TNPSC TRB TET 7 ஆம் வகுப்பு அறிவியல் 100 வினா-விடை | Science Part-3


TNPSC TRB TET 7 ஆம் வகுப்பு அறிவியல் 100 வினா-விடை | Science Part-3


அறிவியல் பொது அறிவு வினா விடைகள் (100 கேள்விகள்)

இயற்பியல் (Physics)
  1. ஒளியானது ஒரு வினாடியில் கடக்கும் தொலைவு எவ்வளவு?
    விடை : 3×108 (மீ/வி).
  2. நமது சூரிய குடும்பத்திலிருந்து ப்ராக்ஷிமா சென்டாரி உள்ள வானியல் அலகின் தொலைவு என்ன?
    விடை : 2,68,770 வானியல் அலகுகள்.
  3. ப்ராக்ஷிமா சென்டாரி நமது சூரிய குடும்பத்திலிருந்து எத்தனை ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது?
    விடை : 4.22 ஒளி ஆண்டு.
  4. மின்னோட்டம் கடத்தியின் வழியே செல்லக் காரணம் என்ன?
    விடை : மின்னழுத்த வேறுபாடு (V).
  5. மின்தடையின் SI அலகு என்ன?
    விடை : ஓம்.
  6. மீள்வினை மூலம் மீண்டும் மின்னேற்றம் செய்யக்கூடிய மின்கலன்கள் எவை?
    விடை : துணை மின்கலன்கள்.
  7. மோட்டார் வாகனங்கள் மற்றும் மின்னியற்றிகளில் பயன்படும் மின்கலன்கள் எவை?
    விடை : துணை மின்கலன்கள்.
  8. ஒரு விளக்கு பழுதானாலும் மற்ற மின்விளக்குகள் ஒளிரும் இணைப்புச் சுற்று எது?
    விடை : பக்க இணைப்பு சுற்று.
  9. குறு சுற்று துண்டிப்பானின் (MCB) முக்கிய பண்பு யாது?
    விடை : தானாகவே மின்சுற்றை துண்டிக்கும் மற்றும் மின்சாரத்தை மீட்டெடுக்கும் பண்பு.
  10. தொலைபேசியில் டையபார்ம் அதிர்வுக்கு உள்ளாகக் காரணம் என்ன?
    விடை : மாறும் காந்த விளைவு.
  11. சென்னையில் பேசின் பாலத்தில் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்ட ஆண்டு எது?
    விடை : 1900 ஆம் ஆண்டு.
  12. பேசும் படங்களை திரைப்படப் படப்பிடிப்பிற்காக எடிசன் பதிவு செய்த ஆண்டு எது?
    விடை : 1891 ஆம் ஆண்டு.
  13. குழல் விளக்கில் பாஸ்பரஸின் மேல் விழுந்து ஒளிரச் செய்யும் கதிர்கள் எவை?
    விடை : புற ஊதாக் கதிர்கள்.
  14. ஒளி எதிரொளிப்பு விதியின்படி, படுகோணமும் (i) எதிரொளிப்பு கோணமும் (r) எவ்வாறு இருக்கும்?
    விடை : சமம்.
  15. சமதள ஆடிகள் ஒன்றுக்கொன்று 45 டிகிரி கோணத்தில் அமைந்திருக்கும் சாதனம் எது?
    விடை : பெரிஸ்கோப்.
  16. திரையில் வீழ்த்த முடியாத பிம்பங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
    விடை : மாய பிம்பங்கள்.
  17. முப்பட்டகத்தின் வழியே ஒளியானது ஏழு வண்ணங்களாகப் பிரிகையடையும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    விடை : நிறப்பிரிகை.
  18. பல வண்ணங்களைக் கலப்பதன் மூலம் வெள்ளை நிறத்தை உருவாக்கும் நியூட்டனின் அமைப்பு எது?
    விடை : நியூட்டன் வட்டு.
  19. சிவப்பு மற்றும் நீலம் ஆகிய முதன்மை நிறங்களைக் கலக்கும் போது கிடைக்கும் நிறம் எது?
    விடை : மெஜந்தா.
  20. ஊசித்துளை காமிரா மூலம் சூரியனின் இயக்கத்தைப் பதிவு செய்யும் புகைப்பட முறைக்கு என்ன பெயர்?
    விடை : சோலாகிராபி.
