12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 1 உயிரிகளின் இனப்பெருக்கம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Zoology Part-1


12-ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் 1 உயிரிகளின் இனப்பெருக்கம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Zoology Part-1

  1. எவ்வகைக் கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன?
    அ) அர்ரீனோடோக்கி
    ஆ) தெலிடோக்கி
    இ) ஆம்ஃபிடோக்கி
    ஈ) 'அ' மற்றும் 'இ' இரண்டும்
    விடை : அ) அர்ரீனோடோக்கி

  2. பாக்டீரியாவில் இனப்பெருக்கம் கீழ் கண்ட எந்த முறையில் நடைபெறுகிறது.
    அ) கேமிட் உருவாக்கம்
    ஆ) என்டோஸ்போர் உருவாக்கம்
    இ) இணைதல்
    ஈ) சூஸ்போர் உருவாக்கம்
    விடை : இ) இணைதல்

  3. எவ்வகை இனப்பெருக்கத்தில் வேறுபாடுகள் தோன்றும்.
    அ) பாலிலி இனப்பெருக்கம்
    ஆ) கன்னி இனப்பெருக்கம்
    இ) பாலினப் பெருக்கம்
    ஈ) 'அ' மற்றும் 'ஆ' இரண்டும்
    விடை : இ) பாலினப் பெருக்கம்

  4. உறுதிக்கூற்று: தேனீக்களின் சமூகத்தில் ஆண் தேனீக்களைத் தவிர மற்ற அனைத்தும் இருமயம் கொண்டவை.
    காரணம்: ஆண் தேனீக்கள் கன்னி இனப்பெருக்கம் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.
    அ) 'உ' மற்றும் 'கா' இரண்டும் சரியானால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் ஆகும்.
    ஆ) 'உ' மற்றும் 'கா' இரண்டும் சரியானவை, ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் இல்லை
    இ) 'உ'சரியானது ஆனால் 'கா' தவறானது.
    ஈ) 'உ' மற்றும் 'கா' இரண்டும் தவறானவை.
    விடை : அ) 'உ' மற்றும் 'கா' இரண்டும் சரியானால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் ஆகும்.

  5. உறுதிக்கூற்று: பாலிலா இனப்பெருக்கம் மூலம் உருவாகும் சேய்கள் பெற்றோரை ஒத்த மரபியல் பண்புகளைக் கொண்டிருக்கும்.
    காரணம்: பாலிலா இனப்பெருக்கத்தில் மறைமுகப்பிரிவு மட்டுமே நடைபெறுகிறது.
    அ) 'உ' மற்றும் 'கா' இரண்டும் சரியானால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் ஆகும்.
    ஆ) 'உ' மற்றும் 'கா' இரண்டும் சரியானவை, ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் இல்லை
    இ) 'உ'சரியானது ஆனால் 'கா' தவறானது.
    ஈ) 'உ' மற்றும் 'கா' இரண்டும் தவறானவை.
    விடை : அ) 'உ' மற்றும் 'கா' இரண்டும் சரியானால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் ஆகும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement