TNPSC TRB TET 9 ஆம் வகுப்பு அறிவியல் 100 வினா-விடை | Science Part-9


TNPSC TRB TET 9 ஆம் வகுப்பு அறிவியல் 100 வினா-விடை | Science Part-9


பொது அறிவியல் வினா விடைகள் (1-100)

அளவீடுகள் மற்றும் இயக்கவியல்
  1. பன்னாட்டு அலகு முறையில் ஒளிச்செறிவின் குறியீடு: cd
  2. பன்னாட்டு முறையில் காலத்தின் அடிப்படை அலகு: வினாடி
  3. ஒரு ஒளி ஆண்டு என்பது எத்தனை மீட்டருக்குச் சமம்: 9.46 x 10¹⁵ மீ
  4. ஒரு நீலத் திமிங்கலத்தின் நீளம் எத்தனை பேருந்துகளின் நீளத்திற்குச் சமம்: மூன்று பேருந்துகளின் நீளத்திற்குச் சமம்
  5. வேகத்தின் SI அளவீட்டு அலகு: மீ/வி
  6. இடப்பெயர்ச்சியின் SI அலகு முறை அலகு: மீட்டர்
  7. ஒரு பொருளின் முடுக்கம் என்பது அப்பொருளின் எதன் மாறுபாட்டு வீதம் ஆகும்: திசைவேக மாறுபாட்டு வீதம்
விசை மற்றும் அழுத்தம்
  1. நிலை மின்னியல் விசை எந்த வகையான விசையைப் போன்று செயல்படும்: மையநோக்கு விசை போன்று செயல்படும்
  2. ஒரு நியூட்டன் / சதுர மீட்டர் என்பது எந்த அறிவியல் அறிஞரை சிறப்பிக்கும் வகையில் பாஸ்கல் (Pa) என்று அழைக்கப்படுகிறது: ஃப்ளைஸ் பாஸ்கல்
  3. நன்னீரைவிட எந்த நீர் அதிகமான மிதப்பு விசையை ஏற்படுத்தும்: உப்புநீர் அல்லது கடல் நீர்
  4. மிதப்பு விசையானது பாய்மங்களின் பருமனைச் சார்ந்தது போல வேறெதனைச் சார்ந்துள்ளது: பாய்மங்களின் அடர்த்தியையும் சார்ந்துள்ளது
  5. கார்ட்டீசியன் மூழ்கி ஆய்வு மிதப்பு விசையின் தத்துவத்தையும் வேறெந்த விதியையும் சோதனை மூலம் விளக்குகிறது: நல்லியல்பு வாயு விதியையும் விளக்குகிறது
  6. அடர்த்தியின் SI அலகு: கி.கி/மீ³
அணு அமைப்பு மற்றும் வேதிப்பிணைப்புகள்
  1. அணுவிற்குள் உள்ள நேர் மின்னூட்டம் அற்ற துகள்கள்: நியூட்ரான்கள்
  2. அணுவின் உட்கருவிலிருக்கும் புரோட்டான்களின் எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது: அணு எண் (புரோட்டான் எண்)
  3. 'Z' என்ற குறியீடு ஸ்ஸாஃல் (Zahl) என்ற ஜெர்மானிய மொழியிலிருந்து பெறப்பட்டது, அதன் பொருள்: எண்
  4. A என்கின்ற நிறை எண்ணின் குறியீடு எந்த ஜெர்மானிய சொல்லிலிருந்து பெறப்பட்டது: மாசென்ஸஸால் (massenzahl)
  5. ஒரு அணுவின் வெளிவட்ட ஆர்பிட்டினால் கூடுதலாக எலக்ட்ரான்களைப் பெற முடிந்தாலும், அதில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எதற்கு மிகாமல் இருக்க வேண்டும்: 8 க்கு மிகாமல் இருக்க வேண்டும்
  6. காலியத்திலுள்ள (Ga) மற்றும் இண்டியம் (In) ஆகிய தனிமங்கள் எத்தொகுதியைச் சேர்ந்த உலோகங்கள் ஆகும்: P தொகுதி தனிமங்கள்
  7. அயனிச்சேர்மங்கள் எந்த வெப்பநிலையில் படிகத் திண்மங்களாக உள்ளன: அறை வெப்பநிலையில்
