TNPSC TRB TET 7 ஆம் வகுப்பு அறிவியல் 100 வினா-விடை | Science Part-6
அறிவியல் பொது அறிவு வினா-விடை (தொகுப்பு)
அடிப்படை அறிவியல் அலகுகள்:
- நேரத்தின் அடிப்படை அலகு: வினாடி.
- பொருளின் அளவின் அடிப்படை அலகு: மோல்.
- ஒளிச்செறிவின் அடிப்படை அலகு: கேண்டிலா.
- மின்னூட்டத்தின் SI அலகு: கூலூம்.
- மின்கடத்துத்திறனின் (சிக்மா) அலகு: சீமென்ஸ்/மீட்டர் (s/m).
- மின்தடை எண்ணின் (ரோ) SI அலகு: ஓம் - மீட்டர்.
- மின்னோட்டம் (I) என்பது எவ்வாறு அளவிடப்படுகிறது? ஒரு வினாடியில் கடத்தப்படும் மின்னூட்டத்தின் அளவு.
- மின்னோட்டத்தை அளவிடும் கருவியின் பெயர் என்ன? அம்மீட்டர்.
- மின்கல அடுக்கைக் கண்டுபிடித்த இத்தாலிய அறிஞர் யார்? லூயி கால்வானி (1780).
- தொலைபேசிகளில் உள்ள டையபார்ம்களை அதிர்வுக்கு உட்படுத்துவது எது? மாறும் காந்த விளைவு.
- 1 மில்லி ஆம்பியர் (mA) மதிப்பு: $10^{-3}$ ஆம்பியர் (1/1,000).
- 1 மைக்ரோ ஆம்பியர் மதிப்பு: $10^{-6}$ ஆம்பியர் (1/10,00,000).
- ஆய்வக வெப்பநிலைமானியானது செல்சியஸ் அளவீட்டில் கொண்டிருக்கும் நெடுக்கம்: $-10^{\circ}C$ முதல் $110^{\circ}C$ வரை.
- பெரும சிறும வெப்பநிலைமானி எதனை அளக்கப் பயன்படுகிறது? ஒரு நாளின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையினை அளக்க.
- மனித உடலின் சராசரி வெப்பநிலை (கெல்வின்): 310.15 K.
- அறை வெப்பநிலையின் சராசரி மதிப்பு (கெல்வின்): 296.15 K.
- ஒளியின் நேர்கோட்டுப் பண்பினைக் கண்டறிந்த முதல் அறிஞர்: அல்-ஹசன் - ஹயத்தம்.
- சமதள ஆடிகள் ஒன்றுக்கொன்று 45 டிகிரி கோணத்தில் அமையும் சாதனம்: பெரிஸ்கோப்.
- ஊசித்துளை காமிரா மூலம் சூரியனின் இயக்கத்தைப் பதிவு செய்யும் பழமையான புகைப்பட முறை: சோலாகிராபி.
- தொலைநோக்கியை முதன்முதலில் கண்டுபிடித்தவர்: ஹான்ஸ் லிப்பர்ஷே.
- பூமியானது அண்டத்தின் மையத்திலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது? 25,000 ஒளி ஆண்டு தொலைவில்.
- பிரபஞ்சம் ஒரு புள்ளியில் பருப்பொருள் குவிந்து விரிவடையத் தொடங்கிய நிகழ்வு: பெரு வெடிப்பு.
- ஒரு விண்ணியல் ஆரம் (pc) என்பது எத்தனை ஒளியாண்டுகளுக்குச் சமம்? 3.2615 ஒ.ஆ.
- நமது பால்வளித்திரளுக்கு அருகில் இருக்கும் மற்றொரு விண்மீன் திரள்: ஆண்ட்ரோமெடா.
- இந்தியாவால் உருவாக்கப்பட்ட SLV-3 ஏவுகணை வாகனம் மூலம் 1980ல் ஏவப்பட்ட முதல் துணைக்கோள்: ரோஹிணி.
- மங்கள்யான் செவ்வாயின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்த தேதி: 2014 செப்டம்பர் 24.
- இஸ்ரோ ஒரே ஏவுகணையில் (PSLV-C37) 104 துணைக்கோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை புரிந்த நாள்: 2017 பிப்ரவரி 15.
- வியாழன் கோள் மற்றும் அதன் நிலவுகளை ஆராய அனுப்பப்பட்ட விண்வெளி நுண்ணாய்வுக் கலனுக்கு யாருடைய பெயர் சூட்டப்பட்டது? கலீலியோ கலிலி.
