Saturday, January 01, 2022

சிந்து சமவெளி நாகரிகம்

சிந்து சமவெளி நாகரிகம்

❇️ சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு – 1921


❇️ மனித இனம் முதன் முதலில் தோன்றியதாகக் கருதப்படும் இடம் – இலெமூரியா


❇️ ஏழு நதிகள் பாயும் நிலத்தின் பெயர் – சப்த சிந்து


❇️ இந்திய அகழ்வாராய்ச்சித் துறையின் தந்தை – அலெக்ஸாண்டர் கன்னிங்காம்.


❇️ இந்திய நாகரிகத்தின் தொடக்க காலம் – சிந்து சமவெளி நாகரிகம்


❇️ சிந்து சமவெளி மக்களுக்கு தெரியாத உலோகம் – இரும்பு


❇️ சிந்துவெளி மக்களின் எழுத்து முறை – சித்திர எழுத்து முறை


❇️ சிந்து சமவெளி எழுத்துக்களுக்கு pictograph என்று பெயர்.


❇️ எழுதும் முறை – வலமிருந்து இடமாகவும், இரண்டாவது வரியை இடமிருந்து வலமாகவும் எழுதினர்.


❇️ உலகத்திலேயே சிந்து சமவெளியில் தான் பருத்தி முதன் முதலாகப் பயிரிடப்பட்டது.பருத்திக்குக் கிரேக்க மொழியில் சிந்தோன் என்று பெயர்.


❇️ சிந்து சமவெளி மக்கள் பலவிதமான சின்னங்களை வியாபாரத்திற்கு பயன்படுத்தினர்


❇️ சிந்து சமவெளி மக்கள் விளையாட்டுப் பொருள்கள் செய்ய சுடுமண் பயன்படுத்தினர்.


❇️ சிந்து சமவெளி மக்கள் அறியாத விலங்கு – குதிரை


❇️ சிந்து சமவெளி முத்திரைகள் 10 வகையான வடிவங்களில் கிடைத்துள்ளன.


❇️ அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மிகவும் பெரிதாக எழுதப்பட்டுள்ள எழுத்தின் நீளம் 37 செ.மீ.


❇️ ஹரப்பாவிற்கும் மொகஞ்சதாரோவிற்கும் இடைத்தூரம் – 400 மைல்


❇️ மக்கள் ஓய்வு நேரத்தில் சதுரங்கம் விளையாடினர்.


❇️ இசை, நடனம், கோழிச் சண்டை, காளைச் சண்டை போன்றவை நடைபெற்றது.


❇️ சிந்து சமவெளி கிணறுகள் 65 அடி ஆழத்துடன் இருந்துள்ளன.


❇️ மஞ்சிட்டி என்ற நீர்ப்பூண்டு வகையைப் பயன்படுத்திச் சிந்து சமவெளி மக்கள் துணிகளுக்குச் சிவப்பு நிறத்தை ஏற்றியிருக்கிறார்கள்.


❇️ குழந்தைகள் விளையாடச் சக்கரம் கொண்ட பொம்மைகள், குட்டி வண்டியில் பொருத்தப்பட்ட பொம்மைகள் கிடைத்துள்ளன.


ஹரப்பா நாகரிகம்:

❇️ ஹரப்பா நாகரிகத்தின் கால வரையறை – கி.மு.3250 -கி.மு 2750


❇️ ஹரப்பா ராவி நதிக்கரையின் மேல் மாண்ட்கோமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.


❇️ ஹரப்பா நகரத்தை கண்டுபிடித்தவர் – ராய் பகதூர் தயாராம் சஹானி(1921)


❇️ ஹரப்பா நகர நாகரிகம் எந்த காலத்தை சேர்ந்தது – செம்பு கற்காலம்


❇️ ஹரப்பா என்ற சொல்லின் பொருள் – புதையூண்ட நகரம்


❇️ ஹரப்பா நாகரிகம் எந்த நாகரிகம் – நகர நாகரிகம்


❇️ ஹரப்பா மக்களின் முக்கியக் கடவுள் – பசுபதி (சிவன்)


❇️ டெரக்கோட்டா என்பது – சுடு மண்பாண்டம்


❇️ இதில் மிகப்பெரிய தானியக் களஞ்சியங்கள் 6 உள்ளன.இது 71மீ நீளமும்23மீ அகலமும் கொண்டது.


❇️ இம்மக்கள் எருதுகளை வணங்கினர்.பருத்தி பயிரிட்டனர்.


❇️ 16 மற்றும் அதன் மடங்குகளைப் பயன்படுத்தினர்.


❇️ ஹரப்பா பண்பாட்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு முத்திரைகள் ஆகும்.


❇️ முத்திரைகளில் காளையின் உருவங்களும் பிறவிலங்குகளின் உருவங்களும் காணப்படுகின்றன. வியாபாரதிற்கு இவர்கள் முத்திரைகளை பயன்படுத்தினர்.


❇️ முக்கிய உணவு – கோதுமை, பார்லி


❇️ ஹரப்பாவில் வெண்கல அளவு கோல் கண்டறியப்பட்டுள்ளது.


மொகஞ்சதாரோ நாகரிகம்:

❇️ மொகஞ்சதாரோவை கண்டுபிடித்தவர் – பானார்ஜி(1922)


❇️ மொகஞ்சதாரோ என்னும் சிந்தி மொழிச் சொல்லின் பொருள் – இடுகாட்டு மேடு


❇️ சிறப்பான கழிவுநீர் வெளியேற்ற வசதி உள்ளது.


❇️ கால்வாய்கள் சுண்ணாம்புக் கலவை, சுண்ணாம்புக்கல் மற்றும் ஜிப்சம் போன்றவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.


❇️ மொகஞ்சதாரோவில் பெரிய குளியல் குளம் ஒன்று உள்ளது.இது8மீ நீளமும், 7.01மீ அகலமும் 2.4மீ ஆழமும் கொண்டது.


❇️ ஆடை மாற்றும் அறை காணப்பட்டது.இக்குளத்தில் நீர்வர செங்கல்லானா குழாய்கள் உள்ளன. நீருக்குள் செல்ல அகலமான படிக்கட்டுகள் இருந்தன.


❇️ நகரங்கள் 2 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.


❇️ மேல்பகுதி (அல்லது) சிட்டாடல் மற்றும் கீழ்பகுதி.


❇️ மேல்பகுதியில் – பொதுக் கட்டிடங்கள், தானியக் கிடங்குகள், முக்கிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சமயக் கட்டிடங்கள் உள்ளன.


❇️ கீழ்பகுதி – மக்கள் வாழ்வதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.


❇️ கோதுமை, பார்லி, கேழ்வரகு, பட்டாணி, எள், கடுகு, அரிசி(லோத்தல்), பருத்தி,பேரீச்சம்பழம், தர்பூசணி மற்றும் பிற பயிரிடப்பட்டன.


❇️ மரத்தாலான கலப்பைகள் பயன்படுத்தபட்டன.


❇️ ஆயுதங்கள் பெரும்பாலும் தாமிரம் மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட்டன.


❇️ வெண்கலத்தை உருவாக்க ராஜஸ்தானில் கேத்ரி மற்றும் பலுசிஸ்தான் ஆகியவற்றில் தாமிரமும், ஆப்கானிஸ்தானிலிருந்து தகரம் பெறப்பட்டன.


❇️ ஆடைகளில் அதிகமாக ஆபரணங்கள் (தங்கம், வெள்ளி, தந்தம் மற்றும் தாமிரம்) பயன்படுத்தப்பட்டன.


❇️ மண்பாண்டம் செய்யும் சக்கரம் பயன்பாட்டிலிருந்தது.


❇️ மண்பாண்டங்கள் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்திலிருந்தன.


❇️ தாயக்கட்டை விளையாட்டு விளையாடினர்.


❇️ மொஹஞ்சதாரோவில் நடனமாடும் மங்கையின் வெண்கல உருவம் கண்டெடுக்கப்பட்டது.


❇️ அறுவடைக்காக, அரிவாள் போன்ற கருவிகள் பயன்படுத்தினார்கள். இவை பெரும்பாலும் கற்களாலும் வெண்கலத்தாலும் செய்யப்பட்டிருந்தன.


❇️ அன்றைய கால முத்திரைகளிலும், ஓவியங்களிலும் காளை மாடுகளின் உருவம் முக்கிய இடம் பெறுகிறது.


❇️ ஆடுகள், யானைகள், ஒட்டகங்கள், கழுதைகள், நாய்கள், பூனைகள் ஆகியவை வளர்க்கப்பட்டன.


❇️ ஆட்டு இறைச்சி உணவானது. அதன் ரோமம் குளிர்கால உடைகளின் மூலப் பொருளானது.


❇️ வீட்டுக் காவலுக்கு நாய்கள்.தானியங்களைச் சூறையாடும் எலிகளை அழிக்கப் பூனைகள் வளர்க்கப்பட்டன.


❇️ முக்கிய உணவுகள்: கோதுமை, பார்லி, திணை, பால், மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, மீன்


❇️ முக்கியத் தொழில்கள்: விவசாயம்,வேட்டையாடுதல், மீன் பிடித்தல்


❇️ எருமையை ஒரு மனிதன் வேட்டையாடும் முத்திரைச் சின்னங்கள் கிடைத்துள்ளன.


❇️ இன்னும் பல முத்திரைகளில் மீன், படகுகள், வலை ஆகிய உருவங்கள் பதிக்கப்பட்டுள்ளன.


❇️ உயர் மட்டத்தினர் மட்டுமே பருத்தி ஆடைகள் அணிந்தனர். எளிய மக்கள் சணல், கம்பளி ஆடைகளைப் பயன்படுத்தினார்கள்.


❇️ மொஹஞ்சதாரோவின் மிகப்பெரிய கட்டட அமைப்பு – தானியக் களஞ்சியம்.இது 150 அடி நீளமும், 50 அடி அகலமும் கொண்டது.


❇️ சமூகக் கூடமும் மாடிக்கட்டிடமும் காணப்பட்டன.


காளிபங்கன்:

❇️ ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது.


❇️ காளிபங்கன் சரஸ்வதி நதிக்கரையில் (காக்கரா) மீது அமைந்துள்ளது.


❇️ உழவுத் தொழில் மேற்கொள்ளப்பட்டது.


லோத்தல்:

❇️ எஸ்.ஆர்.ராவ் என்பவரால் 1957ல் கண்டுபிடிக்கப்பட்டது.


❇️ குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் மாநிலத்தில் உள்ளது.


❇️ சிந்து சமவெளி நாகரிகத்தின் வாணிகத் துறைமுக நகரம்.இது பாக்குவார் நதிக்கரையின் மீது அமைந்துள்ளது.


❇️ இது வெளிநாட்டுடன் தொடர்புடையது.


❇️ இது மனிதனால் உருவாக்கப்பட்டது.இந்நாகரிகம் ஆரியர் வருகை அல்லது ஆற்று வெள்ளத்தால் அழிந்திருக்கக்கூடும்.


ரூப்பர்:

❇️ இது பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது.


❇️ ஹரப்பா அல்லது அதற்கு முந்தைய காலத்தைச் சார்ந்தது.


❇️ 1953-ல் ஒய்.டி.சர்மா என்பவரால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது.


❇️ திட்டமிட்ட நகர அமைப்பைக் கொண்டது.பெரிய பகுதிகள் சாலைகளால் அமைக்கப்பட்டன.குறிப்பிட்ட இடைவெளிகளில் காணப்பட்ட தெருவிளக்குத் தூண்கள் தெருவிளக்கு அமைப்பைக் காட்டுகின்றன.


No comments:

Popular Posts