TNPSC TRB TET 8 ஆம் வகுப்பு அறிவியல் 100 வினா-விடை | Science Part-6
பொது அறிவு வினாக்கள் மற்றும் விடைகள் (அறிவியல்)
இயற்பியல்
- தளக்கோணம் எவ்வாறு உருவாகிறது?
விடை: இருபரிமாணம் கொண்ட இரு தளங்கள் வெட்டிக் கொள்வதால். - வளிமண்டல அழுத்தம் என்றால் என்ன?
விடை: வளிமண்டலம் புவியின் ஓரலகு புறப்பரப்பின் மீது கீழ்நோக்கிச் செலுத்தும் விசை. - ஒரு பொருள் எப்போது மூழ்கும்?
விடை: ஒரு பொருளின் எடை அதன் மேல்நோக்கு விசையை விட அதிகமாக இருக்கும்போது. - தாவரங்களின் சைலம் திசுக்கள் நீரைக் கடத்த உதவும் விசை எது?
விடை: நீரின் பரப்பு இழுவிசை. - வாகனங்களில் உள்ள தடை (Break) அமைப்பு எந்த விதியின் அடிப்படையில் செயல்படுகிறது?
விடை: பாஸ்கல் விதி. - படுகோணமும், எதிரொளிப்புக் கோணமும் எவ்வாறு இருக்கும்?
விடை: எப்போதும் சமமாக இருக்கும். - ஒளியானது அடர்வுமிகு ஊடகத்திலிருந்து அடர்வு குறை ஊடகத்திற்கு செல்லும்போது எவ்வாறு விலகலடையும்?
விடை: செங்குத்துக்கோட்டை விட்டு விலகிச் செல்லும். - தன்வெப்ப ஏற்புத்திறன் எந்த ஆங்கில எழுத்தால் குறிப்பிடப்படுகிறது?
விடை: C. - மின்துகள்களை ஆக்கவோ அல்லது அழிக்கவோ இயலுமா?
விடை: இயலாது. - மின்னேற்றம் என்றால் என்ன?
விடை: ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு மின்துகள்களை இடமாற்றம் செய்வது. - மின்னோட்டத்தின் வெப்ப விளைவு என்றால் என்ன?
விடை: கடத்தியின் வழியாக மின்னோட்டம் பாயும்போது மின்னாற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படும் நிகழ்வு. - ஒலியின் வேகத்தை குறிக்கும் வாய்ப்பாடு என்ன?
விடை: v = nλ. - இயந்திர அலை வகைகள் எத்தனை? அவை யாவை?
விடை: இரண்டு (குறுக்கலை, நெட்டலை). - ஒரு டெஸ்லா என்பது எத்தனை காஸ்-க்கு சமம்?
விடை: 10000 காஸ். - ஒரு கிராம் நீரானது அதன் வெப்ப நிலையை 1°C உயர்த்தத் தேவைப்படும் வெப்பத்தின் அளவு என்ன?
விடை: ஒரு கலோரி. - மருத்துவமனைகளில் உள்ளுறுப்பின் நிழலுருக்களை உருவாக்க பயன்படும் கருவி எது?
விடை: MRI (காந்த ஒத்ததிர்வு நிழலுறு படம்).
- அலங்காரக் கண்ணாடியாகவும், முகச் சவரக் கண்ணாடியாகவும் பயன்படும் ஆடி எது?
விடை: குழி ஆடி. - மருத்துவர்கள் அணிந்திருக்கும் தலைக் கண்ணாடிகளில் பயன்படும் ஆடி எது?
விடை: குழி ஆடி. - டார்ச் விளக்குகள் மற்றும் தேடுவிளக்குகளில் பயன்படும் ஆடி எது?
விடை: குழி ஆடி. - கண்ணின் வெண்மைப் பகுதியான 'ஸ்கிளிரா' எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: விழிவெளிப்படலம். - கண்ணின் பாவை மற்றும் கருவிழியின் மீது படர்ந்துள்ள ஒளி ஊடுருவும் தோல் படலம் எது?
விடை: கார்னியா (விழி வெண்படலம்).
- ஒரு தனிமத்தின் அனைத்துப் பண்புகளையும் கொண்ட மிகச்சிறிய துகள் எது?
விடை: அணு. - மூலக்கூறுகள் எவ்வாறு உருவாகின்றன?
விடை: ஒரே தனிமத்தின் அணுக்களோ அல்லது வெவ்வேறு தனிமங்களின் அணுக்களோ இணைந்து. - தனிமங்களின் குறியீட்டில் வெள்ளியின் (Silver) குறியீடு என்ன?
விடை: Ag (அர்ஜெண்டம்). - நெப்டியூனியம் (Np) தனிமத்தின் குறியீட்டுப் பெயர் எதிலிருந்து தருவிக்கப்பட்டது?
விடை: நெப்டியூன் கோள். - யுரோனியம் (U) தனிமத்தின் குறியீட்டுப் பெயர் எதிலிருந்து தருவிக்கப்பட்டது?
விடை: யூரேனஸ் கோள். - விமானங்கள் தயாரிப்பில் பெருமளவில் பயன்படுபவை எவை?
விடை: உலோகக் கலவைகள். - எந்த வாயு ராக்கெட்டில் எரிபொருளாக பயன்படுகிறது?
விடை: ஹைட்ரஜன் வாயு. - அறைவெப்பநிலையில் திண்ம நிலையில் காணப்படும் வேதிப் பொருட்கள் எவை?
விடை: உலோகப் போலிகள். - மின்னணுக் கருவிகளில் பயன்படுத்தப்படும் உலோகப் போலி எது?
விடை: சிலிக்கான். - பட்டாசுத் தொழிற்சாலையில் பயன்படும் உலோகப் போலி எது?
விடை: போரான். - தாமிர சல்பேட்டின் ஆக்கக்கூறுகளாக உள்ள தனிமங்கள் எவை?
விடை: தாமிரம், கந்தகம், ஆக்சிஜன். - அசிட்டிக் அமிலத்தில் (வினிகர்) உள்ள ஆக்கக்கூறு தனிமங்கள் எவை?
விடை: கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன். - மீத்தேன் வாயுவின் ஆக்கக்கூறுகள் எவை?
விடை: கார்பன், ஹைட்ரஜன். - அம்மோனியா வாயுவின் ஆக்கக்கூறுகள் எவை?
விடை: நைட்ரஜன், ஹைட்ரஜன். - ஜிப்சம் என்பதன் பொதுப்பெயர் எதைக் குறிக்கிறது?
விடை: கால்சியம் சல்பேட். - இனிப்புகள், பழச்சாறுகள் தயாரிக்கப் பயன்படும் சர்க்கரை எது?
விடை: சுக்ரோஸ். - சிமெண்ட் மற்றும் கண்ணாடித் தயாரிப்பில் பயன்படும் சேர்மம் எது?
விடை: சுட்ட சுண்ணாம்பு (கால்சியம் ஆக்சைடு). - சுண்ணக்கட்டி தயாரிப்பில் பயன்படும் சேர்மம் எது?
விடை: சுண்ணாம்புக் கல் (கால்சியம் கார்பனேட்). - ஓசோன் மூலக்கூறு எத்தனை ஆக்சிஜன் அணுக்களால் பிணைக்கப்பட்டுள்ளது?
விடை: மூன்று ஆக்சிஜன் அணுக்கள். - வெல்டிங் செய்யப் பயன்படுத்தப்படும் வாயுக்கள் எவை?
விடை: ஆக்சிஜன் மற்றும் அசிட்டிலின் (ஆக்சி அசிட்டிலின் உருளைகளில்). - மனித உடலில் நான்காவதாக அதிக அளவில் காணப்படும் தனிமம் எது?
விடை: நைட்ரஜன். - அமில மழையின் pH மதிப்பு என்னவாக இருக்கும்?
விடை: 5.6 ஐ விடக் குறைவு. - அணு என்ற சொல் எந்த மொழிச் சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டது?
விடை: அட்டாமஸ் என்ற கிரேக்க சொல். - 'டாமஸ்' என்பதன் பொருள் என்ன?
விடை: உடைக்கக் கூடிய மிகச் சிறிய துகள். - அலோக அணுக்கள் தங்கள் இணைதிறன் கூட்டில் எத்தனை எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளன?
விடை: 4 முதல் 7 எலக்ட்ரான்கள். - குளோரின் வாயு நீரில் கரைந்து தரும் அமிலம் எது?
விடை: ஹைட்ரோகுளோரிக் அமிலம். - மென்னீர் என்றால் என்ன?
விடை: நீரில் சோப்பும், டிடர்ஜென்டும் எளிதில் நுரையினை உருவாக்கும் நீர். - அமிலம் என்ற சொல்லின் இலத்தீன் மூலம் 'அசிடஸ்' என்பதன் பொருள் என்ன?
விடை: புளிப்பு. - குளியல் சோப்புகள் தயாரிக்கப் பயன்படும் காரம் எது?
விடை: பொட்டாசியம் ஹைட்ராக்சைடு. - ஹைட்ரோகார்பன்கள் எரியும் பொழுது எவற்றை வெளியிடுகின்றன?
விடை: கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீராவி. - உலர் வாயு எவ்வாறு அழைக்கப்படும்?
விடை: இயற்கை வாயுவில் மீத்தேன் மற்றும் ஈத்தேன் இருந்தால். - கடின நீரில் துணிகளில் 'ஸ்கம்' என்ற படிவு ஏற்படக் காரணம் என்ன?
விடை: உப்பு மற்றும் தாதுக்கள் அதிக அளவில் கரைந்திருப்பது. - பாலிஸ்டைரீன் உற்பத்தி செய்ய பயன்படும் ஹைட்ரோகார்பன் எது?
விடை: பென்டேன். - கடலின் அடியில் உள்ள பாறைகளுக்கு இடையே எண்ணெயுடன் சேர்ந்து வெளிவரும் வாயு எது?
விடை: இணைந்த வாயு. - இரும்பின் தாதுக்களில் பிர்ஹோடைட் என்பது எதைக் குறிக்கிறது?
விடை: இரும்பு சல்பைடு. - இரும்பின் தாதுவான ஹேமடைட்-ல் எத்தனை சதவீதம் இரும்பு உள்ளது?
விடை: 69%.
- ஒளிச்சேர்க்கை என்றால் என்ன?
விடை: தாவரங்கள் சூரிய ஒளியின் முன்னிலையில் நீர் மற்றும் கார்பன் டை ஆக்சைடைக் கொண்டு ஸ்டார்ச் தயாரிக்கும் நிகழ்வு. - பாக்டீரியாக்களில் உட்கரு சவ்வு காணப்படுகிறதா?
விடை: இல்லை. - ஒற்றை கசையிழை கொண்ட பாக்டீரியாவிற்கு எடுத்துக்காட்டு தருக.
விடை: விப்ரியோ காலரா. - சுற்றுக் கசையிழையைக் கொண்ட பாக்டீரியாவிற்கு எடுத்துக்காட்டு தருக.
விடை: எ.கோலை. - பூஞ்சைகளில் பச்சையம் காணப்படுகிறதா?
விடை: இல்லை. - பூஞ்சைகள் எந்த முறைகளில் இனப்பெருக்கம் செய்கின்றன?
விடை: துண்டாதல் மற்றும் ஸ்போர் உருவாதல். - கூட்டுயிரிகளாக வாழும் பூஞ்சைக்கு எடுத்துக்காட்டு தருக.
விடை: மைக்கோரைசா. - ஆல்காக்கள் எந்த ஊட்ட முறையைக் கொண்டுள்ளன?
விடை: தற்சார்பு ஊட்ட முறை. - புரோட்டோசோவைப் பற்றிப் படிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: புரோட்டோவிலங்கியல். - நாஸ்டாக் எந்த முறையில் நைட்ரஜனை நிலைநிறுத்துகிறது?
விடை: உயிரியல் முறையில். - கழிவுநீர் சுத்திகரிப்பின் இரண்டாம் நிலையில் கரிமப் பொருள்களை உட்கொள்ளும் நுண்ணுயிரி எது?
விடை: நைட்ரோபாக்டர் சிற்றினம். - காற்றில்லா நிலையில் கழிவுநீர் சுத்திகரிப்பிற்கு பயன்படும் பாக்டீரியம் எது?
விடை: மெத்தனோபாக்டீரியங்கள். - ஆல்கஹால் பானங்கள் எதன் உதவியினால் நொதித்தல் முறையில் தயாரிக்கப்படுகின்றன?
விடை: ஈஸ்ட். - காசநோயின் (டியூபர்குளோசிஸ்) அறிகுறிகள் யாவை?
விடை: தொடர்ச்சியான இருமல், இரத்தத்துடன் கூடிய சளி, எடை இழப்பு. - சாதாரண சளி தொற்றின் அறிகுறிகள் யாவை?
விடை: சளி ஒழுகுதல், தும்முதல். - வாய் மற்றும் கால் குளம்பு நோய்க்கான தடுப்பூசி எது?
விடை: FMD தடுப்பூசி. - பிரியான்கள் நோய்த்தொற்றுக்கு தேவையான எவற்றைக் கொண்டுள்ளன?
விடை: டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ. - எந்த வகையான பாசிகளில் 'லேமினேரியன் ஸ்டார்ச் மற்றும் மானிடால்' உணவாகச் சேமிக்கப்படுகிறது?
விடை: பழுப்பு பாசிகள். - தனி செல் புரதத்தை உற்பத்தி செய்யும் பாசிகளுக்கு எடுத்துக்காட்டு தருக.
விடை: குளோரெல்லா, ஸ்பைருலினா. - பூஞ்சைகளின் உணவுப்பொருள் எந்த வடிவில் சேமிக்கப்படுகிறது?
விடை: கிளைக்கோஜனாகவும், எண்ணெயாகவும். - நியோமைசின், ஜென்டாமைசின் போன்ற நுண்ணியிர்க் கொல்லிகள் எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன?
விடை: பூஞ்சைகளிலிருந்து. - ஹிப்பாட்டிக்கே வகுப்பைச் சார்ந்த பிரையோஃபைட்டாவிற்கு ஒரு எடுத்துக்காட்டு தருக.
விடை: ரிக்சியா. - ஆந்தோசெரட்டே வகுப்பைச் சார்ந்த பிரையோஃபைட்டாவிற்கு ஒரு எடுத்துக்காட்டு தருக.
விடை: ஆந்தோசெரஸ். - மாஸ் (Musci) வகுப்பைச் சார்ந்த பிரையோஃபைட்டாவிற்கு ஒரு எடுத்துக்காட்டு தருக.
விடை: ஃபியூனேரியா. - இருமய ஸ்போரோஃபைட் நிலையானது ஒருமய கேமீட்டோஃபைட் நிலையுடன் சந்ததி மாற்றம் பெறுவது எவற்றில்?
விடை: டெரிடோஃபைட்டுகளில். - செம்பருத்தியின் தாவரவியல் பெயர் என்ன?
விடை: ஹைபிஸ்கஸ் ரோசா சைனன்சிஸ். - கத்திரிச் செடியின் தாவரவியல் பெயர் என்ன?
விடை: சொலானம் மெலாஞ்சினா. - நாசிக் குழியை அடுத்து, காற்றானது எங்கு நுழைகிறது?
விடை: தொண்டையினுள். - தொண்டையிலிருந்து காற்றானது எந்த மூச்சுக் குழாய்க்குள் செல்கிறது?
விடை: டிரக்கியா.
- கரப்பான் பூச்சியின் இயக்க உறுப்புகள் யாவை?
விடை: மூன்று ஜோடி இணைந்த கால்கள். - நிணநீர் மண்டல செல்களில் நடைபெறும் இயக்கம் எவ்வகையானது?
விடை: அமீபாய்டு இயக்கம் மற்றும் சிலியரி இயக்கம். - மனித மண்டை ஓட்டில் முகத்தினை உருவாக்கும் எலும்புகள் எத்தனை?
விடை: 14 எலும்புகள். - மனித முள்ளெலும்புத் தொடரில் உள்ள இடுப்பு எலும்புகள் எத்தனை?
விடை: 5 இடுப்பு எலும்புகள். - மனித முள்ளெலும்புத் தொடரில் உள்ள வால் எலும்புகள் எத்தனை?
விடை: 3 வால் எலும்புகள். - விலா எலும்புக் கூடு எத்தனை ஜோடிகளைக் கொண்டது?
விடை: 12 ஜோடி விலா எலும்புகள் கொண்ட கூம்பு வடிவ அமைப்பு. - கை எலும்பில் மணிக்கட்டு எலும்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
விடை: கார்பல்கள். - கை எலும்பில் உள்ளங்கை எலும்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
விடை: மெட்டாகார்பல்கள். - காலின் முள்ளெலும்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: டிபியா. - மேல் கையில் ஒன்றுக்கொன்று எதிராக செயல்படும் இரண்டு தசைகள் எவை?
விடை: இருதலைத்தசை மற்றும் முத்தலைத்தசை.
- இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
விடை: 1969. - 'கலாம் சாட்' செயற்கைக்கோள் எந்த விண்வெளி ஆய்வு மையம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது?
விடை: நாசா. - அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
விடை: 1958 ஆம் ஆண்டு அக்டோபர் 1. - கல்பனா சாவ்லா எந்த விண்வெளி திட்டத்தில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டார்?
விடை: கொலம்பியா விண்வெளி திட்டம்.


0 Comments