ஒளி மற்றும் ஒளியியல்
- முழு அக எதிரொளிப்பு தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் தகவல் தொடர்பு சாதனம் எது?
- விடை: ஒளி இழை
- ஊசித்துளை காமிராவைப் பயன்படுத்தி சூரியனின் இயக்கத்தைப் பதிவு செய்யும் புகைப்பட முறைக்கு என்ன பெயர்?
- விடை: சோலாகிராபி
- கண்ணுறு ஒளியின் அலைநீள நெடுக்கம் தோராயமாக எவ்வளவு?
- விடை: 400 நேனோ மீட்டர் முதல் 700 நேனோ மீட்டர் வரை
- நிறப்பிரிகையில் கிடைக்கும் வண்ணங்களில் மிகக் குறைந்த அலைநீளம் கொண்ட நிறம் எது?
- விடை: ஊதா நிறம்
- இரண்டாம் நிலை நிறங்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக?
- விடை: மெஜந்தா, சையான், மஞ்சள்
- பல் மருத்துவர்கள் நோயாளிகளின் பற்களைப் பெரிதாக்கிக் காணப் பயன்படுத்தும் ஆடி எது?
- விடை: குழி ஆடி
- வாகனங்களில் பின்புறம் வரும் வாகனங்களைப் பார்க்கப் பயன்படும் ஆடி எது?
- விடை: குவி ஆடி
- ஒளியின் பன்முக எதிரொளிப்புத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் கருவி எது?
- விடை: கலைடாஸ்கோப்
- நீர்மூழ்கிக் கப்பலுக்கு மேலாக உள்ள பொருள்களைப் பார்க்கப் பயன்படும் கருவி எது?
- விடை: பெரிஸ்கோப்
- வலுவான ஒளிக்கற்றையை கூழ்மக் கரைசலின் வழியே செலுத்தும்போது அதன் பாதை ஒளிரும் நிகழ்வுக்கு என்ன பெயர்?
- விடை: டிண்டால் விளைவு
- ஒரு விண்ணியல் ஆரம் (Parsec) என்பதன் மதிப்பு என்ன?
- விடை: 3.26 ஒளி ஆண்டு
- சுருள் விண்மீன்திரளான நமது பால்வீதியின் விட்டம் தோராயமாக எவ்வளவு?
- விடை: 1,00,000 ஒளி ஆண்டுகள்
- சர்வதேச வானியல் சங்கம் எத்தனை விண்மீன் மண்டலங்களை வகைப்படுத்தியுள்ளது?
- விடை: 88 மண்டலங்கள்
- இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான 'ஆர்யபட்டா' விண்ணில் செலுத்தப்பட்ட ஆண்டு என்ன?
- விடை: 1975
- சந்திரனைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதற்காக 'சந்திராயன்-1' ஏவப்பட்ட நாள் எது?
- விடை: 2008, அக்டோபர் 22
- செவ்வாயின் சுற்றுப்பாதையில் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக நுழைந்த நாள் எது?
- விடை: 2014, செப்டம்பர் 24
- விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர் யார்?
- விடை: ராகேஷ் சர்மா (1984)
- மிகவும் துல்லியமான அணுக்கடிகாரங்கள் எந்த அணுவை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன?
- விடை: சீசியம் - 133 அணு
- இந்திய திட்ட நேரம் எந்த மாநிலத்தின் வழியாகச் செல்லும் தீர்க்கக் கோட்டை ஆதாரமாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது?
- விடை: உத்திரப்பிரதேசம் (மிர்சாபூர்)
- நீரியல் அழுத்தி மற்றும் வாகனங்களின் தடை (Break) அமைப்பு எந்த விதியின் அடிப்படையில் செயல்படுகிறது?
- விடை: பாஸ்கல் விதி
- SI அலகு முறையில் ஒரு வளிமண்டல அழுத்தம் (1 atm) என்பது எத்தனை பாஸ்கல் அளவுக்குச் சமம்?
- விடை: 1,00,000 பாஸ்கல்
- மிதக்கும் பொருட்களின் தத்துவத்தின் அடிப்படையில் திரவத்தின் அடர்த்தியை அளக்கப் பயன்படும் கருவி எது?
- விடை: திரவமானி
- பாலின் தூய்மையைக் கண்டறியப் பயன்படும் 'பால்மானி' எவ்வகை கருவிக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்?
- விடை: திரவமானி
- சலவை இயந்திரங்களில் ஈரத்துணியிலிருந்து நீரை வெளியேற்றப் பயன்படும் தத்துவம் எது?
- விடை: மைய விலக்கல்
- குறுக்கலைகள் எந்தெந்த ஊடகங்களில் மட்டுமே உருவாகும்?