  8. நீர் போன்று எந்த முனைவுள்ள கரைப்பான்களில் சகப்பிணைப்புச் சேர்மங்கள் எளிதில் கரைவதில்லை: நீர் போன்ற முனைவுள்ள கரைப்பான்களில் எளிதில் கரைவதில்லை
  9. ஒரு சில சேர்மங்களில் சகப்பிணைப்பு உருவாகத் தேவையான ஏதேனும் ஒரு அணு வழங்கி, பிணைப்பை உருவாக்குவது எவ்வாறு அழைக்கப்படும்: ஈதல் சகப்பிணைப்பு (அ) ஈதல் பிணைப்பு
  10. ஈதல் சகப்பிணைப்புச் சேர்மங்கள் மின்கடத்துத் திறனில் எத்தன்மையைக் கொண்டுள்ளன: இவை அரிதில் மின்கடத்திகள் ஆகும்
  11. ஒரு மூலக்கூறில் உள்ள அனைத்து அணுக்களின் ஆக்ஸிஜனேற்ற எண்களின் கூடுதல்: பூஜ்யமாகும்
மின்னியல் மற்றும் காந்தவியல்
  1. ஒரு கூலூம் மின்னூட்டத்தை மின்சுற்றைச் சுற்றி அனுப்ப ஒரு ஜூல் வேலையைச் செய்தால் அதன் மின்னியக்கு விசை: 1 வோல்ட்
  2. மின்தடையின் குறியீடு: Ω (ஓம்)
  3. ரொட்டி வறுதட்டு எந்த மின்னோட்ட விளைவின் அடிப்படையில் செயல்படுகிறது: ஜூல் வெப்பவிளைவு
  4. ஒரு மின்சுற்றில் அமையும் மின்னோட்டத்தின் மதிப்பை அளவிட உதவும் கருவி: அம்மீட்டர்
  5. அம்மீட்டரின் எந்த முனையின் வழியே மின்னோட்டம் நுழைந்து எந்த முனையின் வழியே வெளியேறும்: சிவப்பு (+) முனையின் வழியே நுழைந்து கருப்பு (-) முனையின் வழியே வெளியேறும்
  6. எலக்ட்ரான்கள் மின்கலத்தில் எந்த மின்வாயிலிருந்து எந்த மின்வாயிற்கு நகர்கின்றன: எதிர் மின்வாயிலிருந்து நேர் மின்வாயிற்கு நகர்கின்றன
  7. நேர் மின்னூட்ட வடிவில் மட்டுமே எந்த மின்சாரத்தை சேமிக்க இயலும்: நேர்திசை மின்னோட்டம்
  8. காந்தப் பாயத்தின் அலகு வெபர் என்பதன் குறியீடு: Wh
  9. ஃபிளமிங்கின் இடது கை விதியில் சுட்டு விரல் எதனைக் குறிக்கும்: காந்தப்புலத்தின் திசையைக் குறிக்கும்
  10. ஃபிளெமிங்கின் வலக்கை விதியில் பெருவிரல் எதனைக் குறிக்கும்: கடத்தி இயங்கும் திசையைக் குறிக்கும்
ஒளியியல்
  1. படுகதிர், எதிரொளிப்புக் கதிர் மற்றும் குத்துக்கோடு ஆகியவை எங்கு அமையும்: ஒரே தளத்தில் அமையும்
  2. எந்தப் பிம்பத்தை எப்போதுமே திரையில் வீழ்த்த முடியாது: மாய பிம்பத்தை திரையில் வீழ்த்த முடியாது
  3. தேடும் விளக்கு (Search light) களில் பயன்படும் ஆடி: குழியாடிகள்
  4. சூரிய சூடேற்றியிலும் எதிரொளிப்பான்களாக பயன்படும் ஆடி: பெரிய குழியாடிகள்
  5. போக்குவரத்துப் பாதுகாப்புக் கருவியாக சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள ஆடி: குவியாடி
  6. ஒளியிழைகள் எந்தப் பொருளால் உருவாக்கப்பட்ட இழைக்கற்றைகள் ஆகும்: கண்ணாடி அல்லது குவார்ட்சு இழைகளால்
வெப்பவியல்
  1. அலுமினியப் பாத்திரங்கள் சமையலுக்குப் பயன்படுத்தக் காரணம்: அவை மிகச்சிறந்த வெப்பக் கடத்திகள் ஆகும்
  2. வெப்பக் கதிர்வீச்சை எந்த திசைவேகத்தில் செல்லக்கூடிய மின்காந்த அலைகளாகக் கருதலாம்: ஒளியின் திசைவேகத்தில் செல்லக்கூடிய மின்காந்த அலைகளாக
  3. விமானத்தின் புறப்பரப்பு பளபளப்பாக இருக்கக் காரணம்: சூரியனிலிருந்து விழும் கதிர்வீச்சின் பெரும்பகுதியை பிரதிபலிப்பதற்காக
  4. ஃபாரன்ஹீட் அளவீட்டில் இரண்டு புள்ளிகளுக்கிடையே உள்ள இடைவெளி எத்தனை பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: 180 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது
  5. நீரைப் பொறுத்தவரை உருகுநிலை மற்றும் உறைநிலை இரண்டும் எவ்வளவு: 0°C ஆகும்
  6. ஒரு பொருள் தன் நிலையை மாற்றிக்கொள்ளும் போது உட்கவரும் அல்லது வெளியிடும் வெப்ப ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படும்: உள்ளுறை வெப்பம்
ஒலியியல்
  1. அதிர்வுறும் துகளொன்று, ஒரு அதிர்விற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தில் ஊடகத்தில் அலை பரவும் தொலைவு: அலைநீளம்
  2. சுரங்கப் பாதை இரயிலின் ஒலியின் செறிவு: 90 dB
  3. சராசரி தொழிற்சாலை ஒலியின் செறிவு: 80 dB
  4. ஒலியானது ஒரு வினாடியில் பத்தில் ஒரு பங்கு காலத்திற்கு தொடர்ந்து எங்கு உணரப்படுகிறது: மூளையில் உணரப்படுகிறது
  5. மீயொலி அலைகளை உடலினுள் செலுத்தும்போது அவை எவற்றில் பட்டு எதிரொலிக்கின்றன: உடல் உறுப்புகள் மற்றும் எலும்புகளில் பட்டு எதிரொலிக்கின்றன
  6. செவியின் வெளிப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது: செவிமடல்
  7. செவிப்பறை (Tympanic membrane) எங்கு அமைந்துள்ளது: வெளிச் செவிக் குழாயின் முடிவில் அமைந்துள்ளது
  8. உட்செவியினுள் கடத்தப்பட்ட அழுத்தவேறுபாட்டை மின்சைகைகளாக மாற்றும் பகுதி: காக்லியா (Cochlea)
விண்வெளியியல்
  1. விண்மீன் திரள்களின் வடிவில் அனைத்துப் பொருள்களும் அனைத்துத் திசைகளிலும் வெடித்துச் சிதறிய பெருவெடிப்பு எப்போது ஏற்பட்டது: ஏறத்தாழ 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால்
  2. நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன், நம் உடலில் உள்ள கார்பன், கால்சியம் போன்ற தனிமங்கள் எதிலிருந்து வந்தவை: விண்மீன்களின் உள்ளடக்கத்திலிருந்து வந்தவை
  3. நமக்கு அருகாமையில் உள்ள அண்டிரோமீடா விண்வெளித் திரளின் தொலைவு: 2.5 மில்லியன் ஒளி ஆண்டுகள்
  4. விண்கற்கள் (Meteors) என்பவை: சூரியமண்டலம் முழுவதும் பரவலாக சிதறிக்கிடக்கும் சிறு பாறைத்துண்டுகள்
  5. 24 மணி நேரத்தில் பூமியைச் சுற்றிவரும் படி புவியிலிருந்து எவ்வளவு தொலைவில் செயற்கைக்கோள் இயங்க வேண்டும்: 200 கி.மீ தொலைவில்
  6. நாசாவின் பார்வையில் பன்னாட்டு விண்வெளி மையம் நமக்கு அளித்த தொழில்நுட்பப் பலன்கள்: நீர் சுத்திகரிக்கும் முறைகள், கண்ணைத் தொடரும் தொழில்நுட்பம் மற்றும் தானியங்கி கைகள்
வேதியியல் அடிப்படைகள்
  1. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் அல்லது சேர்மங்கள் இயற்பியல் முறையில் ஒழுங்கற்ற விகிதத்தில் கலந்திருப்பது: கலவைகள் (தூய்மையற்ற பொருள்)
  2. ஆவியைக் குளிர வைக்கும்போது மீண்டும் திண்மத்தைத் தரும் பதங்கமாதல் நிகழ்விற்கு ஒரு எடுத்துக்காட்டு: அயோடின், கற்பூரம் அல்லது அம்மோனியம் குளோரைடு
  3. பலபடித்தான கலவையான 'கரையாத திடப்பொருள் மற்றும் திரவம்' ஆகியவற்றைப் பிரிக்கப் பயன்படும் ஒரு முறை: வீழ்படிவாதல், தெளிய வைத்து இறுத்தல், வடிகட்டுதல் அல்லது மைய விலக்கல்
  4. மையவிலக்கு முறை எந்த பரிசோதனைக் கூடங்களில் இரத்த செல்களைப் பிரித்தெடுக்கப் பயன்படுகிறது: நோய் கண்டறியும் பரிசோதனைக் கூடங்களில்
  5. டிண்டால் விளைவு எவ்வகைக் கரைசலில் உண்டாவதில்லை: உண்மைக் கரைசலில் உண்டாவதில்லை
  6. பாலாடைக்கட்டி மற்றும் ஜெல்லி போன்றவை எந்த வகை கூழ்மத்திற்கு எடுத்துக்காட்டு: கூழ்
  7. கணிப்பொறி துறையில் முக்கியப் பங்கு வகிக்கும் சேர்மங்கள்: சிலிக்கன் சேர்மங்கள்
  8. நியூட்ரான் கண்டுபிடிப்பின் போது ஜேம்ஸ் சாட்விக் பெரிலியம் உட்கருவை எந்தக் கதிரால் தாக்கினார்: ஆல்ஃபா கதிரால் தாக்கினார்
அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்
  1. HCOOH மற்றும் CH₃COOH ஆகியவை எவ்வகை அமிலங்களுக்கு எடுத்துக்காட்டு: கரிம அமிலங்கள்
  2. மும்மைக் காரத்துவ அமிலத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு: PO₄ (பாஸ்பாரிக் அமிலம்)
  3. அமிலங்கள் உலோக ஆக்சைடுகளுடன் வினை புரிந்து எவற்றைத் தருகின்றன: உப்பையும், நீரையும் தருகின்றன
  4. வாகன மின்கலங்களில் பயன்படும் அமிலம்: சல்பியூரிக் அமிலம்
  5. அம்மோனியம் நைட்ரேட் என்ற உரம் தயாரிக்கப் பயன்படும் அமிலம்: நைட்ரிக் அமிலம்
  6. காற்று அடைக்கப்பட்ட பானங்களில் பயன்படும் அமிலம்: கார்பானிக் அமிலம்
  7. இராஜதிராவகம் எந்த நிறமுடைய புகையக்கூடிய திரவம் ஆகும்: மஞ்சள் - ஆரஞ்சு நிறமுடைய திரவம்
  8. ஒற்றை அமிலத்துவ காரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு: NaOH அல்லது KOH
  9. அலோக ஆக்சைடுகள் காரங்களுடன் வினைபுரிந்து உப்பையும் நீரையும் தருவதால் அவை எத்தன்மையுடையவை என முடிவுக்கு வரலாம்: அமிலத் தன்மையுடையவை என அறியலாம்
  10. அம்மோனியம் உப்புகளுடன் காரங்களை வெப்பப்படுத்தும்போது உருவாகும் வாயு: அம்மோனியா வாயு
  11. அமிலம் மற்றும் காரக் கரைசல்களின் வலிமையை அளவிடப் பயன்படும் அளவீடு: pH அளவீடு
  12. படிக நீர் அற்ற உப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன: நீரேற்றம் அற்ற உப்புகள் எனப்படும்
  13. கண்ணாடித் தொழிற்சாலை, சோப்பு மற்றும் பேப்பர் தொழிற்சாலைகளில் பயன்படும் உப்பு: சலவை சோடா (சோடியம் கார்பனேட்)
  14. சிலைகளுக்கான வார்ப்புகளைச் செய்யப் பயன்படும் உப்பு: பாரிஸ் சாந்து (கால்சியம் சல்பேட் ஹெமிஹைட்ரேட்)
கரிம வேதியியல்
  1. 1976-ல் வைரமானது எரிந்து கார்பன் டை ஆக்ஸைடை மட்டுமே உருவாக்கியதால் வைரமும் கார்பன்தான் என்று கூறியவர்: ஸ்மித்ஸன் டென்னன்ட்
  2. ஃபுல்லரீன் என்ற கரிமப் பந்தைக் கண்டுபிடித்தவர்கள்: இராபர்ட், கார்ல், ஹார்ரி க்ரோடோ மற்றும் ரிச்சர்ட் ஸ்மாலி
  3. எஃகு இரும்பைக் காட்டிலும் 100-300 மடங்கு வலிமையான கார்பன் புறவேற்றுமை வடிவம்: கிராஃபீன்
  4. கார்பன் மோனாக்சைடு எவ்வகையான நச்சுத்தன்மையுடைய வாயு: அதிக நச்சுத்தன்மை உடையது
  5. சோடியம் பை கார்பனேட் எத்தகைய திண்மம்: வெண்ணிற படிக வடிவமுடைய திண்மம்
  6. 'டிரக்யூ' (Droque) என்ற பிரெஞ்சு வார்த்தையின் பொருள்: காய்ந்த மூலிகை
  7. 0.002% புரொப்பைல் ஹாலைடுடன் கலந்து மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்படும் திரவம்: டை எத்தில் ஈதர்
  8. ஆஸ்பிரின், ஆன்ட்டிபைரின், ஃபினாசிடின் ஆகியவை எவ்வகையான மருந்துகள்: காய்ச்சல் நிவாரணிகள்
  9. 0.2% பீனால் கரைசல் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது: புரைத் தடுப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது
  10. பிளாஸ்மோடியம் ஓவேல் மற்றும் பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் போன்றவற்றைக் கட்டுப்படுத்தப் பயன்படும் மருந்து: குளோரோகுயின்
  11. உணவு பதப்படுத்தியாகப் பயன்படும் பென்சாயிக் அமிலம் எதிலிருந்து உணவைப் பாதுகாக்கிறது: நுண்ணுயிரிகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து உணவைப் பாதுகாக்கிறது
  12. உணவின் சுவையை மேம்படுத்தப் பயன்படும் சுவையூட்டிக்கு எடுத்துக்காட்டு: மேனோசோடியம் குளுட்டமேட் அல்லது கால்சியம் டைகுளுட்டமேட்
உயிரியல் மற்றும் உடல்நலம்
  1. இதயம் மற்றும் சிறுநீரகம் போன்ற உள் உறுப்புகளுக்கு இடையிலும் தோலுக்கு அடியிலும் காணப்படும் திசு: கொழுப்புத் திசு
  2. எலும்பு மேட்ரிக்ஸில் எலும்புகளுக்கு வலுவை சேர்க்கும் நார்: கொலாஜன் நார்
  3. முதிர்ந்த பாலுட்டிகளின் இரத்த சிவப்பணுக்களில் எது கிடையாது: உட்கரு கிடையாது
  4. பித்தநீரில் காணப்படும் பித்த உப்புகளுக்கு எடுத்துக்காட்டு: சோடியம் கிளைக்கோலேட்
  5. இரத்த சர்க்கரை மற்றும் அமினோ அமில அளவைக் கட்டுப்படுத்தும் உறுப்பு: கல்லீரல்
  6. உணவிலுள்ள கொழுப்புகள் உடலுக்கு எதனை வழங்குகின்றன: ஆற்றலை வழங்குகின்றன

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement