TNPSC TRB TET 8 ஆம் வகுப்பு அறிவியல் 100 வினா-விடை | Science Part-4
அறிவியல் பொது அறிவு வினா விடைகள்
இயற்பியல்
- வெப்பநிலை மாற்றத்திற்கான வாய்ப்பாடு என்ன?
C/100 = (F-32)/100 = (K-273)/100. - பொருளின் அளவின் SI அலகு மோல்-இன் குறியீடு என்ன?
mol. - ஒளி மூலத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட திசையில் ஓரலகுத் திண்மக் கோணத்தில் வெளிவரும் ஒளியின் அளவு என்ன?
ஒளிச்செறிவு. - எரியும் மெழுகுவர்த்தி வெளியிடும் ஒளியின் அளவு தோராயமாக எதற்குச் சமம்?
ஒரு கேண்டிலாவிற்கு. - மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தளங்கள் ஒரு பொதுவான புள்ளியில் வெட்டிக் கொள்வதால் உருவாகும் கோணம் எது?
திண்மக் கோணம். - அடுத்தடுத்த நேர மண்டலங்களுக்கு இடையே உள்ள காலஇடைவெளி எவ்வளவு?
1 மணி நேரம். - புவியானது 15° இடைவெளியில் உள்ள தீர்க்கக் கோடுகளின் அடிப்படையில் எத்தனை நேர மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
24 மண்டலங்கள். - இந்திய திட்டநேரம் என்பது கிரீன்விச் சராசரி நேரத்துடன் எதைக் கூட்டினால் கிடைப்பது?
5.30 மணி. - எண்மதிப்பும் திசையும் இருப்பதால் விசை எவ்வகை அளவு?
வெக்டர் அளவு. - ஆழ் கடல் நீரில் மூழ்கும் ஸ்கூபா வீரர்கள் சிறப்பு உடை அணியக் காரணம் என்ன?
திரவங்களின் விசை மற்றும் மேல்நோக்கு விசை. - பாகியல் விசையின் SI அலகு என்ன?
$Kg\~m^{-1}s^{-1}$ அல்லது $Nsm^{-2}$. - குழி ஆடியால் உருவாக்கப்படும் பிம்பங்களைத் திரையில் பிடிக்க இயலுமா?
ஆம், மெய் பிம்பங்களை தோற்றுவிப்பதால் திரையில் பிடிக்க இயலும். - படுகதிர், எதிரொளிப்புக் கதிர் மற்றும் படுபுள்ளியில் வரையப்பட்ட குத்துக்கோடு ஆகியவை எங்கு அமையும்?
ஒரே தளத்தில். - பனிக்கட்டி உருகுதலின் உள்ளுறை வெப்பத்தின் மதிப்பு என்ன?
80 கலோரிகள்/கிராம் அல்லது 336 ஜூல்/கிராம்.
- தனிமங்களைக் குறிப்பதற்கு ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தும் முறையை ஜான் ஜேகப் பெர்சில்லியஸ் எந்த ஆண்டு உருவாக்கினார்?
1813. - மெர்க்குரி எனும் கடவுளின் பெயரிலிருந்து தருவிக்கப்பட்ட தனிமத்தின் குறியீடு எது?
பாதரசம் (Hg). - வெள்ளியின் (சில்வர்) இலத்தீன் பெயர் என்ன?
அர்ஜெண்டம். - அமெர்சியம் (Am) என்ற தனிமத்தின் குறியீட்டுப் பெயர் எந்த நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டது?
அமெரிக்கா. - நொபிலியம் (No) என்ற தனிமத்தின் பெயர் எந்த அறிவியல் அறிஞரின் பெயரால் அழைக்கப்படுகிறது?
ஆல்ஃபிரட் நோபல். - அறைவெப்பநிலையிலோ அல்லது சற்று அதிக வெப்பநிலையிலோ திரவமாக மாறிவிடும் உலோகங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு தருக.
சீசியம் (அல்லது ருபிடியம், பிரான்சியம், காலியம்). - வானூர்தி மற்றும் ராக்கெட்டின் பாகங்கள் தயாரிக்கப் பயன்படும் உலோகம் எது?
அலுமினியம். - கரிக்கோலின் (பென்சில்) நடுத்தண்டில் பயன்படுத்தப்படும் அலோகம் எது?
கிராஃபைட். - அம்மோனியா தயாரிக்கப் பயன்படும் அலோகம் எது?
நைட்ரஜன். - அறைவெப்பநிலையில் திண்மங்களாக உள்ள உலோகப்போலிகளுக்கு எடுத்துக்காட்டு தருக.
போரான், சிலிக்கான். - சிலிக்கா (மணல்) என்பதில் ஆக்கக்கூறுகளாக உள்ள தனிமங்கள் எவை?
சிலிக்கான், ஆக்சிஜன். - பாரீஸ் சாந்து என்பதன் வேதிப்பெயர் என்ன?
கால்சியம் சல்பேட் ஹெமி ஹைட்ரேட். - சுட்ட சுண்ணாம்பு என்பதன் வேதிப்பெயர் என்ன?
கால்சியம் ஆக்சைடு. - சலவை சோடாவின் வேதிப்பெயர் என்ன?
சோடியம் கார்பனேட். - சல்பியூரிக் அமிலம் சேர்த்த நீரில் மின்சாரத்தைப் பாய்ச்சும்பொழுது வெளிவரும் வாயுக்கள் எவை?
ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன். - சிமெண்ட் தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருளாக இருப்பது எது?
சுண்ணாம்புக் கல். - சூரியனிடமிருந்து வரும் புறஊதாக் கதிர்கள் ஓசோனை சிதைத்து எவற்றைத் தருகிறது?
மூலக்கூறு ஆக்சிஜனையும் அணு ஆக்சிஜனையும். - நீர்த்த அமிலங்களுடன் ஜிங்க், மெக்னீசியம் வினைபடும்பொழுது வெளிவரும் வாயு எது?
ஹைட்ரஜன் வாயு. - வளிமண்டலத்தின் இரண்டாவது அடுக்கு எது?
ஸ்ட்ரட்டோஸ்பியர். - மனித உடலின் மொத்த நிறையில் எத்தனை சதவீதம் நைட்ரஜன் உள்ளது?
3 சதவீதம்.
- வைரஸ்கள் பாக்டீரியாவைக் காட்டிலும் எத்தனை மடங்கு சிறியவை?
10,000 மடங்கு. - பூமியில் தோன்றிய முதல் உயிரினமாகக் கருதப்படுவது எது?
பாக்டீரியா. - பாக்டீரியாக்கள் வகைப்பாட்டியலில் எந்த உலகத்தின் கீழ் இடம் பெற்றுள்ளன?
மொனிரா. - பாக்டீரியாவின் அளவு என்ன?
1 முதல் 5 மைக்ரோமீட்டர். - பாக்டீரியாவில் புரதச் சேர்க்கை எந்த வகை ரைபோசோம்களால் நடைபெறுகிறது?
70S வகை. - ஒரு முனை கற்றைக் கசையிழையைக் கொண்ட பாக்டீரியாவிற்கு எடுத்துக்காட்டு தருக.
சூடோமோனாஸ். - ஒளியற்ற சூழலில் வளரும், பச்சையம் அற்ற உயிரினம் எது?
பூஞ்சைகள். - ஒரு செல்லாலான ஈஸ்ட் பூஞ்சையின் வடிவம் என்ன?
முட்டை வடிவம். - பல செல்களாலான பூஞ்சைக்கு ஒரு எடுத்துக்காட்டு தருக.
பெனிசிலியம். - காளான் பூஞ்சைகளில் வித்துக்களைக் (ஸ்போர்கள்) கொண்டுள்ள பகுதி எது?
செவுள்கள். - மட்குண்ணிகளாக செயல்படும் பூஞ்சைகளுக்கு எடுத்துக்காட்டு தருக.
ரைசோபஸ் (அல்லது பெனிசிலியம், அகாரிகஸ்). - ஒட்டுண்ணிகளாக செயல்படும் பூஞ்சைகளுக்கு எடுத்துக்காட்டு தருக.
பக்சீனியா (அல்லது அல்புகோ, உஸ்டிலோகோ). - புரோட்டோசோவாக்கள் வகைப்பாட்டில் எந்த உலகில் இடம்பெற்றுள்ளன?
புரோட்டிஸ்டா. - கசையிழைகளால் இடம்பெயரும் பிளாஜெல்லேட்டா வகைக்கு எடுத்துக்காட்டு என்ன?
யூக்ளினா. - ஒட்டுண்ணிகளாக உள்ள ஸ்போரோசோவா வகைக்கு எடுத்துக்காட்டு என்ன?
பிளாஸ்மோடியம். - ஸ்ட்ரெப்டோமைசின் எனும் எதிர்உயிர்க்கொல்லி எதிலிருந்து பெறப்படுகிறது?
ஸ்ரெப்டோமைசிஸ் என்ற பாக்டீரியாவிலிருந்து. - விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள புதிய எதிர்உயிர்க்கொல்லி மருந்தின் பெயர் என்ன?
சூடோயுரிடிமைசின். - தட்டம்மை, சின்னம்மை, பொன்னுக்கு வீங்கி மற்றும் ரூபெல்லா நோய்களுக்கான தடுப்பூசி எது?
MMR. - விலங்குகளின் மலக்கழிவுகள் காற்றில்லா சுவாச பாக்டீரியங்களினால் சிதைக்கப்படும் போது உற்பத்தியாகும் முதன்மை வாயு எது?
மீத்தேன். - ஆளித்தாவரங்களின் நார்த் திசுக்களைத் தளர்த்தும் மிருதுவாக்கும் முறையில் பயன்படும் பாக்டீரியம் எது?
சூடோமோனாஸ் ஏருஜினோஸா. - ரொட்டி மற்றும் கேக் தயாரிப்பில் மாவுடன் சேர்க்கப்படும் போது சத்துக்களை அதிகரிக்கும் பசும் ஆல்கா எது?
குளோரெல்லா. - காசநோயை (டியூபர்குளோசிஸ்) உருவாக்கும் பாக்டீரியம் எது?
மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ். - காலரா நோய் பரவும் முறை என்ன?
ஈக்களின் மூலமும், அசுத்தமான உணவு மற்றும் நீரின் மூலமும். - சாதாரண சளியை உருவாக்கும் வைரஸ் எது?
இன்புளூயன்சா வைரஸ். - கால்நடைகளில் ஆந்த்ராக்ஸ் நோயை உருவாக்கும் நுண்ணுயிரி எது?
பேசில்லஸ் ஆந்த்ராக்ஸ் (பாக்டீரியா). - உருளைக்கிழங்கில் பிளைட் நோயை உருவாக்கும் பூஞ்சை எது?
பைட்டோபைத்தோரா இன்பெஸ்டைன்ஸ். - குடல் புண்களைக் குணப்படுத்த உதவும் புரோபயாட்டிக் பாக்டீரியம் எது?
பைபிடோபாக்டீரியம் பைபிடம். - பாலூட்டிகளில் மூளை மற்றும் நரம்பு திசுக்களைப் பாதிக்கும் நோயான குயிட்ஸ்பெல்ட் ஜேக்கப் நோய்க்குக் காரணம் என்ன?
பிரியான்கள். - தாவர உலகத்தின் ஐந்து பிரிவுகள் எவை?
தாலோஃபைட்டா, பிரையோஃபைட், டெரிடோஃபைட்டா, ஜிம்னோஸ்பெர்ம், ஆஞ்சியோஸ்பெர்ம். - Taxis என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் என்ன?
வகைப்படுத்துதல். - Nomos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் என்ன?
விதிகள். - மாஞ்சிஃபெரா இன்டிகா என்ற தாவரவியல் பெயரில் 'மாஞ்சிஃபெரா' எதைக் குறிக்கிறது?
பேரினத்தை. - இருசொற் பெயரிடுதல் முறை முதன்முதலில் எந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டது?
ஸ்பீசிஸ் பிளான்டாரம். - பச்சை பாசிகளில் உணவு எந்த வடிவில் சேமிக்கப்படுகிறது?
ஸ்டார்ச். - சிவப்பு பாசிகளில் உணவு எந்த வடிவில் சேமிக்கப்படுகிறது?
ஃபுளோரிடியன் ஸ்டார்ச். - உலகிலேயே மிகப் பெரிய உலர் தாவரத் தொகுப்பு (Herbarium) எங்கு அமைந்துள்ளது?
ஃபிரான்சின் பாரிஸ் நகரில். - பூஞ்சைகளின் செல் சுவரானது எந்த வேதிப்பொருளால் ஆனது?
கைட்டின். - விஷத்தன்மை உடைய காளான்கள் எந்த வகையைச் சேர்ந்தவை?
அமானிடா. - வைட்டமின் $B\_2$ வை உருவாக்கும் பூஞ்சைகள் எவை?
ஆஸ்பியா கோஸ்பீ மற்றும் எரிமோதீசியம் ஆஸ்பியீ. - கரும்பில் சிவப்பு அழுகல் நோயை உண்டாக்கும் பூஞ்சை எது?
கோலிடாட்ரைக்கம் ஃபல்கேட்டம். - முள்ளங்கியில் வெண்புள்ளி நோயை உண்டாக்கும் பூஞ்சை எது?
அல்புகோ கேண்டிலா. - கால் பாதத்தில் ஏற்படும் நோயான டீனியா பெடிஸ் நோயை உண்டாக்கும் பூஞ்சை எது?
டீனியா பெடிஸ். - பிரையோஃபைட்டாக்களின் ஆண் இனப்பெருக்க உறுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆந்திரிடியம். - பிரையோஃபைட்டாக்களின் பெண் இனப்பெருக்க உறுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆர்க்கிகோனியம். - கடத்துத் திசு பூவாத் தாவரம் என அழைக்கப்படுபவை எவை?
டெரிடோஃபைட்டுகள். - பைனஸ் தாவரத்தின் பசையிலிருந்து பெறப்பட்டு வண்ணப் பூச்சு தயாரிப்பிற்குப் பயன்படுவது எது?
டர்பன்டைன். - பவள வேர் என இருவகைப்படும் வேரைக் கொண்ட தாவரம் எது?
சைக்கஸ். - விசிறி வடிவ இலைகளை உடைய ஒரே வாழும் ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் எது?
ஜிங்கோ பைலோபா. - ஆஞ்சியோ (Angio) என்பதன் பொருள் என்ன?
பெட்டி அல்லது மூடிய பெட்டி. - தூதுவளை (சொலானம் டிரைலொபேட்டம்) எந்த குடும்பத்தைச் சார்ந்தது?
சொலனேசி. - சோற்றுக் கற்றாழை (அலோ வெரா) எந்த குடும்பத்தைச் சார்ந்தது?
லில்லியேசி. - செல்கள் ஒன்றிணைந்து எதை உருவாக்குகின்றன?
திசு. - விலங்குகளில் செல்களின் அளவு எந்த அலகால் அளக்கப்படுகிறது?
மைக்ரான். - செல்களின் சராசரி அளவு விட்டம் என்ன?
0.5 முதல் 20 மைக்ரான் வரை. - மனித அண்ட செல்லின் அளவு என்ன?
100 மைக்ரோமீட்டர். - கண்ணின் நடுஉறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கோராய்டு. - கண்ணின் வடிவத்தைப் பராமரிக்கும் அரைத்திண்ம ஒளி ஊடுருவும் பொருள் எது?
விட்ரியஸ் திரவம் (பின் கண்ணறை திரவம்). - குரல்வளை என பொதுவாக அழைக்கப்படும் சிறிய காற்றுப் பாதை எது?
லாரிங்ஸ். - மார்பக எலும்புடன் இணைக்கப்படாமல் தனித்துக் காணப்படும் 2 ஜோடி விலா எலும்புகள் என்ன?
மிதக்கும் விலா எலும்புகள். - கை எலும்பில் மேல் கையை உருவாக்கும் எலும்பின் பெயர் என்ன?
ஹீமரஸ் (மேற்கை எலும்பு). - முழங்கால் தொப்பி எனப்படும் தொப்பி போன்ற அமைப்பின் பெயர் என்ன?
பட்டெல்லா. - அதிகமாக வேலை செய்யும் தசைகள் எங்கு உள்ளன?
கண்ணில்.
- யுனைடெட் கிங்டமில் பதிவு செய்யப்பட்ட விலங்கு நல தொண்டு நிறுவனம் எது?
ப்ளூ கிராஸ். - பெட்டா (PETA) என்ற விலங்கு நல தொண்டு நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
அமெரிக்காவின் வர்ஜீனியா. - ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியாவை 1959 ஆம் ஆண்டில் சென்னையில் நிறுவியவர் யார்?
கேப்டன் வி. சுந்தரம். - CPCSEA என்பது எதைக் குறிக்கிறது?
விலங்குகள் மீதான சோதனைகளின் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வைகளுக்கான குழு.


0 Comments