TNPSC TRB TET 8 ஆம் வகுப்பு அறிவியல் 100 வினா-விடை | Science Part-9
அறிவியல் பொது அறிவு வினா-விடைகள் (Quiz on General Science)
அளவீடுகள் மற்றும் இயக்கவியல் (Measurements and Mechanics)
- பன்னாட்டு அலகு முறைக்கு (SI) அங்கீகாரம் வழங்கப்பட்ட 11வது பொது மாநாடு நடைபெற்ற ஆண்டு: 1960.
- அளவீட்டியலில் 'Systeme International' என்ற சொல் உருவான மொழி: பிரெஞ்சு மொழி.
- வெப்பநிலையை செல்சியஸ் (C), கெல்வின் (K) மற்றும் ஃபாரன்ஹீட் (F) அளவுகளில் மாற்றுவதற்கான வாய்ப்பாடு: C/100 = (F-32)/100 = (K-273)/100.
- தளக்கோணம் மற்றும் திண்மக்கோணம் ஆகியவற்றில் முப்பரிமாணம் கொண்டது: திண்மக் கோணம்.
- ஒரு கேண்டிலா என்பது தோராயமாக எதன் ஒளிக்குச் சமமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது: எரியும் மெழுகுவர்த்தி வெளியிடும் ஒளிக்கு.
- குவார்ட்ஸ் கடிகாரங்களின் துல்லியத்தன்மை: $10^{9}$ வினாடிக்கு ஒரு வினாடி என்ற அளவில்.
- சீசியம் - 133 அணுவை அடிப்படையாகக் கொண்ட அணுகடிகாரம் உருவாக்கப்பட்ட ஆண்டு: 1955.
- கிரீன்விச் இராயல் வானியல் ஆய்வுமையத்தின் வழியாகச் செல்லும் தொடக்கத் தீர்க்கக் கோட்டின் அளவு: 0^{\circ}.
- புவியானது $15^{\circ}$ இடைவெளியில் அமைந்த தீர்க்கக் கோடுகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ள நேர மண்டலங்களின் எண்ணிக்கை: 24 மண்டலங்கள்.
- இரு அடுத்தடுத்த நேரமண்டலங்களுக்கு இடையே உள்ள காலஇடைவெளி: 1 மணி நேரம்.
- இந்திய திட்ட நேரம் கணக்கிட ஆதாரமாகக் கொள்ளப்படும் மிர்சாபூர் தீர்க்கக் கோட்டின் அளவு: 82.5^{\circ}$ கிழக்கு.
- ஒரு வளிமண்டல அழுத்தம் (1 atm) SI அலகு முறையில் பாஸ்கலில் சமம்: 1,00,000 பாஸ்கல்.
- ஒரு வளிமண்டல அழுத்தம் (1 atm) நியூட்டன்/மீட்டர்²-க்கு சமம்: 1.01 \times 10^{5} Nm^{-2}
- மிதக்கும் அல்லது பகுதியளவு நீரில் மூழ்கியிருக்கும் பொருளின் மீது நீரானது செலுத்தும் விசை: மேல்நோக்கு விசை.
- பாகியல் விசை CGS அலகு முறையில் அளக்கப்படும் அலகு: பாய்ல்.
- பாகியல் விசை SI அலகுமுறையில் அளக்கப்படும் அலகுகள்: $Kg m^{-1}s^{-1}$ அல்லது $Nsm^{-2}$.
- குவியாடியில் எப்போதும் தோன்றும் பிம்பம்: நேரான சிறிய மாயபிம்பம்.
- காற்றில் ஒளியின் திசைவேகம்: $3 \times 10^{8} மீவி^{-1}$.
- குறைந்த அலைநீளத்தையும், அதிக அளவு விலகலையும் கொண்ட நிறக் கதிர்: ஊதா நிறக் கதிர்.
- அதிக அலைநீளத்தையும், குறைந்த விலகலையும் கொண்ட நிறக் கதிர்: சிகப்பு நிற ஒளிக் கதிர்.
- ஒரு கலோரி என்பது ஜூலுக்குச் சமம்: 4.189 J.
- உணவுப்பொருள்களில் உள்ள ஆற்றலின் அளவைக் குறிக்கும் 1 கிலோகலோரி தோராயமாக ஜூலுக்குச் சமம்: 4200 J.
- பனிக்கட்டி - கலோரிமீட்டரை 1782 ஆம் ஆண்டு முதன்முதலாகப் பயன்படுத்தியவர்கள்: ஆன்டொய்ன் லவாய்ஸியர் மற்றும் பியரே சைமன் லாப்லாஸ்.
- வெற்றிடக்குடுவை 1892 ஆம் ஆண்டு கண்டுபிடித்தவர்: சர் ஜேம்ஸ் திவார்.
- இரசவாதிகள் குறைந்த மதிப்புடைய உலோகங்களை எதாக மாற்ற முயற்சித்தனர்: தங்கமாக.
- தனிமங்களைக் குறிப்பதற்கு ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தும் முறையை பெர்சில்லியஸ் உருவாக்கிய ஆண்டு: 1813.
- சோடியம் (Na) தனிமத்தின் இலத்தீன் பெயர்: நேட்ரியம்.
- வெள்ளீயம் (Sn) தனிமத்தின் இலத்தீன் பெயர்: ஸ்டேனம்.
- தங்கம் (Au) தனிமத்தின் இலத்தீன் பெயர்: ஆரம்.
- நொபிலியம் (No) என்ற தனிமத்தின் குறியீட்டுப் பெயர் யாரால் அழைக்கப்படுகிறது: ஆல்ஃபிரட் நோபல்.
- மெர்க்குரி எனும் புராண கடவுளின் பெயரிலிருந்து தருவிக்கப்பட்ட தனிமம்: பாதரசம் (Hg).
- நாணயங்கள் மற்றும் X-கதிர் எந்திரங்கள் தயாரிக்க பயன்படும் உலோகம்: காரீயம் (Lead).
- ரப்பரை வல்கனைஸ் செய்ய (கெட்டிப்படுத்த) பயன்படும் அலோகம்: கந்தகம்.
- மின்னணுக் கருவிகளில் பயன்படுத்தப்படும் உலோகப்போலி: சிலிக்கான்.
- துத்தநாக கார்பனேட் சேர்மத்தின் பொதுப்பெயர்: காலமைன்ஸ்.
- மூரியேட் ஆஃப் பொட்டாஷ் என்பது எதன் பொதுப்பெயர்: பொட்டாசியம் குளோரைடு.
- சலவைத்தூளின் வேதிப்பெயர்: கால்சியம் ஆக்சி குளோரைடு.
- நீர்த்த ஹைட்ரோகுளோரிக் அமிலத்தினை சோடியம் கார்பனேட் கரைசலில் சேர்க்கும்போது வெளியேறும் வாயு: கார்பன் டை ஆக்சைடு.
- மின்னாற்பகுத்தல் என்ற சொல்லை 19-ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தியவர்: மைக்கேல் பாரடே.
- நறுக்கிய ஆப்பிள்களில் பாலிபீனால் ஆக்சிடேஸ் என்சைம் செயல்படுவதால் உருவாகும் பழுப்பு நிறமிகள்: மெலனின்.
- துருப்பிடித்தலின் போது உருவாகும் நீரேறிய பெர்ரிக் ஆக்சைடு நிறம்: செம்பழுப்பு (துரு).
- ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த C.W.ஷீலே ஆக்சிஜனை கண்டறிந்த ஆண்டு: 1772.
- பிரிட்டன் அறிவியலாளர் ஜோசப் பிரிஸ்ட்லி ஆக்சிஜனை கண்டறிந்த ஆண்டு: 1774.
- ஆக்சிஜனானது நைட்ரஜனைவிட எத்தனை மடங்கு நீரில் அதிகமாகக் கரையும் தன்மை உடையது: இருமடங்கு.
- மனித உடலின் மொத்த நிறையில் நைட்ரஜன் காணப்படும் சதவீதம்: 3%.
- சனிக்கோளின் பெரிய துணைக்கோளான டைட்டனின் வாயுமண்டலத்தில் நைட்ரஜன் உள்ள சதவீதம்: 98%.
- தூய மழை நீரின் pH மதிப்பு 5.6 ஆக இருக்கும் நிலையில், அமில மழையின் pH மதிப்பு: 5.6 ஐ விடக் குறைவு.
- பொருண்மை அழியா விதியை லவாய்சியர் முன்மொழிந்த ஆண்டு: 1774.
- ஜோசப் ப்ரௌஸ்ட் மாறா விகித விதியை கூறிய ஆண்டு: 1779.
- மாறா விகித விதியின்படி நீரில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனின் நிறை எப்போதும் எந்த விகிதத்தில் இருக்கும்: 1:8 என்ற விகிதத்தில்.
- 1781 ஆம் ஆண்டில் நீரினை முதன்முதலில் தயாரித்த ஆங்கில விஞ்ஞானி: ஹென்றி கேவென்டிஷ்.
- தேனீ கொட்டும் பொழுது தோலினுள் உட்செலுத்தப்படும் அமிலம்: ஃபார்மிக் அமிலம்.
- அழுத்தப்பட்ட இயற்கை வாயுவில் (CNG) உள்ள முதன்மையான ஹைட்ரோ கார்பன் (சதவீதம்): மீத்தேன் (88.5 சதவீதம்).
- வைரஸ்களைப் பற்றிய படிப்பு: வைராலஜி.
- வைரஸ்கள் பாக்டீரியாவைக் காட்டிலும் எத்தனை மடங்கு சிறியவை: 10,000 மடங்கு.
- பாக்டீரியாவின் சைட்டோபிளாசத்தில் காணப்படும் குரோமோசோமல் டி.என்.ஏ-க்கள்: பிளாஸ்மிட்.
- கோல் வடிவ பாக்டீரியாக்கள்: பேசில்லை.
- ஒட்டிக்கொண்டு இணைகளாக உள்ள கோள வடிவ பாக்டீரியாக்கள்: டிப்ளோகாக்கஸ்.
- ஈஸ்ட்டினால் உற்பத்தி செய்யப்படும் எந்த நொதியின் உதவியினால் நொதித்தல் நடைபெறுகிறது: சைமேஸ்.
- மஞ்சள் நிறமியைக் (சாந்தோஃபில்) கொண்டுள்ள ஆல்காக்கள்: பழுப்பு அல்லது மஞ்சள் பாசிகள்.
- கசையிழைகளால் இடம்பெயரும் பிளாஜெல்லேட்டா வகைக்கு எடுத்துக்காட்டு: யூக்ளினா.
- பெனிசிலின் எதிர்உயிர்க்கொல்லியை 1928-ல் கண்டறிந்தவர்: சர்.அலெக்சாண்டர் பிளம்மிங்.
- ஸ்ட்ரெப்டோமைசின் எனும் எதிர்உயிர்க்கொல்லி பெறப்படுவது: ஸ்ரெப்டோமைசிஸ் என்ற பாக்டீரியாவிலிருந்து.
- விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள புதிய எதிர்உயிர்க்கொல்லி மருந்தின் பெயர்: சூடோயுரிடிமைசின்.
- தட்டம்மை, சின்னம்மை மற்றும் ரூபெல்லா நோய்களுக்கான தடுப்பூசி: MMR.
- ஆப்பிரிக்க தூக்க வியாதிக்குக் காரணமான டிரிபனோசோமா நுண்ணுயிரியைப் பரப்பும் ஈ: செட்சீ ஈக்கள்.
- பாலை 70°C வெப்பநிலைக்கு சூடேற்றி குளிரூட்டும் பதப்படுத்துதல் முறையை லூயிஸ் பாஸ்டர் கண்டறிந்த ஆண்டு: 1862.
- வயிற்றுப் புண்களைக் குணப்படுத்த உதவும் புரோபயாட்டிக் பாக்டீரியம்: பைபிடோபாக்டீரியம் பைபிடம்.
- செல்லுக்கு வெளியே காணப்படும் முழுமையான வைரஸ் துகள்: விரியான்.
- வகைப்பாட்டியல் (Taxonomy) என்னும் சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர்: அகஸ்டியன் பைரமிஸ் டி கேண்டோல்.
- தாவரவியல் பெயரிடுமுறை (ICN) அகில உலக அளவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு: 1623.
- வேர், தண்டு, இலை என வேறுபடுத்த இயலாத பாசிகளின் உடலமைப்பு: தாலஸ்.
- விண்வெளிப் பயணத்தின்போது கார்பன்டை ஆக்ஸைடை அகற்றப் பயன்படும் பாசி: குளோரெல்லா ஃபைரினாய்டோசா.
- பூஞ்சைகளின் செல் சுவர் ஆனதுள்ள வேதிப்பொருள்: கைட்டின்.
- வேர்க்கடலைச் செடியில் டிக்கா நோயை உண்டாக்கும் பூஞ்சை: செர்க்கோஸ்போரா பெர்சனேட்டா.
- கரும்பில் சிவப்பு அழுகல் நோயை உண்டாக்கும் பூஞ்சை: கோலிடாட்ரைக்கம் ஃபல்கேட்டம்.
- இளந்தலைமுறையினருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் 'பகற்கனவு பூஞ்சை' எனப்படுவது: கிளாவிசெப்ஸ் பர்பூரிய.
- பிரையோஃபைட்டாக்களின் ஆண் இனப்பெருக்க உறுப்பு: ஆந்திரிடியம்.
- நிலக்கரியைப் போல் விலைமதிப்புடைய எரிபொருளாகப் பயன்படும் 'பீட்' எதிலிருந்து பெறப்படுகிறது: ஸ்பேக்னம் தாவரத்திலிருந்து.
- குடற்புழுக் கொல்லியாகப் பயன்படும் மட்ட நிலத் தண்டு காம்புகளைக் கொண்ட பெரணி: டிரையாப்டரிஸ்.
- விசிறி வடிவ இலைகளை உடைய வாழும் ஒரே ஜிம்னோஸ்பெர்ம் தாவரம்: ஜிங்கோ பைலோபா.
- தோலில் உள்ள கொப்புளங்களை ஆற்றி, குடற்புழுக்களை அழிக்கும் மருத்துவத் தாவரம்: அகாலிஃபா (குப்பைமேனி).
- இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகப் பயன்படும் தூதுவளை (சொலானம் டிரைலொபேட்டம்) குடும்பம்: சொலனேசி.
- மனித நரம்பு செல்லின் நீளம் தோராயமாக: 90-100 செ.மீ.
- கண்ணின் விழிவெளிப்படலம் முழுவதும் மூடியுள்ள மெல்லிய ஒளி ஊடுருவும் சவ்வு: கண்ஜங்டிவா.
- கண்ணினுள் நுழையும் ஒளியின் அளவுக்கேற்ப கண் பாவையின் அளவைக் கட்டுப்படுத்தும் பகுதி: ஐரிஸ் (கருவிழி).
- மனித நுரையீரலில் சராசரியாகக் காணப்படும் காற்று நுண்ணறைகள்: 480 மில்லியன்.
- ஊடுபரவல் ஒழுங்குபாடு என்ற சொல்லை 1902 இல் அறிமுகப்படுத்தியவர்: ஹோபர்.
- கரப்பான் பூச்சியில் காணப்படும் இணைந்த கால்களின் ஜோடிகள்: மூன்று ஜோடி.
- மனித முள்ளெலும்புத் தொடரில் உள்ள கழுத்து எலும்புகளின் எண்ணிக்கை: 7.
- மனிதன் புன்னகைக்க 17 தசைகளும், கோபப்படத் தேவைப்படும் தசைகள்: 42 தசைகள்.
- ஆண்களில் இரண்டாம் நிலை பால் பண்புகளுக்குக் காரணமான விந்தகங்களால் சுரக்கப்படும் ஹார்மோன்: டெஸ்ட்டோஸ்டீரான் அல்லது ஆண்ட்ரோஜன்.
- கூலூம் (C) அலகின் மின்னூட்ட மதிப்பு: $1.602 \times 10^{-19}$ கூலும்.
- நிலைமின்காட்டியை 1600 ஆம் ஆண்டு வடிவமைத்த வில்லியம் கில்பர்ட் அதனை அழைத்த விதம்: வெர்சோரியம்.
- தங்க இலை நிலைமின்காட்டியை 1787 ஆம் ஆண்டு வடிவமைத்தவர்: ஆபிரகாம் பெனட்.
- ஒரு டெஸ்லா என்பது காஸ்-க்கு சமம்: 10000 காஸ்.
- சக்கரங்கள் இல்லாமல் காந்த விசையால் மிதந்து செல்லும் மெக்லிவ் தொடர்வண்டி எட்டிய வேகம்: 500 கி.மீ/மணி.
- முதன் முதலில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பிய நாசாவின் திட்டம்: அப்போலோ - 8.
- இந்திய உணவுக் கழகம் (FCI) 1965 ஜனவரி 14ல் ஏற்படுத்தப்பட்ட இடம்: சென்னையில்.
- உலக வன விலங்கு தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் நாள்: மார்ச் 3 ஆம் தேதி.


0 Comments