TNPSC TRB TET 6 ஆம் வகுப்பு
அறிவியல் 100 வினா-விடை | Science Part-1
பொது அறிவியல் கேள்விகள் மற்றும் பதில்கள் (Questions and Answers in General Science)
| எண் | கேள்வி | விடை |
|---|
| 1. | நீளத்தின் SI அலகு என்ன? | மீட்டர். |
| 2. | SI அலகு முறையின் விரிவாக்கம் என்ன? | பன்னாட்டு அலகு முறை (International System of Unit). |
| 3. | பூமியை விட நிலவில் ஒரு பொருளின் எடை எத்தனை மடங்கு குறைவாக இருக்கும்? | ஆறு மடங்கு. |
| 4. | வாகனங்கள் கடக்கும் தொலைவைக் கணக்கிடும் கருவி எது? | ஓடோமீட்டர். |
| 5. | மெட்ரிக் முறை அலகுகளை உருவாக்கியவர்கள் யார்? | 1790ல் ஃபிரெஞ்சு நாட்டினர். |
| 6. | நீளத்தை அளவிடும் அளவுகோலைக் கண்டுபிடித்த அறிவியல் அறிஞர் யார்? | பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த வில்லியம் பெட்வெல். |
| 7. | சர்வதேச எடைகள் மற்றும் அளவீடுகளுக்கான பிளாட்டினம்-இரிடியம் படித்தர மீட்டர் கம்பி எங்கு வைக்கப்பட்டுள்ளது? | பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில். |
| 8. | டில்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வைக்கப்பட்டுள்ளது எது? | படித்தர மீட்டர் கம்பியின் நகல். |
| 9. | வளைவுப்பாதை இயக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக. | வீசி எறியப்பட்ட பந்து. |
| 10. | ரோபாட் என்ற வார்த்தை எந்த மொழி வார்த்தையிலிருந்து உருவாக்கப்பட்டது? | ரோபாட்டா என்ற செக்கோஸ்லோவியா வார்த்தையிலிருந்து. |
| 11. | ரோபாட் என்ற வார்த்தையின் பொருள் என்ன? | உத்தரவுக்கு படிந்த ஊழியர். |
பருப்பொருளின் நிலைகள் (States of Matter)
| எண் | கேள்வி | விடை |
|---|
| 12. | பருப்பொருள்களில் உள்ள சிறிய துகளை 'பரமானு' என்று அழைத்த இந்திய தத்துவமேதை யார்? | கனடா. |
| 13. | பருப்பொருள்களின் சிறிய துகளை 'அட்டாமஸ்' (அணு) என்று அழைத்த கிரேக்க தத்துவமேதை யார்? | டெமாக்ரட்டிஸ். |
| 14. | பருப்பொருளின் நான்காம் நிலை என்ன? | பிளாஸ்மா நிலை. |
| 15. | சூரியனும் நட்சத்திர மண்டலமும் சேர்ந்த கலப்பு எந்த நிலையில் உள்ளது? | பிளாஸ்மா நிலை. |
| 16. | பருப்பொருளின் ஐந்தாம் நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது? | போஸ்- ஐன்ஸ்ட்டீன் சுருக்கம். |
| 17. | தூய தங்கம் எத்தனை காரட் கொண்டது? | 24 காரட். |
| 18. | துணி துவைக்கும் இயந்திரம் எந்த தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது? | மைய விலக்கல். |
தாவரங்கள் மற்றும் விலங்குகள் (Plants and Animals)
| எண் | கேள்வி | விடை |
|---|
| 19. | சல்லிவேர் தொகுப்பிற்கு எடுத்துக்காட்டுகள் தருக. | நெல், வாழை, கரும்பு, தென்னை. |
| 20. | மூன்று விட்டம் வரையில் வளரும் இலைகளைக் கொண்ட தாவரம் எது? | விக்டோரியா அமேசோனிக்கா. |
| 21. | திறந்த விதைத் தாவரங்கள் (விதைகள் கனிகளில் புதைந்திருக்காது) எவ்வாறு அழைக்கப்படுகின்றன? | ஜிம்னோஸ்பெர்ம்கள். |
| 22. | வளரும் பருவ நிலையில் அதிவேகமாக வளரக்கூடிய தாவரம் எது? | மூங்கில். |
| 23. | ரயில் கற்றாழை என அழைக்கப்படுவது எது? | அகேவ். |
| 24. | அமீபா எதன் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது? | விரல் போன்ற நீட்சிகளான போலிக்கால்கள் மூலம். |
| 25. | பாரமீசியம் எதன் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது? | குறுஇழைகள் மூலம். |
| 26. | யூக்ளினா எதன் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது? | கசையிழையின் மூலம். |
| 27. | ஒரு விலங்கு பருவமாறுபாட்டின் காரணமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது? | வலசை போதல். |
| 28. | தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது? | நீலகிரி வரையாடு. |
| 29. | பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் விலங்கு எது? | ஒட்டகம். |
புவியியல் (Geography)
| எண் | கேள்வி | விடை |
|---|
| 30. | உலகின் மிக நீளமான நதி எது? | நைல் நதி (6,650 கி.மீ.). |
| 31. | இந்தியாவின் மிக நீளமான நதி எது? | கங்கை (2,525 கி.மீ.). |
| 32. | உலக வாழிட நாளாக கொண்டாடப்படும் நாள் எது? | அக்டோபர் மாதம் முதல் திங்கட்கிழமை. |
ஊட்டச்சத்து மற்றும் குறைபாட்டு நோய்கள் (Nutrition and Deficiency Diseases)
| எண் | கேள்வி | விடை |
|---|
| 33. | அதிக புரதம் உள்ள உணவு எது? | சோயாபீன்ஸ். |
| 34. | ஆரஞ்சு பழங்களைவிட 20 மடங்கு அதிக வைட்டமின்-C காணப்படும் கனி எது? | நெல்லிக்கனி. |
| 35. | இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்திக்குக் காரணமான சத்து எது? | இரும்புச் சத்து. |
| 36. | தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்குத் தேவைப்படும் சத்து எது? | அயோடின் சத்து. |
| 37. | குவாஷியோர்கர் மற்றும் மராஸ்மஸ் ஆகியவை எதன் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்? | புரதக் குறைபாடு. |
| 38. | கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் நோய் எது? | ரிக்கெட்ஸ். |
| 39. | குழந்தைகளுக்கு அயோடின் குறைபாட்டால் ஏற்படும் நோய் எது? | கிரிட்டினிசம். |
| 40. | இரும்புச் சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய் எது? | இரத்தசோகை. |
வெப்பம் மற்றும் வெப்பநிலை (Heat and Temperature)
| எண் | கேள்வி | விடை |
|---|
| 41. | வெப்பத்தின் SI அலகு என்ன? | ஜூல். |
| 42. | வெப்பநிலையின் SI அலகு என்ன? | கெல்வின். |
| 43. | மனித உடலின் சராசரி வெப்பநிலை என்ன? | 37°C. |
| 44. | சமையலறை மற்றும் ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் கண்ணாடிப் பொருள்கள் எதனால் உருவாக்கப்படுகின்றன? | போரோசிலிகேட் கண்ணாடி (பைரக்ஸ் கண்ணாடி). |
| 45. | உலகிலேயே மிகக் குறைந்த வெப்பநிலையாக கணக்கிடப்பட்டுள்ள இடம் எது? | அண்டார்ட்டிக் கண்டம் (-89°C). |
மின்சாரம் (Electricity)
| எண் | கேள்வி | விடை |
|---|
| 46. | தமிழகத்தில் அணுமின் நிலையங்கள் அமைந்துள்ள மாவட்டங்கள் யாவை? | காஞ்சிபுரம் மற்றும் திருநெல்வேலி. |
| 47. | மின் உற்பத்தி நிலையங்களில் இயக்க ஆற்றலை மின்னாற்றலாக மாற்றுவது எது? | டர்பைன் எனப்படும் மிகப்பெரிய சுழலிகள். |
| 48. | மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலாத மின்கலன்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? | முதன்மை மின்கலன்கள். |
| 49. | மின்சாரத்தை உருவாக்கும் திறன் கொண்ட மீன் வகை எது? | ஈல் மீன். |
| 50. | ஒரு மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை அளவிடும் கருவி எது? | அம்மீட்டர். |
| 51. | மின்விளக்குகளைக் கண்டறிந்தவர் யார்? | தாமஸ் ஆல்வா எடிசன். |
வேதியியல் மற்றும் இயற்பியல் மாற்றங்கள் (Chemical and Physical Changes)
| எண் | கேள்வி | விடை |
|---|
| 52. | பனிக்கட்டி உருகுதல் என்பது எவ்வகை மாற்றம்? | இயற்பியல் மாற்றம். |
| 53. | இரும்பு துருபிடித்தல் என்பது எவ்வகை மாற்றம்? | வேதியியல் மாற்றம். |
வளிமண்டலம் மற்றும் வாயுக்கள் (Atmosphere and Gases)
| எண் | கேள்வி | விடை |
|---|
| 54. | வளிமண்டலம் பூமியிலிருந்து சுமார் எத்தனை கிலோமீட்டர் தொலைவிற்குப் பரவியுள்ளது? | 800 கி.மீ.. |
| 55. | வானூர்திகள் பறக்கும் வளிமண்டல அடுக்கு எது? | அடிவளி மண்டலம் (Troposphere). |
| 56. | சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களிலிருந்து பூமியைப் பாதுகாக்கும் ஓசோன் படலம் எந்த அடுக்கில் உள்ளது? | அடுக்குவளி மண்டலம் (Stratosphere). |
| 57. | காற்று என்பது பல வாயுக்கள் அடங்கியுள்ள ஒரு கலவை என்று நிரூபித்தவர் யார்? | ஜோசப் பிரிஸ்ட்லி (1774). |
| 58. | தாவரங்கள் ஒளிச்சேர்க்கையினை நிகழ்த்துவதற்கு சூரியஒளி தேவைப்படுகிறது என்பதனை நிரூபித்தவர் யார்? | ஜான் இன்ஜென்ஹவுஸ். |
| 59. | நைட்ரஜனைக் கண்டறிந்து அதற்குப் பெயரிட்டவர் யார்? | டேனியல் ரூதர்ஃபோர்டு. |
| 60. | காற்றில் நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனின் சதவீதம் எவ்வளவு? | நைட்ரஜன் - 78%, ஆக்சிஜன் - 21%. |
| 61. | உலர்பனிக்கட்டி என்பது என்ன? | -57°C க்கு குளிர்விக்கப்பட்ட கார்பன்டை ஆக்சைடு. |
செல் உயிரியல் மற்றும் மனித உடலியல் (Cell Biology and Human Physiology)
| எண் | கேள்வி | விடை |
|---|
| 62. | 'மைக்ரோகிராபியா' என்ற நூலினை வெளியிட்டவர் யார்? | ராபர்ட் ஹூக் (1665). |
| 63. | செல்லுலா என்ற லத்தீன் சொல்லின் பொருள் என்ன? | சிறிய அறை. |
| 64. | மனித உடலில் உள்ள செல்களின் தோராயமான எண்ணிக்கை எவ்வளவு? | 3.7 X 10^13. |
| 65. | தெளிவற்ற உட்கருவைக் கொண்ட செல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? | புரோகேரியோட்டிக் செல்கள். |
| 66. | விலங்கு செல்லில் எவை காணப்படுவதில்லை? | செல்சுவர் மற்றும் பசுங்கணிகம். |
| 67. | செல்லின் ஆற்றல் மையம் என்று அழைக்கப்படுவது எது? | மைட்டோகாண்டிரியா. |
| 68. | செல்லின் உணவுத் தொழிற்சாலை என்று அழைக்கப்படுவது எது? | பசுங்கணிகம். |
| 69. | செல்லின் மூளையாகச் செயல்பட்டு அதன் செயல்களைக் கட்டுப்படுத்தும் மையம் எது? | உட்கரு (நியூக்ளியஸ்). |
| 70. | முதிர்ச்சியடைந்த மனிதனின் எலும்புக் கூட்டில் எத்தனை எலும்புகள் உள்ளன? | 206 எலும்புகள். |
| 71. | நமது விருப்பத்திற்கேற்ப செயல்படாத கட்டுப்படாத இயங்கு தசைகளுக்கு எடுத்துக்காட்டு தருக. | மென்தசைகள் மற்றும் இதயத் தசைகள். |
| 72. | சிறுகுடல் தோராயமாக எத்தனை மீட்டர் நீளமுடையது? | 6 மீட்டர். |
| 73. | சுவாசப்பாதைக்குள் உணவு செல்வதைத் தடுக்கும் அமைப்பு எது? | குரல்வளை மூடி (எப்பிகிளாட்டிஸ்). |
| 74. | நுரையீரல்களைச் சுற்றியுள்ள இரு அடுக்குகளைக் கொண்ட பாதுகாப்புப் படலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? | ப்ளூரா (Pleura). |
| 75. | சுத்த இரத்தத்தினைக் கடத்தும் தமனிகளில் விதிவிலக்கான தமனி எது? | நுரையீரல் தமனிகள். |
| 76. | இரத்த சிகப்பு அணுக்கள் எங்கு உற்பத்தியாகின்றன? | எலும்பு மஞ்சையில். |
| 77. | மூளையைப் பாதுகாக்கும் சவ்வுகளுக்கு என்ன பெயர்? | மூளை உறைகள் (Meaninges). |
| 78. | சிறுநீரகத்தின் செயல் அடிப்படை அலகுகள் யாவை? | நெஃப்ரான்கள். |
| 79. | மனித உடலில் காணப்படும் எலும்புகளில் மிகச்சிறியது எது? | உள்காதில் உள்ள அங்கவடி (Stapes) எலும்பு. |
| 80. | சூரிய ஒளியைப் பயன்படுத்தி உடலுக்குத் தேவையான வைட்டமின்-D ஐ உற்பத்தி செய்யும் உறுப்பு எது? | தோல். |
காந்தவியல் மற்றும் நீர் (Magnetism and Water)
| எண் | கேள்வி | விடை |
|---|
| 81. | காந்தத்தின் திசைக் காட்டும் பண்பை முதன்முதலில் கண்டறிந்தவர்கள் யார்? | சீனர்கள். |
| 82. | மின்காந்த தொடர்வண்டிகளில் பயன்படுவது எது? | மின்காந்தங்கள். |
| 83. | புவியில் காணப்படும் நீரில் நன்னீரின் அளவு எவ்வளவு சதவீதம்? | 3%. |
| 84. | நீரின் மூலக்கூறு வாய்ப்பாடு என்ன? | H₂O. |
| 85. | உலக நீர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? | மார்ச் 22. |
| 86. | நீர் சுழற்சியின் வேறு பெயர் என்ன? | ஹைட்ராலிஜிக்கல் சுழற்சி. |
| 87. | ஒரு காலன் என்பது எத்தனை லிட்டருக்குச் சமம்? | 3.785 லிட்டர். |
| 88. | அணைக்கட்டுகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு எந்த அலகால் அளக்கப்படுகிறது? | கியூசக் (கன அடி / விநாடி). |
வேதிப்பொருள்கள் மற்றும் தொழிற்சாலைகள் (Chemical Substances and Industries)
| எண் | கேள்வி | விடை |
|---|
| 89. | வெங்காயத்தை நறுக்கும்போது கண்களில் கண்ணீர் வரக் காரணமான வேதிப்பொருள் எது? | புரோப்பேன் தயால் S-ஆக்சைடு. |
| 90. | தாவரங்கள் வளர்ச்சிக்கு முக்கியத் தேவையான முதன்மை சத்துக்கள் யாவை? | நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் (NPK). |
| 91. | யூரியாவில் எவ்வளவு சதவீதம் நைட்ரஜன் உள்ளது? | 46%. |
| 92. | முதன்முதலில் சிமெண்டைக் கண்டுபிடித்தவர் யார்? | வில்லியம் ஆஸ்பிடின் (1824). |
| 93. | வலுவூட்டப்பட்ட காரை என்பதில் அடங்கியுள்ள பொருள்கள் யாவை? | சிமெண்ட், மணல், ஜல்லிக்கற்கள், இரும்பு கம்பிகள் மற்றும் நீர். |
| 94. | ஜிப்சத்தின் வேதிப்பெயர் என்ன? | கால்சியம் சல்பேட் டை ஹைட்ரேட். |
| 95. | எப்சத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு என்ன? | MgSO₄.7H₂O. |
| 96. | பாரிஸ் சாந்து தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள் எது? | ஜிப்சம். |
| 97. | கார்பாலிக் அமிலம் எனப்படும் கரிம அமிலம் எது? | பீனால். |
| 98. | திடக்கழிவு மேலாண்மை (SWM) விதிகள் எந்த ஆண்டு வகுக்கப்பட்டன? | 2016. |
| 99. | உலக உணவு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? | அக்டோபர்- 16. |
| 100. | இந்திய சணல் உற்பத்தியில் 50 விழுக்காடு உற்பத்தி செய்யும் மாநிலம் எது? | மேற்கு வங்காளம். |
0 Comments