Ad Code

Responsive Advertisement

6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான அறிவியல் | Science Part-1


1. நீளத்தின் பன்னாட்டு (SI) அலகு என்ன? விடை: மீட்டர்

2. பூமியை விட நிலவில் ஈர்ப்பு விசை எவ்வாறு இருக்கும்? விடை: ஆறு மடங்கு குறைவாக இருக்கும்

3. தானியங்கி வாகனங்கள் கடக்கும் தொலைவைக் கணக்கிடும் கருவி எது? விடை: ஓடோமீட்டர்

4. மெட்ரிக் முறை அலகுகள் யாரால், எப்போது உருவாக்கப்பட்டது? விடை: 1790-ல் ஃபிரெஞ்சு நாட்டினரால்

5. நீளத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் அளவுகோலைக் கண்டுபிடித்தவர் யார்? விடை: வில்லியம் பெட்வெல்

6. 'ரோபாட்' என்ற வார்த்தை எந்த மொழிச் சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டது? விடை: செக்கோஸ்லோவியா (ரோபாட்டா)

7. பருப்பொருள்களில் உள்ள சிறிய துகளை 'பரமானு' என்று அழைத்த இந்திய தத்துவமேதை யார்? விடை: கனடா

8. பருப்பொருளின் நான்காம் நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது? விடை: பிளாஸ்மா நிலை

9. பருப்பொருளின் ஐந்தாம் நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது? விடை: போஸ்-ஐன்ஸ்ட்டீன் சுருக்கம்

10. துணி துவைக்கும் இயந்திரம் எந்த தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது? விடை: மைய விலக்கல்

11. உலகின் மிக நீளமான நதி எது? விடை: நைல் நதி (6,650 கி.மீ)

12. இந்தியாவின் மிக நீளமான நதி எது? விடை: கங்கை நதி (2,525 கி.மீ)

13. வளரும் பருவ நிலையில் அதிவேகமாக வளரக்கூடிய தாவரம் எது? விடை: மூங்கில்

14. அமீபாவில் கழிவு நீக்கம் எதன் மூலம் நடைபெறுகிறது? விடை: சுருங்கும் நுண் குமிழ்கள்

15. பாரமீசியம் எதன் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது? விடை: குறுஇழைகள்

16. யூக்ளினா எதன் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது? விடை: கசையிழை

17. 'பாலைவனக் கப்பல்' என்று அழைக்கப்படும் விலங்கு எது? விடை: ஒட்டகம்

18. அதிக புரதம் உள்ள உணவு எது? விடை: சோயாபீன்ஸ்

19. ஆரஞ்சு பழங்களைவிட 20 மடங்கு அதிக வைட்டமின்-C காணப்படும் கனி எது? விடை: நெல்லிக்கனி

20. இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு காரணமான சத்து எது? விடை: இரும்புச் சத்து

21. தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்குத் தேவையான தாது உப்பு எது? விடை: அயோடின்

22. புரதக் குறைபாட்டினால் ஏற்படும் நோய்கள் யாவை? விடை: குவாஷியோர்கர், மராஸ்மஸ்

23. கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் நோய் எது? விடை: ரிக்கெட்ஸ்

24. பாஸ்பரஸ் குறைபாட்டால் ஏற்படும் நோய் எது? விடை: ஆஸ்டியோமலேசியா

25. இரும்புச் சத்துக் குறைபாட்டால் ஏற்படும் நோய் எது? விடை: இரத்தசோகை

26. வெப்பத்தின் SI அலகு என்ன? விடை: ஜூல்

27. வெப்பநிலையின் SI அலகு என்ன? விடை: கெல்வின்

28. மனித உடலின் சராசரி வெப்பநிலை எவ்வளவு? விடை: 37°C (அல்லது 98.6°F)

29. மின்விளக்கைக் கண்டறிந்தவர் யார்? விடை: தாமஸ் ஆல்வா எடிசன்

30. மின்சாரத்தை உருவாக்கும் திறன் கொண்ட மீன் இனம் எது? விடை: ஈல் மீன்

31. வளிமண்டலம் எத்தனை அடுக்குகளால் ஆனது? விடை: ஐந்து அடுக்குகள்

32. ஓசோன் படலம் வளிமண்டலத்தின் எந்த அடுக்கில் அமைந்துள்ளது? விடை: அடுக்குவளி மண்டலம் (Stratosphere)

33. காற்றில் நைட்ரஜன் வாயுவின் அளவு என்ன? விடை: 78%

34. காற்றில் ஆக்சிஜன் வாயுவின் அளவு என்ன? விடை: 21%

35. செயற்கை மழை பொழிய வைக்கப் பயன்படுவது எது? விடை: உலர் பனிக்கட்டி (திட கார்பன் டை ஆக்சைடு)

36. 'மைக்ரோகிராபியா' என்ற நூலினை வெளியிட்டவர் யார்? விடை: ராபர்ட் ஹூக்

37. 'செல்' என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது? விடை: லத்தீன் மொழி

38. தெளிவான உட்கருவைக் கொண்டுள்ள செல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? விடை: யூகேரியோட்டிக் செல்கள்

39. 'செல்லின் ஆற்றல் மையம்' என்று அழைக்கப்படும் செல் நுண்ணுறுப்பு எது? விடை: மைட்டோகாண்டிரியா

40. செல்லின் 'சேமிப்பு கிடங்கு' என அழைக்கப்படுவது எது? விடை: நுண்குமிழ்கள்

41. செல்லின் கட்டுப்பாட்டு மையமாக செயல்படுவது எது? விடை: உட்கரு (நியூக்ளியஸ்)

42. முதிர்ச்சியடைந்த மனிதனின் எலும்புக்கூட்டில் எத்தனை எலும்புகள் உள்ளன? விடை: 206 எலும்புகள்

43. ஒவ்வொரு நுரையீரலிலும் ஏறக்குறைய எத்தனை நுண் காற்றுப்பைகள் உள்ளன? விடை: 300 மில்லியன்

44. இரத்த அணுக்கள் எத்தனை வகைப்படும்? விடை: மூன்று வகைகள் (RBC, WBC, தட்டுக்கள்)

45. இரத்தச் சிவப்பணுக்கள் (RBC) எங்கு உற்பத்தியாகின்றன? விடை: எலும்பு மஜ்ஜையில்

46. நமது உடலில் உள்ள மிக நீளமான எலும்பு எது? விடை: தொடை எலும்பு (ஃபீமர்)

47. நமது உடலில் உள்ள மிகச்சிறிய எலும்பு எது? விடை: அங்கவடி எலும்பு (உள்காதில் உள்ளது)

48. சூரிய ஒளியைப் பயன்படுத்தி வைட்டமின்-D ஐ உற்பத்தி செய்யும் உறுப்பு எது? விடை: தோல்

49. காந்தத்தின் திசைக் காட்டும் பண்பை முதன்முதலில் கண்டறிந்தவர்கள் யார்? விடை: சீனர்கள்

50. புவியில் காணப்படும் மொத்த நீரில் உப்பு நீரின் சதவீதம் என்ன? விடை: 97%

51. உலக நீர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? விடை: மார்ச் 22

52. இயற்கையான நிறங்காட்டிக்கு ஒரு எடுத்துக்காட்டு தருக? விடை: மஞ்சள்

53. சோப்பு தயாரிக்கப் பயன்படும் முக்கிய மூலப்பொருள் எது? விடை: சோடியம் ஹைட்ராக்சைடு

54. சிமெண்டைக் கண்டுபிடித்தவர் யார்? விடை: வில்லியம் ஆஸ்பிடின் (1824)

55. ஜிப்சத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு என்ன? விடை: CaSO4. 2H2O

56. எப்சம் உப்பின் வேதிப்பெயர் என்ன? விடை: மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட்

57. கார்பாலிக் அமிலம் என்று அழைக்கப்படும் கரிம அமிலம் எது? விடை: பீனால்

58. உலக உணவு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? விடை: அக்டோபர் 16

59. ஒரு வானியல் அலகு என்பதன் மதிப்பு என்ன? விடை: 149.6 மில்லியன் கிலோமீட்டர்

60. ஒரு ஒளி ஆண்டு என்பதன் மதிப்பு என்ன? விடை: 9.46 x 10^15 மீட்டர்

61. பருப்பொருளின் பிரிக்க இயலாத எளிய வேதிப்பொருள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? விடை: தனிமம்

62. அறை வெப்பநிலையில் திரவ நிலையில் காணப்படும் ஒரே அலோகம் எது? விடை: புரோமின்

63. அணுக்கொள்கையை முதன்முதலில் வெளியிட்டவர் யார்? விடை: ஜான் டால்டன் (1808)

64. எலக்ட்ரானைக் கண்டறிந்தவர் யார்? விடை: சர் ஜான் ஜோஸப் தாம்சன்

65. புரோட்டானைக் கண்டறிந்தவர் யார்? விடை: எர்னஸ்ட் ரூதர்போர்டு

66. நியூட்ரானைக் கண்டறிந்தவர் யார்? விடை: ஜேம்ஸ் சாட்விக்

67. ஒரு அணுவின் அணு எண் (Z) என்பது எதைக் குறிக்கிறது? விடை: எலக்ட்ரான்கள் அல்லது புரோட்டான்களின் எண்ணிக்கை

