தோற்றத்திற்கு உதாரணம்: இன்சல்பர்க்.
22. காற்று வேகமாகவும் மிதமாகவும் மாறி மாறி ஒரே திசையில் வீசும்போது உருவாகும் மணல் மேடுகள்: குறுக்கு மணல்மேடு.
23. சகாராவில் 'செய்ப்ஸ்' என்று அழைக்கப்படும் நிலத்தோற்றம்: நீண்ட மணல் மேடுகள்.
24. அர்ஜென்டைனாவின் பாம்பாஸ் பகுதியில் காணப்படும் நுண்ணிய படிவுகள்: காற்றடி வண்டல்.

கடல் அலை நிலத்தோற்றங்கள்
25. அருகருகிலுள்ள இரு கடற்குகைகளின் நீட்டு நிலங்கள் மேலும் அரிக்கப்படுவதால் இணைந்து ஏற்படுத்தும் அமைப்பு: கடல் வளைவு.
26. அந்தமான் நிக்கோபாரில் உள்ள 'நீல் தீவு' எந்த கடல் அலை அரிப்பு நிலத்தோற்றத்திற்கு உதாரணம்: கடல் வளைவு.
27. கடல் அலைகள் மோதுவதால் சற்று உயரத்தில் அரித்தல் ஏற்பட்டு தோன்றும் மேடை: அலை அரிமேடை.
28. கடலோரத்தில் மணல் மற்றும் சரளைக்கற்கள் படியவைக்கப்படுவதால் உருவாகும் மும்பையின் ஜுஹு, ஒடிசாவின் பூரி ஆகியவை எதற்கு உதாரணம்: கடற்கரை.
29. ஆந்திராவில் உள்ள காக்கிநாடாவில் கடல் அலைகளால் உருவாக்கப்பட்ட நிலத்தோற்றம்: நீண்ட மணல் திட்டு.

வளிமண்டல அமைப்பு
30. வளிமண்டலத்தில் ஆர்கான் வாயுவின் சதவீதம்: 0.93 சதவீதம்.
31. கி.பி. 1772 ஆம் ஆண்டு வளிமண்டலத்தில் நைட்ரஜன் வாயு உள்ளதென்பதைக் கண்டறிந்தவர்: டேனியல் ரூதர்ஃபோர்டு.
32. வளிமண்டலத்தில் ஆக்சிஜன் உள்ளதென்பதை 1774-ல் கண்டறிந்தவர்: ஜோசப் பிரிஸ்ட்லி.
33. வளிமண்டல கீழடுக்கின் (Troposphere) மேல் எல்லை: ட்ரோபோபாஸ்.
34. மீள் அடுக்கின் (Stratosphere) மேல் எல்லை: ஸ்ரேடோபாஸ்.
35. இடையடுக்கின் (Mesosphere) மேல் எல்லை: மீசோபாஸ்.
36. வெப்ப அடுக்கின் கீழ்ப்பகுதியில் வாயுக்களின் அளவு சீராக காணப்படுவதால் அது அழைக்கப்படுவது: ஹோமோஸ்பியர்.
37. வெப்ப அடுக்கின் மேல்பகுதியில் வாயுக்களின் அளவு சீரற்று காணப்படுவதால் அது அழைக்கப்படுவது: ஹெட்ரோஸ்பியர்.
38. 'அரோரா ஆஸ்ட்ரியாலிஸ்' என்ற விநோத ஒளிநிகழ்வுகள் வளிமண்டலத்தின் எந்த அடுக்கில் நிகழ்கின்றன: வெளியடுக்கு (Exosphere).

வளிமண்டல அழுத்தம் மற்றும் காற்றுகள்
39. வளிமண்டல அழுத்தத்தை அளக்கப் பயன்படும் கருவி: பாதரச காற்றழுத்தமானி.
40. டால்ட்மரஸ் (Doldrums) என அறியப்படும் எதிர்பாராத காற்றுகள் ஏற்படும் 'அமைதிமண்டலம்' அமைந்துள்ள இடம்: நிலநடுக்கோட்டுப் பகுதி.
41. வருடம் முழுவதும் நிலையாக ஒரே திசையை நோக்கி வீசும் 'நிலவும்காற்று' எனவும் அழைக்கப்படும் காற்றுகள்: கோள்காற்றுகள்.
42. 60° அட்சங்களில் மிகவும் வேகமாக வீசும் மேலைக் காற்றுகள்: கதறும் அறுபதுகள்.
43. வடஅரைகோளத்தில் வலப்புறமாகவும், தென் அரைக்கோளத்தில் இடப்புறமாகவும் காற்று விலகி வீசுவதை விளக்கும் விதி: ஃபெரல்ஸ் விதி.
44. ஃபெரல்ஸ் விதியை முன்மொழிந்தவர்: வில்லியம் பெரல்.

சூறாவளிகள் மற்றும் தலக்காற்றுகள்
45. மேற்கு பசிபிக்பெருங்கடலில் வீசும் வெப்பச் சூறாவளிகள்: டைபூன்கள்.
46. பிலிப்பைன்ஸ் பகுதிகளில் வீசும் சூறாவளிகள்: பேக்யுஸ்.
47. இந்தியாவை அடையும் மிதவெப்பச் சூறாவளிகள்: மேற்கத்திய இடையூறு காற்று.
48. 2011-ஆம் ஆண்டு கடலூரைத் தாக்கிய சூறாவளியின் பெயர்: தானே.
49. 2016-ஆம் ஆண்டு சென்னையைத் தாக்கிய சூறாவளிகள்: ரோனு, கியாந்த், நாடா, வர்தா.
50. ஆல்ப்ஸ் மற்றும் ஐரோப்பாவில் வீசும் தலக்காற்று: ஃபான் காற்று.
51. வட அமெரிக்காவில் ராக்கி மலைத்தொடரில் வீசும் தலக்காற்று: சின்னூக்.
52. பிரான்சின் மத்தியத் தரைக்கடல் பகுதியில் வீசும் தலக்காற்று: மிஸ்டரல்.
53. இத்தாலியின் மத்தியத் தரைக்கடல் பகுதியில் வீசும் தலக்காற்று: போரா.

மேகங்கள் மற்றும் மழைப்பொழிவு
54. வெண்மையான திட்டுக்களாகவோ விரிப்பு போன்றோ அடுக்கடுக்காக அமைந்திருக்கும் மேகங்கள்: கீற்றுத் திரள் மேகங்கள்.
55. பால்போன்ற வெள்ளை நிறத்தில் கண்ணாடி போன்று காணப்படும் மிகச்சிறிய பனித்துகள்களைக் கொண்ட மேகங்கள்: கீற்றுப்படை மேகங்கள்.
56. நீல நிறத்தில் மெல்லிய விரிப்பு போன்று உறைந்த நீர்த்திவலைகளைக் கொண்ட மேகங்கள்: இடைப்பட்ட படைமேகங்கள்.
57. மழை, பனி மற்றும் ஆலங்கட்டி மழையுடன் தொடர்புடைய கருமையான மேகங்கள்: கார்படை மேகங்கள்.
58. மிகவும் அடர்த்தியாக கீழ்மட்ட பனிமூட்டம் போன்று காணப்படும் மழை அல்லது பனிப்பொழிவைத் தரும் மேகங்கள்: படைமேகங்கள்.
59. இடியுடன் கூடிய புயலின்போது விழும் 2 செ.மீட்டருக்கு மேல் விட்டம் உள்ள பனிக்கட்டி மழை: கல்மாரி மழை.
60. இந்தியாவில் அதிக மழைபெறும் இடமான மௌசின்ரான் அமைந்துள்ள மலை: பூர்வாச்சல் மலை.
61. காற்றின் ஒப்பு ஈரப்பதத்தை அளப்பதற்குப் பயன்படும் கருவி: ஈரப்பதமானி (Hydrometer).

கடலியல்
62. பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள முக்கிய தீவுகள்: ஹவாய், பொன்கூவர், சாகலின், ஃபியூஜி.
63. அட்லாண்டிக் பெருங்கடலின் மிக ஆழமான பகுதியான பியூரிட்டோ ரிகோ அகழியின் ஆழம்: 8,605 மீட்டர்.
64. 'பிரேம் கொப்பரை' அமைந்துள்ள ஆழமான பகுதி: ஆர்டிக் பெருங்கடல்.
65. கண்டத்திட்டுகளில் எண்ணெய் எடுப்பதற்கும் சுரங்க நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் சிறந்த இடமாக விளங்கும் அரபிக் கடல் பகுதி: மும்பைஹை.
66. அமாவாசை மற்றும் முழு நிலவு தினங்களில் சூரியன் மற்றும் சந்திரனின் கூட்டு ஈர்ப்பு விசையால் ஏற்படும் அலைகள்: உயர் ஓதங்கள் (Spring tides).
67. நமீபியா மற்றும் கலகாரி பாலைவனங்களை வளர்ச்சியடையச் செய்யும் குளிர்ந்த நீரோட்டம்: பென்குலா நீரோட்டம்.
68. தென் அமெரிக்காவின் அட்டகாமா பகுதி பாலைவனமாகவே இருப்பதற்கு காரணமாக உள்ள குளிர்ந்த நீரோட்டம்: பெருவியன் அல்லது ஹம்போல்டு நீரோட்டம்.
69. ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளில் மேகமூட்டத்தினை உருவாக்கும் குளிர்ந்த நீரோட்டம்: மேற்கு ஆஸ்திரேலிய நீரோட்டம்.
70. 'தி டைம் இதழ்' கோளத்தின் கதாநாயகன் என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தவர்: சில்வியா ஏர்ல்.
71. 1985-ல் அமெரிக்க அதிபரின் சுதந்திரத்தின் பதக்கத்தைப் பெற்ற கடல் ஆராய்ச்சியாளர்: ஜாக்குவெல் யுவெஸ் காஸ்டோவ்.
72. தென் சீனக்கடலின் கண் என மீனவர்களால் அழைக்கப்படும் கடலடி உறிஞ்சித்துளை: டிராகன் துளை.
73. நிலவரைபடத்தில் சம ஆழக்கோடு என்பது எதை இணைக்கும் கற்பனைக் கோடு: ஒரே ஆழம் கொண்ட இடங்களை.
74. 2013-ல் ஜோர்டான் மற்றும் பாலவ் நாடுகளுக்கு ஐ.நா. சபை நிர்ணயம் செய்த கடல் மைல் எல்லை: 3 கடல் மைல்கள்.

சூழலியல்
75. தாவர உண்ணிகளையும், விலங்கு உண்ணிகளையும் உணவாக உண்ணக்கூடிய மூன்றாம் நிலை நுகர்வோருக்கு உதாரணம்: ஆந்தை, முதலை.
76. மண்ணிலுள்ள தாவர மற்றும் விலங்கு கழிவுகளை சிதைத்து மக்க வைக்கும் பாக்டீரியா, பூஞ்சைகள்: சிதைப்பவை (Decomposers).
77. பல்வேறு உணவுச்சங்கலிகள் ஒன்றினையொன்று சார்ந்து பிணைக்கப்பட்ட அமைப்பு: உணவு வலை (Food Web).
78. அமேசான் படுகை, காங்கோ படுகை மற்றும் இந்தோனேசியத் தீவுகள் எவ்வகை பல்லுயிர்த் தொகுதிக்கு முக்கிய உதாரணம்: வெப்பமண்டலக் காடுகள் பல்லுயிர்த் தொகுதி.
79. ஆசியா, கனடா, ஐரோப்பாவின் வடபகுதிகள் மற்றும் அண்டார்டிகாவில் பரவியுள்ள பல்லுயிர்த் தொகுதி: தூந்திரப் பல்லுயிர்த் தொகுதி.
80. அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் அமைக்கப்பட்ட 'உயிர்க்கோளம் - 2' அமைந்துள்ள பரப்பளவு: 3.15 ஏக்கர்.
81. 'உயிர்க்கோளம் - 2' செயற்கை உயிர்க்கோளம் உருவாக்க பயன்படுத்தப்பட்ட எஃகு இரும்பின் எடை: 500 டன்.

சமூகவியல் மற்றும் அரசியல்
82. மக்கள் தொகையியலைக் குறிக்கும் 'டிமாஸ்' மற்றும் 'கிராபிஸ்' ஆகிய சொற்கள் எந்த மொழியைச் சேர்ந்தவை: கிரேக்க மொழி.
83. சமவெளிப் பகுதிகளிலும், பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் பெரும்பாலும் காணப்படும் கிராம குடியிருப்புகள் வடிவம்: செவ்வக வடிவக் குடியிருப்புகள்.
84. ஏரிகள், குளங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளைச் சுற்றி இருக்கும் குடியிருப்புகள் வடிவம்: வட்டவடிவக் அல்லது அரைவட்ட வடிவ குடியிருப்பு.
85. பத்து லட்சத்திலிருந்து ஐம்பது இலட்சம் வரையிலான மக்கள் தொகையை கொண்டிருக்கும் நகரப் பகுதி: மாநகரம்.
86. ஐம்பது இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டிருக்கும் நகரப்பகுதி: மீப்பெருநகரம்.
87. உலக வங்கியின் அறிக்கையின் படி குறைந்த நடுத்தர வருவாய் உள்ள நாடுகளின் வருமான அளவீடு: 1006 - 3955 அமெரிக்க டாலர்.
88. 2017 நிலவரப்படி இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசிய கட்சிகளின் எண்ணிக்கை: 7.
89. அழுத்தக் குழுக்கள் என்ற சொல் முதன்முதலில் உருவாக்கப்பட்ட நாடு: ஐக்கிய அமெரிக்க நாடு.
90. இந்தியாவில் உள்ள அழுத்தக் குழுக்களுக்கு ஒரு உதாரணம்: இந்திய வணிகம் மற்றும் தொழிற்துறை சம்மேளத்தின் கூட்டமைப்பு (FICCI).

அரசியலமைப்பு மற்றும் உரிமைகள்
91. ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரறிக்கை நிறைவேற்றப்பட்ட ஆண்டு: 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10.
92. இந்திய அரசமைப்புச் சட்டம் தனது குடிமக்களுக்கு வழங்கும் அடிப்படை சுதந்திரங்களின் வகைகள்: ஆறு வகையான சுதந்திரங்கள்.
93. இந்திய அரசமைப்புச் சட்டம் தற்போது குறிப்பிடும் அடிப்படைக் கடமைகள்: 11 அடிப்படைக் கடமைகள்.
94. இந்தியாவில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு: 1993 ஆம் ஆண்டு.
95. இந்திய நாடாளுமன்றம் 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தினை (RTE) நடைமுறைப்படுத்திய ஆண்டு: 2009 ஆம் ஆண்டு.
96. பெண்களுக்கு மூதாதையர் சொத்தில் சம உரிமை வழங்கிய தமிழ்நாடு இந்து வாரிசு உரிமை (திருத்தச்) சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு: 1989.
97. பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் மொத்த இடஒதுக்கீடு சதவீதம்: 69%.
98. தேசிய அரசுக்கும் பிராந்திய அரசுக்கும் இடையில் இருக்கும் உறவின் அடிப்படையில் அரசுகள் வகைப்படும் விதம்: இரண்டு வகைப்படும் (ஒற்றை ஆட்சி முறை மற்றும் கூட்டாட்சி முறை).
99. மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான சட்ட மன்ற உறவுகள் இந்திய அரசியலமைப்பின் பிரிவுகள்: பிரிவுகள் 245 முதல் 255 வரை.
100. உள்ளாட்சி அமைப்புகளை 1882 ஆம் ஆண்டு அறிமுகம் செய்து இந்தியர்களுக்கு சுதந்திரத்தின் சுவையை அறிமுகப்படுத்தியவர்: ரிப்பன் பிரபு.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement