TNPSC TRB TET 6 ஆம் வகுப்பு அறிவியல் 100 வினா-விடை | Science Part-2
அறிவியல் பொது அறிவு வினா விடைகள்
இயற்பியல் மற்றும் அளவீடுகள்
- பூமியிலும் நிலவிலும் ஒரு பொருளின் எந்த அளவு சமமாகவே இருக்கும்? நிறை.
- ஒரு கிலோகிராம் எடைக்கான பிளாட்டினம் - இரிடியம் உலோகத் தண்டு சர்வதேச நிறுவனத்தால் எந்த ஆண்டு முதல் வைக்கப்பட்டுள்ளது? 1889 முதல்.
- வெப்பத்தை அளக்கப் பயன்படும் மற்றொரு அலகு எது? கலோரி.
- செல்சியஸ் என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது? சென்டிகிரேட்.
- வெப்ப ஆற்றலை நாம் எந்த அலகால் அளவிடலாம்? கலோரி.
- ஒரு கிராம் நீரின் வெப்பநிலையை ஒரு டிகிரி சென்டிகிரேட் உயர்த்தப்பயன்படும் வெப்ப அளவு என்ன? ஒரு கலோரி.
- பொருளின் நீளத்தில் வெப்பத்தினால் ஏற்படும் அதிகரிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? நீள்விரிவு.
- 1922 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் எந்த இடத்தில் 59°C வெப்பநிலை கணிக்கப்பட்டது? லிபியா.
- நேர்கோட்டு பாதையில் நடந்து செல்லும் மனிதனின் இயக்கம் எவ்வகை இயக்கம்? நேர்கோட்டு இயக்கம்.
- கயிற்றின் முனையில் கட்டப்பட்டு சுழற்றப்படும் கல்லின் இயக்கம் எவ்வகை இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு? வட்டப்பாதை இயக்கம்.
- பம்பரத்தின் இயக்கம் எவ்வகை இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு? தற்சுழற்சி இயக்கம்.
- தனிஊசல் எவ்வகை இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு? அலைவு இயக்கம்.
- குறிப்பிட்ட வடிவம் மற்றும் பருமன் கொண்ட பருப்பொருள் நிலை எது? திண்மம்.
- குறிப்பிட்ட வடிவமோ பருமனோ அற்ற பருப்பொருள் நிலை எது? வாயு.
- அதிக அளவு அழுத்தத்திற்கு உட்படும் பருப்பொருள் எது? வாயு.
- போஸ்- ஐன்ஸ்ட்டீன் சுருக்கம் எந்த ஆண்டு கணிக்கப்பட்டு, எந்த ஆண்டு உறுதி செய்யப்பட்டது? 1925 ல் கணிக்கப்பட்டு, 1995 ல் உறுதி செய்யப்பட்டது.
- ஆணிவேர் தொகுப்பிற்கு எடுத்துக்காட்டுகள் தருக. மா, வேம்பு.
- பூவின் அடிப்படையில் தாவரங்கள் எத்தனை வகையாகப் பிரிக்கப்படுகின்றன? இரண்டு வகைகள் (பூக்கும் தாவரங்கள் மற்றும் பூவாத் தாவரங்கள்).
- மூடிய விதைத் தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? ஆஞ்சியோஸ்பெர்ம்கள்.
- 470 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான நிலவாழ் தாவரங்கள் எவை? மாஸ்கள் மற்றும் லிவர்வோர்ட்ஸ்கள்.
- காகிதப்பூவின் மற்றொரு பெயர் என்ன? போகெய்ன்வில்லா.
- ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் வெளியிடும் வாயு எது? ஆக்சிஜன்.
- சுவாசம், சளி, மூச்சுக்குழாய் அழற்சியை குணப்படுத்த உதவும் தாவரம் எது? துளசி.
- அமீபாவில் கழிவு நீக்கம் எதன் மூலம் நடைபெறுகிறது? சுருங்கும் நுண் குமிழ்கள்.
- குளிர்கால உறக்கத்திற்கு எடுத்துக்காட்டு தருக. ஆமை.
- கோடைகால உறக்கத்திற்கு எடுத்துக்காட்டு தருக. நத்தை.
- சிங்கப்பூரில் பென்குவின் பறவைகள் பராமரிக்கப்படும் பூங்காவின் பெயர் என்ன? ஜீராங் பறவைகள் பூங்கா.
- முருங்கை இலையில் காணப்படும் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் யாவை? வைட்டமின்-A, C, பொட்டாசியம், கால்சியம், இரும்புச் சத்து மற்றும் புரதம்.
- ஆஸ்டியோமலேசியா எந்த தாது உப்பு குறைபாட்டால் ஏற்படுகிறது? பாஸ்பரஸ்.
- விலங்குகளின் சுவாசத்தின் போது வெளியிடப்படுவது யாவை? காபன்டை ஆக்சைடு, நீர் மற்றும் ஆற்றல்.
- ஒருசெல் உயிரினங்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக. பாக்டீரியா, அமீபா, கிளாமிடோமோனஸ் மற்றும் ஈஸ்ட்.
- பலசெல் உயிரினங்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக. தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதன்.
- புரோகேரியாட்டிக் செல்களின் உட்கரு எவ்வாறு அழைக்கப்படுகிறது? நியூக்ளியாய்டு.
- புரோகேரியாட்டிக் செல்கள் எவ்வளவு விட்டம் கொண்டவை? 0.003 மைக்ரோமீட்டர் முதல் 20 மைக்ரோமீட்டர் வரை.
- தெளிவான உட்கருவைக் கொண்டுள்ள செல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? யூகேரியாட்டிக் செல்கள்.
- சென்டிரியோல்கள் எவ்வகைச் செல்லில் மட்டுமே காணப்படும்? விலங்கு செல்.
- செல்லிற்கு உறுதி மற்றும் வலிமையைத் தரும் பாதுகாப்பாளர் எது? செல்சுவர்.
- செல்லின் கதவு என்று அழைக்கப்படுவது எது? செல்சவ்வு.
- செல்லின் நகரும் பகுதி எனப்படுவது எது? சைட்டோபிளாசம்.
- உணவு, நீர் மற்றும் வேதிப் பொருள்களைச் சேமிக்கும் சேமிப்பு கிடங்கு எது? நுண்குமிழ்கள்.
- நியூக்ளியஸின் உள்ளேயும் வெளியேயும் பொருள்களை அனுப்பும் உட்கரு கதவு எது? உட்கரு உறை.
- நமது உடலில் எத்தனை பிரதான உறுப்பு மண்டலங்கள் உள்ளன? எட்டு.
- எலும்பு மண்டலம் எத்தனை பிரிவுகளைக் கொண்டது? இரண்டு (அச்சுச் சட்டகம் மற்றும் இணையுறுப்புச் சட்டகம்).
- மண்டையோடு, முதுகெலும்புத் தொடர், விலா எலும்புக்கூடு ஆகியவை எதில் அடங்கும்? அச்சுச் சட்டகம்.
- மார்பு வளையங்கள், இடுப்பு வளையங்கள், கை கால் எலும்புகள் ஆகியவை எதில் அடங்கும்? இணையுறுப்புச் சட்டகம்.
- விலா எலும்புக்கூடு எத்தனை இணைகள் கொண்ட எலும்புகளைக் கொண்டுள்ளது? 12 இணைகள்.
- முன்னங்கையை தூக்கி உயர்த்த எந்த தசை சுருங்கி சிறியதாகிறது? இரு தலைத்தசை.
- நமது விருப்பத்திற்கேற்ப செயல்படும் தசைகள் எவை? இயக்க தசைகள் (எலும்புத் தசைகள்).
- உணவுக் குழாய் சுமார் எத்தனை மீட்டர் நீளமுடையது? 9 மீட்டர்.
- உமிழ்நீரில் ஸ்டார்ச்சினை சிதைக்கக்கூடிய நொதி எது? அமைலேஸ்.
- இரைப்பை நொதியானது எந்த அமிலத்தைக் கொண்டுள்ளது? ஹைட்ரோகுளோரிக் அமிலம்.
- மனிதனின் ஒவ்வொரு நுரையீரலும் ஏறக்குறைய எத்தனை நுண் காற்றுப்பைகளைக் கொண்டுள்ளன? 300 மில்லியன்.
- நமது இதயம் எத்தனை அறைகளைக் கொண்டது? நான்கு.
- இதயத்தை மூடியுள்ள இரு சுவர்களைக் கொண்ட உறைக்கு பெயர் என்ன? பெரிகார்டியம்.
- இரத்தம் எவற்றைக் கொண்டுள்ளது? பிளாஸ்மா மற்றும் இரத்த அணுக்கள்.
- இரத்த அணுக்கள் எத்தனை வகைப்படும்? மூன்று.
- ஒரு மனிதனின் சராசரி நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு இருக்கும்? 72 முதல் 80 வரை.
- வெளிர் சிவப்பு நிறத்தில் காணப்படும் இரத்தக் குழாய்கள் எவை? தமனிகள்.
- கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும் இரத்தக் குழாய்கள் எவை? சிரைகள்.
- அசுத்த இரத்தத்தினைக் கடத்தும் சிரைகளில் விதிவிலக்கானது எது? நுரையீரல் சிரைகள்.
- மூளை எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது? மூன்று (முன் மூளை, நடு மூளை மற்றும் பின் மூளை).
- உடலின் மத்தியக் கட்டுப்பாட்டு மையம் எது? மூளை.
- ஹார்மோன்கள் என்னும் வேதிப் பொருட்களை உற்பத்தி செய்யும் சுரப்பிகள் எவை? நாளமில்லா சுரப்பிகள்.
- ஆண்களில் காணப்படும் இனப்பெருக்க உறுப்பு எது? ஓரிணை விந்தகம்.
- பெண்களில் காணப்படும் இனப்பெருக்க உறுப்பு எது? ஓரிணை அண்டகம்.
- அவரை விதை வடிவத்தில் அடிவயிற்றுக் குழியில் அமைந்துள்ள உறுப்பு எது? சிறுநீரகங்கள்.
- நமது உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது? 70 சதவிகிதம்.
- நமது உடலில் நீளமான எலும்பு எது? தொடை எலும்பு.
- குழந்தைகள் பிறக்கும் பொழுது தோராயமாக எத்தனை எலும்புகளுடன் பிறக்கின்றன? 300க்கும் அதிகமான.
- கண்ணின் மூன்று முக்கிய பகுதிகள் யாவை? கார்னியா, ஐரிஸ் மற்றும் கண்மணி (பியூப்பில்).
- மனிதனின் புறச் செவியில் உள்ள மடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது? புறச்செவி மடல் (Pinna).
- வேதியாற்றலை மின்னாற்றலாக மாற்றும் கருவி எது? மின்கலன்.
- கைப்பேசிகள், மடிக்கணினிகளில் பயன்படுத்தப்படும் பலமுறை மின்னேற்றம் செய்யக்கூடிய மின்கலன்கள் யாவை? துணை மின்கலன்கள்.
- அம்மீட்டர் ஒரு மின்சுற்றில் எவ்வாறு இணைக்கப்பட வேண்டும்? தொடரிணைப்பில்.
- காந்தத்தன்மை உள்ள பொருள்களுக்கு எடுத்துக்காட்டு தருக. இரும்பு, நிக்கல், கோபால்ட்.
- மின்காந்த தொடர்வண்டிகள் தற்போது நடைமுறையில் உள்ள நாடுகள் எவை? சீனா, ஜப்பான், தென்கொரியா.
- விதை முளைத்தல், பருவகால மாற்றங்கள் ஆகியவை எவ்வகை மாற்றங்கள்? மெதுவான மாற்றங்கள்.
- கண்ணாடி உடைதல், பட்டாசு வெடித்தல் ஆகியவை எவ்வகை மாற்றங்கள்? வேகமான மாற்றங்கள்.
- தொட்டால் சிணுங்கி தாவரம், ரப்பர் வளையம் நீளுதல் ஆகியவை எவ்வகை மாற்றங்கள்? மீள் மாற்றம்.
- பால் தயிராதல், உணவு செரித்தல் ஆகியவை எவ்வகை மாற்றங்கள்? மீளா மாற்றம்.
- வளிமண்டலம் எத்தனை வெவ்வெறு அடுக்குகளால் ஆனது? ஐந்து.
- பூமியின் அருகிலுள்ள, நாம் வாழும் வளிமண்டல அடுக்கு எது? அடிவளி மண்டலம் (Troposphere).
- மேகங்கள் உருவாகக் காரணமாகும் அடுக்கு எது? அடிவளி மண்டலம்.
- செயற்கை மழை பொழிய வைத்தலில் பயன்படுவது எது? உலர்பனிக்கட்டிகள்.
- நன்னீரில் துருவ பனிப்படிவுகள் மற்றும் பனியாறுகளின் சதவீதம் எவ்வளவு? 68.7%.
- நன்னீரில் நிலத்தடி நீரின் சதவீதம் எவ்வளவு? 30.1%.
- நன்னீரில் குறைந்தபட்சம் தொடங்கி அதிகபட்சமாக எவ்வளவு உப்புகள் கரைந்திருக்கும்? 0.05 முதல் 1% அளவுள்ள உப்புகள்.
- கடல் நீரில் சதவீதம் எந்த அளவிற்கு மேல் உப்பு கரைந்திருக்கும்? 3% சதவீதத்திற்கும் மேல்.
- கடல் நீரில் கலந்துள்ள முக்கிய உப்புகள் யாவை? சோடியம் குளோரைடு, மெக்னீசியம் குளோரைடு மற்றும் கால்சியம் குளோரைடு.
- நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவு எந்த அலகால் அளக்கப்படுகிறது? TMC/Feet.
- பிச்சாவரம், முத்துப்பேட்டை, பள்ளிக்கரணை, செம்பரம்பாக்கம் ஆகிய இடங்களில் காணப்படுவது யாவை? சதுப்பு நிலங்கள் (சதுப்பு நிலக்காடுகள்).
- நெய்வேலி மற்றும் எண்ணூர் ஆகிய இடங்களில் எவ்வகை மின் நிலையங்கள் அமைந்துள்ளன? அனல்மின் நிலையங்கள்.
- மேட்டூர் மற்றும் பாபநாசம் ஆகிய இடங்களில் எவ்வகை மின் நிலையங்கள் அமைந்துள்ளன? நீர்மின் நிலையங்கள்.
- ஆரல்வாய்மொழி மற்றும் கயத்தாறு ஆகிய இடங்களில் எவ்வகை மின் நிலையங்கள் அமைந்துள்ளன? காற்றாலைகள்.
- இயற்கையான நிறங்காட்டிக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக. மஞ்சள்.
- எலும்பு முறிவுச் சிகிச்சையிலும் சிலைகள் தயாரிப்பிலும் பயன்படுவது எது? பாரிஸ் சாந்து.
- நுண்ணுயிரிகளால் தொகுக்கப்பட்ட தாவர மற்றும் விலங்கு கழிவுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? கரிம உரங்கள்.
- தொழிற்சாலைகளில் வேதிமாற்றத்திற்குட்படுத்தி தயாரிக்கப்படும் உரங்கள் எவை? கனிம உரங்கள்.
- சிமெண்ட் தயாரிக்கப் பயன்படும் தாது உப்புக்கள் எவை? சுண்ணாம்புக்கல், களிமண் மற்றும் ஜிப்சம்.
- ரோபாட்டுகளைப் பற்றி அறியும் அறிவியல் பிரிவின் பெயர் என்ன? ரோபாட்டிக்ஸ்.


0 Comments