68. ஒரு அணுவின் நிறை எண் என்பது எதைக் குறிக்கிறது? விடை: புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல்

69. ஒத்த அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்களையும் கொண்ட அணுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? விடை: ஐசோடோப்புகள்

70. டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசு எது? விடை: ஏடிஸ் எஜிப்டி

71. காசநோயை (TB) உருவாக்கும் பாக்டீரியா எது? விடை: மைக்ரோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்

72. காலரா நோயை உருவாக்கும் நுண்ணுயிரி எது? விடை: விப்ரியோ காலரே (பாக்டீரியா)

73. நமது பால்வீதி விண்மீன் திரளுக்கு அருகில் உள்ள விண்மீன் திரள் எது? விடை: ஆண்ட்ரோமெடா

74. மின்னூட்டத்தின் (Charge) SI அலகு என்ன? விடை: கூலூம்

75. மின்னோட்டத்தை (Current) அளவிடப் பயன்படும் கருவி எது? விடை: அம்மீட்டர்

76. மின்னழுத்த வேறுபாட்டை அளவிடப் பயன்படும் கருவி எது? விடை: வோல்ட் மீட்டர்

77. மின்தடையின் SI அலகு என்ன? விடை: ஓம்

78. ஒலிவரைவியைக் (கிராமஃபோன்) கண்டுபிடித்தவர் யார்? விடை: தாமஸ் ஆல்வா எடிசன்

79. பனிக்கட்டி உருகி நீராக மாறுவது எவ்வகை மாற்றம்? விடை: இயற்பியல் மாற்றம்

80. இரும்பு துருப்பிடித்தல் என்பது எவ்வகை மாற்றம்? விடை: வேதியியல் மாற்றம்

81. செல்லின் 'தற்கொலைப்பைகள்' என அழைக்கப்படும் நுண்ணுறுப்பு எது? விடை: லைசோசோம்

82. தாவர செல்லின் 'உணவுத் தொழிற்சாலை' எனப்படுவது எது? விடை: பசுங்கணிகம்

83. நவீன வகைப்பாட்டியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? விடை: கரோலஸ் லின்னேயஸ்

84. வகைப்பாட்டியலின் அடிப்படை அலகு எது? விடை: சிற்றினம்

85. மனிதனின் அறிவியல் பெயர் என்ன? விடை: ஹோமோ சேப்பியன்ஸ்

86. வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் என்ன? விடை: வினாடிக்கு 3 லட்சம் கி.மீ

87. முதன்மை நிறங்களை சமமான விகிதத்தில் ஒன்றாகக் கலக்கும்போது கிடைக்கும் நிறம் எது? விடை: வெள்ளை நிறம்

88. இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் எது? விடை: ஆர்யபட்டா

89. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? விடை: 1969

90. செவ்வாய் கிரகத்தை ஆராய இஸ்ரோ ஏவிய விண்கலத்தின் பெயர் என்ன? விடை: மங்கள்யான் (2013)

91. இயற்கை இழைகளிலேயே மிகவும் வலிமையான இழை எது? விடை: பட்டு இழை

92. பிளாஸ்டிக்கில் உள்ள எந்த வேதிப்பொருள் புற்றுநோயை ஏற்படுத்துகிறது? விடை: ஸ்டைரீன்

93. பென்சிலின் என்ற முதல் ஆன்டிபயாடிக் மருந்தைக் கண்டுபிடித்தவர் யார்? விடை: டாக்டர். அலெக்சாண்டர் ஃபிளெமிங்

94. காய்ச்சலைக் குறைக்கும் வேதிப் பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? விடை: ஆன்டிபைரடிக்ஸ் (உடல் வெப்பம் தனிப்பி)

95. பட்டு உற்பத்தியில் உலகில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது? விடை: இரண்டாவது இடம்

96. சமையல் சோடாவின் வேதிப்பெயர் என்ன? விடை: சோடியம் பை கார்பனேட்

97. வளிமண்டல அழுத்தத்தை அளக்கப் பயன்படும் 'பாரோமீட்டரை'க் கண்டறிந்தவர் யார்? விடை: டாரிசெல்லி

98. தாவரங்களில் நீர் மேலேறுவதற்குக் காரணமான விசை எது? விடை: பரப்பு இழுவிசை

99. பெரிஸ்கோப் எந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது? விடை: ஒளி எதிரொளித்தல்

100. தாவரங்கள் தமக்குத் தேவையான உணவைத் தாமே தயாரித்துக் கொள்ளும் நிகழ்வின் பெயர் என்ன? விடை: ஒளிச்சேர்க்கை

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement