TNPSC TRB TET 8 ஆம் வகுப்பு அறிவியல் 100 வினா-விடை | Science Part-1


TNPSC TRB TET 8 ஆம் வகுப்பு அறிவியல் 100 வினா-விடை | Science Part-1


அலகு மற்றும் அளவீடுகள்
கேள்விவிடை
வெப்பநிலையின் SI அலகு என்ன?கெல்வின்
மின்னோட்டத்தின் SI அலகு என்ன?ஆம்பியர்
மின்னூட்டத்தின் SI அலகு என்ன?கூலும்
பொருளின் அளவின் SI அலகு என்ன?மோல்
ஒளிச்செறிவின் SI அலகு என்ன?கேண்டிலா
விசையின் SI அலகு என்ன?நியூட்டன் (N)
வெப்பத்தின் SI அலகு என்ன?ஜூல்
காந்தப்புலத்தை அளப்பதற்கான அலகு என்ன?டெஸ்லா அல்லது காஸ்
தளக்கோணத்தின் அலகு என்ன?ரேடியன்
திண்மக் கோணத்தின் அலகு என்ன?ஸ்ட்ரேடியன்
மின்னூட்டம் எந்த அலகினால் அளவிடப்படுகிறது?கூலூம் (C)
ஒரு கலோரி என்பது எத்தனை ஜூலுக்கு சமம்?4.189 J
கருவிகளும் கண்டுபிடிப்புகளும்
கேள்விவிடை
மின்னோட்டம் எந்த கருவியின் மூலம் அளக்கப்படுகிறது?அம்மீட்டர்
வளிமண்டல அழுத்தம் எந்த கருவியால் அளக்கப்படுகிறது?பாரோ மீட்டர்
நிலைமின்காட்டியை முதன்முதலாக வடிவமைத்தவர் யார்?வில்லியம் கில்பர்ட்
தங்க இலை நிலைமின்காட்டியை வடிவமைத்தவர் யார்?ஆபிரகாம் பெனட்
ஒலிப்பதிவு சாதனத்தைக் கண்டுபிடித்தவர் யார்?தாமஸ் ஆல்வா எடிசன்
வெற்றிடக்குடுவையை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்?சர் ஜேம்ஸ் திவார்
ஆக்சிஜனைக் கண்டறிந்தவர் யார்?C.W.ஷீலே மற்றும் ஜோசப் பிரிஸ்ட்லி
புரோட்டானைக் கண்டறிந்தவர் யார்?கோல்ஸ்டின்
எலக்ட்ரானைக் கண்டறிந்தவர் யார்?தாம்ஸன்
நியூட்ரானைக் கண்டுபிடித்தவர் யார்?ஜேம்ஸ் சாட்விக்
எதிர்உயிர்க்கொல்லி மருந்தான பெனிசிலினை கண்டறிந்தவர் யார்?சர்.அலெக்சாண்டர் பிளம்மிங்
மின்னாற்பகுத்தல் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்?மைக்கேல் பாரடே
ஊடுபரவல் ஒழுங்குபாடு என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்?ஹோபர்
இயற்பியல் தகவல்கள்
கேள்விவிடை
பனிக்கட்டியின் உருகுநிலை என்ன?0°C
நீரின் கொதிநிலை என்ன?100°C.
ஒரு வளிமண்டல அழுத்தம் (1 atm) எத்தனை பாஸ்கலுக்குச் சமம்?1,00,000 பாஸ்கல்
தாவரங்களில் நீர் மேலேறுவதற்குக் காரணம் என்ன?பரப்பு இழுவிசை
குவியாடியில் எப்போதும் எவ்வகை பிம்பம் தோன்றும்?நேரான சிறிய மாயபிம்பம்
வாகனங்களின் முகப்பு விளக்குகளில் பயன்படும் ஆடி எது?குழி ஆடி
வாகனங்களின் பின்புறம் வரும் வாகனங்களைப் பார்ப்பதற்கு பயன்படும் ஆடி எது?குவி ஆடி
கலைடாஸ்கோப் எந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது?ஒளியின் பன்முக எதிரொளிப்பு
காற்றில் ஒளியின் திசைவேகம் என்ன?
3×108 -13 cross 10 to the eighth power to the negative 1 power
(m/s)
எந்த நிற ஒளிக் கதிர் அதிக அலைநீளத்தைக் கொண்டுள்ளது?சிகப்பு நிற ஒளிக் கதிர்
மின்விளக்குகளில் பயன்படுத்தப்படும் கம்பி எது?டங்ஸ்டன்
மின்னல் கடத்தி எதற்காகப் பயன்படுகிறது?உயரமான கட்டடங்களை மின்னல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க
மனித காதுகளால் கேட்கக்கூடிய ஒலியின் அதிர்வெண் வரம்பு என்ன?20 ஹெர்ட்ஸ்க்கு மேல் மற்றும் 20,000 ஹெர்ட்ஸ்க்கு கீழ்
20 ஹெர்ட்ஸ்க்கு குறைவான அதிர்வெண் கொண்ட ஒலி எவ்வாறு அழைக்கப்படுகிறது?குற்றொலி (இன்ஃப்ராசோனிக்)
பொருண்மை அழியா விதியை முன்மொழிந்தவர் யார்?லவாய்சியர்
மாறா விகித விதியை கூறியவர் யார்?ஜோசப் ப்ரௌஸ்ட்
வேதியியல் தகவல்கள்
கேள்விவிடை
மின்சுமை பெற்றுள்ள அணுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?அயனிகள்
அறைவெப்பநிலையில் திரவ நிலையில் உள்ள உலோகம் எது?பாதரசம்
எல்லா வாயுக்களுமே எவ்வகை தனிமங்கள்?அலோகங்கள்
குடிநீரில் நுண்ணுயிரிகளை அழிக்கும் பொருளாக பயன்படுவது எது?குளோரின்
உலோகப் போலிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு தருக.போரான் (அல்லது சிலிக்கான், ஆர்சனிக்)
மயில் துத்தம் என அழைக்கப்படும் சேர்மம் எது?தாமிர சல்பேட்
பச்சைத் துத்தம் என அழைக்கப்படும் சேர்மம் எது?இரும்பு சல்பேட்
சலவைத்தூளின் வேதிப்பெயர் என்ன?கால்சியம் ஆக்சி குளோரைடு
ரொட்டிச் சோடாவின் வேதிப்பெயர் என்ன?சோடியம் பை கார்பனேட்
பாரீஸ் சாந்து என்பதன் பொதுப்பெயர் எதைக் குறிக்கிறது?கால்சியம் சல்பேட் ஹெமி ஹைட்ரேட்
சுட்ட சுண்ணாம்பு நீருடன் சேரும்பொழுது என்ன உருவாகிறது?நீற்றுச்சுண்ணாம்பு (கால்சியம் ஹைட்ராக்சைடு)
ஹேபர் முறையில் அம்மோனியா தயாரிக்க பயன்படும் வினைவேக மாற்றி எது?உலோக இரும்பு
வனஸ்பதி நெய் (டால்டா) தயாரித்தலில் பயன்படும் வினைவேக மாற்றி எது?நன்கு தூளாக்கப்பட்ட நிக்கல்
துரு என்பது என்ன?நீரேறிய பெர்ரிக் ஆக்சைடு
காற்றிலிருந்து நைட்ரஜன் முதன்முதலில் யாரால் பிரித்தெடுக்கப்பட்டது?கார்ல் வில்கம் ஷீலே
வாகனங்களின் டயர்களில் நிரப்பப்படும் வாயு எது?நைட்ரஜன்
திட நிலையிலுள்ள கார்பன் டை ஆக்சைடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?உலர் பனிக்கட்டி
தூய மழை நீரின் pH மதிப்பு என்ன?5.6
நீர் முதன்முதலில் யாரால் தயாரிக்கப்பட்டது?ஹென்றி கேவென்டிஷ்
சல்பியூரிக் அமிலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?வேதிப்பொருட்களின் அரசன்
அமிலங்கள் நீல லிட்மஸ் தாளை என்ன நிறமாக மாற்றுகின்றன?சிவப்பு
சதுப்பு நில வாயு என்று அழைக்கப்படுவது எது?மீத்தேன்
பெட்ரோலியத்தை எவ்வாறு அழைக்கிறோம்?கருப்புத்தங்கம்
உயிரியல் தகவல்கள்
கேள்விவிடை
வைரஸைப் பற்றிய படிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?வைராலஜி
பூஞ்சைகளைப் பற்றிய படிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?மைக்காலஜி
ஆல்காவைப் பற்றிய படிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?ஆல்காலஜி (பைக்காலஜி)
காளான் வகை பூஞ்சைகளில் மண்ணிற்கு மேலே வளரும் குடை போன்ற அமைப்பு என்ன?கனி உறுப்பு
காசநோய்க்கான தடுப்பூசி எது?BCG தடுப்பூசி
பருப்பு வகைத் தாவரங்களின் வேர் முடிச்சுகளில் வாழும் நைட்ரஜனை நிலைநிறுத்தும் பாக்டீரியம் எது?ரைசோபியம்
பாலில் உள்ள லாக்டோஸை லாக்டிக் அமிலமாக மாற்றும் பாக்டீரியம் எது?லாக்டோ பேசில்லஸ்
ரேபிஸ் நோய்க்கு காரணமான வைரஸ் எது?ரேப்டோ விரிடி
மலேரியா நோயைப் பரப்பும் கொசு எது?பெண் அனோபிலஸ் கொசு
வகைப்பாட்டியல் என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் யார்?அகஸ்டியன் பைரமிஸ் டி கேண்டோல்
இருசொற் பெயரிடுதல் முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?கரோலஸ் லின்னேயஸ்
தாவரவியல் பெயரிடுதல் முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?காஸ்பர்டு பாகின்
அகார் அகார் எதிலிருந்து எடுக்கப்படுகிறது?சிவப்புப் பாசிகள்
விண்வெளிப் பயணத்தின்போது கார்பன்டை ஆக்ஸைடை அகற்ற பயன்படும் பாசி எது?குளோரெல்லா ஃபைரினாய்டோசா
மருந்துகளின் அரசி என்று கூறப்படுவது எது?பெனிசிலின்
தாவர உலகத்தின் இருவாழ்விகள் என அழைக்கப்படுபவை எவை?பிரையோஃபைட்டுகள்
முதன் முதலில் தோன்றிய உண்மையான நிலத் தாவரங்கள் எவை?டெரிடோஃபைட்டுகள்
திறந்த விதைத் தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?ஜிம்னோஸ்பெர்ம்கள்
ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு மருந்தாகப் பயன்படும் அல்கலாய்டு எது?எஃபிடிரின்
மூடிய விதைத் தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகப் பயன்படும் தாவரம் எது?கீழா நெல்லி (ஃபில்லாந்தஸ் அமாரஸ்)
செல்களைப் பற்றிய படிப்பு எவ்வாறு அழைக்கப்படும்?செல் உயிரியல்
மனித உடலின் மிக நீண்ட செல் எது?நரம்பு செல்
மிகச்சிறிய பாக்டீரியா எது?மைக்கோ பிளாஸ்மா
விழித்திரையானது ஒளிர்க்கதிர்களை மின் தூண்டல்களாக மாற்றி எதன் வழியாக மூளைக்கு அனுப்புகிறது?பார்வை நரம்பு
சராசரியாக நமது நுரையீரலில் எத்தனை காற்று நுண்ணறைகள் காணப்படுகின்றன?480 மில்லியன்
மனித எலும்புக் கூட்டின் மிக நீளமான எலும்பு எது?பீமர் அல்லது தொடை எலும்பு
மனித எலும்புக்கூட்டின் மிகச்சிறிய எலும்பு எது?நடுச்செவியில் உள்ள 'ஸ்டேப்ஸ்' அல்லது 'அங்கவடி'
மண்டை ஓடு எத்தனை எலும்புகளால் ஆனது?22 எலும்புகள்
பொதுத் தகவல்கள்
கேள்விவிடை
சிறுத்தை மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் ஓடக்கூடியது?76 கி. மீ
இந்தியா தனது முதல் செயற்கைக்கோளான ஆரியப்பட்டாவை எந்த ஆண்டு விண்ணில் செலுத்தியது?1975
சந்திராயன்-1 விண்கலம் எப்போது விண்ணில் செலுத்தப்பட்டது?2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் நாள்
மங்கள்யான் (செவ்வாய் வாகனம்) எப்போது விண்ணில் செலுத்தப்பட்டது?2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் நாள்
விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய வீராங்கனை யார்?கல்பனா சாவ்லா
சிப்கோ இயக்கத்தின் நிறுவனர் யார்?சுந்தர்லால் பகுகுனா

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement