Wednesday, December 22, 2021

CURRENT AFFAIRS DECEMBER 2021 | நடப்பு நிகழ்வுகள் 2021 | சமிபத்திய நிகழ்வுகள் 2021

CURRENT AFFAIRS DECEMBER 2021 | நடப்பு நிகழ்வுகள் 2021 | சமிபத்திய நிகழ்வுகள் 2021


❇️ டிசம்பர் 1: இந்தியாவில் கிரிப்டோ கரன்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


❇️ டிசம்பர் 2: உலகத் தடகள அமைப்பின் சார்பில் 2021ஆம் ஆண்டின் சிறந்த பெண்மணியாக, உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் அஞ்சு பாபி ஜார்ஜ் தேர்வு செய்யப்பட்டார்.


❇️ டிசம்பர் 2: உலக நாடுகளில் வேகமாகப் பரவி வரும் வேற்றுருவம் அடைந்த ‘ஒமைக்ரான்’ கரோனா வைரஸ் தொற்று கர்நாடகத்தில் இருவருக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


❇️ டிசம்பர் 3: நாடு முழுவதும் ஒரே சீரான அணை பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வழிசெய்யும் பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது.


❇️ டிசம்பர் 3: தமிழக அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாளைக் கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டது.


❇️ டிசம்பர் 4: தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும் ஆந்திரத்தின் முன்னாள் முதல்வருமான ரோசய்யா (88) உடல்நலக் குறைவால் காலமானார்.


❇️ டிசம்பர் 6: அதிமுக ஒருங்கிணைப் பாளராக ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


❇️ டிசம்பர் 7: கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. டிசம்பர் 8: நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.


❇️ டிசம்பர் 8: இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். டி20 போட்டிகளுக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு நாள் அணிக்கும் நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி நீடிக்கிறார்.


❇️ டிசம்பர் 9: பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் ஒவ்வொருவரின் பெயருக்கு முன்பாக உள்ள இனிஷியல் தமிழிலேயே இருக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.


❇️ டிசம்பர் 10: அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தைப் பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு பாடவைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


❇️ டிசம்பர் 10: பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் தாமதித்ததை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.


❇️ டிசம்பர் 11: துபாயில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் நேப்போமோனியச்சியை நடப்பு உலக சாம்பியனான நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சென் வீழ்த்தினார். இது அவர் வெல்லும் 5-வது பட்டமாகும்.


❇️ டிசம்பர் 12: பிரான்ஸ் நாட்டின் ஆளுகையிலிருந்து விடுதலை பெறுவது தொடர்பாக பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நியூ காலிடோனியாவில் பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், பிரான்ஸின் அங்கமாகத் தொடர மக்கள் ஆதரவளித்தனர்.


❇️ டிசம்பர் 14: பர்மிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அஜய் சிங் 81 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.


❇️ டிசம்பர் 15: நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக தமிழகம் வந்த 47 வயதுடைய நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்தது.


❇️ டிசம்பர் 15: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் காயத்துடன் தப்பிய குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி பெங்களூருவில் காலமானார். இதன்மூலம் விபத்தில் பலினானோர் எண்ணிக்கை 14ஆக அதிகரித்தது.


❇️ டிசம்பர் 16: 1971-ஆம் ஆண்டு வங்கதேசத்தைப் பிரிக்கும் வகையில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி அடைந்ததன் 50-ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.


❇️ டிசம்பர் 16: பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18 வயதிலிருந்து 21 ஆக உயர்த்தும் அரசின் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


❇️ டிசம்பர் 16: மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் பிரசித்திபெற்ற திருவிழாக்களில் ஒன்றான துர்கா பூஜைக்கு யுனெஸ்கோவின் பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.


❇️ டிசம்பர் 17: சூரியனை ஆய்வுசெய்ய முதன் முறையாக அமெரிக்காவின் நாசா அனுப்பிய பார்க்கர் சோலார் விண்கலம் சூரியனின் மேற்பரப்பில் நுழைந்து புதிய அத்தியாயம் படைத்திருக்கிறது.


❇️ டிசம்பர் 17: ‘நீராருங் கடலுடுத்த' எனத் தொடங்கும் மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது.


டிசம்பர் 10 : ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 10-ஆம் தேதி சர்வதேச மனித உரிமைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.1948 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப் பட்டதைக் குறிக்கின்றது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையமானது (United Nations Human Rights Council - UNHRC) 2006 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது. இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையமானது (National Human Rights Commission - NHRC) 1993 ஆம் ஆண்டில் புது தில்லியில் நிறுவப் பட்டுள்ளது.


டிசம்பர் 12: பிரான்ஸ் நாட்டின் ஆளுகையிலிருந்து விடுதலை பெறுவது தொடர்பாக பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நியூ காலிடோனியாவில் பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், பிரான்ஸின் அங்கமாகத் தொடர மக்கள் ஆதரவளித்தனர்.


டிசம்பர் 14: பர்மிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அஜய் சிங் 81 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.


டிசம்பர் 15: நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக தமிழகம் வந்த 47 வயதுடைய நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்தது.


டிசம்பர் 15: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் காயத்துடன் தப்பிய குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி பெங்களூருவில் காலமானார். இதன்மூலம் விபத்தில் பலினானோர் எண்ணிக்கை 14ஆக அதிகரித்தது.


டிசம்பர் 16: 1971-ஆம் ஆண்டு வங்கதேசத்தைப் பிரிக்கும் வகையில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி அடைந்ததன் 50-ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.


டிசம்பர் 16: பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18 வயதிலிருந்து 21 ஆக உயர்த்தும் அரசின் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


டிசம்பர் 16: மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் பிரசித்திபெற்ற திருவிழாக்களில் ஒன்றான துர்கா பூஜைக்கு யுனெஸ்கோவின் பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.


டிசம்பர் 17: சூரியனை ஆய்வுசெய்ய முதன் முறையாக அமெரிக்காவின் நாசா அனுப்பிய பார்க்கர் சோலார் விண்கலம் சூரியனின் மேற்பரப்பில் நுழைந்து புதிய அத்தியாயம் படைத்திருக்கிறது.


டிசம்பர் 17: ‘நீராருங் கடலுடுத்த' எனத் தொடங்கும் மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது.


டிசம்பர் 20: டெல்டா, ஒமைக்ரான் வரிசையில் ‘டெல்மைக்ரான்’ என்கிற புதிய வேற்றுருவ கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.


டிசம்பர் 21: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வழி வகை செய்யும் தேர்தல் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.


டிசம்பர் 22: எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-லிருந்து 21-ஆக உயர்த்தும் சட்ட மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.


டிசம்பர் 23: பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க தமிழகத்தில் ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.


டிசம்பர் 23: ‘பேக்ஸ்லோவிட்’ என்கிற பெயரில் பைசர் நிறுவனம் உருவாக்கியுள்ள கரோனா மாத்திரையை அவசரப் பயன்பாட்டுக்கு அமெரிக்கா அங்கீகரித்தது.


டிசம்பர் 23: கர்நாடக சட்டப்பேரவையில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.


டிசம்பர் 24: வங்கதேசத் தலைநகர் தாக்காவில் நடைபெற்ற ஐந்து நாடுகள் பங்கேற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 4 - 3 என்கிற கோல் கணக்கில் தோற்கடித்தது.


டிசம்பர் 24: 15 வயதுக்குட்பட்ட ஜூனியர் அமெரிக்க ஸ்குவாஷ் ஓபன் கோப்பையில் இந்தியாவைச் சேர்ந்த 13 வயது சிறுமி அனாஹட் சிங் வென்றார். இத்தொடரை வெல்லும் முதல் இந்திய பதின்பருவச் சிறுமி இவர்.


டிசம்பர் 25: ஜனவரி 3-ஆம் தேதி முதல் 15 -18 வயதுள்ள சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், முன்களப் பணியாளர்களுக்கு ஜனவரி 10 முதல் கூடுதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அறிவித்தார்.


டிசம்பர் 25: தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் பதிவான மாநிலங்களில் உத்தர பிரதேசம் முதலிடம் பிடித்தது.


டிசம்பர் 25: மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை தயாரித்த 2021ஆம் ஆண்டு நல்லாட்சிக் குறியீட்டில் நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவில் தமிழகம் முதலிடம் பிடித்தது.


டிசம்பர் 26: பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் (78) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.


டிசம்பர் 28: உலகின் மிக சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கியான ‘ஜேம்ஸ் வெப்’பை நாசா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.


டிசம்பர் 29: அம்பை எழுதிய ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுப்புக்கு 2021ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப் பட்டது. அதேபோல, ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ என்கிற சிறார் கதை தொகுப்புக்காக எழுத்தாளர் மு.முருகேஷுக்கு பால சாகித்ய விருது அறிவிக்கப்பட்டது.


டிசம்பர் 30: தேசிய அளவில் புதிய கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் உயர் கல்வி நிறுவனங்களுக்கான ‘அடல்’ தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்தது.


டிசம்பர் 31: ஓமைக்ரான் வகை கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் மீண்டும் புதிய கட்டுப் பாடுகளைத் தமிழக அரசு அமல்படுத்தியது.


டிசம்பர் 31: துபாயில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா எட்டாவது முறையாக சாம்பியனாகி சாதனை படைத்தது.


No comments:

Popular Posts