Ad Code

Responsive Advertisement

டிசம்பர் 13 முதல் 19 வரை நடந்த முக்கிய நிகழ்வுகள்...

முக்கிய நிகழ்வுகள் - டிசம்பர் 2025

தமிழகம்
  • தூத்துக்குடி, பட்டினமருதூர்: சானைக்கல்லில் சிந்து சமவெளி நாகரிக எழுத்துகள் கண்டறியப்பட்டதாக மாவட்ட தொல்லியல் ஆய்வாளர் ராஜேஷ் செல்வரதி அறிவித்தார். (டிசம்பர் 14)
  • சென்னை: காலநிலை மாற்றத்துக்கான ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நீலக் கார்பன் சேமிப்பில் கடல்சார் வாழிடங்கள் குறித்த தொழில்நுட்ப அறிக்கை மற்றும் கடற்கரைக் கழிவுகளின் மதிப்பீடு ஆதாரங்களை வெளியிட்டார். (டிசம்பர் 17)
இந்தியா
  • ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி (100 நாள்) திட்டத்தின் பெயரை பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா என மாற்றும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தில் வேலை நாட்களின் எண்ணிக்கை 100-லிருந்து 125 ஆக உயர்த்தப்பட உள்ளது. (டிசம்பர் 13)
  • பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மகா மேளா திருவிழா, ஜனவரி 3-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 26-ந் தேதி வரை நடைபெற உள்ளது. (டிசம்பர் 15)
  • ரேணிகுண்டா, ஆந்திரா: 5 ஆயிரம் ஆண்டு பழமையான இந்து மதக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில், ரேணிகுண்டாவில் ஆன்மிக நகரம் அமைய உள்ளது. (டிசம்பர் 18)
  • கூட்டுறவு வாடகை கார் சேவை: ஓலா, ஊபர், ராபிடோ போன்ற தனியார் வாடகை டாக்சிகளுக்கு மாற்றாக, இந்தியாவின் முதல் கூட்டுறவு வாடகை கார் சேவையான பாரத் டாக்சி மத்திய அரசால் டெல்லியில் ஜனவரி 1-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. (டிசம்பர் 14)
  • ஏற்றுமதி: அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், நவம்பர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 19.37 சதவீதம் அதிகரித்து சுமார் ரூ.3.47 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய வர்த்தகத்துறை செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்தார். (டிசம்பர் 15)
உலகம்
  • அமெரிக்கா - இந்தியா வர்த்தகம்: இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அதிபர் டிரம்ப் விதித்த 50 சதவீத வரியை ரத்து செய்ய வலியுறுத்தி, அமெரிக்க எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தனர். (டிசம்பர் 13)
  • எத்தியோப்பியா: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதான ‘தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா’ விருதை அந்நாட்டு பிரதமர் அபிய் அகமது அலி வழங்கினார். (டிசம்பர் 17)
  • ஓமன்: ஓமன் தலைநகர் மஸ்கட்டில் பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் இந்தியா ஏற்றுமதி செய்யும் 99 சதவீத பொருட்களுக்கு ஓமனில் வரி ரத்தாகிறது; ஓமனில் இருந்து இறக்குமதியாகும் 95 சதவீத பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஓமன் நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆப் ஓமன் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. (டிசம்பர் 18)
  • நேபாளம்: சி.பி.என்-யு.எம்.எல். கட்சியின் தலைவராக கே.பி.சர்மா ஒலி 3-வது முறையாகத் தேர்வானார். (டிசம்பர் 18)
அறிவியல்
  • இஸ்ரோ திட்டங்கள்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயல்படுத்த இருக்கும் சந்திரயான் 4 மற்றும் சந்திரயான்-5 ஆகிய 2 திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார். (டிசம்பர் 13)
விளையாட்டு
  • ஃபிஃபா விருது: கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்ற சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (ஃபிஃபா) விருது வழங்கும் விழாவில், உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை பிரான்ஸ் வீரர் உஸ்மன் டெம்பேலே பெற்றார். சிறந்த கால்பந்து வீராங்கனை விருதை ஸ்பெயினின் போன்மதி தொடர்ந்து 3-வது முறையாக வென்றார். (டிசம்பர் 17)
  • கிரிக்கெட்: இந்தியா-தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
    • இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்தது.
    • தென்ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்தது.
    • இதன்மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது. (டிசம்பர் 19)

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement