TNPSC TRB TET 10 ஆம் வகுப்பு அறிவியல் 100 வினா-விடை | Science Part-3
இயற்பியல் வினாக்கள் மற்றும் விடைகள்
- திருகின் சுழற்சி மற்றும் பம்பரத்தின் சுழற்சி எதற்கு எடுத்துக்காட்டுகள்?
- விடை: இரட்டைகளின் திருப்புத்திறன்.
- விசையின் திருப்புத்திறனின் SI அலகு என்ன?
- விடை: நியூட்டன் மீட்டர் (Nm).
- 1 கிலோகிராம் விசை என்பது எதற்கு சமம்?
- விடை: ஈர்ப்பியல் அலகு விசையின் SI அலகு.
- நிலவில் புவி ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு என்ன?
- விடை: 1.615 மீவி⁻²
- தாவரங்களின் வேர் முளைத்தல் புவியின் ஈர்ப்புவிசை சார்ந்து அமைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: புவிதிசை சார்பியக்கம்.
- ஒளிவிலகலின் முதல் விதிப்படி படுகதிர், விலகுகதிர், குத்துக்கோடு ஆகியவை எங்கு அமைகின்றன?
- விடை: ஒரே தளத்தில் அமைகின்றன.
- வெள்ளொளிக் கற்றை முப்பட்டகத்தின் வழியே செல்லும்போது நிறங்கள் தனித்தனியாகப் பிரிகை அடையும் நிகழ்வு என்ன?
- விடை: நிறப்பிரிகை.
- வளிமண்டலத்தின் கீழ் அடுக்குப்பகுதியில் உள்ள தூசு மற்றும் நீர்த்துளிகளால் ஏற்படும் ஒளிச்சிதறல் எது?
- விடை: மீ-ஒளிச்சிதறல்.
- படுகதிரின் அதிர்வெண்ணைவிடக் குறைவான அதிர்வெண் கொண்ட இராமன் நிறமாலை வரிகள் எவை?
- விடை: ஸ்டோக் வரிகள்.
- லென்சின் திறனின் SI அலகு என்ன?
- விடை: டையாப்டர்.
- கண்ணின் நிறமுடைய பகுதி எது?
- விடை: ஐரிஸ்.
- பொருளின் தலைகீழான மெய்ப்பிம்பம் கண்ணில் எங்கு உருவாக்கப்படுகிறது?
- விடை: விழித்திரை (ரெட்டினா).
- விழி ஏற்பமைவுத் திறன் குறைபாடு (Presbyopia) பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: வயது முதிர்வு தூரப்பார்வை.
- கலிலியோ தொலைநோக்கியில் கண்ணருகு லென்சாகப் பயன்படுவது எது?
- விடை: குழிலென்சு.
- செல்சியஸிலிருந்து கெல்வினுக்கு மாற்ற உதவும் சமன்பாடு என்ன?
- விடை: $K=C+273$.
- ஒரு திடப்பொருளை வெப்பப்படுத்துவதால் அதன் பருமன் அதிகரிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: பரும வெப்ப விரிவு.
- மாறா வெப்பநிலையில் வாயுவின் அழுத்தம் பருமனுக்கு எதிர்த்தகவில் அமையும் எனக் கூறும் விதி எது?
- விடை: பாயில் விதி.
- நிக்ரோமின் தன் மின்தடை எண் மதிப்பு என்ன?
- விடை: $1.5 \times 10^{-6}$ ஓம் மீட்டர்.
- நமது வீடுகளில் உள்ள மின்கம்பியிடல் எவ்வகை இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது?
- விடை: பக்க இணைப்பு முறை.
- ஒரு யூனிட் மின்னாற்றல் (1 kWh) என்பது எத்தனை ஜுலுக்குச் சமம்?
- விடை: $3.6 \times 10^{6}$ J.
- முதல் LED தொலைக்காட்சி யாரால் உருவாக்கப்பட்டது?
- விடை: ஜெம்ஸ் P.மிட்சல் (1997).
- ஒலி அலைகள் எவ்வகை அலைகளாகப் பரவுகின்றன?
- விடை: நெட்டலைகள்.
- கடல்நீரில் ஒலியின் திசைவேகம் எவ்வளவு?
- விடை: 1533 மீவி⁻¹.
- முணுமுணுகும் அரங்கம் அமைந்துள்ள கோல்கொண்டா கோட்டை எங்குள்ளது?
- விடை: ஹைதராபாத், தெலுங்கானா.
- சோனார் (SONAR) கருவியின் முக்கியப் பயன்பாடு என்ன?
- விடை: கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் நீர் மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிதல்.
- கேத்தோடு கதிர்கள் எனப்படும் எலக்ட்ரான்களைக் கண்டறிந்தவர் யார்?
- விடை: ஜெ.ஜெ.தாம்சன்.
- ஆனோடு கதிர்களுக்கு புரோட்டான்கள் எனப் பெயரிட்டவர் யார்?
- விடை: ரூதர்போர்டு.
- ரேடியம் என்ற கதிரியக்கத் தனிமத்தைக் கண்டறிந்தவர்கள் யார்?
- விடை: மேரி கியூரி மற்றும் பியரி கியூரி.
- அணு எண் 83 ஐ விடக் குறைவாக உள்ள கதிரியக்கத் தன்மை வாய்ந்த இரண்டு தனிமங்கள் எவை?
- விடை: டெக்னிட்டியம் மற்றும் புரோமித்தியம்.
- செயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டறிந்தவர்கள் யார்?
- விடை: ஐரின் கியூரி மற்றும் ஜோலியட் (1934).
- ஒரு கியூரி என்பது ஒரு வினாடியில் ஏற்படும் எத்தனை சிதைவுகளுக்குச் சமம்?
- விடை: $3.7 \times 10^{10}$ சிதைவுகள்.
- ஆல்பா துகளின் அயனியாக்கும் திறன் காமாத் துகள்களை விட எத்தனை மடங்கு அதிகம்?
- விடை: 10,000 மடங்கு அதிகம்.
- ஒளியின் திசைவேகத்தில் செல்லும் மின்காந்த அலைகள் (கதிரியக்கக் கதிர்கள்) எவை?
- விடை: காமா கதிர்கள்.
- அணுக்கருப் பிளவைக் கண்டறிந்த ஜெர்மன் அறிவியல் அறிஞர்கள் யார்?
- விடை: ஆட்டோஹான் மற்றும் ஸ்ட்ராஸ்மன்.
- நாகசாகியில் வீசப்பட்ட புளுட்டோனியம் அணுகுண்டின் பெயர் என்ன?
- விடை: Fat man.
- ஹைட்ரஜன் குண்டு எந்தத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது?
- விடை: அணுக்கரு இணைவு.
- வானூர்திகளில் உள்ள வெடிபொருள்களைக் கண்டறியப் பயன்படும் ஐசோடோப் எது?
- விடை: கலிபோர்னியம் - 252.
- கதிர்வீச்சின் பாதுகாப்பான அளவாகப் பரிந்துரைக்கப்படும் ஓர் ஆண்டிற்கான அளவு என்ன?
- விடை: 20 மில்லி சிவர்ட்.
- அயனியாக்கும் கதிர்வீச்சின் அளவினைக் கண்டறியும் சாதனம் எது?
- விடை: டோசிமீட்டர்.
- இந்திய அணுசக்தி ஆணையத்தின் (தற்போதைய BARC) முதல் தலைவர் யார்?
- விடை: டாக்டர் ஹோமி ஜஹாங்கிர் பாபா.
- ஒரு தனிமத்தின் அணுக்களை மற்றொரு தனிமத்தின் அணுக்களாக மாற்றும் முறை என்ன?
- விடை: செயற்கை மாற்று தனிமமாக்கல் முறை.
- ஓசோன் (O₃) மூலக்கூறின் அணுக்கட்டு எண் என்ன?
- விடை: 3 (ஒத்த மூவணு மூலக்கூறு).
- நவீன ஆவர்த்தன அட்டவணையில் 17வது தொகுதி தனிமங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
- விடை: ஹேலஜன்கள்.
- நுரைமிதப்பு முறையில் எந்த வகை தாதுக்கள் அடர்ப்பிக்கப்படுகின்றன?
- விடை: சல்பைடு தாதுக்கள்.
- பாக்சைட்டை அலுமினாவாக மாற்றம் செய்யும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: பேயர் முறை.
- அலுமினாவை மின்னாற்பகுத்தல் மூலம் ஒடுக்கும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: ஹால் முறை.
- தாமிரத்தின் உருகுநிலை என்ன?
- விடை: 1356°C.
- பித்தளை உலோகக் கலவையில் உள்ள உலோகங்கள் எவை?
- விடை: காப்பர் மற்றும் ஜிங்க் (Cu, Zn).
- விமானத்தின் பகுதிகள் செய்யப் பயன்படும் டியுராலுமின் கலவையில் உள்ள உலோகங்கள் எவை?
- விடை: Al, Mg, Mn, Cu.
- எளிதில் அரிபடும் உலோகம் கேத்தோடு பாதுகாத்தலில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: தியாக உலோகம்.
- நீரில் கரைக்கப்பட்ட சோடியம் குளோரைடு எவ்வகைக் கரைசலுக்கு எடுத்துக்காட்டு?
- விடை: திண்மம் - திரவம் (திரவக் கரைசல்).
- திரவத்தின் வெப்பநிலையை அதிகரிக்கும் போது வாயுவின் கரைதிறன் என்னவாகும்?
- விடை: குறைகிறது.
- ஈரம் உறிஞ்சும் சேர்மங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு தருக.
- விடை: அடர் சல்பியூரிக் அமிலம் (அல்லது சுட்ட சுண்ணாம்பு, சிலிக்கா ஜெல்).
- சில்வர் புரோமைடு மீது ஒளி படும்போது ஏற்படும் சிதைவு எவ்வகை வினை?
- விடை: ஒளிச்சிதைவு வினை.
- pH அளவீட்டில் 'p' என்பதன் பொருள் என்ன?
- விடை: 'potenz' (Power).
- நமது இரைப்பையில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் pH மதிப்பு என்ன?
- விடை: 2.9.
- மழைநீரின் pH மதிப்பு 7-ஐ விடக் குறையும்போது அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: அமிலமழை.
- எத்தனாலின் (ஆல்கஹால்) கொதிநிலை என்ன?
- விடை: $78^{0}C$ (351K).
- பழச்சாற்றின் மணமுடைய எஸ்டர் எதிலிருந்து உருவாகிறது?
- விடை: ஆல்கஹால் கார்பாக்சிலிக் அமிலத்துடன் வினைபுரிந்து.
- மென் சோப்பு தயாரிக்கப் பயன்படும் காரம் எது?
- விடை: பொட்டாசியம் உப்பு.
- தாவர வேரின் வெளிப்புற அடுக்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: எபிபிளமா அல்லது ரைசோடெர்மிஸ்.
- இருவித்திலைத் தாவர இலையில் வாயு பரிமாற்றத்திற்கு உதவும் செல்கள் எவை?
- விடை: ஸ்பாஞ்சி பாரன்கைமா.
- நிறமற்ற கணிகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: வெளிர்க்கணிகம் (லியூக்கோபிளாஸ்ட்).
- ஒளிச்சேர்க்கையில் சூரிய ஆற்றலைக் கவர்ந்து முதன்மை நிறமிக்கு அனுப்பும் துணை நிறமி எது?
- விடை: பச்சையம் b.
- கிரப் சுழற்சி செல்லின் எப்பகுதியில் நடைபெறுகிறது?
- விடை: மைட்டோகாண்ட்ரியாவின் உட்புறத்தில் (மேட்ரிக்ஸ்).
- தாவரங்களில் நீராவிப்போக்கு எந்த உறுப்பின் வழியாக நடைபெறுகிறது?
- விடை: இலையின் புறத்தோல் துளை (இலைத்துளை) வழியாக.
- இந்தியக் கால்நடை அட்டையின் விலங்கியல் பெயர் என்ன?
- விடை: ஹிருடினேரியா கிரானுலோசா.
- அட்டையின் உடற்பகுதியில் உள்ள கண்டங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
- விடை: சோமைட்டுகள்.
- பாலூட்டிகளில் மட்டுமே காணப்படும் சிறப்பு சுவாசப் பண்பு எது?
- விடை: உதரவிதானம்.
- முயலின் பற்களுக்கு இடையேயான இடைவெளிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: டயாஸ்டீமா.
- இரத்தச் சிவப்பணுக்கள் (RBC) எங்கு உற்பத்தியாகின்றன?
- விடை: எலும்பு மஞ்ஞையிலிருந்து.
- நோய்த்தொற்று மற்றும் வீக்கத்தின்போது எண்ணிக்கை அதிகரிக்கும் இரத்த வெள்ளையணு எது?
- விடை: நியூட்ரோஃபில்கள்.
- இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: அனீமியா.
- நுரையீரல் தமனியைத் தவிர மற்ற அனைத்து தமனிகளும் எவ்வகை இரத்தத்தை எடுத்துச் செல்கின்றன?
- விடை: ஆக்சிஜன் மிகுந்த இரத்தம்.
- இதயத்தை சுற்றியுள்ள இரட்டை அடுக்கு உறையின் பெயர் என்ன?
- விடை: பெரிகார்டியல் உறை.
- வலது ஆரிக்கிள் மற்றும் வலது வெண்ட்ரிக்கிள்களுக்கு இடையில் உள்ள வால்வு எது?
- விடை: மூவிதல் வால்வு.
- இருவாழ்விகளின் இதயம் எத்தனை அறைகளைக் கொண்டது?
- விடை: மூன்று அறைகள்.
- இதய ஒலியான 'லப்' எதனால் ஏற்படுகிறது?
- விடை: மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் மூடுவதால்.
- மூளையின் பாதுகாப்பு உறைகளான மெனிஞ்சஸின் நடுத்தர உறை (அதிர்வுத் தாங்கி) எது?
- விடை: அரக்னாய்டு உறை.
- சுவாசம் மற்றும் உறக்கத்தைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி எது?
- விடை: பான்ஸ்.
- உமிழ்நீர் சுரப்பது மற்றும் வாந்தி எடுத்தலை ஒழுங்குபடுத்தும் மூளையின் பகுதி எது?
- விடை: முகுளம்.
- ஆக்சின் என்ற சொல்லை அறிமுகம் செய்தவர்கள் யார்?
- விடை: கால் மற்றும் ஹாஜன் ஸ்மித்.
- பக்கவாட்டு மொட்டுகளின் வளர்ச்சியடைத் தடைசெய்யும் 'நுனி ஆதிக்கம்' எதனால் ஏற்படுகிறது?
- விடை: ஆக்சின்களால்.
- பொதுவாக கனிகள் முதிர்ச்சியடைவதிலும், பழுப்பதிலும் முக்கிய பங்காற்றும் வாயு நிலை ஹார்மோன் எது?
- விடை: எத்திலின்.
- பிட்யூட்டரியின் பின்கதுப்பு (நியூரோ- ஹைப்போபைஸிஸ்) சுரக்கும் ஹார்மோன்கள் எவை?
- விடை: வாசோபிரஸ்ஸின் (ADH) மற்றும் ஆக்ஸிடோசின்.
- குழந்தைகளில் குறைவான தைராய்டு ஹார்மோன் சுரப்பால் ஏற்படும் நோய் எது?
- விடை: கிரிட்டினிசம்.
- மனித உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் எது?
- விடை: பாராதார்மோன்.
- இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் ஹார்மோன் எது?
- விடை: இன்சுலின்.
- அவசர காலங்களில் சுரக்கும் சண்டை அல்லது பறக்கும் ஹார்மோன்கள் எங்கு சுரக்கின்றன?
- விடை: அட்ரினல் மெடுல்லா (எபிநெஃப்ரின், நார் எபிநெஃப்ரின்).
- ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் எங்கு சுரக்கப்படுகிறது?
- விடை: அண்டத்தின் கிராஃபியன் செல்களில்.
- இரட்டை கருவுறுதலில் ஓர் ஆண் இனச்செல் அண்டத்துடன் இணைந்து எதை உருவாக்குகிறது?
- விடை: இரட்டைமய சைகோட்.
- விந்து அண்டத்தினுள் நுழைய உதவும் அக்ரோசோம் கொண்டுள்ள நொதி எது?
- விடை: ஹயலுரானிடேஸ்.
- குரோமோசோம் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் யார்?
- விடை: வால்டேயர்.
- 21 வது குரோமோசோமில் கூடுதல் நகல் இருப்பதால் மனிதர்களுக்கு ஏற்படும் குறைபாடு எது?
- விடை: டவுன் சின்ரோம் (Down syndrome).
- டி.என்.ஏ துண்டுகளை இணைக்கப் பயன்படும் நொதி எது?
- விடை: டி.என்.ஏ லைகேஸ்.
- "சிற்றினங்களின் தோற்றம்" (Origin of Species) என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
- விடை: சார்லஸ் டார்வின்.
- இந்திய தொல் தாவரவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
- விடை: பீர்பால் சகனி.
- வைட்டமின் A குறைபாட்டைத் தவிர்க்கும் பீட்டா கரோட்டினை உற்பத்தி செய்யும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி எது?
- விடை: கோல்டன் ரைஸ்.
- நுரையீரல் புற்றுநோயை உண்டாக்கும் புகையிலையில் உள்ள புற்றுநோய்க் காரணி எது?
- விடை: பென்சோபைரின்.
- இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட உயிர்க்கோளக் காப்பகப் பகுதியாக உள்ள தமிழ்நாட்டின் பகுதி எது?
* விடை: நீலகிரி.


0 Comments