Monday, June 14, 2021

GS-26-INDIAN NATIONAL MOVEMENT | இந்திய தேசிய இயக்கம் | பிரிட்டிஷ் ஆட்சியில் சமூக பொருளாதார விளைவுகள் | ஒரு வரி வினா விடை

பிரிட்டிஷ் ஆட்சியில் சமூக பொருளாதார விளைவுகள்.

  • ஜமீன் தாரி முறையை அறிமுகப் படுத்தியவர் - காரன் வாலிஸ்.
  • ரயத்துவாரி முறையை (1820) அறிமுகப்படுத்தியவர் - ஹேஸ்டிங்ஸ் பிரபு (சர் தாமஸ் மன்றோ ).
  • மகல்வாரி முறையை (1833) அறிமுகப்படுத்தியவர் - வில்லியம் பெண்டிங் பிரபு (சர் தாமஸ் மன்றோ).
  • நிலையான நிலவரி திட்டத்தை எப்போது யார் கொண்டு வந்தார் - காரன் வாலிஸ்.
  • எந்த பட்டயச் சட்டம் இந்தியாவில் வணிகக் குழுவின் வணிகத்துக்கு முடிவு கட்டியது - 1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம்.
  • பித்தளை, செம்பு, வெண்கலப் பாத்திரங்களுக்கு பிரசித்தி பெற்ற நகரங்கள் - மொராதாபாத், காசி.
  • தொழிற்புரட்சி எங்கு தொடங்கப்பட்டது - இங்கிலாந்து 
  • வாரன் ஹேஸ்டிங்ஸ் கல்கத்தாவில் மதரஸா கல்வி நிறுவனத்தை எப்போது நிறுவினார் - 1781.
  • யாருடைய முயற்சியில் காசியில் வடமொழி கல்லூரி நிறுவப்பட்டது - ஜோனாதன் டங்கன்.
  • எந்த பட்டய சட்டம் மூலம் கல்விக்காக வளர்ச்சிக்கு ஒரு லட்சம் ஒதுக்கப்பட்டது - 1813 ஆம் ஆண்டு.
  • இந்தியாவின் தலைமை ஆளுநரில் யார் இந்தியாவில் ஆங்கில மொழி வழிக்கல்வி வேண்டும் என வலியுறுத்தினார் - வில்லியம் பெண்டிங்பிரபு.
  • 1835ல் ஆங்கில மொழி கல்வி குழுவிற்கு தலைவர் யார் - மெக்காலே பிரபு.
  • ஆங்கில மொழி கல்விகுழு வில்லியம் பெண்டிங் பிரபு எப்போது கொண்டு வரப்பட்டது - 1935.
  • டல்ஹௌசி, உட் கல்வி கொள்கையை எப்போது கொண்டு வந்தார் - 1854.
  • 1856 இல் யார் விதவை மறுமணம் குறித்து சட்டமுன் வடிவை அறிமுகப்படுத்தினர் - ஜே.பி.கிராண்ட்.
  • 1870 இல் இந்திய சீர்திருத்தக்கழகம் யார் தலைமையில் தோற்றுவிக்கப்பட்டது - கேசவ சந்திர சென்.
  • B.M.மலபாரி என்பவர் எந்த இதழை தொடங்கி குழந்தை திருமணத்துக்கு எதிராகப் போராடினர் - மசாபாப் பால விவாகம்.
  • குறைந்தபட்ச திருமண வயது 14 ஆக உயர்த்தப்பட்ட சாரதா சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது - 1930.
  • ஹரிஜன் சேவக் சங் என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் - மகாத்மா காந்தி.
  • பெரியார் சுயமரியாதை இயக்கத்தை எங்கு தொடங்கினார் -  சென்னை மாகாணம்.

வாரன் ஹேஸ்டிங்ஸ் (காலம் 1772 முதல் 1785 வரை).

  • வாரன் ஹேஸ்டிங்ஸ் எப்போது வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டார் - கி.பி.1772.
  • ஒழுங்கு முறை சட்டம் எப்போது யார் காலத்தில் கொண்டுவரப்பட்டது - 1773, வாரன் ஹேஸ்டிங்ஸ்.
  • 1773 சட்டப்படி உச்சநீதிமன்றம் எங்கு எப்போது தொடங்கப்பட்டது - கொல்கத்தா, 1774.
  • 1774 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி யார் - சர் எலிஜா இம்பே.
  • பிட் இந்தியா சட்டம் எப்போது கொண்டு வரப்பட்டது - 1784.
  • பிட் இந்தியா சட்டத்தை கொண்டு வந்த ஆங்கில பிரதமர் யார் - இளைய பிட்.
  • வங்காளத்தில் இரட்டை ஆட்சி முறையை கொண்டு வந்தவர் - ராபர்ட் கிளைவ்.
  • வங்காளத்தில் இரட்டை ஆட்சி முறையை ஒழித்தவர் - வாரன் ஹேஸ்டிங்ஸ்.
  • அரசின் கருவூலம் முர்ஷிதா பாத்திலிருந்து கல்கத்தாவிற்கு மாற்றியது - வாரன் ஹேஸ்டிங்ஸ்.
  • கல்கத்தாவில் எந்த இரு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டது - சாகர் திவானி அதாலத் (சிவில்), சாகர் நிஜாமத் அதாலத் கிரிமினல்).
  • வாரன் ஹேஸ்டிங்ஸ் வருவாய் துறைக் கழகம் எங்கு நிறுவினார் - கொல்கத்தா.
  • இஸ்லாமிய கல்வி வளர்ச்சிக்காக எந்த வருடம் கல்கத்தாவில் மதர்ஸா கல்வி நிறுவனத்தைத் துவக்கினார் - 1781.
  • ரோஹில்லாப் போர் எப்போது நடைபெற்றது - 1774.
  • 2 ஆம் ஆங்கில மைசூர் போர் எப்போது நடைபெற்றது - கி.பி.1780 முதல் 1784 வரை.
  • 2 ஆம் ஆங்கில மைசூர் போர் எந்த உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது - மங்களூர் உடன்படிக்கை (1784).
  • முதலாம் ஆங்கில - மராத்தியப் போர் எப்போது நடைபெற்றது - கி.பி 1775 முதல் 1782 வரை.
  • முதலாம் ஆங்கில மராத்தியப் போர் எந்த உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது - சால்பை உடன்படிக்கை,1782.
  • பொய் கையெழுத்தப் போட்ட விவகாரத்தில் நந்தகுமார் கொலை செய்யப்பட்ட செயலுக்கு யார் குற்ற விசாரணைக்கு உட்பட்டார் - வாரன் ஹேஸ்டிங்ஸ்.
  • ஆங்கில வடிவம் இந்து சட்டங்களின் தொகுப்பு என்ற பெயரில் யார் கொண்டு வந்தார் - ஹால்ஹெட்.

காரன்வாலிஸ் பிரபு (1786-1793)

  • காரன்வாலிஸ் பிரபு நிலையான நிலவரித் திட்டத்தை எப்போது வங்காளத்தில் அறிமுகப்படுத்தினர் - 1793.
  • இந்தியக் குடிமையியல் பணியின் தந்தை என்றழைக்கப்பட்டவர்யார் - காரன்வாலிஸ்.
  • அமெரிக்கா விடுதலை வீராக இருந்து பின் இந்தியாவில் தலைமை ஆளுநர் பதவி வழங்கப்பட்டது - காரன் வாலிஸ் பிரபு. 
  • கி.பி.1793 ஆம் ஆண்டு காரன் வாலிஸ் சட்டத் தொகுப்பினை யார் தொகுத்து வெளியிட்டார் - ஜார்ஜ் பார்லோ.
  • மைசூரின் புலி என அழைக்கப்படுபவர் - திப்பு சுல்தான்.
  • 3 ஆம் மைசூர் போர் (1790 -1792) எந்த உடன்படிக்கை மூலம் போர் முடிவுற்றது - சீரங்கப்பட்டின உடன்படிக்கை (1792).
  • தூய்மையான, திறமையான நிர்வாகத்திற்கு அடிதளம் வகுத்த இந்திய தலைமை ஆளுநர் - காரன் வாலிஸ்.


What's App share  | Telegram Share


| kalvisolai.in | tnpsc | trb | study materials | audio study materials |

No comments:

Popular Posts