TNPSC TRB TET 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | Social Science Part-1
வரலாறு மற்றும் காலக்கோடு (History and Timeline)
- வரலாறு என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து ('இஸ்டோரியா') பெறப்பட்டது. அதன் பொருள்: விசாரிப்பதன் மூலம் கற்றல்.
- வரலாற்றின் தந்தை: ஹெரடோடஸ்.
- அசோகர் குறித்த வரலாற்று ஆவணங்களைத் தொகுத்து நூலாக வெளியிட்ட ஆங்கிலேயர்: சார்லஸ் ஆலன்.
- மனிதர்களின் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்று: சக்கரம்.
- மானுடவியல் (Anthropology) என்பது பெறப்பட்ட மொழி: கிரேக்க வார்த்தை.
- குரோமேக்னான்ஸ் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள்: பிரான்சில் உள்ள லாஸ்காஸ் குகைகள்.
- நெருப்பின் பயனை அறிந்திருந்த தொடக்ககால மனிதன்: ஹோமோ எரக்டஸ்.
- கலிங்கத்தின் மீது அசோகர் போர் தொடுத்தது: கி.மு. 261.
- பண்டைய மகதத்தை ஆண்ட முதல் அரச வம்சம்: ஹரியங்கா வம்சம்.
- இந்தியாவிலேயே முதன்முதலாகப் பேரரசை உருவாக்கியவர்கள்: நந்தர்கள்.
- ஹரப்பா நகரத்தை முதன்முதலில் தமது நூலில் விவரித்த ஆங்கிலேயர்: சார்லஸ் மேசன்.
- சிந்துவெளி மக்களுக்குப் பயன் தெரியாத உலோகம்: இரும்பு.
- மனிதர்களால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட உலோகம்: செம்பு.
- உலகின் மிகத் தொன்மையான நாகரிகம்: மெசபடோமியா நாகரிகம்.
- இந்திய தொல்லியல் துறை (ASI) நிறுவப்பட்ட ஆண்டு: 1861.
- கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் கண்டுபிடிக்கப்பட்ட இடம்: குஜராத்திலுள்ள லோதல்.
- சங்க காலச் சோழ அரசனின் துறைமுகம்: பூம்புகார்.
- மதுரை 'தூங்கா நகரம்' என அழைக்கப்படக் காரணமான அங்காடிகள்: நாளங்காடி மற்றும் அல்லங்காடி.
- "நகரங்களில் சிறந்தது காஞ்சி" என்று கூறியவர்: கவிஞர் காளிதாசர்.
- "கல்வியில் கரையிலாத காஞ்சி" என்று காஞ்சியைப் புகழ்ந்தவர்: திருநாவுக்கரசர்.
- பொருந்தல் அகழாய்வு இடம்: திண்டுக்கல் மாவட்டம்.
- கீழடி அகழாய்வு இடம்: சிவகங்கை மாவட்டம்.
- சங்க காலச் சோழ அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர்: கரிகால் வளவன் (அல்லது) கரிகாலன்.
- 'கொற்கையின் தலைவன்' எனப் போற்றப்பட்ட பாண்டிய அரசன்: நெடுஞ்செழியன்.
- முசிறியை 'இந்தியாவின் முதல் பேரங்காடி' எனக் குறிப்பிட்டவர்: மூத்த பிளினி.
- களப்பிரர்கள் தமிழகத்தை ஆட்சி செய்த காலம்: சுமார் இரண்டரை நூற்றாண்டுகள்.
- ஆரியர்களின் கல்வி முறை: குருகுலக் கல்வி முறை.
- 'சத்யமேவ ஜெயதே' (வாய்மையே வெல்லும்) என்ற வாக்கியம் எடுக்கப்பட்டது: முண்டக உபநிடதம்.
- சமண மதத்தின் முதல் தீர்த்தங்கரர்: ரிஷபர்.
- சமண மதத்தின் கடைசி (24வது) தீர்த்தங்கரர்: மகாவீரர்.
- கௌதம புத்தரின் இயற்பெயர்: சித்தார்த்தா.
- பௌத்த சங்கம் பிரிந்த பிரிவுகள்: ஹீனயானம் மற்றும் மகாயானம்.
- புத்தர் தனது முதல் போதனைச் சொற்பொழிவை நிகழ்த்திய இடம்: சாரநாத் மான்கள் பூங்கா.
- நாளந்தா பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் தங்கி கல்வி பயின்ற சீனப் பயணி: யுவான் சுவாங்.
- மெகஸ்தனிஸ் எழுதிய நூல்: இண்டிகா.
- மௌரியப் பேரரசை நிறுவியவர்: சந்திரகுப்த மௌரியர்.
- நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர்: குமாரகுப்தர்.
- சாதவாகன அரச குடும்பத்தின் மாபெரும் மன்னர்: கௌதமபுத்திர சதகர்ணி.
- கனிஷ்கர் கூட்டிய நான்காவது பௌத்த மாநாடு நடைபெற்ற இடம்: ஸ்ரீநகருக்கு அருகேயுள்ள குந்தலவனத்தில்.
- அஸ்வகோஷர் எழுதிய முதல் சமஸ்கிருத நாடகம்: புத்த சரிதம்.
- குப்த அரச வம்சத்தை நிறுவியவர்: ஸ்ரீகுப்தர்.
- 'கவிராஜா' எனும் பட்டம் பெற்ற குப்த அரசர்: சமுத்திர குப்தர்.
- விக்கிரமாதித்யர் என்று அறியப்பட்ட குப்த மன்னர்: இரண்டாம் சந்திரகுப்தர்.
- அறுவைச் சிகிச்சை செய்முறையைப் பற்றி விளக்கிய முதல் இந்தியர்: சுஸ்ருதர்.
- ஹர்ஷவர்த்தனர் எழுதிய புகழ் பெற்ற நூல்கள்: ரத்னாவளி, நாகநந்தா, பிரியதர்சிகா.
- சமுத்திரகுப்தரின் அவைக்களப் புலவர்: ஹரிசேனர்.
- காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர்: இரண்டாம் நரசிம்மவர்மன் (ராஜசிம்மன்).
- 'மாமல்லன்' என அழைக்கப்பட்ட பல்லவ மன்னன்: முதலாம் நரசிம்மவர்மன்.
- சாளுக்கியர்களின் தலைநகரம்: வாதாபி (பதாமி).
- ராஷ்டிரகூட வம்சத்தை நிறுவியவர்: தந்திதுர்க்கர்.
- எல்லோராவில் கைலாசநாதர் கோவிலை உருவாக்கியவர்: முதலாம் கிருஷ்ணர்.
- அண்டத்தைப் பற்றிய படிப்பின் பெயர்: அண்டவியல் (Cosmology).
- சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை: 6000°C.
- இரட்டைக் கோள்கள் என அழைக்கப்படுபவை: வெள்ளியும் புவியும்.
- உயிர்க்கோளம் என்று அழைக்கப்படும் கோள்: புவி.
- மிக அதிகமான துணைக்கோள்களைக் கொண்ட கோள்: வியாழன்.
- செவ்வாய்க் கோளை ஆராய இஸ்ரோ (ISRO) அனுப்பிய விண்கலத்தின் பெயர்: மங்கள்யான்.
- தொலைநோக்கியால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கோள்: யுரேனஸ்.
- 76 வருடங்களுக்கு ஒருமுறை விண்ணில் தோன்றும் வால்விண்மீன்: ஹேலி.
- புவி தன் அச்சில் சாய்ந்திருக்கும் அளவு: 23½ டிகிரி.
- உலகின் மிகப் பெரிய கண்டம்: ஆசியா.
- உலகின் மிகச் சிறிய கண்டம்: ஆஸ்திரேலியா.
- "உலகத்தின் கூரை" என்று அழைக்கப்படுவது: திபெத் பீடபூமி.
- உலகின் மிக உயரமான சிகரம்: எவரெஸ்ட் சிகரம் (8848 மீட்டர்).
- புவியின் மிகப்பெரிய மற்றும் ஆழமான பெருங்கடல்: பசிபிக் பெருங்கடல்.
- பசிபிக் பெருங்கடலின் மிகவும் ஆழமான பகுதியின் பெயர்: மரியானா அகழி.
- ஆங்கில எழுத்து 'S' வடிவத்தைப் போன்று உள்ள பெருங்கடல்: அட்லாண்டிக் பெருங்கடல்.
- பாக் நீர்ச்சந்தி இணைப்பது: வங்காள விரிகுடாவையும் பாக் வளைகுடாவையும்.
- "உலகின் பெரும் மருந்தகம்" என அழைக்கப்படுவது: வெப்ப மண்டல மழைக்காடுகள்.
- வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப் பயன்படும் திமிங்கலப் புனுகு பெறப்படுவது: ஸ்பெர்ம் திமிங்கலம்.
- ஆசியாவின் மிக நீளமான ஆறு: யாங்சி.
- உலகின் மிக ஈரப்பதம் வாய்ந்த பகுதி: மௌசின்ராம்.
- தென்கிழக்கு ஆசியாவின் 'அரிசிக் கிண்ணம்' என அழைக்கப்படும் நாடு: தாய்லாந்து.
- உலகிலேயே நீண்ட இருப்புப்பாதை வழித்தடம்: டிரான்ஸ்-சைபீரியன் இருப்புப்பாதை.
- ஐரோப்பாவின் மிக நீளமான ஆறு: வோல்கா ஆறு.
- உலகிலேயே நீர் மின்சாரத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகள்: நார்வே மற்றும் ஸ்வீடன்.
- முதன் முதலில் நில வரைபடத்தில் அட்ச தீர்க்கக் கோடுகளை வரைந்தவர்: தாலமி.
- 0° அட்சக்கோடு அழைக்கப்படுவது: நிலநடுக்கோடு.
- பன்னாட்டு தேதிக்கோடாக நிர்ணயிக்கப்பட்டுள்ள தீர்க்கக்கோடு: 180° தீர்க்கக்கோடு.
- இந்திய திட்ட நேரம் (IST) கணக்கிடப்படும் ஆதாரத் தீர்க்கக்கோடு: 82½ டிகிரி கிழக்கு தீர்க்கக்கோடு.
- உணவுத் தேவைக்கும் தொழில் உற்பத்திக்கும் தேவையான மூலப்பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில்: முதல் நிலை தொழில்.
- சேவைத் துறை என்று அழைக்கப்படுவது: மூன்றாம் நிலைத் தொழில்கள்.
- இந்தியாவை “இனங்களின் அருங்காட்சியகம்" என்று கூறிய வரலாற்றாசிரியர்: வி.ஏ.ஸ்மித்.
- இந்திய அரசால் முதல் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட மொழி: தமிழ்மொழி (2004).
- 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா' என்ற நூலை எழுதியவர்: ஜவஹர்லால் நேரு.
- சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று கூறும் இந்திய அரசியலமைப்புப் பிரிவு: பிரிவு 14.
- தீண்டாமையை ஒழிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு: பிரிவு 17.
- "இந்திய அரசியலமைப்பின் தந்தை" எனப் போற்றப்படுபவர்: டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கார்.
- இந்தியாவின் 'ஏவுகணை மனிதர்' என்று சிறப்பிக்கப்படுபவர்: அப்துல் கலாம்.
- இந்தியாவின் தேசிய இலச்சினை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆதாரம்: சாரநாத் அசோகத் தூணின் உச்சியில் அமைந்திருக்கும் நான்முகச் சிங்கம்.
- இந்திய தேசிய கீதத்தை வங்காள மொழியில் எழுதியவர்: இரவீந்திரநாத் தாகூர்.
- தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலை எழுதியவர்: பங்கிம் சந்திர சட்டர்ஜி.
- இந்திய ரூபாய் சின்னத்தை (₹) வடிவமைத்தவர்: டி.உதயகுமார்.
- இந்திய அரசமைப்புச் சட்டம் முழுமையாகத் தயாராகி ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்: 1949 நவம்பர் 26.
- மக்களாட்சியின் பிறப்பிடம்: கிரேக்கம்.
- உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய நாடு: நியூசிலாந்து (1893).
- இந்தியாவின் மிக பழமையான உள்ளாட்சி அமைப்பு: சென்னை மாநகராட்சி (1688).
- தமிழ்நாட்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட நகராட்சி: வாலாஜாபேட்டை நகராட்சி.
- தேசிய ஊராட்சி தினம்: ஏப்ரல் 24.


0 Comments