- ஒரு அணுவில் உள்ள எலக்ட்ரான்களின் மின்சுமை: எதிர்மின்சுமை.
- அணுக்கருவினுள் உள்ள புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது? நிறை எண்.
- அணுவில் நேர்மின்னூட்டம் காணப்படுவதை தர்பூசணி பழத்துடன் ஒப்பிட்டவர்: J.J. தாம்சன்.
- ஓசோன் (O3) எத்தனை ஆக்சிஜன் அணுக்களால் உருவாகிறது? மூன்று.
- விவசாயத்தில் உரங்கள் தயாரிக்கப் பயன்படும் தனிமம்: சல்பர்.
- அலைபேசி தயாரிப்பில் பயன்படும் தனிமம்: காலியம்.
- கணினி சிப்புகள் தயாரிப்பில் பயன்படும் தனிமம்: சிலிக்கன்.
- வைரம் எவ்வகைத் தனிமத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு? பளபளப்பான மற்றும் கடினமான அலோகம்.
- தனிமங்களின் குறியீடுகளை பரிந்துரைக்கும் மற்றும் அங்கீகரிக்கும் பன்னாட்டு அமைப்பு: IUPAC.
- தங்கத்தின் குறியீடான Au பெறப்பட்ட இலத்தீன் பெயர்: ஆரும் (Aurum).
- தாமிரத்தின் குறியீடான Cu பெறப்பட்ட இலத்தீன் பெயர்: குப்ரம் (Cuprum).
- மெக்னீசியம் நாடா ஆக்ஸிஜனுடன் இணைந்து உருவாக்கும் புதிய பொருள்: மெக்னீசியம் ஆக்ஸைடு.
- ஈஸ்ட் மற்றும் பாக்டீரியாக்களினால் சர்க்கரைக் கரைசல் ஆல்கஹாலாக மாறும் நிகழ்வு: நொதித்தல்.
- மரம் எரியும் போது வெப்பமும் ஒளியும் வெளியேறுவது எவ்வகை மாற்றத்திற்கு உதாரணம்? வெப்ப உமிழ் மாற்றங்கள்.
- நெகிழி என்ற பொருளைக் குறிக்கப் பயன்படும் 'பாலிமர்' என்ற சொல் பெறப்பட்ட மொழி: கிரேக்க மொழி.
- விலங்குகளின் உரோமங்கள், விரல் நகங்கள் மற்றும் இறகுகள் ஆகியவை எதனால் ஆன இயற்கை பலபடிகள்? புரத பலபடிகள்.
- விஸ்கோஸ் என்ற திரவத்தினை எந்தக் கருவியின் வழியே அழுத்தி ரேயான் பட்டு இழைகள் கிடைக்கின்றன? ஸ்பின்னரெட்டின் வழியே.
- பாராசூட்டுகள் மற்றும் மலை ஏறத் தேவையான கயிறுகள் தயாரிக்கப் பயன்படும் வலிமையான செயற்கை இழை: நைலான்.
- மெலமைன் மற்றும் பேக்லைட் ஆகியவை எவ்வகை நெகிழிக்கு சிறந்த உதாரணம்? இறுகும் நெகிழிகள்.
- பாலிஸ்டைரீன் (PS) பிளாஸ்டிக்கில் உள்ள புற்றுநோயை ஏற்படுத்தும் நஞ்சான வேதிப்பொருள்: ஸ்டைரீன்.
- செயற்கை நெகிழிகளுக்கு மாற்றாக, கரும்பு மற்றும் சோளக்கூழிலிருந்து தயாரிக்கப்படும் மட்கும் நெகிழி: பாலிலாக்டிக் அமிலம் (PLA).
- PET பாட்டில்களின் நெகிழியினைச் செரிப்பதாக 2016ல் ஜப்பானில் கண்டறியப்பட்ட பாக்டீரியா: ஐடியோனெல்லா சகையென்சிஸ் 201-F6 (Ideonellasakaiensis 201-F6).
- பைரக்ஸ் என்ற முத்திரையுடன் விற்கப்படும், சூளையில் சிதையாத கண்ணாடி எதனைச் சேர்ப்பதன் மூலம் பெறப்படுகிறது? போரான் ஆக்ஸைடு (போரா சிலிக்கேட்).
- மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் மயக்க மூட்டியான கோகைனை 1860ல் பிரித்தெடுத்தவர்: ஆல்பர்ட் நீம்மானின்.
- மனித உடலில் காய்ச்சல் ஏற்படும் போது வெப்பநிலை அதிகரிக்கக் காரணமான, மூளையைச் சென்றடையும் வேதிப்பொருள்: பைரோஜன்.
- ஆண்டிசெப்டிக்கிற்கு உதாரணங்கள்: குளியல் சோப், ஐயோடோபார்ம், போரிக் அமிலம்.
- எரியும்போது சுடரில் இண்டிகோ (கருநீலம்) நிறத்தைத் தரும் வேதிப்பொருள்: பொட்டாசியம் குளோரைடு.
- எரியும்போது சுடரில் மங்கள் நிறத்தை (ஆரஞ்சு/மஞ்சள்) தரும் வேதிப்பொருள்: கால்சியம் குளோரைடு.
- எரியும்போது சுடரில் வெண்மை நிற சுடரைத் தரும் வேதிப்பொருள்: எப்சம் உப்பு.
- மாட்டுச்சாணத்தின் கலோரிஃபிக் மதிப்பு (kJ/kg): 6000-8000.
- மீத்தேனின் கலோரிஃபிக் மதிப்பு (kJ/kg): 500000.
- வெண்பாஸ்பரஸ் அறை வெப்பநிலையில் வெளிப்புற வெப்பத்தின் உதவியின்றி எரிவது எவ்வகை எரிதலுக்கு உதாரணம்? தன்னிச்சையாக எரிதல்.
- காகிதம், மரம் மற்றும் கொழுப்பு பொருள்களை வறுத்தல் போன்றவற்றில் ஏற்படும் தீயை அணைக்கப் பயன்படும் தீயணைப்பான்: நீர்ம இரசாயனங்கள்.
- பலபடிகளை உருவாக்கும் ஒற்றைப்படிகளான எத்திலீன், புரோபைலீன் ஆகியவை எவற்றிலிருந்து கிடைக்கின்றன? பெட்ரோலிய எண்ணெய் மற்றும் வாயுக்களைப் பகுதிப்பிரிப்பு செய்யும்போது.
- உடலின் மேற்பரப்பை மூடி பாதுகாக்கும் தட்டையான மற்றும் தூண் வடிவ செல்கள்: எபிதீலியல் செல்கள்.
- உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் வட்ட வடிவ செல்கள்: இரத்த சிவப்பு செல்கள்.
- மனித உடலில் புதிய சிவப்பு ரத்த செல்கள் எந்த இடைவெளியில் தோன்றுகின்றன? தினமும் தோன்றுகின்றன.
- உட்கருவின் உள்ளே உள்ள திரவம்: நியூக்ளியோஃப்ளாசம் (அணுக்கரு திரவம்).
- விலங்கு செல்களில் காணப்படாத, தாவரங்களுக்கு உணவு தயாரிக்கும் நுண்ணுறுப்பு: பசுங்கணிகம்.
- புரத சேர்க்கைக்கு உதவும் ரைபோசோம்கள் எதன் மேல் இணைந்து காணப்படுகின்றன? சொரசொரப்பான எண்டோபிளாச வலைப்பின்னல்.
- செல்பிரிதலின் போது குரோமோசோமாக அமைவது உட்கருவின் எந்தப் பகுதி? குரோமேட்டின் உடல்.
- மலரின் பாகங்களில் வெளிப்புறமாக உள்ள முதல் வட்டம்: புள்ளி வட்டம்.
- தாவர உலகின் மிகச் சிறிய விதைகள் எதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு? ஆர்க்கிட் விதைகள்.
- ஸ்பைரோகைரா எந்த முறையில் தனது இனப்பெருக்கத்தைச் செய்கிறது? துண்டாதல்.
- அவிசினியா தாவரத்தில் காணப்படும் வாயு பரிமாற்ற வேர்களின் சிறப்புப் பெயர்: நிமட்டோஃபோர்கள் (சுவாசிக்கும் வேர்கள்).
- ஓம்புயிரித் தாவர திசுக்களைத் துளைத்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் கஸ்குட்டா வேர்கள் எவ்வகை வேர்கள்? உறிஞ்சும் வேர்கள் (ஹாஸ்டோரியா).
- பட்டாணி (பைசம் சட்டைவம்) தாவரத்தில் பற்றுக் கம்பிகளாக மாறியுள்ள பகுதி: நுனிச் சிற்றிலைகள்.
- இலைக்காம்பு அகன்று, இலைபோல் மாறி ஒளிச்சேர்க்கை செய்யும் அமைப்பு (பில்லோடு) எந்தத் தாவரத்தில் காணப்படுகிறது? அகேஷியா ஆரிகுலிபார்மிஸ்.
- டெங்கு காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் வகை: பிலெவி வைரஸ் (DEN-1, 2).
- டெங்கு காய்ச்சலால் மனித இரத்தத்தில் எதன் எண்ணிக்கை குறைகிறது? இரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை.
- உணவை அரைக்கும் மற்றும் ருசிக்கும் செயல் உயிரியலில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? மாஸ்டிகேசன்.
- இளம் சிவப்பு கண் நோய் (விழி வெண்படல அழற்சி) எதனால் உண்டாகிறது? வைரஸ் மற்றும் பாக்டீரியாவால்.
- காசநோய் (டி.பி) நோயாளிகளுக்கு வழங்கப்படும் தொடர்ச்சியான மருந்து சிகிச்சை முறை: DOT.
- பசியின்மை (அனோரெக்ஸியா), மஞ்சள் நிறமுடைய சிறுநீர் ஆகியவை எந்த நோயின் முக்கிய அறிகுறிகள்? மஞ்சள் காமாலை.
- ஹைட்ரோபோபியா (நீரைக் கண்டால் பயம்) எந்த நோயின் முக்கிய அறிகுறி? ரேபிஸ் (வெறிநாய்கடி).
- மெலனின் நிறமி இழப்புகளால் தோலில் ஏற்படும் ஒரு தொற்றா நோய்: லூக்கோடெர்மா அல்லது விட்டிலிகோ.
- பெர்னீசியஸ் அனீமியா (தீவிர இரத்தசோகை) எந்த வைட்டமின் குறைபாட்டால் ஏற்படுகிறது? வைட்டமின் B12.
- கோழிகளுக்கு ஆஸ்பர்ஜில்லஸ் (பலவீனம்) நோயை உருவாக்கும் காரணி: பூஞ்சை.
- 'பிரித்தெடுப்போர்கள் நோய்' என்று அழைக்கப்படும் ஆந்த்ராக்ஸ் நோயை உருவாக்கும் பாக்டீரியாவின் பெயர்: பேசில்லஸ் ஆந்த்ராசிஸ்.
- ஆந்த்ராக்ஸ் நோயைக் குணமாக்க உதவும் சிறந்த மருந்துகள்: பெனிசிலின் மற்றும் சிப்ரோஃப்ளோக்சாசின்.
- விலங்குகளை இடப்பெயர்ச்சியின் அடிப்படையில் நடப்பவை, பறப்பவை, நீந்துபவை எனப் பிரித்தவர்: அரிஸ்டாட்டில்.
- உயிரினங்களை இரண்டு சொல் கொண்ட பெயர்களோடு அழைக்கும் முறையை 1623ல் அறிமுகப்படுத்தியவர்: காஸ்பார்டு பாஹின்.
- காஸ்பார்டு பாஹின் அறிமுகப்படுத்திய இரு சொல் பெயரிடும் முறையை 1753ல் செயல்படுத்தியவர்: கரோலஸ் லின்னேயஸ்.
- மனிதனின் அறிவியல் பெயர் (இருசொற்பெயர்): ஹோமோ சேப்பியன்ஸ்.
- விலங்குகளின் இனப்பெருக்கத்தை ஆய்வு செய்தல் மற்றும் பராமரிப்பு பற்றிப் படிக்கும் பிரிவு: விலங்கு வளர்ப்பு.
- பஞ்சு மற்றும் சணல் ஆகியவை எவ்வகை இழைகளுக்கு எடுத்துக்காட்டுகள்? தாவர இழைகள்.
- ஒரு முதிர்ந்த பெண் பட்டுப் பூச்சி தோராயமாக இடும் முட்டைகளின் எண்ணிக்கை: 500 முட்டைகள்.
- பட்டுப் புழுக்கள் உணவாக உண்டு வாழும் இலைகள்: மல்பெரி இலைகள்.
- ஓவியம் தீட்டும் தூரிகையை உருவாக்க எந்த விலங்கின் முடி பயன்படுகிறது? குதிரையின் உரோமம்.
- 1900 ஆம் ஆண்டு சென்னையில் முதன்முதலில் அனல் மின் நிலையம் உருவாக்கப்பட்டது எங்கு? பேசின் பாலம்.
- தாமஸ் ஆல்வா எடிசன் திரைப்பட படப்பிடிப்பிற்காக பேசும் படங்களை பதிவு செய்த ஆண்டு: 1891.
- 'இயற்கை மற்றும் சோதனைத் தத்துவம்' (Natural & Experimental Philosophy) என்ற நூலை எழுதியவர்: ரிச்சர்டு பார்க்கர்.


0 Comments