- விடை: திட மற்றும் திரவங்களில்
- நெட்டலைகள் எந்தெந்த ஊடகங்களில் உருவாகும்?
- விடை: திட, திரவ மற்றும் வாயுக்களில்
- 20 ஹெர்ட்ஸ்க்கு குறைவான அதிர்வெண் கொண்ட ஒலிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
- விடை: குற்றொலி
- 20000 ஹெர்ட்ஸை விட அதிக அதிர்வெண் கொண்ட ஒலிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
- விடை: மீயொலி
- கடலின் ஆழத்தைக் கண்டறியவும், நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியவும் பயன்படும் மீயொலி கருவி எது?
- விடை: சோனார் (SONAR)
- இரும்பின் தாதுக்களில் மிகவும் வலிமையான காந்தப் பண்பைப் பெற்றுள்ள தாது எது?
- விடை: மேக்னடைட்
- காந்தப்புலத்தின் திசையிலேயே வலிமையாக காந்தமாக்கப்படும் பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
- விடை: ஃபெர்ரோ காந்தப்பொருள்கள்
- மின்சார மணி மற்றும் பளு தூக்கிகளில் பயன்படும் காந்தங்கள் எவை?
- விடை: தற்காலிக காந்தங்கள் (செயற்கைக் காந்தங்கள்)
- ராக்கெட்டுகளில் தாழ் வெப்பநிலையில் பயன்படுத்தப்படும் இயக்கு பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
- விடை: கிரையோஜெனிக் இயக்கு பொருள்கள்
- ஒரு மீட்டர் என்பது எத்தனை நானோ மீட்டருக்குச் சமம்?
- விடை: 10^9 (ஒரு பில்லியன்) நானோ மீட்டர்
- 'பலபடி' (Polymer) என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
- விடை: கிரேக்க மொழி
- முதன்முதலில் முழுமையாக பதப்படுத்தப்பட்ட செயற்கை இழை எது?
- விடை: நைலான்
- 'ரேயான்' என்ற செயற்கை பட்டு எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
- விடை: மரக்கூழில் உள்ள செல்லுலோஸ்
- நெகிழி ரெசின் குறியீடு எண் '3' என்பதைக் குறிக்கும் பிளாஸ்டிக் வகை எது?
- விடை: பாலிவினைல் குளோரைடு (PVC)
- சாதாரண கண்ணாடி (சோடா-லைம் சிலிக்கா கண்ணாடி) உருக எவ்வளவு வெப்பநிலை தேவை?
- விடை: 1700°C
- அமில நீக்கியாக (Antacid) செயல்படும் முக்கிய வேதிப்பொருள் எது?
- விடை: சோடியம் பை கார்பனேட் / மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
- மயக்கமூட்டும் மருந்தான கோகைனை முதன்முதலில் பிரித்தெடுத்தவர் யார்?
- விடை: ஆல்பர்ட் நீம்மானின் (1860)
- மீத்தேன் வாயுவின் கலோரி மதிப்பு எவ்வளவு?
- விடை: 50,000 kJ/kg
- எப்சம் உப்பு எரிவதால் உருவாகும் சுடரின் நிறம் என்ன?
- விடை: வெண்மை சுடர்
- போராக்ஸ் பவுடர் எரிவதால் உருவாகும் சுடரின் நிறம் என்ன?
- விடை: பச்சை சுடர்
- 'மயில் துத்தம்' என அழைக்கப்படும் வேதிச் சேர்மம் எது?
- விடை: தாமிர சல்பேட்
- 'பச்சைத் துத்தம்' என அழைக்கப்படும் வேதிச் சேர்மம் எது?
- விடை: இரும்பு சல்பேட்
- 'விட்டிரியால் எண்ணெய்' என்று அழைக்கப்படும் கனிம அமிலம் எது?
- விடை: கந்தக அமிலம்
- சால்வே முறையில் தயாரிக்கப்படும் சேர்மம் எது?
- விடை: சோடியம் கார்பனேட் (சலவை சோடா)
- ஹேபர் முறையில் அம்மோனியா தயாரிக்கப் பயன்படும் வினைவேக மாற்றி எது?
- விடை: இரும்பு
- வனஸ்பதி நெய் (டால்டா) தயாரித்தலில் வினைவேக மாற்றியாகப் பயன்படுவது எது?
- விடை: நிக்கல்
- ஆப்பிள்கள் நறுக்கிய பின் காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் வினைபுரிந்து பழுப்பு நிறமாக மாறக் காரணமான நிறமி எது?
- விடை: மெலனின்
- முட்டைகள் அழுகும்போது எவ்வித வாயு உருவாவதால் துர்நாற்றம் ஏற்படுகிறது?
- விடை: ஹைட்ரஜன் சல்பைடு
- புரோட்டான் எனப்படும் நேர்மின்வாய்க் கதிர்களைக் கண்டறிந்தவர் யார்?
- விடை: கோல்ஸ்டின்
- வேதிவினையின்போது நிலைப்புத் தன்மையை அடைய ஓர் அணுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது இழக்கப்பட்ட எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: இணைதிறன்
- 'மாறா விகித விதியை' வெளியிட்ட அறிவியல் அறிஞர் யார்?
- விடை: ஜோசப் ப்ரௌஸ்ட்
- காற்றில் இருந்து நைட்ரஜன் வாயுவை முதன்முதலில் பிரித்தெடுத்தவர் யார்?
- விடை: கார்ல் வில்கம் ஷீலே (1772)
- 'உலர் பனிக்கட்டி' எனப்படுவது எந்த வேதிப்பொருளின் திடநிலை ஆகும்?
- விடை: கார்பன் டை ஆக்சைடு
- கூழ்மத் துகள்களின் சீரற்ற மற்றும் ஒழுங்கற்ற இயக்கத்திற்கு என்ன பெயர்?
- விடை: பிரௌனியன் இயக்கம்
- ஒன்றோடொன்று கலவாத இரண்டு திரவங்களைச் சேர்ப்பதால் உருவாகும் சிறப்பு வகை கலவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: பால்மம்
- அணுவின் உட்கருவைச் சுற்றி எலக்ட்ரான்கள் சுற்றிவரும் வட்டப்பாதை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: ஆர்பிட் (அல்லது எலக்ட்ரான் கூடு)
- ஒத்த நியூட்ரான் எண்ணிக்கையைக் கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
- விடை: ஐசோடோன்கள்
- தொல்லுயிர் படிமங்களின் வயதைக் கணிக்கப் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு எது?
- விடை: கார்பன் - 14
- புற்றுநோயைக் குணப்படுத்தப் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு எது?
- விடை: கோபால்ட் - 60 (மற்றும் தங்கம்-198)
- தைராய்டு நோயைக் கண்டறிய மற்றும் குணப்படுத்தப் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு எது?
- விடை: அயோடின் - 131
- தனிமங்களை வகைப்படுத்த 'மும்மை விதியை' வெளியிட்டவர் யார்?
- விடை: ஜோகன் உல்ஃப்காங் டொபரீனர்
- தனிமங்களை வகைப்படுத்த 'எண்ம விதியை' (Law of Octaves) வெளியிட்டவர் யார்?
- விடை: ஜான் நியூலாந்து (1866)
- நவீன தனிம வரிசை அட்டவணையை அணு எண்ணின் அடிப்படையில் உருவாக்கியவர் யார்?
- விடை: ஹென்றி மோஸ்லே
- நவீன தனிம வரிசை அட்டவணையில் எத்தனை தொடர்கள் மற்றும் தொகுதிகள் உள்ளன?
- விடை: 7 தொடர்கள், 18 தொகுதிகள்
- தனிம வரிசை அட்டவணையில் 18-வது தொகுதியில் இடம்பெற்றுள்ள தனிமங்கள் எவை?
- விடை: மந்த வாயுக்கள் (அரிய வாயுக்கள்)
- இரு அணுக்கள் எலக்ட்ரான்களைச் சமமாகப் பங்கீடு செய்து உருவாக்குவது எவ்வகைப் பிணைப்பு?
- விடை: சகப்பிணைப்பு
- ராஜதிராவகம் (Aqua Regia) எந்த இரு அமிலங்களின் கலவையாகும்?
- விடை: ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலம் (3:1 விகிதம்)
- அமில மற்றும் காரக் கரைசல்களின் வலிமையை அளவிடப் பயன்படும் அளவீடு எது?
- விடை: pH அளவீடு
- சலவைத் தூளின் (Bleaching powder) வேதிப்பெயர் என்ன?
- விடை: கால்சியம் ஆக்ஸிகுளோரைடு
- பாரிஸ் சாந்து (Plaster of Paris) என்பதன் வேதிப்பெயர் என்ன?
- விடை: கால்சியம் சல்பேட் ஹெமிஹைட்ரேட்
- இயற்கையில் கிடைக்கும் மிகவும் கடினமான கார்பனின் புறவேற்றுமை வடிவம் எது?
- விடை: வைரம்
- பக்மின்ஸ்டர் ஃபுல்லரீன் என்ற கார்பன் புறவேற்றுமை வடிவத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு என்ன?
