TNPSC TRB TET 10 ஆம் வகுப்பு அறிவியல் 100 வினா-விடை | Science Part-1


TNPSC TRB TET 10 ஆம் வகுப்பு அறிவியல் 100 வினா-விடை | Science Part-1


அறிவியல் பொது அறிவு வினாக்கள் மற்றும் விடைகள்

இயற்பியல்
எண்கேள்விவிடை
1.நிலைமம் என்றால் என்ன?ஒவ்வொரு பொருளும் புற விசை செயல்படாத வரையில், தமது ஓய்வுநிலை அல்லது நேர்க்கோட்டு இயக்க நிலையை மாற்ற எதிர்ப்பதாகும்.
2.உந்தத்தின் SI அலகு என்ன?கிகி மீவி⁻¹ (kg m s⁻¹).
3.விசையின் SI அலகு என்ன?நியூட்டன் (N).
4.ஒரு நியூட்டன் என்பது எத்தனை டைனுக்குச் சமம்?10 5 டைன்.
5.கணத்தாக்கு விசையின் அலகு என்ன?நியூட்டன் விநாடி (N s) அல்லது கிகி மீவி⁻¹ (kg m s⁻¹).
6.ராக்கெட் ஏவுதலில் பயன்படும் விதிகள் யாவை?நியூட்டனின் மூன்றாம் விதி மற்றும் நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி.
7.புவி ஈர்ப்பு முடுக்கத்தின் சராசரி மதிப்பு என்ன?9.8 மீவி⁻² (m s⁻²).
ஒளியியல்
எண்கேள்விவிடை
8.காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் என்ன?3x10^8 மீவி⁻¹ (m s⁻¹).
9.கண்ணுறு ஒளியில் குறைந்த அலைநீளம் கொண்ட நிறம் எது?ஊதா நிறம்.
10.கண்ணுறு ஒளியில் அதிக அலைநீளம் கொண்ட நிறம் எது?சிவப்பு நிறம்.
11.ஒளிவிலகலின் இரண்டாம் விதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?ஸ்நெல் விதி.
12.வானம் நீல நிறமாகத் தோன்றக் காரணமான ஒளிச்சிதறல் எது?ராலே ஒளிச்சிதறல்.
13.டிண்டால் விளைவு என்றால் என்ன?கூழ்மத்துகள்களால் ஒளிக்கதிர்கள் சிதறலடிக்கப்படுகின்ற நிகழ்வு.
பார்வைக் குறைபாடுகள்
எண்கேள்விவிடை
14.தூரப்பார்வை குறைபாட்டைச் சரிசெய்யப் பயன்படும் லென்சு எது?குவிலென்சு.
15.கிட்டப்பார்வை குறைபாட்டைச் சரிசெய்யப் பயன்படும் லென்சு எது?குழிலென்சு.
16.மனித கண்ணின் தெளிவுறு காட்சியின் மீச்சிறு தொலைவு எவ்வளவு?25 செ.மீ.
17.கிட்டப்பார்வை (மையோபியா) குறைபாடு எதனால் ஏற்படுகிறது?விழிக்கோளம் சிறிது நீண்டு விடுவதால்.
18.தூரப்பார்வை (ஹைப்பர் மெட்ரோபியா) குறைபாடு எதனால் ஏற்படுகிறது?விழிக்கோளம் சுருங்குவதால்.
19.பார்வைச் சிதறல் குறைபாட்டைச் சரிசெய்யப் பயன்படும் லென்சு எது?உருளை லென்சுகள்.
வெப்பம் மற்றும் மின்னியல்
எண்கேள்விவிடை
20.வெப்பநிலையின் SI அலகு என்ன?கெல்வின்.
21.வெப்ப ஆற்றலின் SI அலகு என்ன?ஜுல்.
22.அவகாட்ரோ விதியின் சமன்பாடு என்ன?V/n = மாறிலி.
23.மின்னோட்டத்தின் SI அலகு என்ன?ஆம்பியர்.
24.மின்னழுத்த வேறுபாட்டின் அலகு என்ன?வோல்ட்.
25.மின்தடையின் அலகு என்ன?ஓம்.
26.மின்சலவைப் பெட்டி போன்ற வெப்பமேற்றும் சாதனங்களில் பயன்படும் கடத்தி எது?நிக்ரோம்.
27.மின்திறனின் SI அலகு என்ன?வாட்.
28.ஒரு குதிரை திறன் என்பது எத்தனை வாட்?746 வாட்.
29.வீட்டுக்குரிய மின்சுற்றுகளில் அனுப்பப்படும் மாறுதிசை மின்னோட்டத்தின் மின்னழுத்தம் என்ன?220/230 வோல்ட்.
ஒலியியல்
எண்கேள்விவிடை
30.செவியுணர் ஒலி அலைகளின் அதிர்வெண் என்ன?20Hz முதல் 20,000Hz வரை.
31.குற்றொலி அலைகளின் அதிர்வெண் என்ன?20Hz ஐ விடக் குறைவான அதிர்வெண்.
32.மீயொலி அலைகளின் அதிர்வெண் என்ன?20,000Hz க்கும் அதிகமான அதிர்வெண்.
33.காற்றில் (20°C) ஒலியின் திசைவேகம் என்ன?343 மீவி⁻¹ (m s⁻¹).
34.எதிரொலி கேட்க குறைந்தபட்சத் தொலைவு எவ்வளவு இருக்க வேண்டும்?17.2 மீ.
35.விமானத்தின் வேகத்தைக் கணக்கிட உதவும் கருவி எது?ரேடார்.
அணுக்கரு இயற்பியல்
எண்கேள்விவிடை
36.மின்சுமையற்ற நியூட்ரான்களைக் கண்டறிந்தவர் யார்?ஜேம்ஸ் சாட்விக்.
37.கதிரியக்கத்தைக் கண்டறிந்தவர் யார்?ஹென்றிபெக்கொரல்.
38.கதிரியக்கத்தின் பன்னாட்டு அலகு எது?பெக்கோரல்.
39.ஆல்பா துகள்கள் எம்மின்சுமை கொண்டவை?நேர்மின் சுமை.
40.காமா கதிர்கள் எம்மின்சுமை கொண்டவை?மின்சுமையற்றவை.
41.இரண்டாம் உலகப்போரின்போது ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் என்ன?Little boy.
42.நிறை ஆற்றல் சமன்பாட்டிற்கான தொடர்பு என்ன?$E=mc^{2}$.
43.சூரியனில் நடைபெறும் அணுக்கரு வினை எது?அணுக்கரு இணைவு.
கதிரியக்க ஐசோடோப்புகளின் பயன்கள்
எண்கேள்விவிடை
44.முன் கழுத்துக் கழலையைக் குணப்படுத்த உதவும் ஐசோடோப் எது?கதிரியக்க அயோடின் 131.
45.ரத்தச் சோகையை அடையாளம் காண உதவும் ஐசோடோப் எது?இரும்பு - 59.
46.ஆசியா மற்றும் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் அணுக்கரு உலை எது?அப்சரா.
47.ஓர் எலக்ட்ரான் வோல்ட் (1 eV) என்பது எத்தனை ஜுல்?$1.602\times10^{-19}$ ஜுல்.
வேதியியல்
எண்கேள்விவிடை
48.அணுவைப் பற்றிய முதல் அறிவியல் கோட்பாட்டினை வெளியிட்டவர் யார்?ஜான் டால்டன்.
49.மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது?அணுக்கட்டு எண்.
50.நவீன ஆவர்த்தன விதியை உருவாக்கியவர் யார்?ஹென்றி மோஸ்லே.
தாதுக்கள்
எண்கேள்விவிடை
51.அலுமினியத்தின் முக்கியத் தாது எது?பாக்சைட்.
52.தாமிரத்தின் முக்கிய தாது எது?காப்பர் பைரைட்.
53.இரும்பின் முக்கிய தாது எது?ஹேமடைட்.
54.துருப்பிடிக்காத இரும்பில் உள்ள உலோகங்கள் யாவை?இரும்பு (Fe), கார்பன் (C), நிக்கல் (Ni), குரோமியம் (Cr).
55.எளிதில் அரிமானம் அடையும் உலோகத்தை ஆனோடாகவும், பாதுகாக்க வேண்டிய உலோகத்தைக் கேத்தோடாகவும் கொண்டு பாதுகாக்கும் முறை என்ன?கேத்தோடு பாதுகாப்பு.
56.நிறை சதவீதம் என்றால் என்ன?ஒரு கரைசலில் உள்ள கரைபொருளின் நிறையை சதவீதத்தில் குறிப்பது.
வேதியியல் சேர்மங்களின் பெயர்கள்
எண்கேள்விவிடை
57.நீல விட்ரியாலின் வேதியியல் பெயர் என்ன?காப்பர் (II) சல்பேட் பென்டாஹைட்ரேட்.
58.எப்சம் உப்பின் வேதியியல் பெயர் என்ன?மெக்னீசியம் சல்பேட் ஹெப்டாஹைட்ரேட்.
59.ஜிப்சத்தின் வேதியியல் பெயர் என்ன?கால்சியம் சல்பேட் டைஹைட்ரேட்.
60.பச்சை விட்ரியாலின் வேதியியல் பெயர் என்ன?இரும்பு (II) சல்பேட் ஹெப்டாஹைட்ரேட்.
அமிலங்கள் மற்றும் காரங்கள்
எண்கேள்விவிடை
61.pH அளவீட்டினை முன்மொழிந்தவர் யார்?சாரன்சன்.
62.அமிலங்களின் pH மதிப்பு எவ்வாறு இருக்கும்?7 ஐ விட குறைவு.
63.காரங்களின் pH மதிப்பு எவ்வாறு இருக்கும்?7 ஐ விட அதிகம்.
64.மனித ரத்தத்தின் pH மதிப்பு என்ன?7.35 லிருந்து 7.45 ஆகும்.
கரிம வேதியியல்
எண்கேள்விவிடை
65.எத்தனாலை ஆக்சிஜனேற்றம் செய்தால் கிடைப்பது எது?எத்தனாயிக் அமிலம்.
66.கடின சோப்பு தயாரிக்கப் பயன்படும் காரம் எது?எரி சோடா (சோடியம் ஹைட்ராக்சைடு).
67.TFM என்பதன் விரிவாக்கம் என்ன?மொத்த கொழுப்பு பொருட்கள் (Total Fatty Matter).
தாவரவியல்
எண்கேள்விவிடை
68.தாவரத்தின் வெளிப்புற அடுக்கில் உள்ள சிறிய துளைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?புறத்தோல்துளை (ஸ்டோமேட்டா).
69.இருவித்திலைத் தாவர வேரில் சைலக்கற்றைகளின் எண்ணிக்கை என்ன?நான்குமுனை சைலம்.
70.பசுங்கணிகத்தில் ஒளிச்சேர்க்கைகான நிறமிகள் எங்கு உள்ளன?தைலக்காய்டில்.
71.ஒளிச்சேர்க்கையில் முதன்மை நிறமி எது?பச்சையம் 'a'.
72.ஒளிசார்ந்த வினை (ஹில்வினை) எங்கு நடைபெறுகிறது?தைலகாய்டு சவ்வில்.
73.ஒளிசாரா வினை (கால்வின் சுழற்சி) எங்கு நடைபெறுகிறது?பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமா பகுதியில்.
செல்லியல்
எண்கேள்விவிடை
74.செல்லின் ஆற்றல் நாணயம் என அழைக்கப்படுவது எது?ATP.
75.செல்லின் ஆற்றல் நிலையம் என அழைக்கப்படுவது எது?மைட்டோகாண்ட்ரியா.
76.காற்று மற்றும் காற்றில்லா சுவாசம் இரண்டிற்கும் பொதுவான படிநிலை எது?கிளைக்காலிஸிஸ்.
விலங்கியல்

| எண் | கேள்வி | விடை |
| :--- | | :--- |
| 77. | அட்டையில் இரத்த உறைவதைத் தடுக்கும் புரதம் எது? | ஹிருடின். |
| 78. | முயலின் பல் வாய்ப்பாடு என்ன? | 2033 / 1023. |
| 79. | பிளாஸ்மா சிதைவு என்றால் என்ன? | தாவரச் செல்லை ஹைபர்டானிக் கரைசலில் வைக்கும்போது நீர் வெளியேறி புரோட்டோபிளாசம் சுருங்குவது. |

இரத்த ஓட்டம்
எண்கேள்விவிடை
80.இரத்தச் சிவப்பணுக்களின் வாழ்நாள் எவ்வளவு?120 நாட்கள்.
81.இரத்தம் உறைதலில் முக்கியப் பங்கு வகிக்கும் செல்கள் எவை?இரத்தத் தட்டுகள் அல்லது திராம்போசைட்டுகள்.
82.நவீன உடற்செயலியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?வில்லியம் ஹார்வி.
83.இதயத் துடிப்புகளுக்கான மின் தூண்டலைத் தோற்றுவித்து பேஸ்மேக்கராக செயல்படுவது எது?சைனோ ஏட்ரியல் கணு (SA).
84.இயல்பான நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறைகள்?70 - 90 முறைகள்.
85.இரத்த அழுத்தத்தைக் கண்டறிய உதவும் மருத்துவ உபகரணம் எது?ஸ்பிக்மோமானோமீட்டர்.
86.அனைவரிடமிருந்து இரத்தம் பெறுவோர் என அழைக்கப்படும் இரத்த வகை எது?AB இரத்த வகை.
நரம்பு மண்டலம்
எண்கேள்விவிடை
87.மனித உடலின் மிக நீளமான செல் எது?நரம்பு செல்.
88.உடலின் வெப்பநிலையை ஒழுங்குப்படுத்தும் மையமாக செயல்படுவது எது?ஹைபோதலாமஸ்.
தாவர ஹார்மோன்கள்
எண்கேள்விவிடை
89.தாவர ஹார்மோன்களில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டவை எவை?ஆக்சின்கள்.
90.கனிகள் பழுப்பதை ஊக்குவிக்கும் ஹார்மோன் எது?எத்திலின்.
நாளமில்லாச் சுரப்பி மண்டலம்
எண்கேள்விவிடை
91.நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தின் தந்தை யார்?தாமஸ் அடிசன்.
92.தலைமை சுரப்பி என்று அழைக்கப்படும் சுரப்பி எது?பிட்யூட்டரி சுரப்பி.
93.ஆளுமை ஹார்மோன் என்று அழைக்கப்படுவது எது?தைராய்டு ஹார்மோன்.
94.அவசர கால ஹார்மோன்கள் என்று அழைக்கப்படுபவை எவை?எபிநெஃப்ரின் மற்றும் நார் எபிநெஃப்ரின்.
மரபியல் மற்றும் பரிணாமம்
எண்கேள்விவிடை
95.இழப்பு மீட்டல் நடைபெறும் உயிரினங்களுக்கு எடுத்துக்காட்டு தருக?ஹைட்ரா, பிளனேரியா.
96.மரபியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?கிரிகர் ஜோகன் மெண்டல்.
97.ஒரு பண்புக் கலப்பின் புறத்தோற்ற விகிதம் என்ன?3:1.
98.டி.என்.ஏ வின் இரட்டை சுருள் மாதிரியை வெளியிட்டவர்கள் யார்?ஜேம்ஸ் வாட்சன் மற்றும் ஃபிரான்சிஸ் கிரிக்.
99.பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமைக் கோட்பாட்டை வெளியிட்டவர் யார்?லாமார்க்.
100.இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?டாக்டர் M.S. சுவாமிநாதன்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement