TNPSC TRB TET 9 ஆம் வகுப்பு அறிவியல் 100 வினா-விடை | Science Part-10
அறிவியல் வினா-விடைகள்
அடிப்படை அலகுகள் மற்றும் அளவீடுகள்
- பன்னாட்டு அலகு முறையில் ஒளிச்செறிவின் குறியீடு என்ன?
விடை: cd - காலத்தின் அடிப்படை அலகு பன்னாட்டு முறையில் என்ன?
விடை: வினாடி - அடர்த்தியின் SI அலகு என்ன?
விடை: கி.கி/மீ³ - வேகத்தின் SI அளவீட்டு அலகு என்ன?
விடை: மீ/வி - இடப்பெயர்ச்சியின் SI அலகு முறை அலகு என்ன?
விடை: மீட்டர் - ஒரு ஒளி ஆண்டு என்பது எத்தனை மீட்டருக்குச் சமம்?
விடை: 9.46x10^15 மீ
- ஒரு நீலத் திமிங்கலத்தின் நீளம் எத்தனை பேருந்துகளின் நீளத்திற்குச் சமம்?
விடை: மூன்று பேருந்துகளின் நீளத்திற்குச் சமம் - ஒரு பொருளின் முடுக்கம் என்பது அப்பொருளின் எதன் மாறுபாட்டு வீதம் ஆகும்?
விடை: திசைவேக மாறுபாட்டு வீதம் ஆகும் - நிலை மின்னியல் விசை எந்த வகையான விசையைப் போன்று செயல்படும்?
விடை: மையநோக்கு விசை போன்று செயல்படும் - ஒரு நியூட்டன் / சதுர மீட்டர் என்பது எந்த அறிவியல் அறிஞரை சிறப்பிக்கும் வகையில் பாஸ்கல் (Pa) என்று அழைக்கப்படுகிறது?
விடை: ஃப்ளைஸ் பாஸ்கல்
- நன்னீரைவிட எந்த நீர் அதிகமான மிதப்பு விசையை ஏற்படுத்தும்?
விடை: உப்புநீர் (கடல் நீர்) - மிதப்பு விசையானது பாய்மங்களின் பருமனைச் சார்ந்தது போல வேறெதனைச் சார்ந்துள்ளது?
விடை: அதன் அடர்த்தியையும் சார்ந்துள்ளது - கார்ட்டீசியன் மூழ்கி ஆய்வு மிதப்பு விசையின் தத்துவத்தையும் வேறெந்த விதியையும் சோதனை மூலம் விளக்குகிறது?
விடை: நல்லியல்பு வாயு விதியையும் விளக்குகிறது
- அணுவிற்குள் உள்ள நேர் மின்னூட்டம் அற்ற துகள்கள் எவை?
விடை: நியூட்ரான்கள் - ஒரு கூலூம் மின்னூட்டத்தை மின்சுற்றைச் சுற்றி அனுப்ப ஒரு ஜூல் வேலையைச் செய்தால் அதன் மின்னியக்கு விசை என்ன?
விடை: 1 வோல்ட் எனலாம் - மின்தடையின் குறியீடு என்ன?
விடை: Ω (ஓம்) - ரொட்டி வறுதட்டு எந்த மின்னோட்ட விளைவின் அடிப்படையில் செயல்படுகிறது?
விடை: ஜூல் வெப்பமேறல் அல்லது ஜூல் வெப்பவிளைவு - ஒரு மின்சுற்றில் அமையும் மின்னோட்டத்தின் மதிப்பை அளவிட உதவும் கருவி எது?
விடை: அம்மீட்டர் - அம்மீட்டரின் எந்த முனையின் வழியே மின்னோட்டம் நுழைந்து எந்த முனையின் வழியே வெளியேறும்?
விடை: சிவப்பு முனையின் (+) வழியே நுழைந்து கருப்பு முனையின் (-) வழியே வெளியேறும் - எலக்ட்ரான்கள் மின்கலத்தில் எந்த மின்வாயிலிருந்து எந்த மின்வாயிற்கு நகர்கின்றன?
விடை: எதிர் மின்வாயிலிருந்து நேர் மின்வாய்க்கு நகர்கின்றன - நேர் மின்னூட்ட வடிவில் மட்டுமே எந்த மின்சாரத்தை சேமிக்க இயலும்?
விடை: நேர்திசை மின்சாரத்தை சேமிக்க இயலும்
- காந்தப் பாயத்தின் அலகு வெபர் என்பதன் குறியீடு என்ன?
விடை: Wh - ஃபிளமிங்கின் இடது கை விதியில் சுட்டு விரல் எதனைக் குறிக்கும்?
விடை: காந்தப்புலத்தின் திசையைக் குறிக்கும் - ஃபிளெமிங்கின் வலக்கை விதியில் பெருவிரல் எதனைக் குறிக்கும்?
விடை: கடத்தி இயங்கும் திசையைக் குறிக்கும்
- படுகதிர், எதிரொளிப்புக் கதிர் மற்றும் குத்துக்கோடு ஆகியவை எங்கு அமையும்?
விடை: ஒரே தளத்தில் அமையும் - எந்தப் பிம்பத்தை எப்போதுமே திரையில் வீழ்த்த முடியாது?
விடை: மாய பிம்பத்தை திரையில் வீழ்த்த முடியாது - தேடும் விளக்கு (Search light) களில் பயன்படும் ஆடி எது?
விடை: குழியாடிகள் - சூரிய சூடேற்றியிலும் எதிரொளிப்பான்களாக பயன்படும் ஆடி எது?
விடை: பெரிய குழியாடிகள் - போக்குவரத்துப் பாதுகாப்புக் கருவியாக சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள ஆடி எது?
விடை: குவியாடி - ஒளியிழைகள் எந்தப் பொருளால் உருவாக்கப்பட்ட இழைக்கற்றைகள் ஆகும்?
விடை: கண்ணாடி அல்லது குவார்ட்சு இழைகளால் உருவாக்கப்பட்ட இழைக்கற்றைகள் ஆகும்
- அலுமினியப் பாத்திரங்கள் சமையலுக்குப் பயன்படுத்தக் காரணம் என்ன?
விடை: உலோகங்கள் மிகச்சிறந்த வெப்பக் கடத்திகள் என்பதால் - வெப்பக் கதிர்வீச்சை எந்த திசைவேகத்தில் செல்லக்கூடிய மின்காந்த அலைகளாகக் கருதலாம்?
விடை: ஒளியின் திசைவேகத்தில் செல்லக்கூடிய மின்காந்த அலைகளாக - விமானத்தின் புறப்பரப்பு பளபளப்பாக இருக்கக் காரணம் என்ன?
விடை: சூரியனிலிருந்து விழும் கதிர்வீச்சின் பெரும்பகுதியை பிரதிபலிப்பதற்காக - ஃபாரன்ஹீட் அளவீட்டில் இரண்டு புள்ளிகளுக்கிடையே உள்ள இடைவெளி எத்தனை பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
விடை: 180 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது - நீரைப் பொறுத்தவரை உருகுநிலை மற்றும் உறைநிலை இரண்டும் எவ்வளவு?
விடை: 0°C ஆகும் - ஒரு பொருள் தன் நிலையை மாற்றிக்கொள்ளும் போது உட்கவரும் அல்லது வெளியிடும் வெப்ப ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படும்?
விடை: உள்ளுறை வெப்பம் ஆகும்
- அதிர்வுறும் துகளொன்று, ஒரு அதிர்விற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தில் ஊடகத்தில் அலை பரவும் தொலைவு என்ன?
விடை: அலைநீளம் எனப்படும் - சுரங்கப் பாதை இரயிலின் ஒலியின் செறிவு எவ்வளவு?
விடை: 90 dB - சராசரி தொழிற்சாலை ஒலியின் செறிவு எவ்வளவு?
விடை: 80 dB - ஒலியானது ஒரு வினாடியில் பத்தில் ஒரு பங்கு காலத்திற்கு தொடர்ந்து எங்கு உணரப்படுகிறது?
விடை: மூளையில் உணரப்படுகிறது - மீயொலி அலைகளை உடலினுள் செலுத்தும்போது அவை எவற்றில் பட்டு எதிரொலிக்கின்றன?
விடை: உடல் உறுப்புகள் மற்றும் எலும்புகளில் பட்டு எதிரொலிக்கின்றன - செவியின் வெளிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: செவிமடல் என்று அழைக்கப்படுகிறது - செவிப்பறை (Tympanic membrane) எங்கு அமைந்துள்ளது?
விடை: வெளிச் செவிக் குழாயின் முடிவில் உள்ளது - உட்செவியினுள் கடத்தப்பட்ட அழுத்தவேறுபாட்டை மின்சைகைகளாக மாற்றும் பகுதி எது?
விடை: காக்லியா (Cochlea)
- பெருவெடிப்பின் போது தோன்றிய அடிப்படைத் தனிமங்கள் எவை?
விடை: ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் - பால்வெளி வீதி விண்மீன் திரளின் சுருள் வடிவ விட்டம் எவ்வளவு?
விடை: 1,00,000 ஒளி ஆண்டுகள் ஆகும் - செரஸ் என்ற மிகப்பெரிய சிறுகோளின் விட்டம் எவ்வளவு?
விடை: 946 கி.மீ ஆகும் - சூரியமண்டலம் முழுவதும் சிதறிக்கிடக்கும் சிறு பாறைத்துண்டுகள் எவை?
விடை: விண்கற்கள் எனப்படுகின்றன - விண்வெளி வீரர்கள் தங்குவதற்கான ஒரு பெரிய விண்வெளிக்கலம் எது?
விடை: பன்னாட்டு விண்வெளி மையம் ஆகும்
- பூமியில் உள்ள அனைத்துப் பொருட்களும் எந்த எளிமையான பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளன?
விடை: தனிமங்கள் எனப்படும் சில எளிமையான பொருட்களால் - நவீன ஆவர்த்தன அட்டவணையில் இயற்கையில் காணப்படும் தனிமங்கள் எத்தனை?
விடை: 92 தனிமங்கள் - சர்க்கரையானது கார்பன், ஹைட்ரஜன் மற்றும் எந்த தனிமத்தால் ஆனது?
விடை: ஆக்ஸிஜன் - கால்சியம் ஆக்சைடு மற்றும் கல்கரியை வெப்பப்படுத்தும் போது உருவாவது எது?
விடை: கால்சியம் கார்பைடு (CaC2) - 'கார்பன் ஒரு அலோகம்' - இது எத்தகைய மென்மையான தூள் முதல் எத்தகைய கடினமான திண்மம் வரை காணப்படுகிறது?
விடை: மென்மையான தூள் முதல் கடினமான திண்மம் வரை பல புறவேற்றுமை வடிவங்களில் காணப்படுகிறது
- ஆவியைக் குளிர வைக்கும்போது மீண்டும் திண்மத்தைத் தருவது எதன் பண்பு?
விடை: பதங்கமாதல் நிகழ்வின் பண்பு - பலபடித்தான கலவையான 'கரையாத திடப்பொருள் மற்றும் திரவம்'-ஐ பிரிக்கும் முறைக்கு ஒரு எடுத்துக்காட்டு தருக?
விடை: வீழ்படிவாதல், தெளிய வைத்து இறுத்தல், வடிகட்டுதல் அல்லது மைய விலக்கல் - கரையும் திடப்பொருள் மற்றும் திரவம் கலந்த ஒருபடித்தான கலவையைப் பிரிக்கப் பயன்படும் முறைகள் எவை?
விடை: ஆவியாதல், காய்ச்சி வடித்தல், படிகமாக்கல் - மருந்தாக்க மற்றும் பெட்ரோலிய தொழிற்சாலைகளில் கலவைகளைப் பிரிக்கப் பயன்படும் முறை எது?
விடை: கரைப்பான் சாறு இறக்கல் முறை - மெத்தில் ஆல்கஹால் மற்றும் எத்தில் ஆல்கஹால் ஆகியவற்றை பிரித்தெடுக்கப் பயன்படும் முறை எது?
விடை: பின்னக்காய்ச்சி வடித்தல் முறை - ஒரு கலவையிலுள்ள பல்வேறு கூறுகள், ஒரே கரைப்பானில் வெவ்வேறாகக் கரையும் திறன் கொண்ட தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் முறை எது?
விடை: வண்ணப்பிரிகை முறை
- வர்ணம், மை, முட்டையின் வெண்மைப் பகுதி ஆகியவை எவ்வகை கூழ்மத்திற்கு எடுத்துக்காட்டுகள்?
விடை: திண்மம் திரவத்தில் கலந்த கரைசல் கூழ்மங்கள் - கேக், ரொட்டி ஆகியவை எவ்வகை கூழ்மத்திற்கு எடுத்துக்காட்டுகள்?
விடை: திண்ம நுரை (வாயு திண்மத்தில்)
- போரின் அணுக் கொள்கை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
விடை: 1913ஆம் ஆண்டில் - அணுவின் உட்கருவில் நடுநிலைத் தன்மையுடைய துகள் உள்ளது என ரூதர்போர்டு எந்த ஆண்டு தீர்மானித்தார்?
விடை: 1920 ஆம் ஆண்டு - உட்கருவைச் சுற்றி எலக்ட்ரான்கள் சுற்றி வரும் வட்டப்பாதைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
விடை: ஆர்பிட் எனப்படும் - அணுவின் உட்கருவிலிருந்து கடைசியாக உள்ள வெளிக்கூடு எவ்வாறு அழைக்கப்படும்?
விடை: இணைதிறன் கூடு என்று அழைக்கப்படும் - அணுக்கள் மிக நுண்ணிய பொருளாக உள்ளதால் அவை எந்த மைக்ரோஸ்கோப் மூலம் பார்வையிடப்படுகின்றன?
விடை: ஸ்கேனிங் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்
- டாபர்னீர் மும்மை விதியின்படி நடுவில் உள்ள தனிமத்தின் அணு நிறை மற்ற இரண்டு தனிமங்களின் அணு நிறையின் எதற்குச் சமம்?
விடை: சராசரிக்கு ஏறத்தாழ சரியாக இருக்கும் - நியூலாந்து 56 தனிமங்களை அவற்றின் எந்தப் பண்பின் அடிப்படையில் ஏறு வரிசையில் அடுக்கி எண்ம விதியை உருவாக்கினார்?
விடை: அணு நிறையின் அடிப்படையில் - தனிம அட்டவணையில் தனிமங்கள் கிடைமட்டமாக வரிசைப்படுத்தப்பட்ட அமைப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
விடை: வரிசைகள் என அழைக்கப்படுகிறது - நவீன தனிம வரிசை அட்டவணையில் ஹாலஜன்கள் எந்த தொகுதியில் அமைந்துள்ளன?
விடை: 17 வது தொகுதி - இடைநிலை உலோகங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு தருக?
விடை: தொகுதி III B முதல் IIA வரை உள்ள தனிமங்கள்
- ஹைட்ரஜன் அயனிகள் தனித்துக் காணப்படாமல் நீருடன் சேர்ந்து எவ்விதமாக உள்ளன?
விடை: ஹைட்ரோனியம் அயனிகளாக உள்ளன (H₃O⁺) - ஒற்றைக் காரத்துவ அமிலத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு தருக?
விடை: HCI அல்லது HNO₃ - நீரில் முழுவதுமாக அயனியுறும் தன்மையுடைய அமிலங்கள் எவை?
விடை: வலிமை மிகு அமிலங்கள் - சல்பியூரிக் அமிலம் எதன் மின்கலங்களில் பயன்படுத்தப்படுகிறது?
விடை: வாகன மின்கலங்களில் பயன்படுகிறது - இராஜதிராவகம் என்ற சொல் உணர்த்தும் 'திரவத்தின் அரசன்' என்பது எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
விடை: இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது - ஒரு காரம் அமிலத்துடன் வினை புரிந்து எவற்றைத் தரும்?
விடை: உப்பையும், நீரையும் மட்டும் தரும் - மும்மை அமிலத்துவக் காரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு தருக?
விடை: Al(OH)₃ அல்லது Fe(OH)₃ - வலிமை குறைந்த காரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு தருக?
விடை: NH₄OH அல்லது Ca(OH)₂ - குளுக்கோஸ் மற்றும் ஆல்கஹால் ஆகியவை எதனைக் கடத்தாது?
விடை: மின்சாரத்தைக் கடத்தாது - அமில நீக்கியில் உள்ள ஒரு பகுதிப்பொருள் எது?
விடை: சமையல் சோடா (சோடியம் பை கார்பனேட்)
- டிரக் (Drug) என்ற வார்த்தை எந்த பிரெஞ்சு வார்த்தையிலிருந்து பெறப்பட்டது?
விடை: டிரக்யூ (Droque) என்ற வார்த்தையிலிருந்து - வலி நிவாரணிகளாகப் பயன்படும் பொதுவான மருந்துகளுக்கு எடுத்துக்காட்டு தருக?
விடை: ஆஸ்பிரின் மற்றும் நோவால்ஜின் - வெளிப்புறக் காயங்களைச் சுத்தம் செய்யப் பயன்படும் புரைத் தடுப்பான் எது?
விடை: ஹைட்ரஜன் பெராக்சைடு - 'குயினைன்' என்ற மலேரியா நிவாரணி எதிலிருந்து பெறப்படுகிறது?
விடை: சின்கோனா என்னும் மரப்பட்டையிலிருந்து பெறப்படுகிறது - இரத்தம் உறைதல் மற்றும் இரத்த சுழற்சி சீர்குலைவுகளை கண்டறிய பயன்படும் ஐசோடோப் எது?
விடை: சோடியம் -24 - இரத்த சோகை மற்றும் கருவுறுதல் சம்பந்தமான குறைபாடுகளைக் கண்டறியப் பயன்படும் ஐசோடோப் எது?
விடை: இரும்பு - 59 - கரோட்டினாய்டுகள், ஆந்தோசயனின் போன்றவை எவ்வகை உணவுச் சேர்க்கைகள்?
விடை: நிறமிகள்
- விலங்குலகின் மிகப்பெரிய தொகுதி ஆர்த்ரோபோடா என்றால் அதன் தமிழ் பெயர் என்ன?
விடை: கணுக்காலிகள் - 'குழியுடலிகள்' (சீலென்டிரேட்டா) உடலில் அமைந்துள்ள வயிற்றுக் குழியின் பெயர் என்ன?
விடை: சீலண்டிரான் - மெல்லுடலிகளின் (மொலஸ்கா) உடலைச் சுற்றி காணப்படும் மென்போர்வையின் பெயர் என்ன?
விடை: மேன்டில் (Mantle) - உலகிலேயே மிகப்பெரிய இருவாழ்வி எது?
விடை: சீனாவின் ராட்சத சாலமான்டர் (ஆன்டிரியஸ் டாவிடியன்ஸ்) - பாலூட்டிகளின் இதயம் எத்தனை அறைகளைக் கொண்டது?
விடை: இதயம் நான்கு அறைகளுடையது
- தாவர திசுக்களில் வளர்ச்சி நடைபெறும் இடங்களில் காணப்படும் திசு எது?
விடை: ஆக்குத்திசு அல்லது நுனியாக்கு திசுக்கள் - கோலன்கைமா திசுக்கள் தாவர உறுப்புகளுக்கு எதனை அளிக்கின்றன?
விடை: வலிமை அளிக்கிறது - உட்கருக்களை உடைய மெல்லிய தட்டையான செல்களால் ஆன எபிதீலியம் எது?
விடை: தட்டை எபிதீலியம் - குறுயிழை எபிதீலியங்கள் எங்கு காணப்படுகின்றன?
விடை: சுவாசக்குழாய், சிறுநீரகக் குழல்கள் மற்றும் அண்டக்குழல்களில் காணப்படுகிறது
- பித்தநீரை தற்காலிகமாக சேகரித்து வைக்கும் உறுப்பு எது?
விடை: பித்தப்பை - இரத்தம் உறைதலுக்குப் பயன்படும் பைபிரினோஜன் மற்றும் புரோத்ராம்பின் ஆகியவற்றை உருவாக்கும் உறுப்பு எது?
விடை: கல்லீரல்


0 Comments