- விடை: C60
- காற்றில்லா சூழலில் நிலக்கரியை வெப்பப்படுத்தி நிலக்கரி வாயு, கல்கரி பெறுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: சிதைத்து வடித்தல்
- உற்பத்தி வாயு (Producer Gas) என்பது எந்த இரு வாயுக்களின் கலவையாகும்?
- விடை: கார்பன் மோனாக்சைடு மற்றும் நைட்ரஜன்
- நீர் வாயு (Water Gas) என்பது எந்த இரு வாயுக்களின் கலவையாகும்?
- விடை: கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜன்
- மிக அதிக அளவு கார்பனையும் (86-97%) அதிக வெப்ப ஆற்றலையும் கொண்ட உயர்தர நிலக்கரி வகை எது?
- விடை: ஆந்த்ரசைட்
- 'கருப்புத் தங்கம்' மற்றும் 'கருப்பு வைரம்' என்று அழைக்கப்படுபவை எவை?
- விடை: பெட்ரோலியம் (கருப்புத் தங்கம்), நிலக்கரி (கருப்பு வைரம்)
- பெட்ரோலின் தரத்தைக் குறிக்கப் பயன்படும் எண் மதிப்பீடு எது?
- விடை: ஆக்டேன் எண்
- டீசலின் தரத்தைக் குறிக்கப் பயன்படும் எண் மதிப்பீடு எது?
- விடை: சீட்டேன் எண்
- வேதிப்பொருட்களின் அரசன் என்று அழைக்கப்படும் அமிலம் எது?
- விடை: சல்பியூரிக் அமிலம்
- பற்பசையில் (Toothpaste) உள்ள எந்த சேர்மம் பற்களை வலுப்படுத்தப் பயன்படுகிறது?
- விடை: ஃப்ளோரின் சேர்மங்கள்
- ரப்பரை கெட்டிப்படுத்தும் (வல்கனைசேஷன்) நிகழ்வில் பயன்படும் அலோகம் எது?
- விடை: கந்தகம்
- பித்தளை என்பது எந்த இரு உலோகங்கள் கலந்த உலோகக் கலவையாகும்?
- விடை: செம்பு (தாமிரம்) மற்றும் துத்தநாகம்
- ORS (வாய்வழி நீரேற்று கரைசல்) இன் முக்கியத்துவத்தை முதன்முதலில் எடுத்துரைத்த இந்திய மருத்துவர் யார்?
- விடை: திலீப் மஹாலபாபைஸ்
- பட்டுப்பூச்சி வளர்ப்பு மற்றும் பட்டு உற்பத்தியைப் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு எது?
- விடை: செரிகல்சர்
- 'அகிம்சை பட்டு' அல்லது 'அமைதி பட்டு' உருவாக்கும் முறையைக் கண்டறிந்தவர் யார்?
- விடை: குசுமா ராஜய்யா (1992)
- மனித மண்டையோட்டில் அசையும் மூட்டு கொண்ட ஒரே எலும்பு எது?
- விடை: கீழ்த்தாடை எலும்பு
- மனித விலா எலும்புக்கூட்டில் உள்ள மிதக்கும் விலா எலும்புகள் எத்தனை ஜோடிகள்?
- விடை: 2 ஜோடிகள்
- மனிதன் புன்னகைக்க எத்தனை தசைகள் தேவைப்படுகின்றன?
- விடை: 17 தசைகள்
- மனிதன் கோபப்பட எத்தனை தசைகள் தேவைப்படுகின்றன?
- விடை: 42 தசைகள்
- ஆண்களில் இரண்டாம் நிலை பால் பண்புகள் தோன்றக் காரணமான ஹார்மோன் எது?
- விடை: டெஸ்ட்டோஸ்டீரான் (ஆண்ட்ரோஜன்)
- பெண்களில் இரண்டாம் நிலை பால் பண்புகள் தோன்றக் காரணமான ஹார்மோன் எது?
- விடை: ஈஸ்ட்ரோஜன்
- பாலூட்டுதலின் போது பால் உற்பத்தியைத் தூண்டும் லாக்டோஜெனிக் ஹார்மோன் எது?
- விடை: புரோலாக்டின் (PRL)
- குழந்தைப் பிறப்பின்போது தசைகளை சுருங்கச் செய்து குழந்தை பிறப்பை எளிதாக்கும் ஹார்மோன் எது?
- விடை: ஆக்சிடோசின்
- டி.என்.ஏ வின் இரட்டைச் சுருளின் விட்டம் தோராயமாக எவ்வளவு?
- விடை: 2 நானோ மீட்டர்
- பஞ்சகவ்யா என்பது மாட்டுச்சாணம், மாட்டின் சிறுநீர், பால், தயிர் மற்றும் எந்தப் பொருள் சேர்ந்த கலவையாகும்?
* விடை: நெய்


0 Comments