வேதியியல் (Chemistry)
  1. ஒரே வகையான அணுக்கள் அல்லது பல்வேறு வகையான அணுக்கள் இணைந்து எதனை உருவாக்குகின்றன?
    விடை : மூலக்கூறுகளை உருவாக்குகின்றன.
  2. தனிமங்களில் உலோகப்போலிகளுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.
    விடை : சிலிக்கன், ஆர்சனிக், ஆன்டிமணி மற்றும் போரான்.
  3. சேர்மங்களை எந்த முறையில் மட்டுமே அதன் உறுப்புக் கூறுகளாகப் பிரிக்க இயலும்?
    விடை : வேதியியல் முறையில்.
  4. சமையல் உப்பின் வேதிவாய்ப்பாடு என்ன?
    விடை : NaCl.
  5. பலூனில் உள்ள காற்றை வெப்பப்டுத்தும்போது அது விரிவடையக் காரணம் என்ன?
    விடை : பலூனில் உள்ள காற்றின் அடர்த்தி வெளிப்புறத்தில் உள்ள காற்றின் அடர்த்தியை விட குறைவதால்.
  6. நீரை எந்த வெப்பநிலைக்கு வெப்பப்படுத்தும்போது கொதித்து ஆவியாக மாறுகிறது?
    விடை : 100 °C.
  7. நிறை எண் என்பதன் வாய்ப்பாடு என்ன?
    விடை : புரோட்டான்களின் எண்ணிக்கை + நியூட்ரான்களின் எண்ணிக்கை.
  8. அணுவின் உட்கருவானது எவற்றைக் கொண்டுள்ளது?
    விடை : புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களை.
  9. ஆல்கஹால் எந்த வெப்பநிலைக்கு குறைவான உறைநிலையைக் கொண்டுள்ளது?
    விடை : 100 degree C க்கும் குறைவான உறைநிலையை.
  10. மருத்துவ வெப்பநிலைமானியானது செல்சியஸ் அளவுகோலில் எந்த அளவீட்டைக் கொண்டுள்ளது?
    விடை : 35°C முதல்  42°C வரை அல்லது 94°F முதல் 108°F வரை
  11. செல்சியஸ் அளவீட்டு முறைக்கு முன்பு வழங்கப்பட்ட பெயர் என்ன?
    விடை : சென்டிகிரேடு.
  12. மனித உடலின் வெப்பநிலையை அளக்க மருத்துவ வெப்பநிலைமானியைப் பயன்படுத்தும் போது பொதுவாகப் பயன்படும் அளவீடு எது?
    விடை : பாரன்ஹீட் அளவீட்டு முறை.
  13. 1°C வெப்பநிலை மாற்றம் ஏற்பட்டால் கெல்வின் அளவீட்டில் எவ்வளவு மாறுபாடு ஏற்படும்?
    விடை : 1K வெப்பநிலை மாறுபாடு ஏற்படும்.
  14. ஆவியாதல் என்பது என்ன வகையான நிலை மாற்றம்?
    விடை : திரவத்திலிருந்து வாயுவிற்கு மாறுவது.
  15. ஒரு சூடான செறிந்த கரைசலில் இருந்து படிகங்களைப் பெறும் முறைக்கு என்ன பெயர்?
    விடை : படிகமாக்குதல்.
  16. மெக்னீசியம் நாடா ஆக்ஸிஜனுடன் இணைந்து உருவாக்கும் புதிய பொருள் என்ன?
    விடை : மெக்னீசியம் ஆக்ஸைடு.
  17. பால் தயிராதல் என்பது எவ்வகை மாற்றம்?
    விடை : வேதியியல் மாற்றம்.
  18. நீரை மின்னாற்பகுக்கும்போது பிரிகையடையும் வாயுக்கள் எவை?
    விடை : ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் வாயுக்கள்.
  19. சுட்ட சுண்ணாம்புடன் நீரினைச் சேர்க்கும்போது உருவாகும் தெளிந்த சுண்ணாம்பு என்பதன் வேதியியல் பெயர் என்ன?
    விடை : கால்சியம் ஹைட்ராக்ஸைடு.
  20. மரம் எரியும் நிகழ்வு எவ்வகை வேதி மாற்றத்திற்கு உதாரணம்?
    விடை : வெப்ப உமிழ் மாற்றம்.
  21. பனிக்கட்டி உருகும் நிகழ்வு எவ்வகை வேதி மாற்றத்திற்கு உதாரணம்?
    விடை : வெப்ப ஏற்பு மாற்றம்.
  22. இயற்கை பலபடிகளான புரதங்கள் எதனால் ஆனவை?
    விடை : இருபது வகையான அமினோ அமிலங்கள் (ஒற்றைப்படிகள்).
  23. பாலிவினைல் குளோரைடு (PVC) என்ற நெகிழி எவ்வாறு உருவாகிறது?
    விடை : பல ஒற்றைப்படிகள் இணைந்து பலபடியாக உருவாவதால்.
  24. பாராசூட்டுகள் மற்றும் மலை ஏறத் தேவையான கயிறுகள் தயாரிக்கப் பயன்படும் செயற்கை இழை எது?
    விடை : நைலான்.
  25. குளிர்காலங்களில் பயன்படுத்தப்படும் ஸ்வெட்டர்கள் தயாரிக்கப் பயன்படும் அக்ரிலிக் எதனால் ஆனது?
    விடை : செயற்கை இழை.
  26. ரெசின் குறியீடு எண் #1 (PET/PETE) கொண்ட நெகிழி எவ்வாறு அறியப்படுகிறது?
    விடை : பாலி எத்திலீன் டெரிப்தாலேட்.
  27. சோடா சாம்பல் மற்றும் சுண்ணாம்புக்கல் ஆகியவற்றைக் கலந்து சூளையில் வெப்பப்படுத்தி கண்ணாடி உருவாக்கும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    விடை : சோடா-லைம்-சிலிக்கா கண்ணாடி.
உயிரியல் (Biology)
  1. மலரின் நான்கு முக்கிய வட்டங்கள் எவை?
    விடை : புள்ளி வட்டம், அல்லி வட்டம், மகரந்ததாள் வட்டம், சூலக வட்டம்.
  2. ஸ்போர்களை உருவாக்கும் பூவாத் தாவரங்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.
    விடை : பாசிகள், பிரையோஃபைட் மற்றும் டெரிடோஃபைட் (பெரணிகள்).
  3. தரைகீழ் தண்டின் மாற்றுருவான 'மட்டநிலத் தண்டு' அமைப்புக்கு எடுத்துக்காட்டு தருக.
    விடை : இஞ்சி, மஞ்சள்.
  4. தரைகீழ் தண்டின் மாற்றுருவான 'கந்தம்' அமைப்புக்கு எடுத்துக்காட்டு தருக.
    விடை : சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு.
  5. தரைகீழ் தண்டின் மாற்றுருவான 'கிழங்கு' அமைப்புக்கு எடுத்துக்காட்டு தருக.
    விடை : உருளைக் கிழங்கு.
  6. தரைகீழ் தண்டின் மாற்றுருவான 'குமிழம்' அமைப்புக்கு எடுத்துக்காட்டு தருக.
    விடை : பூண்டு, வெங்காயம்.
  7. நெப்பன்தஸ் தாவரத்தின் இலைகள் எதற்காக குடுவைகளாக மாறியுள்ளன?
    விடை : நைட்ரஜன் ஊட்டச்சத்தைப் பெற பூச்சிகளைக் கவருவதற்காக.
  8. டெங்கு காய்ச்சல் எந்த வைரஸ் வகையைச் சேர்ந்தது?
    விடை : DEN-1, 2 வைரஸ் (பிலெவி வைரஸ்).
  9. டெங்கு காய்ச்சலால் இரத்தத்தில் எதன் எண்ணிக்கை குறைகிறது?
    விடை : இரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை.
  10. உணவை அரைக்கும் மற்றும் ருசிக்கும் செயல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    விடை : மாஸ்டிகேசன் அல்லது மெல்லுதல்.
  11. காசநோய்க்கான தடுப்பூசி எது?
    விடை : BCG தடுப்பூசி.
  12. வெறிநாய்கடி (ரேபிஸ்) நோயின் அறிகுறிகள் எத்தனை வாரங்களில் தோன்றும்?
    விடை : இரண்டு முதல் பன்னிரண்டு வாரங்களில்.
  13. ஒரு செல் உயிரினங்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.
    விடை : கிளாமிடோமோனஸ், பாக்டீரியா மற்றும் அமீபா.
  14. விலங்கு செல்லினைச் சுற்றி எல்லையாக இருக்கும் சவ்வின் பெயர் என்ன?
    விடை : பிளாஸ்மா சவ்வு (அல்லது செல் சவ்வு).
  15. சைட்டோபிளாசம் என்பது எவற்றைக் கொண்டது?
    விடை : சைட்டோசால் மற்றும் செல் நுண்ணுறுப்புகளால் ஆனது.
  16. புரோட்டோபிளாசம் என்பது எவற்றைக் குறிக்கிறது?
    விடை : உட்கருவின் உள்ளேயும் வெளியேயும் உள்ள பொருள் (நியூக்ளியோஃப்ளாசம் + சைட்டோபிளாசம்).
  17. காற்றுச்சுவாச வினைகளில் ஈடுபட்டு ஆற்றல் வெளியீடு செய்யும் செல் நுண்ணுறுப்பு எது?
    விடை : மைட்டோகாண்ட்ரியா.
  18. விலங்கு செல்களில் காணப்படாத நுண்ணுறுப்பு எது?
    விடை : பசுங்கணிகம்.
  19. மலர் மற்றும் பழங்களுக்கு வண்ணத்தை அளிக்கும் கணிகங்கள் எவை?
    விடை : வண்ணகணிகங்கள்.
  20. எண்டோபிளாச வலைப்பின்னலின் பிரதான பணி என்ன?
    விடை : கொழுப்புகள், ஸ்டீராய்டுகள் ஆகியவற்றைத் தயாரிப்பதும் கடத்துவதும்.
  21. செல்பிரிதலின் போது குரோமோசோமாக மாறும் உட்கருவின் பகுதி எது?
    விடை : குரோமேட்டின் உடல்.
  22. ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபுவழி பண்புகளைக் கடத்துவது எது?
    விடை : உட்கரு.
  23. உயிரினங்களை இரத்தம் உடைய மற்றும் இரத்தம் அற்ற விலங்குகள் எனப் பிரித்தவர் யார்?
    விடை : அரிஸ்டாட்டில்.
  24. லின்னேயஸ் அறிமுகப்படுத்திய வகைப்பாட்டில் உள்ள ஏழு முக்கிய படி நிலைகள் எவை?
    விடை : உலகம், தொகுதி, வகுப்பு, வரிசை, குடும்பம், பேரினம், சிற்றினம்.
  25. போலி கால்கள், கசையிழை, குறு இழை மூலம் இடப்பெயர்ச்சி செய்யும் ஒரு செல் உயிரிகள் எவை?
    விடை : புரோட்டோசோவா (எ.கா: அமீபா).
  26. முட்களால் ஆன அகச்சட்டகத்தைக் கொண்ட பல செல் துளையுடலிகள் எவை?
    விடை : பொரிபெரா (எ.கா: சைகான்).
  27. தட்டை புழுக்களுக்கு (பிளாட்டிஹெல்மின்தஸ்) எடுத்துக்காட்டு தருக.
    விடை : பிளானேரியா, கல்லீரல் புழு, நாடாப்புழு.
  28. உடற்கண்டங்கள் அற்ற, மனிதனில் நோய்களை உருவாக்கும் ஒட்டுண்ணி உருளைப் புழுக்கள் எவை?
    விடை : நெமடோடா (எ.கா: அஸ்காரிஸ்).
  29. கண்டங்களாகப் பிரிக்கப்பட்ட உடலைக் கொண்ட வளைத்தசைப் புழுக்களுக்கு எடுத்துக்காட்டு தருக.
    விடை : மண்புழு, நீரிஸ், அட்டை.
  30. தடித்த கைட்டினால் ஆன புறச்சட்டகத்தைக் கொண்ட கணுக்காலிகள் எவை?
    விடை : ஆர்த்ரோபோடா (எ.கா: நண்டு, பூச்சிகள்).
  31. கால்சியத்தினால் ஆன ஓடு கொண்ட மெல்லுடலிகள் எவை?
    விடை : மொலஸ்கா (எ.கா: நத்தை, ஆக்டோபஸ்).
  32. நீர்க் குழல் மண்டலமும், குழாய்க் கால்களும் கொண்ட முட்தோலிகள் எவை?
    விடை : எக்கைனோடெர்மேட்டா (எ.கா: நட்சத்திர மீன்).
  33. குளிர் இரத்தப் பிராணிகளான, இருவாழ்விகளுக்கு (ஆம்பீபியா) எடுத்துக்காட்டு தருக.
    விடை : தவளை, தேரை, சாலமாண்டர்.
  34. புறச்சட்டகமான இறக்கை மற்றும் காற்றறைகள் நிரம்பிய எலும்புகளை உடைய விலங்குகள் எவை?
    விடை : பறவைகள் (ஏவ்ஸ்).
  35. உதரவிதானம் மற்றும் வெளிப்புறக்காது கொண்ட வெப்ப இரத்த பிராணிகள் எவை?
    விடை : பாலூட்டிகள் (மாமெலியா).
  36. வேர், தண்டு மற்றும் இலை என வேறுபாடற்ற தாவர உடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
    விடை : தாலஸ்.
  37. இருவாழ்வி தாவரங்கள் என அழைக்கப்படுபவை எவை?
    விடை : மாஸ்கள் (எ.கா: ஃபியூனேரியா).
  38. நிலத்தில் முதலில் தோன்றிய, வாஸ்குலார் திசுக்கள் கொண்ட நில வாழ்த் தாவரங்கள் எவை?
    விடை : பெரணிகள் (எ.கா: அடியாண்டம்).
  39. சூற்பை அற்ற, திறந்த விதைகளை உடைய தாவரங்கள் எவை?
    விடை : ஜிம்னோஸ்பெர்ம்கள் (எ.கா: பைனஸ், சைகஸ்).
  40. நான்கு அடுக்குகளைக் கொண்ட நன்கு வளர்ச்சியடைந்த மலர்களை உருவாக்கும் பூக்கும் தாவரங்கள் எவை?
    விடை : ஆஞ்சியஸ்பெர்ம்கள்.
  41. ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்கும் தாவர வகை புரோட்டிஸ்டுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
    விடை : பாசிகள்.
  42. சாறுண்ணிகளாகவும் சிதைப்பான்களாகவும் காணப்படும் யூகேரியாடிக் உயிரினங்கள் எவை?
    விடை : பூஞ்சைகள்.
  43. இருசொற்பெயரிடும் முறையை 1623 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியவர் யார்?
    விடை : காஸ்பார்டு பாஹின்.
  44. புறாவின் அறிவியல் பெயர் என்ன?
    விடை : கொலும்பா லிவியா.
  45. தேங்காயின் அறிவியல் பெயர் என்ன?
    விடை : காக்கஸ் நியூசிபெரா.
விண்வெளி மற்றும் வானியல் (Space and Astronomy)
  1. விண்மீன் திரள்களின் வகைகள் யாவை?
    விடை : சுழல் திரள், நீள்வட்டம், தட்டைச் சுழல் மற்றும் ஒழுங்கற்ற வடிவம்.
  2. நமது விண்மீன் திரளின் மையத்தில் சூரியனைப்போல பில்லியன் மடங்கு அதிக நிறையுடைய என்ன காணப்படுகிறது?
    விடை : கருந்துளை.
  3. சர்வதேச வானியல் சங்கம் எத்தனை விண்மீன் மண்டலங்களை வகைப்படுத்தியுள்ளது?
    விடை : 88 விண்மீன் மண்டலங்களை.
  4. துருவ நட்சத்திரமான போலாரிஸ் எந்த விண்மீன் மண்டலத்தில் உள்ளது?
    விடை : உர்சா மைனர் (சிறிய கரடி).
  5. இஸ்ரோ 2017 பிப்ரவரி 15 அன்று ஒரே ஏவுகணையில் (PSLV-C37) விண்ணில் செலுத்திய துணைக்கோள்களின் எண்ணிக்கை என்ன?
    விடை : 104 துணைக்கோள்களை.
  6. சந்த்ரயான்-2 துணைக்கோளை நிலவிற்கு ஏவிய ஏவுகணை வாகனம் எது?
    விடை : GSLV-Mk III.
  7. இயற்பியலுக்கான நோபல் பரிசினை 1983ல் வென்ற இந்திய அமெரிக்க விண்வெளி இயற்பியலாளர் யார்?
    விடை : சுப்ரமணியன் சந்திரசேகர்.
  8. எந்த வால்நட்சத்திரம் வியாழனில் மோதிய நிகழ்வு கலிலியோ விண்கலம் மூலம் அறியப்பட்டது?
    விடை : ஷூ மேக்கர் லெவி-9.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement